சங்கர ராம சுப்ரமணியனை பாதித்த நட்சத்திரன் செவ்விந்தியன்
"என் வயதுக்கு, எனது அந்நாட்களிலான துயரங்களுக்கு, ஒற்றைக்குள் அடக்கிவிட முடியாத எனது அனுபவ மூட்டங்களுக்கு, எனது காமத்துக்கு எனது பருவத்துக்கு மொழி உண்டு என்று காண்பித்தவர்களில் ஒருவர் நட்சத்திரன் செவ்விந்தியன். கிட்டத்தட்ட என் வயதுடையவர். யுத்தம் எதுவும் இல்லாத திருநெல்வேலியில் நாற்சாலைச் சந்திப்பில் நின்ற என்னையும் நான் அவர் கவிதையில் அடையாளம் கண்டேன். நட்சத்திரன் செவ்விந்தியனைப் படுத்தி எடுத்த துயர, சந்தோஷ மூட்டம் தான் என்னையும் படுத்திக் கொண்டிருக்கிறது என்று அடையாளம் கண்டேன். அந்தக் கவிதையின் இரண்டாம் வரியில் உள்ள ‘இனிய சோகம்’ என்ற சொல் சேர்க்கை தான் என்னிடம் பெரிய விடுபடுதல் உணர்வை உருவாக்கியது. மன எழுச்சி, மன விரிவு என்று அதைக் கூறலாம். ஆமாம், இனிய சோகம் என்ற பெயர் என்னிடமிருந்த உணர்வுக்கு நட்சத்திரன் செவ்விந்தியனால் கிடைத்தது." - சங்கர ராம சுப்ரமணியன் ஒரு அனுபவம் ஒரு உணர்வு சொல்லப்படும் வாய்ப்பை மொழியில் பெறும்போது இரட்டைத் தன்மையை அடைந்துவிடுகிறது. நிறைவு என்று சொல்லிவிடும்போதே நிறைவின்மையும் மகிழ்ச்சி என்று சொல்லும்போதே துக்கமும் மொழியில்...