ராஜேஸ் பாலாவின் சங்கிலிக் கோர்வையான பொய்கள்
சேரன் குழந்தையாக ராஜேஸ் பாலாவின் இடுப்பில்
புலிகள், PLOTE, EROS, EPRLF, TELO ,ஆகிய 5 இயக்கங்களின் இங்கிலாந்து தலைவி(பிரதிநிதி? ) தானே என்கிற அண்டப்புழுகை ராஜேஸ் பாலா கடந்தவருடம் அவிழ்த்துவிட்டார். கீழுள்ள முதல் கொமன்ரிலுள்ள YouTube இணைப்பில் 11.20 இலிருந்து கேட்டுப்பாருங்கள்.
அகழ் இணையத்திற்கு இவ்வருடம் வழங்கிய நேர்காணலிலும் ராஜேஸ் பாலா தான் லண்டனில் மேற்கூறிய 5 இயக்கங்களினும் "லண்டன் தலைவியாக " இருந்ததாக புழுகியிருக்கிறார்.
ராஜேஸ் பாலா காலம் பூராகவும் தன்னைப்பெரிய ஆளுமையாகவும் Public Figure ஆகவும் காட்ட அண்டப்புழுகுகளை அவிழ்த்து விடுபவர். புலிகளின் முதல் பெண்புலியான நிர்மலா ராஜசிங்கம் லண்டனில் தஞ்சமடைய பல ஆண்டுகளுக்கு முதலே 1970 ஆண்டிலிருந்து லண்டனில் வாழ்ந்து வருபவதாகச் சொல்பவர் ராஜேஸ் பாலா. ஆனால் 1980 களின் நடுப்பகுதியில் நிர்மலா இலண்டனுக்கு வந்தபின்னர் நிர்மலா மிகப்பிரபல்யமான ஈழத்தமிழ் பெண்ணாக இலண்டனில் உருவாகிவிட்டார். இதற்குப் பல காரணங்கள்.
1. நிர்மலா புலிகளின் முதல் பெண்புலி
2. நிர்மலாவை மீட்கவென்றே புலிகள் செய்த சிறையுடைப்பு அவரை சர்வதேசரீதியில் பிரபல்யமாக்கியது.
3. நிர்மலாவின் அனுபவங்களையும் தகவல்களையும் வைத்து நிர்மலாவின் சகோதரி ராஜினி திராணகம மற்றவர்களோடு சேர்ந்து எழுதிய Broken Palmyrah என்ற புத்தகம். பின் நிர்மலா ராஜசிங்கம் சகோதரிகளைப் பற்றிவந்த No more Tears என்ற ஆவணப்படம்.
4. நிர்மலாவைப் பற்றியும் பல கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அவர் உண்மையிலேயே அமெரிக்காவில் அரசியல் கலைமாணிப்பட்டப் படிப்பை படித்து நிறைவு செய்தவரா? தனது ஆரம்பகாலத்தில் வலதுசாரி பாசிச இயக்கமான புலிகளின் உறுப்பினராக இருந்தது/ இந்த வரலாறுகளை சுயவிமர்சனம் செய்து நேர்மையான தன் வரலாறு எழுத தயங்குவது/ குழு வாதத்தோடும் Parochial ஆக இயங்குபவர் முதலியன. ஆனால் ஒப்பீட்டடிப்படையில் நிர்மலா ராஜேஸ் பாலாவைவிட அறிவில் மேவியவர். அசலான ஆங்கிலம் பேசக்கூடியவரும் தெளிவாக விவாதிக்க கூடியவரும்(Articulate)
5. 2009ல் யுத்தம் முடிந்தபின் நிர்மலாவை BBC போன்ற பல சர்வதேச தொலைக்காட்சிகள் Live ஆக பேட்டிகண்டன. நிர்மலா அசலான ஆங்கிலத்தில் Standard ஆன Accent ல் மிகத்தெளிவாகப்பேசினார். ராஜேஸ் பாலாவின் ஆங்கிலத்தை கேட்டால் BBC காரங்கள் தலைதெறிக்க ஓடுவான்கள்.
