புலிகளால் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட நான்கு தமிழர்களின் கதை

பாரிஸ் மாநகர் புலிகளின் உவப்பான கொலை நிலம். முதற் கொலையான சபாலிங்கம் கொலையை 1994ல் புலிகளே செய்திருப்பார்கள் என்று "மாமனிதர்" சிவராமே எழுதியிருந்தார்.

(சிவராமும் அவரது புலிவிமர்சன ஆங்கில பத்திகளை வெளியிட்ட சபாலிங்கமும்)

முன் கதைச்சுருக்கம்                                               - நட்சத்திரன் செவ்விந்தியன்

புலிகளால் 1994 மே தினத்தில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் கொலையைப்பற்றி கேப்மாரி தராகி சிவராம் எழுதிய கட்டுரை பின்னிணைப்பாக வருகிறது. இதை எழுதிய தராகி சரியாக பத்தாண்டுகளில் 2004 ல் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு பிரபாகரனை புகழ்ந்து எழுதினார். தன்பிழைப்புக்காக யாரையும் ஊம்பத்தயாராக இருந்த முடிச்சுமாரி/மொள்ளமாரி தாரகி சிவராம்.  இக்கட்டுரை 20 மே 1994 இல் தாயகம் இதழில் பிரசுரமானது. The Island பத்திரிகையில் சபாலிங்கம் கொல்லப்பட்ட அதே வாரத்தில் சிவராமால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது. 

சபாலிங்கத்தின் கொலையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது அப்போது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளராக இருந்த திலகரின் வலது கரமான சுவிஸ் சிற்றரசனான நடராசா முரளிதரனே(முரளி) என்று புலிகளின் பாரிஸ் ஏஜண்டான கௌரிபால் சாத்திரி சிறி   ஈழயுத்தம் முடிந்த சில ஆண்டுகளில்  வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.  குட்டிமணி தங்கத்துரையை உண்மையில் பொலீசாருக்கு காட்டிக்கொடுத்தது பிரபாகரனே என தாயகத்தில் வந்த இக்கட்டுரை விளக்குகிறது.

                   Swiss Strongman முரளி


இந்தக்குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூக்களிலும் வைத்த கௌரிபால் சாத்திரி சிறி தானும் புலிகளுக்காக பல தமிழ் மக்களை கொலை செய்தவர் என்றும் இந்தியப்படை இலங்கையிலிருந்த காலத்தில் தான் தன் பால்ய கால நண்பனையே புலிகளுக்காக கொன்றவர் என்றும் சுய ஒப்புதல் வழங்கியிருந்தார். 

         "நண்பனையே மண்டையில்             போட்டேன்"                                                    -கௌரிபால் சாத்திரி சிறி 



புலிகளால் ஐரோப்பாவில் கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் பாரிஸ், பிரான்சில் வைத்தே கொல்லப்பட்டார்கள். 

1. சபாலிங்கம்

2, நாதன் மற்றும்  கஜன் 

3. "கேணல்"  பரிதி( நடராஜா மதீந்திரன்) 

புலிகளாலேயே கொல்லப்பட்ட புலி                                 ஏஜண்டுகள்


இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய அவதானங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளிலேயே குடியேறிகள் தங்களுக்குள் செய்து கொள்ளும் கொலைகளைப்பற்றி விசாரணை செய்ய தமது சட்ட வளங்களை பிரயோகிக்க தேவையில்லை என்பதை ஒரு இனவாத கொள்கையாக பின்பற்றும் இனவாத ஐரோப்பிய அரசு பிரான்ஸ் என்பதை நன்கு அறிந்தவர்கள் பாசிசப் புலிகள். புலிகளின் சர்வதேசப் பிரதிநிதியாக இருந்த திலகர் காலத்திலேயே புலிகள் ஐரோப்பாவில் நடத்திய முதல் கொலை( சபாலிங்கம்) நடக்கிறது. இந்தக் கொலையில்(1994) பிரான்ஸ் அரசு பாரபட்சமாக இருந்ததை அனுபவம் மூலம் அறிந்த புலிகள் 1996 ல் தமது திலகருக்கு பாடம் புகட்ட தமது நாதன் கஜனையே மண்டையில் போட்டார்கள். 

