சரசம் சாடிசம் சாரு நிவேதிதா

 


2011ல் சாரு நிவேதிதா இணையத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணை Groom பண்ணி மடக்கி செக்ஸ் செய்ய முயன்று மாட்டுப்பட்டதை வினவு இணையத்தளம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தது. அக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது.  அதன் இணைப்பு இக்கட்டுரையின் இறுதியிலுள்ளது. 

படிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது.

ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெண் அதுவும் இளம்பெண் என்பதினாலேயே தான் இத்தனை சீக்கிரம் முகநூலில் பிரபலமாகியிருக்கிறோம் என்பதை அந்த பேதைப் பெண் உணர்ந்திருக்கவில்லை.

இதனால் அந்த பெண்ணோடு நட்புக் கொண்டவர்கள் அனைவரும் ஜொள்ளர்கள் என்று பொருளல்ல. ஆனால் பொது வெளியில் செயல்படும் ஒரு பெண் இந்த சமூக யதார்த்தத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய அனுபவமோ, முதிர்ச்சியோ, வழிகாட்டலோ இல்லாததால் அந்தப்பெண் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். அவள் ஒரு இளம்பெண் என்று வாசகருக்கு உணர்த்துப் பொருட்டே அர் விகுதி போடாமல் அள் விகுதி போட்டு எழுதுகிறோம்.

சாரு ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பது மட்டும் அதுவும் இணையத்தின் மூலம்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அவர் எழுதிய எதையும் அந்தப் பெண் படித்ததில்லை. பின்னர் சாரு அந்தப் பெண்ணின் ஒரு கவிதையைப் பாராட்டி தனது தளத்தில் வெளியிடுகிறார். மெல்ல மெல்ல உரையாடவும் செய்கிறார். வக்கிரமான ஆபாசமான உரையாடல் நடத்தினார்.

அந்தப் பெண்ணோடு வக்கிர உணர்வுடன் சாரு நடத்திய பொறுக்கித்தனத்தை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே இங்கு விசயமல்ல. இந்தப் பொறுக்கித்தனம் என்ன மாதிரி ஆரம்பித்து எங்கே சென்றது என்பதை பருண்மையாக ஆய்வு செய்தால்தான் அதன் விகாரத்தை உணர முடியும்.



அந்தப் பெண்ணின் கவிதையை சாரு ஏன் பாராட்டி எழுத வேண்டும்? இது வழக்கமாக ஒரு பிரபலம் ஒரு புதிய எழுத்தாளரை அல்லது எழுத விரும்பும் ஒரு வாசகியை ஊக்குவிக்கும் செயல் அல்ல. சாருவின் மனதில் ஏதும் தெரியாத இந்தப் பெண்ணை ‘பயன்படுத்திக்’ கொள்ளவேண்டும் என்ற திட்டத்தோடு, வெகு சாமர்த்தியமாக அந்தப் பாராட்டை உள்நோக்கத்தோடு எழுதும் நோக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் உலகப் புகழ்பெற்ற கவிதை எதையும் எழுதியிருக்கவில்லை.

அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பொறுக்கித்தனங்கள்

ஆண்கள் அனைவரும் பொறுக்கியல்ல. ஆனால் உழைத்துப் பிழைக்கும் ஆண்களை விட அதிகாரத்தில் அதுவும் முறைகேடான வழியில் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், பணத்தையும் வைத்திருப்பவர்களிடத்தில் இந்தப் பொறுக்கித்தனம் ஊற்றெடுப்பதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன. சாரு அத்தகையவர்களில் ஒருவர்.

மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். வெள்ளை மாளிகையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த அந்த இளம் பெண்ணிடம், அவளுக்கென்று நல்ல நிரந்தர வேலை கிடைக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஆசைகாட்டித்தான் பில் கிளிண்டன் பாலியல் வன்முறை செய்கிறார். அமெரிக்க அதிபர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் செய்த அந்த பொறுக்கித்தனம் பின்னர் விசாரணை கமிஷன் வரைக்கும் சென்றாலும் ஊடகங்களைப் பொறுத்த வரை அது ஒரு சென்சேஷனாக மாற்றப்பட்டு நீர்த்துப் போனது. இங்கு நாம் பார்க்க வேண்டியது வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பெண்கள் கூட இந்த அதிகாரப் பொறுக்கிகளை எதிர்கொண்டே பணியாற்ற முடியும் என்பதே.

