முள்ளும் மலரும் Trailer

  


                          🎼🎻🎹🎺

என்னை காதலிக்க         யாரையாவது அனுப்புங்கள் நானொரு கைக்குழந்தை     

கொட்டும் மழையிலிருந்து      என்னை காப்பாற்றுங்கள்        எனக்கு வேணும் இளவேனிற்காலம் கடவுளே                                  கூதிர்காலம் பயமுறுத்துகிறது                                 

என் காலத்துக்கு முதலே                 நான் வயசாவது வெட்கமாயிருக்கு இந்த வலியில்  முதிர்கிறேன்

 கடவுளே                                முடிஞ்சவரை            நல்லவனாயிருக்க முயல்கிறேன்

இது எங்குற்றமா                                  என்  தவறுகளுக்கு                         நானே பொறுப்பென்று சொல்லித்தான்                           என்னை வளர்த்திருக்காங்க 

தேவதைகளில பாரத்தை போட்டுவிட்டு கண்ணீரோடு      ஊரை விட்டே ஓடப்போகிறேன் 

                    🎸📯🥁

Spearmint Cafe ல் ஒரு பெரிய அரச மரத்துக்குக்கீழே அவன் அமர்ந்தவாறு பியர் குடித்துக்கொண்டிருந்தான். அது வளர்பிறைக்காலம். கடற்காற்று கறுவாக்காட்டுக்குள் வரத்தொடங்கிய நேரம். Cafe உரிமையாளர் எதேச்சையாக வருகிறமாதிரி வந்து அவனைக் குசலம் விசாரித்தார். வழமையாக ஜாஸ் இசை போகிற கபேயில் அன்றுமட்டும் பிரபல்யமான ஆங்கிலப்பாடல்கள் போய்க்கொண்டிருந்தன. அந்த வித்தியாசத்தை மொஹமட் உணர்ந்தாலும் அனுபவித்தான். 

 உரிமையாளர் பிறகு தன் பரிசாரகனைக் கூப்பிட்டு, 

“நமது cafe தொடங்கின நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வரும் மொஹமட் நமது சிறப்பு விருந்தினர். எனக்கும் மொஹமட்டுக்கும் விருந்தும் பானங்களும் எங்கள் கணக்கில்,”    

என்று தானே ஓடர் கொடுத்து உரையாடத்தொடங்கினார். 

விலையுயர்ந்த ஒரு Single malt scotch விஸ்கியின் இரண்டாம் சேர்வ் பரிமாறப்பட்டோது அவர் மொஹமட்டிடம்,

 “அழகிய வெளிநாட்டுப் பெண்ணுடன் இந்த இரவைக் களிக்க விரும்புகிறாயா? எங்களிடம் மாறு லசனாய் ஐரோப்பிய, சீன இந்தியப்பெண்கள் இருக்கிறார்கள். செலவு அதிகமில்லை. நமது ரெஸ்ரோடண்டின் மேலறைகளிலேயே தங்குவதும் செலவுக்குள் அடங்கும். றெஸ்ரோறன்ட் ஒரு கவர் அப். உண்மையில் எங்கள் வருமானம் மேலே நடப்பதிலிருந்தே வருகிறது,”

என்றார். அக்கணத்தில் ஸ்ரபானியாவின் அழைப்பு மொஹமட்டுக்கு வந்தது அதிஸ்ரம். “ஒரு நிமிடம்” என்றவாறு எழுந்து கதைத்தபடி வெளியே வந்தான். அப்போது ராபி வில்லியம்ஸின் Better Man என்ற பின்வரும் பாடல் போய்க்கொண்டிருந்தது. 

Send someone to love me
I need to rest in arms
Keep me safe from harm
In pouring rain
Give me endless summer
Lord, I fear the cold
Feel I'm getting old
Before my time
As my soul heals the shame
I will grow through this pain
Lord, I'm doing all I can
To be a better man
Go easy on my conscience
'Cause it's not my fault
I know I've been taught
To take the blame
Rest assured my angels
Will catch my tears
Walk me out of here
I'm in pain
Once you've found that lover          You're homeward bound                   Love is all around

எப்ப நீங்க உங்கட காதலை கண்டு புடிக்கிறிங்களோ அப்பதான் உங்களுக்கு ஒரு வீடு தேடி ஓடுறீங்க”


அதே கணத்தில் தான் இனிமேல் இங்கு வரவேண்டாமென்றும் முடிவுசெய்தான். அவன் ஒரு கரும்புலியாக வெடிக்கும் தருணங்கள்தான் அவன் வாழ்வின் மிகப்பெரிய கனவு. அந்த நனவு கனவாவதை அக்கணத்தில் உணர்ந்தான். 

