விஷ்ணுபுரம் விருதின் மோசடி வரலாறு

 

"ஊரில் புதுசா ஒரு ரௌடி தாதா வந்தா எதிர் எதிரா சண்டை போட்டு ஒருத்தர் ரத்தத்தை மற்றவர் குடித்து கொண்டிருந்த பழைய தாதாக்கள், புது தாதாவை எதிர் கொள்ள ஒண்ணா சேருவது தெரிஞ்ச விஷயம் தான். ரெண்டு பேரு பொழைப்புலயும் மண்ணு விழுந்துடுமே"                                                                                                            - Naren Ganapathy


 By Rajesh Kumar

சாரு நிவேதிதா (சாநி) என்பவர் ஒரு பத்தி எழுத்தாளர். சில நாவல்களும் எழுதியுள்ளார். வாசகர் வட்டங்கள் மட்டுமே அறிமுகமாயிருந்த தமிழிலக்கிய உலகில் முதல் முறையாக விமர்சகர் வட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது அண்ணாருக்குதான். ஆரம்பித்தவர்கள் வேறு யாருமல்ல, சாநியின் எழுத்துக்கு கடின சாவு விசிறிகளாக இருந்தவர்கள். அவர்கள் எல்லாம் ஏன் அப்படி மாறிப்போனார்கள் என்று நான் யூகம் செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் ஏன் விமர்சகனானேன் என்பதில் இருந்து இதற்கான பதிலை ஆரம்பிக்கிறேன்.

 

தமிழிணையம் அப்போதுதான் கொஞ்சம் பரவலாக அறிமுகமாகத் தொடங்கிய காலகட்டம். இணையத்தை சரியாக பயன்படுத்தி முதன் முதலில் அக்கவுண்டுக்கு காசு அனுப்பினால் மெயிலில் சீரோ டிகிரி பிடிஎஃப் வரும் டைரக்ட்-டு-கஸ்டமர் திட்டத்தை ஆரம்பித்தவர் சாநி. முதல் பதிப்பு பிடிஎஃப் (?!) வாங்கியவர்களில் அடியேனும் ஒருவன் என்பது இப்போது அநாவசியம். 


ஆனால் சாதா பப்ளிஷர்கள் போல இது புத்தகம், இது விலை என்று அவர் யுக்தி சாதா ரணமாக இருக்கவில்லை. தமிழ்நாடு ஒரு ஃபிலிஸ்டின் சமூகம். உலகிலேயே இங்கு மட்டும்தான் எழுத்தாளன் சூத்தடிக்கப்படுகிறான்.  நான் உங்களுக்கு எழுத எத்தனையோ மணி நேரம் உழைக்கிறேன். என் உழைப்பை கூச்சமில்லாமல் நுகர்கிறீர்கள் எனவே மனசாட்சி இருந்தால் பாக்கெட்டில் இருப்பதை போடு என்ற - இன்றளவும் தொடரும் - தனது ட்ரேட் மார்க் குரளி வித்தை அடிப்படையிலான புதிய வகை யுக்தியை புகுத்திய முன்னோடி அவர். சுருக்கமாக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்பார் ஞாநி. மத்திய அரசின் குமாஸ்தாவாக இருந்து ரிடயர் ஆன சாநியின் உயர்தர லைஃப்ஸ்டைலை அன்றிலிருந்து இன்று வரை மெய்ண்டைன் செய்து வருபவர்கள் சாநியின் உள்வட்டத்தில் இருக்கும் சில கொக்க்ரக்கூக்கள் மற்றும் சாநியை பற்றி தெரியாமல் புதிதாக அறிமுகமாகி குரளி ப்ளாக்மெயிலில் மயங்கி பணம் அனுப்பும் பல கேணக்கூக்கள். இந்த பரிவர்த்தனையானது வயதுக்கு வந்த இரண்டு நபர்களுக்கு இடையேயானது என்பதால் நாம் விமர்சிக்க ஒன்றுமில்லை.

 

நித்தியானந்தா (நித்தி) சாமியாராக புகழ் பெற ஊடகங்கள் பேருதவி புரிந்தன. அதில் ஒன்று குமுதம் இதழில் வந்த ”கதவைத் திற காற்று வரட்டும்” தொடர். அந்த தொடரை நித்தி எழுதியிருக்க சான்ஸே இல்லை. எனில் கோஸ்ட் ரைட்டர் யார் என்பதை இப்போதைக்கு டீலில் விடுவோம். எதேச்சையாக அந்த காலகட்டத்தில் சாநியும் தொடர்ச்சியாக நித்தியின் பராக்கிரம லீலைகளை மிகவும் உயர்வாக தமிழக ஆட்டு மந்தைகளிடம் பரப்பும் வேலையை குமுதம் கட்டுரைகள் வாயிலாகவும் தனது ப்ளாக் வாயிலாகவும் செய்து வந்தார். 




