கே.எஸ். சிவகுமாரன்: ஒரு மதிப்பீடு
By கவிஞர் சேரன்
தமிழில் இலக்கிய விமர்சனம் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும், குறிப்பாக இலங்கையில் விமர்சனத்தின் அடிப் படைகள் தகர்ந்து போவதையும். ஆழமான கண்ணோட்ங்களும் ஒரு படைப்பின் உண்மையான உள்ளீட் டைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் அற்று வெறுமனே பொதுமைப் படுத்தப்பட்ட சொற்றொடர்களையும், பொதுவான அபிப்பிராயங்களையும் விமர்சனம் என்று சொல்லிக்கொள்கிற தன்மையை விசனத்துட்ன் அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. குறிப்பாக கே. எஸ் சிவகுமாரனின் எழுத்துக்களை, கைலாசபதியின் பெரும்பாலான முன்னுரைகளைப் படிக்க நேர்கையில் இவ்வாறான உணர்வு மேலோங்குகிறது. இப்போ தைக்கு எல்லாவற்றையும் எழுதுவது இயலாத காரியம். கே. எஸ். சிவகுமாரன் பற்றி மட்டும் சொல்லலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவ்வப்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் "குறிப்புகள்” எழுதிவருப வர் கே. எஸ். சிவகுமாரன்.
இக்கட்டுரையின் Doctoral Advisor அத்தனாஸ் யேசுராசா
இவருடைய அனைத்து எழுத்து க்களைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது சஞ்சயனின் பக்கங்களைப் " புதுசு “ முழுமைக்கும் கொண்டு செல்லலாம் என்பதால் சில முக்கிய கட்டுரைகளைப்பற்றி எழுதலாம். சாந்தனின் * ஒட்டுமா? பற்றி, (1980 ஜூலை 5 தினகரன்) எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ளதைப் பின்வருமாறு சுருக்கலாம்.
1 சிங்கள, தமிழ் உறவுகளை நாசூக்காக ஆராயும் ஒரு சித்திரம்
2. இறுதியில் நாவல் என்ன கூறு கிறது.? கலாச்சாரங்கள் தனித்துவமானவை. செயற்கை ரீதியாக இணைந்து சுவையூட்டினலும் அவை ஒன்றாகா. சாந்தனின் இந்தக் கருத்து-சிங் கள தமிழ்ப் பிரச்சனையை அணுகும் மற்றொரு பார்வை. இந்த இரண்டு வசனங்களையும்விட அந்தக்கட்டுரை முழுவதும் ஒட்டுமாவின் கதைச் சுருக்கம் அவ்வளவுதான்.
வேறுபல கட்டுரைகளில் தீவிரமான முகங்காட்டும் விமர்சகராக வெளிப்படும் இவர் தீவிரமாக விமர் சிக்கப்படவேண்டிய ஒரு படைப்பான ஒட்டுமாவைப் பற்றிய விஷயத்தில் இவ்வாறு முடங்கிப் போவது கவனத்திற்குரியது.
* இலக்கியத்தின் சமூகப்பணி " ஆய்வறிவு ரீதியாக இயங்குதல் * என்பனவெல்லாம் நம்பிக்கை கொண்டதாய்க் காட்டிக் கொள்கிற கே. எஸ். சிவகுமாரனின் பெரும் பாலான எல்லாக் கட்டுரைகளிலும் ஒரு மேலோட்டமான குறிப்புத் தெரிவித்தலே உள்ளது. சரியான நேர்மையான விமர்சனங்களை வைத்தல் செய்யப்படுவதில்லை. ஒட்டுமா
நாவலில், சில மோசமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. சிங்கள, தமிழ் உறவுகளைப் பற்றிய சரியான புரிந்து கொள்ளல்களைஅந்த நாவல் வெளிப்படுத்தவில்லை.
