அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

 By நட்சத்திரன் செவ்விந்தியன்


இப்படி ஆணாக இல்லாததால் இழுத்து வைத்து கிஸ் அடிக்க முடியாததால் துரோகி என்று அறிவிகக முடியாது போன மயூரனையே, துரோகி என்று அறிவித்த அர்ச்சுனாவுக்கு பெண்ணாக இருந்ததால் இழுத்து வைத்து கிஸ் அடித்தது மட்டுமல்லாமல் உடல் ஒட்டி உடலுறவவே கொண்ட கௌசல்யாவை துரோகி என்று அறிவிக்க எவ்வளவு காலமாகும்?

அர்ச்சுனா கடைசியில் கௌசல்யாவையும் துரோகி என்று சொல்லுவான். துரோகி என்று மட்டுமல்ல தனக்கு விசுவாசயில்லாமல் தன்னோடு இருக்கும்போதே பழைய காதலனுடன் தொடர்பில் இருந்தாள் என்றும் சொல்லுவான். மயூரன், யோகபாலனுடனும் தொடர்பிலிருந்தாள் என்று சொல்லுவான். சீற்றிங் செய்தாள் என்றும் சொல்லுவான்.

முதலில் அர்ச்சுனாவுக்கு உதவ வராத அரசியல் வாதிகளை துரோகி என்றான். பிறகு தனக்கு உதவவந்த உதவிய அரசியல் வாதிகளை துரோகி என்றான். உதவ வந்த உதவிய வழக்கறிஞர்களை துரோகி என்றான். இவனைப் பிரபல்யமாக்கிய யூரியூப் காரர்களையும் இணையத்தளக்காரர்களையும் துரோகி என்றான். 

அர்ச்சுனாவின் நீண்டகால நண்பனான சிவப்பிரகாசம் மயூரன் பேசிய வீடிகோக்களைக் கேட்டுப்பார்த்தேன்.

மயூரன் செய்தியாளர் சந்திப்பு

 எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பேச்சாளராக இருக்கக்கூடிய தகுதி மயூரனுக்கு உண்டு. சனநாயக அரசியல் பற்றிய அடிப்படை அறிவும் தெளிவாக விளக்கிப் பேசக்கூடிய ஆற்றலும்(Erudition and Articulatedness) மயூரனிடம் வேண்டிய அளவு உண்டு.  அர்ச்சுனாவுக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய தகுதியும் மயூரனுக்கு உண்டு. ஆனால் அர்ச்சுனா எதிர்பார்ப்பது, கேட்க விரும்புவது சரியான ஆலோசனைகளை அல்ல. தன் நாசிசிஸ்ரிக் - தன்மோக நோய்க்கு தீனிபோடக்கூடிய, தன்னைப் புகழ்ந்து பாடக்கூடியவற்றை தான் கேட்க விரும்புகிற தன் செவிக்கு இனிப்பானவற்றையே அர்ச்சுனா கேட்கவிரும்புகிறான். அர்சுனாவின் முகமூடிகள் அவனது ஓட்டை வாயினாலேயே களையப்பட்டு அவன் அம்பலமானபோது தொடர் சங்கிலிகளாக அவன் சட்டச்சிக்கல்களில் மாட்டுப்பட்டு சிறை சென்றபோது ஆரம்பத்தில் அவனுக்கு ஆதரவளித்த மக்கள் அவனை வலைத்தளங்களில் கழுவி ஊற்றத்தலைப்பட்டபோது அர்ச்சுனா கேட்கவிரும்பியது யதார்த்தத்தை அல்ல. தான் கடவுளைப்போல அழிவில்லாதவன் -  நிரந்தரமானவன் என்கிற ஒரு மாய உலகையே. 

இந்த இடத்தில்தான் அர்ச்சுனாவுக்கு நெடுநாள் நண்பன் மயூரனைவிட நேற்று வந்த கடந்த வருடம்தான் சட்டத்தரணியான பெண்ணான கௌசல்யா முக்கியமானவளாகிறாள். ஏனெனில் முத்திய நாசிசிஸ்ரிக் உளநோயாளியான அர்ச்சுனாவுக்கு(அதே சமயம் கௌசல்யாவுக்கும்) தனிப்பட்ட வாழ்வுக்கும் பொது வாழ்வுக்குமான வித்தியாசம் தெரியவில்லை. இதை மேலும் விளக்குவதாயின் மனித தேவைகளும்(Human needs) மனித உரிமைகளுக்கும்(Human Rights) இடையிலான வேறுபாடுகளிலிருந்து தொடங்கலாம். மனித தேவைகள் உயிரியல் அடிப்படையிலானவை. உணவு, உடை, உறைவிடம், குடும்பம், நண்பர்கள், அன்பு, காதல்,காமம் (உடலுறவு) முதலிய தனிப்பட்ட தேவைகள். மனித உரிமைகள் சமூக அடிப்ப்படையிலானது.

அர்ச்சுனாவின் கோளாறுகள் மயூரனுக்கு நன்கு தெரியும். இருந்தும் ஒரு ஜோக்கர் சீட்டான அர்ச்சுனா இத்தேர்தலில் ஒரு துரும்புச் சீட்டாகவோ(Trump Card) Wild card ஆகவே பயன்படுத்தப்படலாம் என்றறிந்து வந்தவன். 