கடலூரில் காரில் போய்க்கொண்டிருந்த போது (சமீபத்திய அவர் கட்டுரையில் அவர் பத்தினி என்று குறிப்பிடும்) சாநியின் மனைவி அவந்திகாவுக்கு உயிர் போகும் அளவுக்கு ஒரு மூட்டு வலி ப்ரச்னை ஏற்பட்டது என்றும் அப்போது பெங்களூருவில் இருந்த நித்தி ஸ்தூல வடிவில் தோன்றி அந்த ப்ரச்னையை உடனே சரி செய்தார் என்றும்  சாநி குமுதத்தில் எழுதியது வரலாறு. அக்காலகட்டத்தில் சாநி எழுதிய சில கட்டுரைகளின் தலைப்புகள் - 

 

கடவுளை கண்டேன்-ரஸவாதம்

கடவுளை கண்டேன்- நித்தியானந்தம் பரம நித்தியானந்தம்

கடவுளை கண்டேன்-சர்வரோக நிவாரணம்            

கடவுளை கண்டேன்- யோகம் நிரோதம்

கடவுளை கண்டேன்- வரம் தரும் கல்பதரு

கடவுளை கண்டேன்-ந்யூ ஏஜ் குருமார்கள்

 

இதையெல்லாம் சாநி ஒன்றும் சும்மா செய்யவில்லை. கூலிக்கு அடித்த மாரடிதான். நித்தி ஆசிரமத்தை சேர்ந்த மாதா நிர்மலா (எ) நடிகை ராகசுதாவுடன் அப்போது சாநி வணிக தொடர்பில் இருந்தார்.  அப்போது அவர்களிடையே இருந்த கடித பரிவத்தனையென சாநியே வெளியிட்டது கமெண்ட்டில்.

 

இடையில் பத்தினிக்கு நித்தி பக்தி அதிகமாகி ஆசிரமத்தில் போய் தங்கி விட்டார். அப்போது ஆசிரமத்தில் இருந்து பத்தினி எழுதியது என்று சொல்லப்பட்ட ஒரு கடிதம் உலா வந்தது. சாநி மீது பலவித மோசமான விமர்சனங்கள் வைத்து அவருடன் வாழவே பிடிக்கவில்லை என்றெலாம் அந்தரங்கத் தகவல்கள் பல அடங்கிய ஒரு கடிதம் அது. எழுதியது பத்தினிதானா என்று ஊர்ஜிதமான தகவல் தெரியாததால் அதையும் டீலில் விடுவோம்.

 

ஒரு மங்களகராமான நாள் அன்று நித்தியின் வீடியோ லீக் ஆகி நாட்டில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. சாநியை நோக்கி ஏகப்பட்ட விமர்சனக்கணைகள். ஆனால் இரண்டு நாட்கள் சாநி வாயையே திறக்கவில்லை. காரணம் சாநியின் பத்தினி ஆசிரமத்தில் மாட்டிக்கொண்டிருந்தார். அவர் வெளியே வந்தவுடன் சாவகாசமாக குமுதத்தில் தான் ஒரு பெரிய யோக்கியன் போல சாநியின் கட்டுரை வெளிவந்தது. சாநி இதுவரை எதற்குமே பொறுப்பேற்றுக் கொண்டதில்லை. எல்லாமே அடுத்தவன் ப்ரச்னைதான். 



பிரபலமான அந்த செக்ஸ் சாட் சம்பவத்தில் சாநி ஒரு பெண்ணுடன் மாட்டியது போலவே நித்தி ரஞ்சிதா இடையில் நடந்ததும் வயதுக்கு வந்த இரண்டு நபர்களுக்கு இடையே நடந்த ஒரு பரிவர்த்தனைதான். அதை பற்றி நாம் விமர்சிக்க ஒன்றுமில்லை. அட ஃபிளிஸ்டின் சமூகத்தில் வாழும் சாமான்யர்களுக்கு அந்த அறிவு இருக்காதுதான். ஆனால் ட்ரான்ஸ்க்ரசி எழுத்தாளன் என்று தனக்குத் தானே பினாத்திக்கொள்ளும் - காசு வாங்கிக்கொண்டு நித்திக்காக கோஸ்ட் ரைட் செய்த - சாநிக்கு இருக்க வேண்டுமா வேண்டாமா? 