நமது பல்கலைக்கழங்களில் முனைவர் படிப்புக்கு ஆய்வு செய்யும் பெண்களின் கையறு நிலை குறித்து நீங்கள் அறிவீர்களா? அவர்களில் சிலர் கைடுகளை ‘திருப்தி’ படுத்தினால்தான் முனைவர் பட்டத்தை பெற முடியும். பெண் போலீசாக இருந்தாலும் கூட அதிகார ஆண் போலீசின் வக்கிரங்களை எதிர்கொண்டே வாழ முடியும். கட்டிடம் கட்டும் மேஸ்திரி கூட தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பெண்களை வேலை வாய்ப்பை காட்டியே பணிய வைப்பது சாதாரணமில்லையா? தனியாக 24 மணிநேர கிளினிக் நடத்தும் பணக்கார மருத்துவர்களும், பெரிய மருத்துவமனையின் பணியாற்றும் மருத்துவர்களும் தங்களது செவிலியர்களை இப்படி நடத்துவதற்கு தடையில்லாத வாய்ப்பு இருக்கிறதே? திரையுலகிலோ வாய்ப்பு தேடும் பெண்கள் அனைவரும் இப்படி ‘ஒத்துழைத்தால்தான்’ ஒரு நடிகையாக மாற முடியும்.

இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கை, குடும்ப நிலை, வேலையில் தொடரவேண்டிய கட்டாயம் காரணமாக இந்தப் பொறுக்கித்தனங்களை சகித்துக் கொண்டு குமுறலோடு கடந்து செல்கிறார்கள். அந்தக் குமுறல் வெடிக்கும் போது மட்டுமே நாம் இந்தப் பொறுக்கிகளை அறிய முடியும். அப்படித்தான் சாரு இப்போது பிடிபட்டிருக்கிறார்.

ஆக இணையம் துவங்கி வெள்ளை மாளிகை வரை அதிகாரத்தில் உள்ள சில பொறுக்கிகள் தங்களது அதிகாரம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை வைத்து தம்மிடம் பணியாற்றும் பெண்களை கொத்திச் சென்றுவிடலாம் என்றுதான் அலைகிறார்கள். அது தவறல்ல, தவறு என்று பிடிபட்டாலும் அதிகார வசதி கொண்டு சுலபமாக வெளியேறி விடலாம் என்பதுதான் அந்தப் பெண்கள் மிகவும் சுலபமாக வன்முறைக்குள்ளாக்கப்படும் சாத்தியத்தை வழங்குகிறது.

சாருவின் பாராட்டும், விமரிசனங்களும் பச்சையான சுயநலத்திற்கே



சாரு தனது பிரபலத்தை வைத்து ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடக்க வேண்டுமென்ற திட்டத்தோடு அப்படி பாராட்டி எழுதுகிறார். அந்தப் பாரட்டை பெரிய அங்கீகாரமாக கருதி அந்தப் பெண்ணும் தனது பக்கத்தில் பகிர்கிறாள். வாழ்த்துக்கள் குவிகின்றன. உண்மையில் அந்தப் பிரபலமான எழுத்தாளரது பாராட்டிற்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்று அந்தப் பெண் குழந்தைத்தனமாக எண்ணியிருக்கிறார். அடிமைகளின் உலகத்தில் அடிமைகளோடு அடிமையாக வாழும் எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய பாராட்டுகள் நிச்சயம் பெரிய விசயமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த பிரச்சினை என்று அல்ல சாரு பாராட்டும், அல்லது விமரிசிக்கும் அத்தனைக்கும் உள்நோக்கங்கள் உண்டு. அவை எதுவும் கொண்ட கொள்கையின்பால் நெறிபிறழாத சத்திய ஆவேசங்களிலிருந்து தோன்றுவதில்லை. திராவிட இயக்கம், தி.மு.க இரண்டையும் வசைபாடுவதில் தொடங்கி கோமியத்தின் சிறப்புக்களை வியந்தோதி பார்ப்பனியத்திற்கு பாராட்டு வாசிப்பது வரை பல்லிளிக்கும் சாருவின் துக்ளக் கட்டுரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். துக்ளக் என்ற வலதுசாரி பிற்போக்கு பார்ப்பனியப் பத்திரிகையில் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் சாரு, சோ ராமசாமியின் ஆசனவாய் போன்று பேசுவதில் என்ன கொள்கை வெங்காயம் இருக்க முடியும்?

