விருந்தாளி வீட்டில் சாரு நிவேதிதா கமெரா திருடிய கதை : சாருவின் பாரிஸ் பயணம்
சாரு நிவேதிதாவின் முதல் விமானப்பயணமும் முதல் சர்வதேச பயணமும் அவர் 2001ல் பாரிஸ் மாநகருக்கு சென்ற பயணம்தான். தன்னுடைய அழகான கையெழுத்தில் அவர் ஆயிரம் புகழ்ச்சிக்(Flattery) கடிதங்களை சோபாசக்தி, சுகன், கற்சுறா, கலாமோகன், ஸ்ராலின், சேனன் முதலியோருக்கு எழுதி தன் பாரிஸ் பயணத்தை சாத்தியமாக்கினார். தன் விருந்தாளிகளை "இலவு காத்த கிளிகள்" போல ஆக்கி எப்படி துன்பம், துரோகம் செய்து ஏமாற்றினார் என்பதை சாருவை விருந்தாளியாக அழைத்தவர்களில் ஒருவரான கற்சுறா போட்டு உடைக்கிறார். 2015ல் கற்சுறாவின் புளக்கில் வந்த கட்டுரை இது👇 By கற்சுறா சாரு என்ற அயோக்கினைப் பற்றி என் வாழ்நாளில் ஒருபோதும் எழுதக்கூடாது என்றே எண்ணுவேன் . அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும். அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்க...