பூட்டினின் Make or Break Date with Ukraine
By நட்சத்திரன் செவ்விந்தியன் கிரெம்ளின் ஒரு யுத்தத்தில் தோற்றால் ஆட்சி கவிழுவது வரலாறு. இது புட்டினுக்கு நன்கு தெரியும். 1. ஓராம் உலக யுத்தத்தில் ரூசிய பேரரசு தோற்றபின் சார் மன்னனின் சாம்ராஜ்யம் கவிண்டது 2. பத்தாண்டு ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் சோவியத் ஒன்றியம் தோற்றபின் சோவியத் ஒன்றியம் சிதறியது. அமெரிக்கா இரண்டு இருபதாண்டு போர்களில்( வியட்னாம், ஆப்கானிஸ்தான்) தோற்றாலும் சிதறவில்லை. இந்தியா இரண்டாண்டு ஈழப்போரில் தோற்றாலும் சிதறவில்லை. உலகின் மிகப்பழமையானதும் மிகப்பெரியயதுமான முறையே அமெரிக்கா, இந்தியா ஆகிய மக்களாட்சி நாடுகளின் வலிமை அது. இந்த உண்மையை நன்கறிந்த புட்டின் உக்ரேனில் செய்யப்போவது 1. உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளையும் தலைநகரையும் கைப்பற்றுவது. உக்ரேனில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது. அதன்பின் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு ரூசிய படைகளை வைத்து தன் பொம்மை ஆட்சியை பலப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுவது. தற்காலத்தில் அமெரிக்காவுக்கு ஒன்றல்ல இரண்டு வல்லரசு எதிரிகள். 1. சீனா 2. ரூசியா அமெரிக்காவின் நண்பர் கூ...