சதா நிலாந்தியினுடைய - காதலின் கனதிக்கும், இறுதியில் சதாவுக்கு ஏற்படுவதாக சாந்தன் சொல் லும் " பாரம் கழன்றது போன்ற " உணர்வுக்கும் உள்ள முரண், பீரீசின் இயல்புகளின் ஆரம்பத்துக்கும் இறுதிக்கும் உள்ள முரண், சிங்கள, தமிழ் ‘காதல் ஒட்டாது என்ற தொனியில் கருத்து சொல்கிற இந்த நாவல் எல்லாம் மிகவும் ஆழமாக விமர்சித்து ஒதுக்கப்படவேண்டியவை.
இந்த நாவலைப் பற்றிய மேற்சொன்ன கருத்துகளையாவது இனங்கண்டு வெளிப்படுத்த வேண்டியது எந்த ஒரு நல்ல விமர்சகரும் செய்திருக்கவேண்டியது. ஆனல் சிவகுமாரன் செய்தது என்ன?
மஹாகவியைப் பற்றி மட்டும்தான் கே. எஸ். சிவகுமாரன் சில விமர்சனங்களை உதிர்த்திருக்கிறர்.
மற்றெல்லா விமர்சனங்களிலும் அவர் ஒருவகை "தப்பி ஓடுதல்" *பொதுமைப்படுத்தல்" போன்ற வாய்பாடுகளுள் அடங்கி விடுகிறார். மிக நல்ல உதாரணம், லங்கா கார் டியனில் கலாச்சாரப் பேரவை நடத்திய தமிழ் நாடக விழா பற்றி எழுதிய கட்டுரை. அந்த நாடகங்களின் தமிழ்ப் பெயரின் ஆங்கில மொழி பெயர்ப்பை விட கே. எஸ். சிவ குமாரன் அந்தக் கட்டுரையில் என்ன எழுதியிருக்கிறார்? இதைவிடவும் வேதனைதரும் விஷயம் Tamil Drama but no theatre என அவர் அதற்குத் தலைப்பிட்டிருந்தது. மிகவும் பாரதூரமான இரு தவறுகளை இவ் விஷயத்தில் அவர் செய்திருக்கின்றார் ஒன்று, அண்மைக்கால நவீன தமிழ் நாடக. அரங்க வளர்ச்சியை no theatre என்பதன் மூலம் பூச்சியப்படுத்தியது. மற்றது தமிழ் கலை, இலக் கியத்தைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதும் போது மிகவும் அவதானத்துடனும் பொறுப் புணர்வுடனும் செய்யவேண்டிய ஒரு காரியம்) ஒருசில விஷயங்களையேனும் கூறாமல் வெறுமனே குறிப்புகளை எழுதியதன் மூலம் தமிழ் நர்டகம் இவ்வ ளவுதான் என்பதான ஒரு பிரமையை ஆங்கில வாசகனுக்கு ஏற்படுத்தியது. இதனை உணர்ந்தோ என் னவோ பிறகு ஒரு லங்கா கார்டி யனில் (மே 1, 1980) Tamil Drama என்று ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அவைக்காற்று கலைக்கழகத்தினைப் பற்றிச் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறார். நாடக அரங்கக் கல்லூரியைப்பற்றி ஒரு வார்த்தை கிடையாது. எவ்வளவு தூரம் பொறுப்பற்ற வெளிப் பாடுகள் இவை. இத்தகைய தவறையே அவர் தனது Tamil writing in SriLanka என்ற கட்டுரையிலும் செய்திருக்கிறார். அந்தக் கட்டுரையால் தமிழ் பேசாத வாசகர்கட்குத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லி எங்களை ஏமாற்றிக்கொள்ள நாம் தயாரில்லை. இத்தகைய "நுனிப்
புல்மேய்தல்" விமர்சனங்களிலும் பார்க்க ஆங்கிலத்தில் எழுதாமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று சொல்லத் தோன்றுகிறது.