மயூரன் தன் நண்பன் அர்ச்சுனா கேட்டுக்கொண்டதற்கிணங்க அர்ச்சுனாவுக்கு உதவ இலங்கை வந்த நாளிலிருந்தே அர்ச்சுனாவின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை. ஒரேயொரு ஆசனம் கிடைக்கும். அர்ச்சுனாவின் ஆலோசகராக தனக்கு புகழ் கிடைக்கும், பின்னாளில் தன் அரசியல் வாழ்வுக்கு இத்தேர்தல் நல்ல முதலீடாகும் என்கிற நம்பிக்கைகளோடு வந்த மயூரனுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அதிருப்தி. 

அர்ச்சுனாவின் முதல் மனைவி அவனைவிட்டு விலகிவிட்டார். அர்ச்சுனா தன் முதல் மனைவியை அடித்ததான மிகப்பாரதூரமான குற்றச்சாட்டும் உண்டு.  சாவகச்சேரியில் அர்ச்சானா "குழைக்காட்டு முதுவேனில் புரட்சியைத்" தொடங்கியபோது ஒரு சிங்களப்பெண்ணோடு வாழ்ந்துகொண்டிருந்தார். பின் கௌசல்யா அர்ச்சுனாவின் சட்ட ஆலோசகராக வந்தபின் அந்தச் சிங்களப்பெண் சீனில் இல்லை. அர்ச்சுனாவின் "பஞ்சாயத்தை" தீர்க்க உதவ வந்த பெண் சட்டத்தரணி கௌசல்யாவின் பஞ்சாயத்தை சமூக வலைத்தள "நீதி மன்றில்" தீர்த்துவைத்த நாட்டாமை ஆக அர்ச்சுனா ஆனபின்தான் நிலைமையின் உக்கிரத்தை மயூரன் புரிந்துகொண்டார்.  அதாவது இனி அர்ச்சுனாவின் சுயேட்சைக்குழுவுக்கு குழு ஒரு ஆசனம் கூட தேறாது என்பதை. ஒரு ஜோக்கர் சீட்டின் "பெறுமதி" கூட இப்போது அர்ச்சுனாவுக்கு இல்லை என்பதை. 



மயூரனின் முதல் அதிருப்தி வேட்பாளர்கள் தெரிவு. கௌசல்யாவை அர்ச்சுனா வேட்பாளராக்கியது. தனது ஆலோசனைகளைக் கேட்காது வேட்பாளர்களைத் தெரிவு செய்தது. கௌசல்யாவின் தலையணை மந்திரங்களைக் கேட்டது. தன்னிடம் இல்லாத அப்படி என்ன திறமை கௌசல்யாவிடம் உண்டு என்பது மயூரனுக்கு நன்கு தெரியும். பணியாரம். கௌசல்யாவுக்கு பணியாரம் சுடத்தெரியும். செலஸ்டீன் லோயருக்கோ மயூரனுக்கோ பணியாரம் சுடத்தெரியாது. 

இதற்கிடையில் தான் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய நாளில் அர்ச்சுனா ஆஜராகவில்லை. அர்ச்சுனா கைதுசெய்யப்படக் கூடிய ஆபத்திருந்த அந்நாளில் நெஞ்சுவலி என்று மருத்துவமனையி்ல் அட்மிட் ஆகி நாடகம் போட்டான்.

பொறுமை இழந்த மயூரன் அன்றுதான் யாழ் ஊடக மையத்தில் அற்புதமான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.  மயூரனின் எதிர்கால அரசியல் பொதுவாழ்வுக்கான மகத்தான சந்திப்பு. அச்சந்திப்பிலும் மயூரன் அர்ச்சுனாவை விட்டுக்கொடுக்கவில்லை. சொல்லப்போனால் ஒரு மென்மையான மதுரம் பூசிய எச்சரிக்கை மட்டுமே விடுத்தார். 

அடுத்தநாள் அர்ச்சுனா மயூரனை துரோகி என்று அறிவித்தான். ஈழ தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேட்சைக் "கட்சித் தலைவர்" தானே சமர்பித்த 9 வேட்பாளர்களில் மயூரன் முதலிய தான் தெரிவுசெய்த சில வேட்பாளர்களுக்கு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்த அசிங்கம்/அபத்தம்/ பிறழ்வு முதல்தடவையாக அரங்கேறியது. 

மயூரன் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சுமா? இதற்கு கோபத்தில் எதிர் வினையாற்றாமல் நிதானமாக கூலாகவே பேசினார். இதற்குப் பிறகும் அர்ச்சுனாவைத் தாக்காமல் மிக நாகரீகமாக அர்ச்சுனாவுக்கும் தனக்கும் யோகபாலனுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

ஊசிக்கட்சி ஒரு ஆசனமும் தேறாமல் மண் கௌவும்போது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையே என்று வெல்லும் ஒருவர் மயூரனே. எங்கிருந்தோ வந்து அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியும் வேட்பாளராக்கும் எல்லாத் தகுதியும் எனக்கிருக்கு.எந்தக்கட்சிக்கும் பேச்சாளராக இருக்கும் வல்லமை எனக்கிருக்கு என்று சொல்லாமல் சொல்லிப்போன சிவப்பிரகாசம் மயூரன். 

இத்தகைய தனிப்பட்ட வாழ்வுக்கும் பொதுவாழ்வுக்குமிடையிலான வித்தியாசம் தெரியாத ஒருவரான அர்ச்சுனா பொதுவாழ்வில் ஈடுபடத் தகுதியில்லாதவர். ஒரு மருத்துவ அத்தியட்சகராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ ஒரு பொது அலுவலகத்தை நிர்வகிக்க தகுதியில்லாதவர்(Unfit to hold a public office)

தொடர்பான கட்டுரைகள்

1. பெண் பொறுக்கி மயூரன் வரலாறு

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்