சமகால யாழ்ப்பாண சாதிப்போராட்ட கேலிக்கூத்துக்கள்

                      வி. மணிவண்ணன்                     துரையப்பாவைப் போல செயற்திறன்     மிக்க  தற்போதைய யாழ் நகரபிதா


புத்தூர் மயான பிரச்சனை ஒரே தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த இரு கிராமத்தவர்களுக்கிடையிலான பிரச்சனையே என்பதை மயானம் இருக்கவேண்டும் என்று போராடுகிற ஜனசக்தி கிராம தாழ்த்தப்பட்ட மக்களின் வழக்கறிஞரும்  தற்போதைய யாழ் நகரபிதாவுமான (இவருக்கான சேவைப்பணத்தை ஐனசக்தி கிராம மக்களே வழங்குகின்றனர்) வி. மணிவண்ணன் விளக்குகிறார். இப்பிரச்சனையை சாதிப்பிரச்சனையாக்கி படங்காட்டி "போராடும்" அனைத்து தறிகெட்ட இடதுசாரிகளுக்கும் so called தலித் போராளீசுக்கும் மணிவண்ணனின் வாதத்தை சமர்ப்பிக்கிறோம்.                                - Intelligence Unit/Jaffnafashion.com

"History repeats itself, first as tragedy,               second as farce"                                                              - Karl Marx

By வி. மணிவண்ணன்                                            யாழ்ப்பாண நகரபிதா  

                புத்தூர் சிந்துசிட்டி மயானம்                                                                                     


   1. குறித்த கிந்து சிட்டி மயானமானத்தை கடந்த 200 வருடங்களாக சிறுப்பிட்டி வடக்கு கலைவாணி சனசமூக நிலையம் சிறுப்பிட்டி மேற்கு ஜனசக்தி சனசமூக நிலையம் என்பவற்றில் வாழும் முழுக் குடும்பங்களும் சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையத்தின் குடும்பங்கள் சிலவும் புத்தூர் கிழக்கு குருநாதர் சனசமூக நிலையத்தின் சில குடும்பங்களும் புத்தூர் மேற்கு விடிவெள்ளி சனசமூக நிலையத்தின் குடும்பங்கள் சிலவுமாக பல்வேறு சாதியைச் சார்ந்த மொத்தமாக 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றார்கள். 900 இற்கும் அதிகமானவர்கள் ஒப்பமிட்டு எனக்கு வழங்கிய கடிதம் உண்டு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளேன்.

 2. குறித்த மயானமானது கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டபோது குறித்த மயானத்தை பயன்படுத்தக்கூடாது என தடுத்துவரும் அதன் அருகில் உள்ள மக்களே குறித்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். புகைப்பட ஆதாரங்கள் உண்டு நான் அவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளேன்.

 3. மயானமானது வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் கட்டுபாட்டுக்குள் இருந்து வருகின்றது. அது ஆரம்பத்தில் 58 பரப்பு விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைந்திருந்தது. தற்பொழுது குறித்த மயானத்தை பயன்படுத்தக்கூடாது என்று தடுத்துவரும் நபர்களால் குறித்த காணியானது 2012-2013 காலப்பகுதிகளில் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டு குறித்த காணியில் குடியேறினார்கள். 

4. 2012, 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிவிட்டு 2017ஆம் ஆண்டுவரை சடலங்கள் எரியூட்டப்படுவதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். தமது குடும்பங்களை சேர்ந்தவர்கள் இறக்கும்போது குறித்த மயானத்திலேயே அவர்களும் உடலங்களை தகனம் செய்தனர். 

5. மயானத்தை அகற்ற வேண்டும் என்று கோருபவர்கள் குறித்த மயானத்தில் இருந்து மிகத்தொலைவில் இருக்கும் கலைமதி சனசமூக நிலைய அங்கத்தவர்களும் அவர்களை சார்ந்த ஓர் அரசியல் கட்சியுமே 

6. அருகில் குடியிருப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடு எற்படுகின்றது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக குறித்த மயானத்தை சுற்றி 10 அடி உயர மதில் அமைக்கப்படவேண்டும் என்று நீதிமன்று கட்டளையாக்கியதுடன் சுடலை காப்பாளர் ஒருவரை நியமித்து முறையாக சடலங்கள் எரியூட்டப்படவேண்டும் என்றும் கௌரவ நீதவான் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தற்சயம் ரூபா 3,425,000 பெறுமதியில் மதில் அமைக்கப்பட்டுவிட்டது. 