ஜுலை 1, 80 லங்காகார்டியனில் * மொழி பெயர்ப்புக்கள் " பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிருர். தமிழ் - சிங்கள, சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புக்கள் பற்றிய பதிவு களை அக் கட்டுரை தருகிறது என் பதை மறுப்பதற்கில்லை. எனினும் அக்கட்டுரையில் தமிழ் இலக்கியத் தைப் பற்றிய ஆங்கில எழுத்துக்கள் பற்றி அவர் எழுதுவதைக் குறிப்பிடத்தோன்றுகிறது. The author of this little book tamil writing in srilanka had been-persistently introducing the Tamil cultural scene to the English reading public for more than twenty five' years
தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடே இல்லை. பிரச்சனை என்னவெனில் 'அறிமுகத்துடன் நில்லாது சில விபரீதமான குறிப்புக்களையும் அவர் தருவது தான். இங்கு சில காலத்திற்கு முன் சிவத்தம்பி Lotus இதழில் - Ceyłonese Tamil writings என்பது பற்றி எழுதியதையும்" குறிப்பிட வேண்டும். Lotus எனும் இதழ் ஆபிரிக்க ஆசிய எழுத்தர்ளர் சங்கத்தால் அரபு, ஆங்கிலம், 'பிர்ஞ்சு போன்ற மொழிகளில் * வெளியிடப்படும் ஒரு சர்வதேச சஞ்சிகை. சிவத்தம்பியும் இந்தக் இட்டுரையில் மல்லிகையில் வெளிவ்ந்த ஒரு சிங்களக் கதையின் தமிழாக்கத்தைப் பற்றி மட்டும் சில குறிப்புகள் எழுதி விட்டு, மல்லிகைக்கும் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டுக் கட்டுரையை முடிக்கிறார் ஆனால், பெரிதாக ஒரு தலையங்கம். Ceylonese Tamil writings. ஏதோ Dissertation thesis களுக்கு கொடுக்கிறமாதிரி.
இத்தகை கட்டுரைகள் பிரசுரமாவதன் அடிப்படை நியாயம் என்னவென்பது எனக்கும் புரியாத ஒன்றாகி இருக்கிறது. தமிழகத்தில் வெளிவந்த சிவத்தம்பியின் சில நூல்களிலும் இந்த மாதிரியான தன்மை துலாம்பரமாக உள்ளது.
இத்தகைய கட்டுரைகளை வெளியிட நேர்வதிலுள்ள அவசரமும், நிர்ப்பந்தமும். கூட ஒரு காரணமாயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
மஹாகவி பற்றி சிவகுமாரனின் கருத்துக்களைப்பற்றி எழுதுவது இவ்விடத்தில் பொருந்தும். வீடும் வெளி யும் நூலை Daily News ல் விமர்சித்தபோது போது (திகதி எனக்குச் சரியாக ஞாபகமில்லை) Maha Kavi a Neo Romantic என்று தலைப்பிடப்பட்டிருந்தது அவ்விமர்சனம். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் தமிழகத்திலும் பிறகு அதே கட்டுரை Tamil writings in Sri Lanka விலும் சேர்க்கப்பட்டிருந்தது. மஹாகவியின் படைப்புகள் புற்றித் தீர்க்கமான விமர்சனக் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது இலக்கியுப் பரப்பில் சண்முகம் சிவலிங்கம், நுஃமான், முருகையன், யோகராசா ஆகியோரால் முன் வைக்கப்பட்டுள்ளன.
மஹாகவியை இயல்பாகவே கற்பனுவாதத்தைத் தழுவிய ஒரு கவிஞராக கே. எஸ், சிவகுமாரன் காட்டுகிறார். அதை விடவும் மஹாகவி Romantic என்று புதுவிதமாகவும் ஒரு அளவு கோலை முன் வைக்கிறர். இவற்றைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை, ஏனெனில் மஹாகவியின் படைப்புகளில் நன்கு பரிச்சயமுள்ள எவரும் மஹாகவியை ஒரு கற்பனா வாதம் தழுவிய கவிஞர் என்று கொச்சைப்படுத்த மாட்டார்கள் முற்சார்புகளோடு விமர்சனம் ஏழுதப்புறப்படுவதன் விளைவுகள் இவை,
மஹாகவியைப் பற்றி அவரது கருத்துகளில் முக்கியமாக நான் குறிப்பிட்டு எழுத விரும்புவது இவற்றையல்ல.
