Posts

Showing posts from October, 2022

விஷ்ணுபுரம் விருதின் மோசடி வரலாறு

Image
  "ஊரில் புதுசா ஒரு ரௌடி தாதா வந்தா எதிர் எதிரா சண்டை போட்டு ஒருத்தர் ரத்தத்தை மற்றவர் குடித்து கொண்டிருந்த பழைய தாதாக்கள், புது தாதாவை எதிர் கொள்ள ஒண்ணா சேருவது தெரிஞ்ச விஷயம் தான். ரெண்டு பேரு பொழைப்புலயும் மண்ணு விழுந்துடுமே"                                                                                                            -  Naren Ganapathy  By  Rajesh Kumar சாரு நிவேதிதா (சாநி) என்பவர் ஒரு பத்தி எழுத்தாளர். சில நாவல்களும் எழுதியுள்ளார். வாசகர் வட்டங்கள் மட்டுமே அறிமுகமாயிருந்த தமிழிலக்கிய உலகில் முதல் முறையாக விமர்சகர் வட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது அண்ணாருக்குதான். ஆரம்பித்தவர்கள் வேறு யாருமல்ல, சாநியின் எழுத்துக்கு கடின சாவு விசிறிகளாக இருந்தவர்கள். அவர்கள் எல்லாம் ஏன் அப்படி மாறிப்போனார...

கனகி புராணம்

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வழுக்கியாற்றின் தீரத்தில் தேவதாசி அவதாரத்தில் வாழ்ந்த ஒரு கடற்கன்னியின் காதல் கதை                                       1  நிலவு உதிக்கிற ஒரு கூதிர் காலத்தில் தான் ஆறுமுகன் முதன்முதலாக கனகியைக் கண்டான். ஊரெல்லாம் ஆறு ஓடுகிற அழகிய யாழ்ப்பாணப் பருவகாலம். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் அவள் தன்னந்தனியே குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாள். கூதிர் காற்றையும் நிலவையும் அனுபவித்து நடந்து கொண்டிருந்த ஆறுமுகன்  குளத்தங்கரையில் அரசமரக்கிளையில் தொங்கிய ஒரு பெண்ணின் சேலையைகண்டு அதிசயித்து எதிர்க்கரையில் ஒரு ஆலமர மறைவிலிருந்து எட்டிப்பார்த்தான். குறுக்குக்கட்டோடு ஒரு கட்டிளம் பெண் குளத்தின் நடுவில் தன்னந்தனியாக நீந்திக்கொண்டிருந்தாள். இரவோ நிலவோ என்ற பயமேதுமின்றி ஓர் அப்சரஸ் போல அவள் நீச்சலாடும்போது எழும் ஒலி பாற்கடலின்  அலை சத்தம்போல ஆறுமுகனின் காதில் வந்தோதியது. விதிர்விதித்தவன் குளத்தை ஒருதடவை கண்மூடிவிட்டுப் பார்த...