காசுக்காக தான் செய்த அயோக்கியத்தனத்தை எல்லாம் அப்படியே அமுக்கிவிட்டு தனக்கு காசு கொடுத்த ராகசுதாவை நோக்கி “I would like to ask, to those like the head of Tamil publication dept. Supriya and actress Ragasudha: Did you sign Nithyananda’s sex agreement after reading it? Did he have the above said tantric sex with you?” என்று கேட்டு வைக்க எத்தனை தடித்தனம் வேண்டும். அதற்காக அவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு [Criminal Case 25289/2012, Registed 21-Dec-2012, CNR number KABC03-073095-2012, CMM Court Bangalore, ASMT Dalit Nun Ma Nithya Supriya Swami v. Charu (Kumudam Reporter)] ஏகப்பட்ட ஆண்டுகள் நடந்து கொண்டிருந்தது. முடிவு என்னவானது என்று தெரியவில்லை.

 இதற்கிடையில் ஏன் இப்படி பெண்களை டார்கெட் செய்கிறீர்கள் என்ற ஒரு வாசக கேள்விக்கு ரஞ்சிதா நித்திக்கு செய்ததை ஊரில் உள்ள ஆண்களுக்கெல்லாம் செய்ய வேண்டும் என்று காசுக்காக நித்தியின் லீலைகள் என்று பொய் சொல்லி ஊரை ஏமாற்றிய சாக்கடைப் புழுவை விட கேவலமான இந்த ஜந்து தனது ப்ளாகில் ஒரு பதிவு எழுதினானே பார்க்கலாம். (இணைப்புப் படம்),  அந்தக்கணத்தில் இவன் எழுதுவது வெறும் எழுத்தில்லை, மலக்கிடங்கில் உழலும் ஒரு கீழ்மையின் கழிவு என்று புரிந்து சாநி மீது கடும் ஒவ்வாமை வந்தது. 




 இது போல சாநியின் கணக்கிலடங்கா இழி செயல்களால் சாநியை வெறுக்கும் விமர்சகர்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஜெயமோகனுனின் புத்தகத்தை மேடையில் கிழித்தெறிந்து சிறுநீர் கழிப்பேன் என்று ஆவாஸ் காட்டியது, ஜெமோவுக்கு உத்தமத் தமிழ் எழுத்தாளன் என்று பட்டம் கட்டி தொடர்ந்து வசைகள் பொழிந்தது, ஜெமோவை கையை பிடித்து இழுக்க எவ்வளவோ முயற்சித்தும் ஜெமோ பிடி கொடுக்காமல் சாநி ஒரு அரைவேக்காடு கோமாளி என்று சொல்லி தொடர்ந்து புறக்கணித்து வந்தது என்று ஜெமோ-சாநி ஹிஸ்டரியே ஒரு நாவல் அளவுக்கு போகும்.

 

இத்தனை சிறப்பு வாய்ந்த  சாரு நிவேதிதாவுக்கு இவ்வருட ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. புனைவு, அபுனைவு, கட்டுரைகள் என்று எல்லா வகை எழுத்துக்கும் சேர்த்துதான் இவ்விருது என்று சொல்லப்பட்டு விட்டதால் நித்தி கட்டுரைகள், ஜெமோ வசைகள் உட்பட  எல்லாவற்றுக்கும் சேர்த்து சாநி பெறுவதின் மூலம் விஷ்ணுபுரம் விருதும் அதற்கான பிறவிப்பயனை அடைந்து விட்டதென கருதலாம்.

 பின்குறிப்பு: சாருவின் பழைய ப்ளாக் 2010 வாக்கில் காணாமல் போய்விட்டது. "வைரஸ் சாப்பிட்டுவிட்டது” என்று சொல்லப்பட்டது.  அதனால பல விஷயங்களை டீலில் விட வேண்டிய நிர்ப்பந்தம். மேலும் 28 நிமிஷத்துக்கு மேல் இதற்காக செலவிடுவது சிம்ப்ளி வேஸ்ட் என்பதாலும் பெரிதாக மெனக்கெடவில்லை. நான் சாநி விமர்சகர் வட்டத்தில் இருந்து விலகி சாநியை படிப்பதையே விட்டு பல வருஷம் ஆகிறது. இப்போது சில நாட்களாக சாரு பதிவுகள் மீண்டும் பரபரப்பாக பேசப்படுவதால், அதன் பின்னணி ஒரு வேளை சமீபமாக இணையம் வந்த அப்பாவி கேணக்கூக்களுக்கான fishing net ஆக இருக்கலாம் என்று பொது நன்மைக்காக எழுதப்பட்டது. இதை படிப்பவரக்ள் இந்த பதிவுக்கு லைக் போடாமல் போனால் அவர்களுக்கு தூங்கும்போது கண் தெரியாது என்று... ச்சை அந்தாள் பத்தி எழுதினா கூட...

தொடர்பான கட்டுரைகள்

1. சாநிக்கு விஷ்ணுபுரம் விருது;: தொடரும் கண்டனங்கள்

2. சாநி பாரிசில் கமெரா, பணம் திருடிய கதை

3. இலக்கிய திருடன் சாநி

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்