இதே கட்டுரையில “இங்குதான் கவிஞர் வெறும் அவுதானிப்புக்களுடன் நின்று விடுவதை நாம் காண்கிறோம்- திட்டவட்ட மாகக் கருத்து, எதனையும் தெரிவிக்க அவர் தயங்கியது வெளிப்படை." என்றும்
* அறிவின் ஆதாரத்தையுடைய "கவிதைகளைத் தீட்ட மறந்து விடுகிறார்"
என்றும் எழுதுகிறார். சில அடிப்படை இலக்கியப் பிரச்சனைகளை இவ்வரிகள் எழுப்புகின்றன.
திட்டவட்டமாகத் தீர்க்கமாகக் கருத்துக்களைச் சொல்லுதல் என்ற தன்மையை இலக்கியத்தில் எதிர் பார்ப்புதும், பிரச்சனைகளுக்கான தீர் வையும் எழுதவேண்டு என்று சொல்வதும் ஒரு மாதிரிதான், இது இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு வரட்டுவாதம். இதே அளவுகோலை இவர் எல்லாப் படைப்பாளிகட்கும் பயன்படுத்துகிறாரா என்றால் அப் படியும் அல்ல.
ஒட்டுமாவைப் பற்றிய விமர்சனத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே எழுதியிருக்கிறேன். கவிதை களைவிட தீர்க்கமாக கருத்துகளைத் தெரிவிப்பது என்பது விமர்சனத்திற்கு ஒரு பிரதான இயல்பு இலக் கியவாதியைப் பார்த்து நீ இப்படி -எழுது அல்லது இப்படி எழுதியிருக்கலாம் என்று எவரும் சொல்ல முடியாது. ஆனால் விமர்சகனை நீ ஏன் திட்டமான கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்று நாம் கேட்கலாம்.
அந்த இயல்பை அவரது விமர்சன்ங் கள் காட்டுவதில்லை. அப்புற மென்ன? இந்த மாதிரியான Dual Nature இன் இருப்பு ஒரு ஆரோக்கியமான தன்மை அல்ல. நான் முன் குறிப்பிட்டது போல "முற்சார்பு" களும், எல்லாப்படைப்புகளைப் பற்றியும் தைரியமாக எழுத முடியா மையும்தான் இதற்கு காரணமாகலாம்.
இன்னும் ஒரு நல்ல உதாரணம் அலை சமர் (கருத்து மோதல் தொடர்பாக தினகரனில் * அழகியல் பிரச்சனைகள் • என்ற
கட்டுரை எழுதும் போது, பேச்சோசைப் பண்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் கைலாசபதி மஹாகவி . யைப் பற்றிக் குறிப்பிட மறந்ததை அலை கட்டுரை (சுட்டிக்காட்டிய தைப்பற்றி ** கைலாசபதி, அப்படிச் செய்திருக்க கூடாது. விசனிக்கத்தக்கதுதான் " என்ற தொனியில், சொல்கிற அவர் சுட்டுரை முடிவில் என்ன இருந்தாலும் கைலாசபதி, கைலாசபதிதான் விமர்சனம் விமர்சனம் தான் என்ற தொனிப் பட முடித்து வைக்கிறார். (தப்பித்தவறிக் கைலாசபதிக்கு இவர்மீது கோபம் வந்துவிட்டால் என்ன ஆவதாம்.
