கோணங்கியும் ஜெயமோகனின் ஞான மரபும்
தேவரும் நாயரும் "போற்றிப் பாடடி பெண்ணே" By நட்சத்திரன் செவ்விந்தியன் நீங்க பீ·ப் சாப்பிடுவீங்களா? தமிழ்நாட்டிலே இதெல்லாம் ரொம்ப ஆர்த்தடக்ஸா இருப்பாங்கள்ல?” என்றேன். ”நாங்க தேவமாரு பொதுவா மாடு எல்லாம் சாப்பிட மாட்டோம். நான் எல்லாத்தையும் சாப்பிட்டுருவேன். இப்ப காதல்கவிதை எழுதறவனில ஒருத்தன போட்டுத்தள்ளி ·ப்ரை பண்ணி சாப்பிடணும்ணு ரொம்பநாளா ஆசை…” - தன்னை தேடி வந்து கேரளாவில் கோணங்கி சந்தித்தது பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் ஜெயமோகனுடைய குரல் பாசிசக்குரல். பாசிசத்திற்கு அச்சொட்டான பாடப்புத்தக வரைவிலக்கணம் உண்டு. அவ்வரைவிலக்கணத்தை விரித்து விளக்கினால் சுயாதீனமாக இயங்கவேண்டிய இயல்கள் மற்றும் துறைகளான சட்டம், நீதி, குற்ற(வியல்) சனநாயகம், விஞ்ஞானம் முதலியவற்றை ஒரு சிலரின் நலன்களுக்காக கட்டுப்படுத்துவதே பாசிசம் என்பது வரும். "எழுத்தாளன், புனிதன், மனிதன்" என்ற தன் கட்டுரையில் ஜெயமோகன் அச்சொட்டாகச் செய்திருப்பது...