தனது சரோஜாதேவி புத்தகங்களை வெளியிடுவதற்கு கனிமொழியும், அந்த நூல்களை லைப்ரடி ஆர்டரில் மனுஷ்ய புத்திரன் மூலம் உள்ளே தள்ளுவதற்கு கனிமொழியின் கட்சியும் தேவை என்றால் பாராட்டுவார். ஆனால் இன்று ஊரே கனிமொழி கைதை காறித் துப்பும் போது தானும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு துப்புவார். புரட்சித் தலைவி போன்ற ஒரு திறமையான முதலமைச்சரை தமிழகம் கண்டதில்லை என்று சோ வகையறாக்களோடு பாராட்டுவார். சரக்கடிப்பதற்கு தவிர வீட்டை விட்டு இறங்காத இந்த நபர் கேராளவில் ஏதோ பெரிய சமூகப் போராளி போன்று திட்டமிட்டு ஏமாற்றி வருகிறார்.

நித்தியானந்தா கம்பீரமாக உலா வந்த போது தனது தளத்தில் படம் போட்டு பூசை செய்தவர், ரஞ்சிதா வீடியோ வந்ததும் நல்ல பிள்ளையாக படத்தை எடுத்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக கும்முவதில் என்ன நேர்மை இருக்கிறது? பொறுக்கி நித்தியானந்தாவை பொறுக்கி சாரு நிவேதிதா பாராட்டிய போது பணம், அழகான ஆசிரமப் பெண்கள், ஆசிரமத்திற்கு வரும் பெரிய குடும்பத்தின் நட்பு என்ற லவுகீக சமாச்சாரங்கள் காரணமாக இருக்கின்றன. பின்னர் ஊர் முன் அந்த சாமியார் அம்பலப்பட்ட போது அதை சரசம் சல்லாபம் சாமியார்.  என்று எழுதி காசு பார்க்கும் சந்தர்ப்பவாதம் யாருக்கு வரும்?



இதனால்தான் மீண்டும் சொல்கிறோம். சாரு பாராட்டி எழுதுபவைகளும், திட்டி எழுதுபவைகளும் அனைத்தும் பச்சையான சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட, குறிப்பான ஆதாயம் எதிர்பார்க்கும் சந்தர்ப்பவாதங்கள் என்கிறோம். அப்படித்தான் அந்தப் பெண்ணின் கவிதைக்கு சாரு பாராட்டு தெரிவித்த விசயம். தென் அமெரிக்க கவிதைகளில் திளைத்திருப்பதாக கூறும் சாருவின் கண்ணுக்கு இங்கே அந்தப் பெண்ணின் கவிதை தெரியவில்லை, அவளது இளம் வயதுதான் தெரிகிறது. எதுவும் தெரியாத அந்த இளம் வயதை வளைக்கலாம் என்ற பொறுக்கித்தனம்தான் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகிறது.

தனது பிரபலத்தை முன்வைத்து சாரு விரித்த ஆபாச வலை

ஆரம்பத்தில் மரியாதையாக பேசும் சாரு முதல் தூண்டிலாக தனது எழுத்தை அந்தப் பெண் படித்திருக்கிறாளா என்று கேட்கிறார். அவள் படிக்க ஆசை என்று சொன்னதும் புத்தகம் அனுப்பி வைக்கவா என்று கேட்கிறார். வழக்கமாக சாருவின் தளத்தில் இரண்டு விசயங்கள் இருக்கும். ஒன்று கிசுகிசு அக்கப் போர்கள், இரண்டு எழுத்துக்காக தன்னை ‘அர்ப்பணித்திருக்கும்’ சாருவின் சுய சொறிதல்கள். அதிலும் தன் எழுத்தை படிக்காமலேயே யாரும் பேசக்கூடாது என்று சாரு பல முறை சத்திய ஆவேசம் துடிக்க ஆடியிருக்கிறார். ஒரு சரோஜா தேவி எழுத்தாளனுக்கு இருக்கும் இத்தகைய சத்திய ஆவேசத்தை உலகில் எங்கும் காணமுடியாது. இங்கு கவனிக்க வேண்டியது மற்றவர்கள் படிக்கவில்லை என்று விசுவாமித்திர கோபம் காண்பித்த சாரு அந்தப் பெண் எதுவும் படிக்கவில்லை என்றதும் அதிர்ச்சி கொள்ளவில்லை. ஆனால் அதில் வேறு ஒரு நோக்கம் இருந்திருக்கிறது.