மஹாகவியின் வீடும் வெளியும் ' தொகுதி என்னைப் பொறுத் தவரை மிக முக்கியமானது. கவிதைக்குரிய முப்பரிமாண அமைப்புப் பற்றி முதன்முதலாக அதன் முன் னுரையில் குறிப்பிடுகிறர். கவிதை தவிர்ந்த ஏனைய எல்லா வடிவங்களும் இருபரிமாணம் கொண்டவைதான். வாசகர்களுக்கும், ரசிகர் களுக்கும், அது தொடர்பான விரிந்த உணர்வுகளையும், புதிய தன்மைகளையும் இவ்வடிவங்கள் எழுப்பினாலும் முற்று முழுதான இன்னொரு பரிமாணத்தை அவை வைத் திருப்பதில்லை. இன்னும் எளிமைப் படுத்திச் சொல்வதானால் சிறுகதை அல்லது நாவல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது களத்தில் தொடங்கி வேறொரு இடத்தில் அல்லது களத்தில் முடிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு முதலிரு பரிமாணங்களும் அந்த நாவலும் அதன் பிரத்தியட்சமான இயல்புகளும் ஆகும். உருவமும், உள்ளடக்கமும் என்று சொல்லிக் கொள்ளலாம். மூன்றாவது பரிமாணம் என்பது இவற்றை மீறி * அதனுள் " இருப்பது. அதுதான் ஒரு படைப்பிற்கு முடிவற்ற தன் மையைக் கொடுப்பது. படைப்பின் தொடர்ச்சியைப் பூரணப்படுத்துவதற்கு வேண்டிய ஒரு முன் னெடுப்பை அது வாசகனுக்குத் தருகிறது. மேலோட்ட்மான வாசகனுக்கு இது எட்டாது. ஆழ்ந்து கூர்மையாகப் படிக்கும் வாச ” கனுக்குத்தான் இ ைவ யெல்லாம்: விமர்சனத்தின் தன்மை என்ன வெனில் ஒருபடைப்பின் இத்தகைய மூன்றாவது பரிமாணத்தை இனங் கண்டு வெளிப்படுத்தல் அல்லது அதனை நோக்கி ஒரு வாசகனை நெறிப்படுத்தலே. கவிதையைவிட ஏனைய வடிவங்களுக்கு இந்த மூன் றாவது பரிமாணம் ஒரு முழு அள விலான பரிமாணமாவது அசுர சாதனையால் மட்டும் முடியும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அண்மைக்காலச் சிறுதைக ள், நாடகங்களில் இந்த மூன்றவது பரிமாணத்தின் தன்மைகள் துலங்குவ தாக நான் உணர்கிறேன். மஹா கவியின் கவிதைகளைப் பொறுத்த வரையில் அவற்றில் மூன்றாவது பரிமாணத்தை சண்முகம், சிவலிங்கம் . நுஃமான் ஆகியோர் ஒரளவு இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏனைய கவிஞர்களைப் பற்றிய இக் கண்டுபிடிப்பு பூச்சியம்தான்.
தீர்க்கமாக முடிவுகளைக் கூறுதல் அல்லது பிரச்சனைக்கான தீர்வைச் சொல்லுதல் என்பது இலக்கியத்தின் மூன்றுவது பரிமாணத்தையேமுற்றக இல்லாமல் செய்தலாகும். * காலம் சிவக்கிறது " என்று இ. சிவானந்தன் தனது நாடகத்துக்குத் தலையங்கம் வைத்த கணத் திலேயே அந்தப் படைப்பின் மூன்றாவது பரிமாணம் அடைபட்டுப்போய் விட்ட்து. இத்தன்மைக்கு ஏராள மான கவிதைகளைக் உதாரணமாகக் கூறலாம். "முற்போக்குக்காரர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்களால் எழுதப்படும் So Caled முற் போக்குக் கவிதைகள் எல்லாம் இந்த வகைக்குள்தான் செத்துப் போயின? இந்த மூன்றுவது பரிமாணம் பற்றிய எனது கருத்துகள் விரிவாக எழுதப்படவேண்டியவை. இப்போதுகுறிப்புக்காக மட்டும் இங்கு சொல்லவேண்டி ஏற்பட்டது.