லண்டனுக்கு முதல் வந்த தன்னைவிட பின் நிர்மலாவின் புகழ் ஓங்கியதும் நிர்மலாவைவிட முதலில் தான் சந்தித்த பாலசிங்கத்தை பின்னாளில் பாலசிங்கத்தை புலிகளில் சந்தித்து முரண்பட்டு இயக்கதைவிட்டு வெளியேறிய நிர்மலாவின் புகழ் ஓங்குவதையும் ராஜேஸ் பாலாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ராஜேஸ் பாலாவுக்கு நிர்மலா சம்பந்தமாக வருகிற பொறாமை, உளச்சிக்கல்கள் தான் ராஜேஸ் பாலா யுத்தம் முடிந்தபின் தொடர்ச்சியாக சங்கிலிக் கோவையாக அண்ட/ஆகாச புழுகுகளை அவிழ்த்து வருகிறார். 5 இயக்கங்களுக்கும் தானே "லண்டன் தலைவி" மற்றும் அன்ரன் பாலசிங்கத்தை திலீபன் யாழ்ப்பாணத்தில் இறந்த அதே நாளில் சென்னையில் சந்தித்தேன் ஆகிய இரு அண்டப்புழுகுகளின் மூலம் ராஜேஸ் பாலாவின் உளச்சிக்கல்கள்தாம். இவை அண்டப்புழுகுகள் மட்டுமல்ல. மிகப்பெரிய வரலாற்று மோசடிகள்.
ராஜேஸ் பாலா வெட்கம் சிறிதுமின்றி சங்கிலிக்கோவையாக பொய்கள் சொல்லிவருவதற்கான இன்னொரு ஆதாரம் பின்வருவது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் லண்டன் ஆங்கிலப்பத்திரிகையொன்று ராஜேஸ் பாலாவைப்பற்றிய செய்திக் கட்டுரையொன்றை எழுதியது. அக்கட்டுரையின் பத்திரிக்கை வெட்டை ராஜேஸ் பாலா கொடுக்க அதனையும் அகழ் இணையம் ராஜேஸ் பாலாவின் பேட்டியில் இணைத்தது.
அந்த பத்திரிகை வெட்டிலேயே பேனாவால் தன்னைப்பற்றிய உண்மைகளை அழித்தும் திருத்தி எழுதியும் பிற்காலத்தில் தான் சொல்கிற பொய்களை நியாயப்படுத்த மாற்றங்கள் செய்துள்ளார் ராஜேஸ் பாலா.
1. ராஜேஸ் பாலா தன் இடதுசாரி யாழ்ப்பாண கணவரான பாலசுப்ரமணியத்தை விட்டுப் பிரிந்து இங்கிலாந்திலுள்ள ஒரு சிறு நகரிலிருந்து 3 ஆண் பிள்ளைகளோடு லண்டனுக்கு வந்து அரசு கொடுத்த ஒரு கவுன்சில் வீட்டில் வாழ்ந்தபோது எழுதப்பட்ட கட்டுரை அது. அக்கட்டுரையில் (முதல் columnல்) அப்போது ராஜேஸ் பாலா ஒரு கவுன்சில் வீட்டில் வாழ்ந்துகொண்டு பகுதி நேர வேலைக்கு போய்க்கொண்டு 3 ஆண் குழந்தைகளை( Of course மிகச்சிரமத்துடன்) வளர்க்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது. இதில் பேனாவால் ராஜேஸ் பாலா கவுன்சில் வீட்டில் வாழ்கிறார் என்கிற பகுதிகளை அழித்து சுயதணிக்கை செய்துவிட்டு Part Time வேலை செய்கிறார் என்கிற பகுதிகளை Full Time வேலை செய்கிறார் என்று மாற்றியுள்ளார். (பின்னாட்களில் தான் பிரமாண்டமான சம்பளத்துடன் செய்த முழுநேரமாக செய்த வேலையை விட்டு தமிழ் அகதிகளுக்காக அமைப்புக்கள் அமைத்து செயற்பட்டேன் என்கிற அவரது பொய்களை நியாயப்படுத்த செய்யப்பட்ட மோசடி இது)
2. மூன்றாவது Column ல் ராஜேஸ் பாலா இலண்டனுக்கு 1975 இலோ 1976 இலோ(தெளிவாக இல்லை) இலங்கையிலிருந்து வந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அதனை ராஜேஸ் பாலா 1970 என்று பேனாவால் திருத்தியுள்ளார். ராஜேஸ் பாலாவே எழுதிக்கொடுத்து பின்னாளில் நூலகம் இணையதளம் போன்றவற்றில் வருகிற உத்தியோகபூர்வமாக வருகின்ற ராஜேஸ் பாலா அறிமுகங்களில் ராஜேஸ்பாலா 1970ல் இலண்டனுக்கு வந்தார் என்று எழுதப்படுகிறது.
தொடர்பான கட்டுரைகள்
Comments
Post a Comment