கிளப்ஹவுஸ் அண்டப்புழுகி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

      The Best Clubhouse Liar of the Year 2021              ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 



By நட்சத்திரன் செவ்விந்தியன்                             Editor in chief                                                                  Jafffnafashion.com


1. திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்த அதேதினத்தில்  தான் சென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்தாக  ஆப்கானிஸ்தான் தமிழ்சங்க Clubhouseல் கடந்த  செப்டம்பர் 26ல் நடந்த நிகழ்ச்சியில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  சொன்ன அண்டப்புழுகுக்காக.  அப்போது திலீபன் இறந்த யாழ்ப்பாணத்தில்தானே பாலசிங்கம் இருந்தார் என்ற உண்மையை நான் சொன்னபோது தனது அண்டப்புழுகை காப்பாற்ற அவர்  "அதே தினத்தில் ஹெலிகொப்டரில் பாலசிங்கம்  யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கலாம். எனக்கும் IPKF ஹெலிகொப்டரில் யாழ்ப்பாணம் அழைத்துப்போக உதவுவதாகச் சொன்னார்கள்" என்று மேலுமிரு ஆகாசப்புழுகுகளை அவிழ்த்துவிட்டார்.  

 2. நேற்றைய தினம் ஆப்கானில்தான் தமிழ்சங்கத்தில் ராஜேஸ்வரியின் அண்டப்புழுகு மறுபடியும் விவாதத்திற்கு வந்தபோது அவரும் விவாதத்தில் கலந்துகொண்டார். தனது அண்டப்புழுகை காப்பாற்ற ஒரு அண்டப்புழுகி எப்படியெல்லாம் மேலும் ஒன்பது ஆகாசப்புழுகுகளை அவிழ்த்து விடுவாரோ அதேபோல ராஜேஸ்வரியும் மறுபடியும் பகீரதப்பிரயத்தனம் செய்து மூக்குடைபட்டார். நட்சத்திரன் செவ்விந்தியனை மிரட்டினார். Bullying செய்யமுயன்றார். தனது 1987ம் ஆண்டு டயறி இப்போது கைவசமில்லை. இருந்தால் ஆதாரங்களை தந்திருப்பேன் என்றுவேறு அவிழ்த்துவிட்டார்.  முதலில் தான் திலீபன் இறந்த செப். 26,  1987 ல் சென்னையில் பாலசிங்கத்தை சந்திக்க காத்திருந்தேன். சந்திக்கமுடியவில்லை என்றார். பிறகு தானே தன் கூற்றோடு முரண்பட்டு அன்று சென்னையில் பாலசிங்கத்தை சந்தித்தேன் என்றார். 


3. இவ்வருட ஆரம்பத்தில் அகழ் இணையத்தளத்தில் ராஜேஸ்வரி   வழங்கிய பேட்டியில் சொன்னவை பின்வருபவை. இந்திய ராணுவம் சென்னையில் அடையாறில் பாலசிங்கத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது என்கிற விபரங்கள் அண்ட ஆகாசப் புழுகுகள். 

கேள்வி: இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறீர்கள், எழுதி இருக்கிறீர்கள். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறீர்களா…? அவர்களுடன் நேரில் பேசி இருகிறீர்களா?

ராஜேஸ் பாலா: ஓம். அதனை நினைவு கூர்கிறேன். லண்டனிலிருந்து டெல்லிக்கு சென்று அங்கிருந்து புறப்பட்டு சாமம் 2 மணிக்கு சென்னையில் இறங்கிய போது விடுதலைப்புலிகள்தான் என்னை வரவேற்றார்கள். கஸ்ரோ தான் என்னை வரவேற்று “வாங்கோ அக்கா” என்று கூட்டிக்கொண்டு போனார். வீதியில், நான் நடுவில், முன்னுக்கு ஒரு ஓட்டோ, பின்னுக்கு ஒரு கார் என்று போகும் போது ஒரு பொலிஸ் கேட்டார் “என்னப்பா இந்த நடுச் சாமத்தில் ஊர்வலமாக போறீர்கள்?” என்று. “எங்களுடைய அக்கா லண்டனிலிருந்து வந்து இருக்கிறார். அவர் பெரிய எழுத்தாளர்.  அவர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றார்” என்று காஸ்ரோ சொல்ல, “சரிப்பா போங்க” என்று பெரிய ஆரவாரம்.

அடுத்த நாள் பாலா அண்ணாவைப் பார்க்க அடையார் போனேன். அங்கே போனால் வெளியே இந்தியன் ஆர்மி நிற்கின்றார்கள். பொலிஸ்காரர்கள் நிற்கின்றார்கள். உள்ளுக்குள் விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளோடு நிற்கின்றார்கள். எனக்குத் தலை சுத்தத் தொடங்கி விட்டது. நான் லண்டனில் பார்த்த பாலா அண்ணா வேறு. லண்டனில் ஒரு கவுன்ஸில் வீட்டில் சாதாரணமாக இருந்தவர். சென்னையில் பார்த்தால் அவருக்கு இவ்வளவு பாதுகாப்பு. உள்ளுக்கு போவதற்கு நிறைய கேள்வி. அவர் ஒரு பெரிய கூட்டத்தோடு இருந்தார். இலங்கைக்கு போவதாகக் சொன்னேன். “கவனமாக இருங்க தங்கச்சி” என்று சொல்லி அனுப்பினார். 