' கவிஞனுக்கும் - வாசகனுக் கும், சிலவேளைகளில் கவிஞனுக்கும் " கவிஞனுக்கும் கூட உள்ள இடை வெளியை நிரப்புதல் . ** என்று மஹாகவி சரியாக இனங்கண்டு கொள்கிறது, இந்த மூன்றாவது பரி மாணத்தையும் - . விமர்சனத்தை யும் தான்.
- அறிவின் ஆதாரத்தையுடைய கவிதைகளைத் தீட்ட மறுத்தல் என்று கே.எஸ். சிவகுமாரன் சொல் வதுபற்றி ஒன்றும் எழுதாமல் இருப் பதுதான் புத்திசாலித்தனம். எனினும் Continuity of Life தொடர்பாக
மஹாகவி கொண்டிருந்த கருத்துக்களின்
Scientific basis பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.
இயற்கை விஞ்ஞானத்தின் பிரதானமான Unifying concept என்பது பாரம்பரியத்தினதும் பரிணாமத்தினதும் விளைவான வாழ்க்கையின் தொடர்ச்சியே. உண்மையில் பிறப்பு என்பதும், இறப்பு என்பதும் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுதலே தவிர ஒன்றின் புதிதான தோற்றமோ அன்றி ஒன்றின் முற்றின அற்றுப்போதலோ அல்ல. அணுக்கள் - மூலக்கூறுகள் திசுக்கள் - இழையங்கள் - உறுப்புகள் - அங்கி - சனத்தொகை என்று விரிகிற தொடரில் இறப்பு என்பது மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு இறங்குதல். பிறத்தல் என்
பது கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு வருதல். எனவே வாழ்க்கை முடி வற்றது. என்பதும் மனிதன் இறப்பதில்லை என்பதும் மஹாகவி தன்மேதாவி "னளவில் உணர்ந்து வெளிப்படுத் திய முக்கியமான விஷயங்களாகும். இதற்கு விஞ்ஞானம் அறியவேண் டியதில்லை. சுயம்புவான சிந்தனை உணர்வும் " அறிவின் ஆதாரமும் " போதும். இப்போதைக்கு இவ்வள வும் போதும் என்று நினைக்கிறேன்.
மற்றுமொரு விஷயம் இவ்வளவு தூரம் எழுதி. அச்சிட்டு படிதிருத்தி முடிப்பதற்கிடையிலேயே * சுவ ரொட்டிகள் " நாடகம் பற்றி ஒன் றிற்கொன்று முரண்பாடான கருத் துக்களை அவர் எழுதியிருப்பதை வாசிக்க நேரிடுகிறது. வீரகேசரி வார இதழொன்றில் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை என்று எழுதுகிற அதே சமயம் Times இல் 'ஆஹா! நன்றயிக்கிறது" என்ற தொனியில் எழுதுவது என்ன விமர்சக் லட்சணமோ ? ஒன்றும் பிடிபட மறுக் கிறது. இனியும் இனியும் இவர் இப்படி எழுதிக் கொண்டிருந்தால் சஞ்சையன்(அதாவது சேரன்) இனியும் இனியும் இப்படி எழுதுவான் என்று நினைக்கத் தேவையில்லை. மற்றைய எல்லா எழுத்தாளர்களும் இத்தகை போலிகளைப் பார்த்துவிட்டு, படித்து விட்டுச் சாதாரணமாக * உண்டு, உடுத்து, உறங்கிச் சீவிக்கையில் " சஞ்சயனுக்கு(சேரனுக்கு) மட்டும் என்ன ? ஒரு சின்ன ஆத்திரம் அவ்வளவுதான்.
நன்றி: புதுசு 2
தொடர்பான கட்டுரைகள்
1. அன்னா அக்மத்தோவாவும் அ. யேசுராசாவும்
2. புண்டை ஆண்டியார் கவிஞர் சேரன்
Comments
Post a Comment