மொஹமட்டோடு தலைவர்  இறுதி போஜனம் உண்டு அவனை அனுப்பிவைக்கவில்லை.  அதுவொரு கெட்ட காலம். தலைவர் முக்கியமான முடிவுகள் எடுக்கமுடியாமல் தடுமாறிய காலம்.  பொட்டம்மான்தான் அவனோடு பன்றிக்கறியும், மரை வத்தலோடு அரிய காட்டரிசியும் (சட்டப்படி மண் சட்டியில்  விறகு  அடுப்பில் சமைத்தது)  உண்டனுப்பினார். யப்பானிய Cherry Blossom மலர்கள் வெடிப்பதுபோல அழகாக அவன் சுவர்க்கம் சேர்வான் என்பதை ஞாபகமூட்ட அம்மான் அப்போது ஜப்பானிய  செர்றி மலர்கள் முகிழ்த்து வெடித்துப் பறக்கும் அழகை ஜாஸ் இசைப்பின்னணியில்  போகும் பாடல் ஒன்றாகத் தனது மடிக்கணனியில் போட்டுக்காட்டி வன்னியில் ஒரு நிலவறையில் உணவு பரிமாறினார்.   



அந்த இரவில்தான் பொட்டம்மான் மொஹமட்டின் மாவீரர்களான  பெற்றோரின் கோப்புக்களை எடுத்து அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

 இந்த ஆண்டு சனவரிமாதக் கடைசியில் மொஹமட் விகாரமாதேவி பூங்காவில் ஸ்ரபானியாவுடன் தொலைந்து  நடந்தபோதுதான்   Sri Lankan Sakura மலர்கள் முகிழ்ந்து  வெடித்து பறப்பதைக்  கண்டான். அது அவனை மிகக்கலவரப்படுத்திய கணங்கள். அந்த நினைவோடு கறுவாக்காட்டிலிருந்து நடந்தே காலிமுகத்திடல் கடற்கரைக்கு நடக்கத்தொடங்கினான். காதலர்கள் தொலைபேசித் தொடர்பிலிருந்தார்கள். அது பின்னிரவு நிலவு.GOOGLE MAP GPS நடக்கும் தூரம் 57 நிமிடங்கள்  என்றது. மொஹமட் அக்கணத்தில் ஸ்ரபானியாவின் குரலில் அவள் வாசத்தை முகர்ந்தான். வெடிக்கும் தென்னம் பாளைகளினதும் கன்னிப்பெண்ணின் மூத்திரத்தினதும் வலையில் அகப்பட்டு இறந்தகணத்தில் மீனிலிருந்தும் வரும் ஸ்ரபானியாவின் அக்கண சுகந்தத்தைக் கடற்காற்று அவனிடம் சேர்ப்பித்தது. அந்த மணத்தை மோப்பம்பிடித்து வெறிகொண்டு  Google Map ஐ நம்பாது அவன் நடக்கத்தொடங்கினான். பாண்ஸ் பிளேசில் நடந்து விகாரமாதேவி பூங்கா வேலிபாய்ந்து புத்தசாசன அமைச்சு மதில் ஏறிக்குதித்து  Beira சின்ன ஏரியில் யேசப்பா தண்ணீரில் நடந்தமாதிரி கடந்து காலிவீதி கடந்து இந்தியத் தூதரகம் ஓரமாகப்போய் அவன் கோல்பேஸ் கடற்கரை சேர்ந்தான்.

முள்ளும் மலரும் சிறுகதையைப் படிக்க அழுத்துங்கள்👇                              முள்ளும் மலரும்

நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதைகள்

1. கர்னலின் காமம்

2. கமக்காரன்

3. பிரபாகரன் மாத்தையா

4. ஒரு நாள் கூத்து

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்