சாருவின் புனைவுகளுக்குள் இருக்கும் பொறுக்கித்தனம் அவரது நடத்தையிலும் இருக்கிறது, இரண்டும் வேறல்ல

அந்த பெண்ணை எப்படியும் வளைக்க வேண்டும் என்ற கங்கணத்தோடு வலையை விரித்த சாரு, எதற்காக தனது நாவலை அந்த பெண் படிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்? இங்குதான் படைப்பாளி வேறு படைப்பு வேறு அல்ல என்பது நிரூபணமாகிறது. இது தெரியாத இலக்கிய குருஜிக்கள் சாருவின் நாவல்களை ரசிப்பது வேறு, அவரது பொறுக்கித்தனத்தை கண்டிப்பது வேறு என்று தத்தளிக்கிறார்கள்.

சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள், அதிலும் பிரபலங்களின் கிசுகிசு கதைகளாகவே நிறைந்திருக்கும். சாருவின் நெருங்கிய நண்பர் அந்துமணி இரமேஷின் வாரமலரில் துணுக்கு மூட்டையாக வரும் கிசுகிசுத் துணுக்குகள் இங்கு குறுங் காவியமாக நீண்டிருப்பது சரோஜா தேவி இரசிகர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான். இணையத்தில் இருக்கும் எந்த படிப்பும், அக்கறையும் இல்லாத நடுத்தர வர்க்க, மேட்டுக்குடி லும்பன் பிரிவினருக்கு சாருவின் கிசுகிசு கிளுகிளுப்பு கதைகள் ஒருபெரிய வடிகாலாக இருக்கிறது. இவர்கள்தான் சாருவின் இரசிகர்கள்.

அந்த பெண்ணை நிச்சயம் வளைக்க வேண்டும் என்று விரும்பிய சாருவுக்கு அவரது நாவலே கைகொடுக்கிறது. ஆம். ஸீரோ டிகிரியை அந்தப் பெண் படிக்கும் போது, விடலைப்பருவத்தை தாண்டாத அந்த வயது நிச்சயம் கிளர்ச்சி அடையும் என்பது சாருவின் கணிப்பு. அதனாலேயே வலிந்து போய் தனது புத்தகம் அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்கிறார். தனது நாவல் ஒரு உண்மையான இலக்கிய ரசனையையோ, வாழ்க்கையின் விரிந்த களத்தை அடையாளம் காட்டும் பேரிலக்கியமோ இல்லை, அது ஒரு இளம் பெண்ணின் மனதை வெகுவாக கிளர்ச்சியூட்டும் சமாச்சாரம்தான் என்பதும் சாருவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த எளிமையான விசயம் உலக இலக்கியத்தை கற்றுத் கரை தேர்ந்ததாக பிலிம் காட்டும் இலக்கிய குருஜிகளுக்கு தெரியவில்லை என்பது அனுதாபத்திற்குரியது.

மேலும் ஒரு படைப்பாளியின் அடிப்படையான தத்துவ நோக்கிற்கு முரணாக எந்தப் படைப்பும் தன்னிச்சையாக, சுயேச்சையாக தோன்றி விடுவதில்லை. ஒரு பாத்திரத்தையோ, கதையையோ புனையும் இலக்கியவாதி அந்த பாத்திரம் கோரும் யதார்த்தத்திற்கு உண்மையாகவே புனைவை பின்னுகிறான் என்றாலும் அது அவனது அடிப்படையான அறநெறிகளுக்கு பொருத்தமாகவே தோன்றும். மேலும் இந்த கலை இயங்கு விதி சாருவின் புனைவகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று. சாருவின் புனைவுலகத்தில் கூடா உறவுகளையும், பாலியல் இச்சைக்காக கட்டற்று அலையும் மனிதர்களும் சாருவின் ஆழ்மன அஸ்திவாரத்தின் பலத்திலேயே எழுகிறார்கள்.

