அசோகமித்திரனை வசைபாடும் சாருவின் வண்டவாளங்கள்
By அபிலாஷ் சந்திரன் அபிலாஷால் பத்தாண்டுகளுக்கு முதல் சாருவை மதிப்பிட்டு எழுதப்பட்ட இக்கட்டுரை சாரு நிவேதிதாவை மிகத்துல்லியமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. அன்று இருந்த சாருதான் இன்றும். சாரு மாறவில்லை. மாறி பச்சோந்தியானது அபிலாஷ் சந்திரன். இன்று அபிலாஷ் சாரு லாபியிஸ்ட். பல சமகால தமிழ் எழுத்தாளர்களின் வறுமை அறிவு வறுமையல்ல. அறவறுமை. சாருவுக்கு அடிக்கிற சமூக வலைத்தள அல்கோறிதக் காற்றில் தங்கள் பாய்க்கப்பலையும் ஓட்டிவிட வேண்டுமென்ற பக்கா சுயநலன். காலச்சுவட்டிலிருந்து பிரிந்து வந்த லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் இதனைத்தான் செய்தார்கள். ஜெயமோகனும் சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுத்து இதனைத்தான் செய்தார். காலச்சுவடு கண்ணன் மீது எனக்கு சிலபல விமர்சனங்கள் இருந்தாலும் அறம்சார் கொள்கைசார் அடிப்படையில் அவர் மிகச்சரியாக துல்லியமாக ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும் விமர்சித்து அம்பலப்படுத்தினார். தங்கள் பொது எதிரியான கண்ணனை ஒரங்கட்ட லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் கூட்டு களவாணிகளானா...