நாட்டுப்புறப் பாலியல் கதைகள்

 

1996ம் ஆண்டு கி. ராஜநாராயணன் கழனியூரானுடன் சேர்ந்து தொகுத்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் நூலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் சரிநிகரில் எழுதிய மதிப்புரை



தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு நிரம்ப உண்டு. அப்படியிருந்தும், சமஸ்கிருத மூலத்தில் எழுதப்பட்ட உலகின் முதலாவது பாலியல் நூலான காமசூத்திரம் முழுமையான நூலாக தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.  ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பல வேறுபட்ட மொழிபெயர்ப்புக்கள் வந்துவிட்டன. 

28 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து திருக்குறளையும் காமசூத்திரத்தையும் ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்த பிரெஞ்சு அறிஞர் Alain Danielou வின் மகத்தான நவீன காமசூத்திர மொழிபெயர்ப்பு. ஒருபாலியலாளரான இவர் இந்திய கோயில் சிற்பங்களிலும் காமசூத்திராவிலும் இருந்த ஒருபால் விடயங்களை வெளிப்படுத்தியதால் ஐரோப்பிய வழிக் கல்விபெற்ற காந்தியினதும் நேருவினதும் சீற்றத்துக்கு இலக்காகி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதானது. இதனை மொழி பெயர்க்கும்போது ஆசிரியர் தன் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்தார்


இவ்வாறான திறந்த பாலியல் சம்பந்தமான விவாதங்களுக்கு தமிழ்ச் சூழலில் இப்புத்தகத்தின் வரவு ஒரு சமூக மாற்றத்தின் மைல் கல்லே. ஏற்கெனவே ராஜநாராயணன் தான் தொகுத்த பாலியல் நாட்டுப் புறக்கதைகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்.



 'வயதுவந்த வர்களுக்குமட்டும்' தமிழ்ச் சூழலில் மாலன் போன்ற முன்னணிப் பத்திரிகையாளர்களாலேயே காரசாரமாக எதிர்ப்புக்குள்ளாகிய அவலம் நிகழ்ந்தது.  கி. ரா இந்த இரண்டாவது முயற்சியாக கழனியூரான் சேகரித்த 25 நாட்டுப்புறப்பாலியல் கதைகளைத் தொகுத்துள்ளார்.(பின்னர் 2012 காலத்தில் 101 கதைகளோடு இப்புத்தகம் மிக விரிவானதாக வந்தது) மருது ஓவியங்களை வரைந்துள்ளார். கிராமியப் பேச்சுத்தமிழில் ஒருவர் கதைசொல்பவராகவ இருக்க ஏனையவர்கள் கேட்பவர்களாகவும் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. யாராலுமே புறக்கணிக்கமுடியாத அங்கதம் கலந்த பாலியல் ரசனை இக்கதைகளில் உண்டு.

கார்சியா மார்க்கியூஸ் போன்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் வலிமையில் அவர்களின்நாட்டார் வழக்காற்றியலின் செல்வாக்கை யாருமே மறுக்கமுடியாது. நவீனங்களைச் சாதிக்க விழைகின்ற தமிழ் எழுத்தாளர்களும் நமது நாட்டார் வழக்காற்றியலின் சகல கூறுகளையும் அலட் சியம் செய்யமுடியாது. வாசகர்களும்தான்.

 இறுதியாக டொக்டர் தே. லூர்து இப்புத்தகத் துக்கு வழங்கியுள்ள அணிந்துரையின் ஒரு பகுதி 

"ஆனால் இத்தகைய கதைகளை ஆபாசக் கதைகளென்றும் இத்தகைய கதைகளைத் தொகுத்து வெளியிடக்கூடாது என்றும் சில ஒழுக்க சீலர்கள் குறிப்பிடுகின்றனர். இத்த கைய கதைகளைத் தொகுத்து வெளியிடுப வர்கள் ஒழுக்கக்கேடிகள் என்றும் அவற் றைப் பதிப்பிப்போர் சமூகத்தைக் கெடுப் போர் என்றும் அந்த                                    ஒழுக்க சீலர்கள்(Hypocrites) தங்களுடைய புராண கதைகளில் காணப்படும் பாலியல் கதைகளைப் புனிதமானது என்று ஏற்றுக்கொள்வர். ஆனால் நாட்டார் தம் வழக்கிலுள்ள பாலியல் கதைகளை ஆபாசக் கதைகள் என்று பூனை கருவாட்டை வெறுத்து ஒதுக்குவது போல் வெறுத்து ஒதுக்குவார்கள்.  புராணக் கதைக ளெல்லாம் ஆபாசக் கதைகளென்று நான் சொல்லவரவில்லை. எந்தவொருநாட்டார் வழக்காற்றியலாளனும்  அவ்வாறு கூறமாட் டான். இப்புராணக்கதைகள் கூட ஒருகாலத் தில் வாய்மொழியைச் சார்ந்த அல்லது எந்த மதத்தைச்சார்ந்த புராணக்கதைகளாக இருந்தாலும் அவற்றின் இயல்புகள் இவ்வாறு தான் இருக்கும்" 

தொடர்பான கட்டுரைகள்

1. சந்தர ராமசாமி: ஜனநாயக ஃபாசிஸ்டின் ஜனநாயக் குரல்

2. சுய தணிக்கையும் சுய மைதுனமும்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்