4. ராஜேஸ் பாலா அம்மா கிளப் ஹவுசுகளில் ஒரு பத்ரகாளியைப்போல் தோன்றி கிளப்ஹவுசுகளில் "Stealing the show" செய்யும்  போது நான் அவதானித்தவை          (அ) அவருடைய ஆங்கில உச்சரிப்பும் ஆங்கில இலக்கணமும் ஏன் மகாதப்பாக இருக்கின்றன என்பதே. நேற்றைய தினம் கிளப் ஹவுசில் அம்மா பயன்படுத்திய ஒரு ஆங்கில வசனம்.👇

" I WAS WAITED"

இந்த  Clubhouse இணைப்பில் 1:50:00 ல் கேட்டுப்பாருங்கள். 1970  ல் இருந்து ஆங்கில இலண்டன் சீமையில் இருந்ததாகச் சொல்கிற ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பேசுகிற  இங்கிலிசா இது?👇

 " I WAS  WAITED" 

(ஆ) ராஜேஸ் பாலா கிளப்ஹவுசில் பேசத்தொடங்கியதும் தன்னைப்பற்றிய மகா  சுயப்புனைவுகளோடு பேசத்தொடங்குவார். தனக்கு Friends(and Relatives)  in high places களில் இருக்கிறார்கள் என்று அடிக்கடி நினைவுபடுத்தி அண்டப்புழுகுகளை அவிழ்த்து விடுவார். சபையை ஆதிக்கத்தால் கட்டுப்படுத்த ஆங்கிலத்தை உபயோகப்படுத்துவார். சபையை கட்டுப்படுத்த ஆங்கிலத்தை உபயோகிக்கும் உத்தியை கனகச்சிதமாக பயன்படுத்தும் இன்னொருவர் நிர்மலா ராஜசிங்கம். நிர்மலாவின் ஆங்கிலம் அசலானது. ராஜேஸ் பாலாவின் ஆங்கிலம் ஒரு Semiliterate இன் ஆங்கிலம். இலக்கணமும் உச்சரிப்பும் மகா தப்பாக இருக்கும். ராஜேஸின் Choice of English words/Accent/ Vocabulary/Grammatical errors ஐ கேட்ட இரண்டாம் நிமிடத்திலேயே உங்களுக்கு இந்த அம்மாவில் சந்தேகம் வருவது தவிர்க்கமுடியாதது. 

5. ராஜேஸ் பாலாவே எழுதிக்கொடுத்து நூலகம் இணையத்தளத்தில் அவரைப்பற்றிய அறிமுகத்தில் பின்வரும் பகுதிகள் இருக்கின்றன. 

இராஜேஸ்வரி இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப்பட்டம் (BA) (London College of Printing 1988) பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத்துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

ஆசியாவின் முதல் பெண்மணி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  பேசிய பின்வரும்  ஆங்கிலம் 

"I WAS WAITED" 

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்கிற   semiliterate  ஐ ஒரு சிறப்பு பேச்சாளராக வைத்து புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்த முனைகிறவர்கள் புலிப்பாசித்தை ஆதரிக்கிறவர்களைவிடக் கேவலமானவர்கள்.   இந்த சமூக வலைததள காலத்தில் யாருமே புத்தகங்கள், பத்திரிகைகள், கட்டுரைகள் படிப்பதில்லை. வாய்மொழியாக் கேள்விப் பட்டவைகளைக் கொண்டு எல்லோருமே சமூகவிஞ்ஞானிகளாக சமூக வலைத்தளங்களில் படங்காட்டுகிறார்கள்.

6. "தோழர்கள்" மேலுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களையும் சொல்லாத சங்கேதங்களையும் புரிந்து கொள்ளுங்கள். நமது இணையத்தின் பொறுமையைச் சோதிக்காதீர்கள்  கிளப் ஹவுஸ் எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு

 "சனநாயகத்தின் பாலான ஆராக்காதலின் அடிப்படையில் உங்களுக்கு உதவத்தயாராக இருக்கிறோம். எந்த உதவியையும் 24/7 செய்யத்தயாராக இருக்கிறோம் என்று 24/7 ஓலை அனுப்பிக்கொண்டிருக்கிறார்   

தொடர்பான கட்டுரைகள்

1. அன்ரன் பாலசிங்கம் வரலாறு 01

2. பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

3. சைக்கோ பாலு மகேந்திரா

4. ராஜேஸ் பாலாவின் சங்கிலிக்கோர்வையான பொய்கள்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்