அதனால் இன்றைய சாருவின் பொறுக்கித்தனமும், அவரது நாவல்களும் வேறு வேறு அல்ல. ஆகவேதான் தனது வக்கிரத்திற்கு நிச்சயம் தனது நாவல் துணை புரியும் என்று தெரிந்தேதான் நாவலை அனுப்புவதாக கூறுகிறார். அது தெரியாமல் ஒரு பிரபலமான எழுத்தாளர் தன் மீது கொண்ட அன்பினால் தனது நாவலை அனுப்புவதாக பேசுகிறாரே என்று அந்தப் பெண் மகிழ்கிறாள். இந்த உலகில் பாராட்டு, அன்பு, பரிசு அத்தனைக்கும் பின்னே இத்தனை வக்கிரமான உணர்ச்சிகள் இருக்குமென்று அந்தப் பேதைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

ஆபாச வக்கிரத்தால் அப்பாவிப் பெண்ணை மிரட்டிய கதை

சாருவே பாராட்டி விட்டாரே என்று அவரது லும்பன் கூட்டமும்  அந்தப் பெண்ணுக்கு பாராட்டைக் குவிக்கின்றது. இதன் பிறகு தான்தான் அந்தப் பெண்ணை பாராட்டி பிரபலமாக்கினேன் என்ற உரிமையோடு சாரு மெல்ல மெல்ல அநாகரிகமாக பேச ஆரம்பிக்கிறார்.

மேலும் தனது செல்பேசி எண், மின்னஞ்சல், பேஸ்புக் பாஸ்வோர்டு அனைத்தையும் அளிக்கிறார். அந்த அளவுக்கு அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று காட்டுவதற்காக அத்தனை பிரயத்தனங்களையும் செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ஏமாற்றுக்காரன் ஆரம்பகால மாதங்களில் டபுள் வட்டி கொடுத்தெல்லாம் பில்டப் கொடுப்பது போல சாருவும் அதே வழிமுறைகளை கையாள்கிறார்.

பிரபலம் ஒருவரால் பாரட்டப்பட்டிருக்கிறோம் என்ற செய்நன்றிக்காக அந்தப் பெண் ஆரம்பத்தில் அதை எப்படி எதிர்கொள்வது என்று தவித்திருக்கிறாள். பின்பு அதை திசை திருப்பும் விதமாக சாருவின் மகன், மனைவி என்று பேச்சை மாற்றப் பார்க்கிறாள். நாம் நண்பர்கள் இல்லையா, இதுபோல பேசக்கூடாதே என்று கெஞ்சுகிறாள், அதுவும் பலிக்காத போது தனக்கு காதலன் இருக்கிறான் என்றொரு பொய்யைப் சொல்கிறாள்.

அப்போதும் கூட சாரு தனது பொறுக்கித்தனத்தை மறைக்கும் விதமாக “அந்த சாட்டுகளை எல்லாம் அழித்துவிடு” என்கிறார். இதற்கு மேலும் இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தப்பெண் அவரிடமிருந்து நீங்குகிறாள். உரையாடலை துண்டிக்கிறாள். இப்படி ஒரு இளம்பெண் தன்னிடம் படியவில்லையே என்று வெறியேறிய அந்த பொறுக்கி அந்தப் பெண்ணை வெளிப்படையாக திட்டி ஒரு பதிவு எழுதுகிறார். அதில் பேஸ்புக்கில் பெண் படத்தை போட்டுவிட்டு பிரபலமாகிறாள், செக்சுவல் ஸ்டார்வேஷன் உள்ள தமிழ்நாட்டில் அனைவரும் நாக்கைத் தொங்கப் போட்டு அலைகிறார்கள் என்று அந்த பெண்ணுக்குள்ள பிரபலத்தை கேலி செய்து, இங்கு அறிவார்ந்த உரையாடலுக்குத்தான் அனுமதி என்று அந்தப் பெண்ணை துண்டிக்கிறார். மேலும் இந்த மாதிரி பெண்களெல்லாம் விரைவில் கல்யாணம் ஆகி சென்று விடுவார்கள் என்று வேறு பிலாக்கணம் வைக்கிறார்.