            கொக்குவில் இந்து மயானம்



7. கொக்குவில் இந்து மயானமானது யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் விளையாட்டு மைதானத்திற்கும், மாணவர் விடுதிக்கும், கொக்குவில் புகையிரத நிலையத்திற்கும் நடுவில் அமைந்திருப்பதுடன் குறித்த மயானத்துக்கு அருகில் ஏராளமான குடியிருப்புக்கள் இருக்கின்றபோதும் இதுவரை எத்தகைய சுகாதார சீர்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளும் வரவில்லை. குறித்த மயானத்தை அகற்ற வேண்டும் என்ற எத்தகைய கோரிக்கைகளும் இதுவரை எழவில்லை. 

            கொக்குவில் இந்து மயானம்


8. காலாகாலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மயானங்களில் அத்துமீறி குடியேறிவிட்டு பின்னர் குறித்த மயானங்களை அகற்றவேண்டும் என்று விடுக்கப்படுகின்ற சட்டவிரோத கோரிக்கைகள் அங்கிகரிக்கப்படின் யாழ் குடாநாட்டில் இருக்கும் அனைத்து மயானங்களையும் அகற்ற வேண்டிய நிலைமை உருவாகும். அது சட்டவிரோதமாக மயானங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஊக்குவிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

 9. இவர்கள் மயானங்களை பிற இடங்களிற்கு மாற்ற சொல்லும் போது அங்கு வசிப்பவர்கள் மிருகங்கள் என்று நினைக்கின்றார்களா? அல்லது அவர்களுக்கு சுடலையால் சுகாதார சீர்கேடுகள் வராதா? அந்த புதிய சுடலையையும் ஆக்கிரமித்து பின்னர் அதனை வேறு இடத்திற்கு மாற்ற கோரின் காலத்திற்கு காலம் சுடலைகளை இடம் பெயர்த்து செல்ல முடியுமா? அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் சுடலைகளில் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க வேண்டுமா?

 10. சாதிப் பிரச்சனை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட ஒன்று. சுடலை வேண்டாம் என்று கூறும் அதே சாதியை சோ்ந்தவர்களும் என்னுடன் சுடலையை அகற்ற கூடாது என்று போராடுகின்றார்கள். குறிப்பாக அதே சாதியை சார்ந்த வடமாகாண சபை உறுப்பினா் பரஞ்சோதி குறித்த சுடலை அகற்றப்பட கூடாது என நீதிமன்றிற்கு கடிதம் வழங்கியுள்ளார்.

புதிய ஜனநாயக கட்சியின் Gangster அரசியல்வாதி செல்வமும் கட்சி தலைவர் காசி செந்தில்வேலும். புத்தூர்  கிராமசேவையாளர் ஒருவரை தனது குற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவரை மிரட்டி சுயமாற்றல் செய்வதற்கு காரணமானவர் செல்வம். தலைவர் செந்தில்வேல் தன் மகள் தமது தலித் சாதிக்குள்ளேயே "சாதி குறைந்தவரை" காதலித்தார் என்பதற்காக மகளின் காதலைப் பிரித்து அவரை வேறொருவருக்கு திருமணம் செய்வித்து வெளிநாட்டுக்கு அனுப்பியது வரலாறு                                           - Intelligence Unit/Jaffnafashion.com                                     


11. ஆக அங்கு நடப்பது ஓர் அரசியற் கட்சியின் அரசியல் நாடகம் மட்டுமே. குறித்த சுடலை காணியை ஆக்கிரமித்து கொடுத்து பணம் சேர்க்கும் ஒரு சிலரின் குறுகிய சுய நலன் மட்டுமே.

(2017ல் வி.மணிவண்ணன் தன் முகநூலில் எழுதிய பதிவு இது. இப்போது  கொக்குவில் இந்து மயானத்திலும் மின்சார தகனம் செய்ய நல்லூர் பிதேச சபை ஏற்பாடு செய்துள்ளது) 

தொடர்பான கட்டுரைகள்

1. சிந்துசிட்டி மயானமும் செந்தில்வேலும்: வெளிவராத உண்மைகள்

2. புலிகள் யாழ் நூலகத்திறப்பு விழாவை தடுத்ததன் காரணம் நகரபிதா ஒரு தலித் என்பதாலா?

3. Me Too: ஈழப்பெண்டிர் புரட்சி

 

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்