பாலியல் வக்கிரத்துக்காக அலையும் ஒரு இலக்கியப் பொறுக்கி தன்னிடமுள்ள கயமைத்தனத்தை மறைத்து விட்டு முழுத் தமிழகத்தையும் பாலியல் வறட்சி உள்ள பிரதேசமாக ஏன் வைய வேண்டும்? அந்தப் பெண்ணுடன் கடலை போட்டு வக்கிரத்தை கொட்டிய போது தெரியாத அந்தப் பெண்ணின் மொக்கை எழுத்துக்கள் இப்போது மட்டும் தெரியும் மர்மம் என்ன? வேறு ஒன்றுமில்லை. தனது அந்தப்புர ராஜ்ஜியத்தில் ஒரு சேவைப்  பெண்ணாக வரவேண்டியவள் மறுக்கிறாள் என்றதுமே அவளைப் பற்றி திட்டி அவளது பெயரை டாமேஜ் செய்யுமாறு எழுதுவது இன்றென்ன புதிதாகவா நடக்கிறது? சமூகத்தில் இப்படி பெண்கள் இப்படி பணிந்து போகவில்லை என்றால் பஜாரி என்று  தூற்றப்படுவார்கள். இணையமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அந்தப் பெண்ணின் கையறு நிலை

இவையெல்லாம் வெறும் ஏழு நாட்களுக்குள் நடந்த சம்பவம். ஏப்ரல் 22 அப்பெண் சாருவுக்கு தன்னை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டு சாட் மெசேஜ் அனுப்புகிறாள், மே 30 அன்று அதற்கு சாரு பதில் எழுதுகிறார். பின்னர் இரண்டு நாட்கள் பொதுவாக பேசிவிட்டு இதில் ஜூன் 6,7,8 நாட்களில்தான் படிப்படியாக பாலியல் வக்கிரங்களை சாரு அரங்கேற்றுகிறார்.  ஜூன் 8 சாருவின் வக்கிரம் உச்சத்தை அடையவும் சாட் நிறுத்தப்படுகிறது.  



பின்னர் தனக்கு நெருக்கமாக உள்ளூர் தோழிகளிடம் அந்தப் பெண் இந்த பொறுக்கித்தனத்தை பகிர்ந்து கொள்கிறாள். அவர்களோ அந்தப் பொறுக்கியை மறந்து விட்டு வேறு வேலையைப் பார்க்குமாறு சமாதானப்படுத்துகிறார்கள். சமாதானமாகாத அப்பெண் பேஸ்புக் மூலமாக தமிழச்சியை  தொடர்பு கொண்டு நடந்ததை விவரிக்கிறாள். தமிழச்சியும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பேசி உறுதியாக நின்று இதை எதிர்க்குமாறு அறிவுறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சி இந்த பொறுக்கியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். 

மிகவும் ஆபாசமாக பேசி அந்தப் பெண்ணை இணையத் தொடர்பில் வைத்துக் கொண்டே மாஸ்டர்பேஷன் – சுய இன்பம் – செய்திருக்கும் சாரு நிவேதிதாவின் ஆணித்தரமான நம்பிக்கை என்னவாக இருந்திருக்கும்? எப்படியும் இந்த இளம் பெண் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண், இதை யாரிடமும் தெரிவிக்க மாட்டாள், அதனால் நமது இமேஜை காப்பாற்றிக் கொண்டே இத்தகைய கீழ்த்தரமான காரியங்களில் ஜாலியாக ஈடுபடலாம் என்பதுதான் சாரு போன்ற பொறுக்கிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு தமிழச்சி மூலம் வேட்டு வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்ட மனமில்லாமல் அவளையே குற்றவாளியாக்குவது என்ன நியாயம்? 

கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்?


கனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல? இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.

வலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.

முழுமையான வினவு கட்டுரை

தொடர்பான கட்டுரைகள்

1. அவந்திகா: ஒர் அபலை மனைவியின் வாக்குமூலம்

2. விருந்தாளி வீட்டில் சாரு கமெரா பணம் திருடிய கதை

3. சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது: தொடரும் கண்டனங்கள்



Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்