இன்னொரு முக்கியமான விடயம். புலிகள் சபாலிங்கம், நாதன், கஜன் கொலைகளை செய்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் பூர்வாங்கமாக(1993) ஆரம்பித்து விட்டது. ஆனால் சுவிஸ் நாடும் நோர்வேயும் அன்றும் இன்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அல்ல. இந்த இரண்டு நாடுகளையுமே உச்சகட்டமாக புலிகள் பயன்படுத்தினார்கள். சபாலிங்கம் கொலையின் கட்டளை மையம் சுவிஸ் நாட்டிலிருந்த வந்த வரலாறு இதுதான். அதிக தமிழர்கள் இருந்த கனடாவில் புலிகள் ஒரு கொலையையும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. திடமாக வழங்கப்பட்ட கட்டளைகளுக்கமைய DBS Jeyaraj இன் காலை மட்டும் அவரை கொலை செய்யாது உடைத்தார்கள்.  கிட்டுவின் "சீடராக" இருந்த ஜெயராஜ் அனைத்துலி பொறுப்பாளரான கிட்டு இறந்தபின் புதிய பொறுப்பாளராக வந்த திலகரே தன்னை எச்சரித்தபின் தன்மீதான தாக்குதலை செய்தார் என்று என்னிடம் பேசும்போது சொல்லியிருந்தார். அக்காலத்தில் புலிகளுக்கெதிரான மிகப்பலமான விமர்சனங்கள் கனடாவில் ஜோர்ச் குருச்சேவ் என்கிற தமிழரால் நடத்தப்பட்ட தாயகம் வாரப்பத்திரிகையிலேயே வந்துகொண்டிருந்தது. அவரை கொலை செய்ய புலிகள் துணியவில்லை. ராஜினி திராணகமைவிட புலிகள் உண்மையில் கொல்ல விரும்பியது அவரது சகோதரியும் புலிகளின் பாசிச  விதிமுறையை மீறி ரஜனிக்கு தகவல் கொடுத்து அவரை நூல் எழுதவைக்க காரணமான (புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்தின் ஆலோசனைக்கேற்ப செய்யப்பட்ட கொலை) அவரது  Broken Palmyrah நூலின் பிரதம தகவலாளருமான நிர்மலா ராஜசிங்கத்தையே. ஆனால் பிரித்தானியாவில் வைத்து நிர்மலாவை கொன்றிருந்தால் அதன் சட்டவிளைவுகளை நன்கறிந்திருந்த புலிகள் ஈழத்தில் வைத்து ராஜினியை அவசரமாக (அவர் லண்டனுக்கு திரும்பிவந்துவிடுவாரோ என்ற அச்சத்தில்)  கொன்றார்கள். பிரித்தானியாவில் புலிகள் யாரையும் கொல்லவில்லை. கொல்ல முடியவில்லை. பிரித்தானிய குடிமகன் ஜெயதேவனை வன்னியில் புலிகள் கடத்திவைத்திருந்தபோது பாலசிங்கத்தை M16 எச்சரித்தது. இதனால் வேறு வழியின்றி புலிகள் அவரை விடுதலை செய்யவேண்டியிருந்தது. 

ஒஸ்றேலியாவில் பேர்த் நகரில் வசித்துவந்த முத்துலிங்கம் என்கிற தமிழர் அங்கு ஒரு இந்து கோயிலுக்கு பொறுப்பாக இருந்தார். அவர் புலிகளின் கோரிக்கைகளுக்கு மசியவில்லை. புலிகளால் அவரை ஒஸ்றேலியாவில் வைத்து கொல்லமுடியவில்லை. நோர்வே சமாதான காலத்தில் அவர் கொழும்பு சென்றபோதே அங்குவைத்து அவரை புலிகள் கொன்றனர். 

யுத்தம் முடிந்தபின் இரண்டு வெளிநாட்டு புலிக்குழுக்களிடையே நடந்த போட்டியால் ஒரு புலிக்குழு பிரான்சின் புலிகளின் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுத்தலைவரான "கேணல்" பரிதி என்பவரை பிரான்சில் 2012ல் கொன்றது. நாதன் கஜன் கொலைகளைப் போலவே  இக்கொலையையும் ஸ்ரீலங்கா அரசே செய்ததாக புலி ஆதரவாளர்கள் கதைகட்டிவிட்டார்கள்.😀


வழமையைப்போலவே இனவாத பிரெஞ்சு அரச சட்டத்துறை பரிதி கொலை விசாரணையை முன்னெடுக்காமல் கிடப்பில் மோட்டது.

கௌரிபால் சாத்திரி சிறி பாரிசில் நடந்த 4 தமிழரின் கொலைகளையும் புலிகளே செய்தார்கள் என்பதை ம. அருளியனுக்கு வழங்கிய  பேட்டியில்  ஒப்புவித்தார். 

பாரிஸ் சபாலிங்கம் கொலையை துப்பு துலக்கி சிவராம் எழுதிய கட்டுரை👇

ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது. அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் அவரது இருப்பின் மையமே. 

       சபாலிங்கம் பதிப்பித்த சிவராம்                           பத்திகளின்  தொகுப்பு


1991 இல் நான் ஐலண்ட ஞாயிற்றுப்பதிப்புக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை(The Eluding Peace) சபாலிங்கம் அழகாகவெளியிட்டிருந்தார். அதிலிருந்து ஈழ இயக்கங்களின் ஆரம்பம் வளர்ச்சி பற்றி நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டதுமான நூல் ஒன்றை எழுதும்படி பல தடவைகள் என்னை வற்புறுத்தியிருந்தார். தமிழ் அரசியல் ஈழப் போர் போன்றவற்றில் ஏற்பட்ட வாராந்த தடங்கலினல் அந்த வேண்டுகோளுக்கு உடன்பட முடியவில்லை. பின்னர் அவர் தானாகவே அதைச் செய்ய முன்வந்ததாக கேள்விப்பட்டேன். ஈழ இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றின் பயங்கரமான பகுதிகள் பற்றிய அவரது விசாரணைகளே அவரது உயிருக்கு உலையாய் அமைந்ததை அறியக் கூடியதாக உள்ளது. தமிழ் அரசியல் தங்கள் ஏகபோக சொத்து என்று கருதும் புலிகளுக்கு தமிழ் இயக்க வரலாறும் அவர்களுக்கே உரியது. பிரபாகரன் காலத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக பேனாவைத் தூக்கினார் என்றால் அது சபாலிங்கம் தான். இப்போது அவர் இறந்து விட்டார்.

 லண்டனில் செல்வாக்கு மிக்க குழு ஒன்று இந்தக் கொலைக்கு புலிகளே காரணம் என்று ஐரோப்பிய அரசுகளிடம் புலிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருப்பதாக அறிகிறேன். இதற்கு காரணம் ஐரோப்பா, இந்தியா, இலங்கை, வட அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக சேவையாளர், பத்திரிகையாளர் போன்றோருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களில் சபாலிங்கம் ஒருவர். அவர்களின் பார்வையில் சபாலிங்கம் ஒரு நேர்மையான மனிதர். தனது செயற்பாடுகளுக்காக தன்னை கடனில் அமிழ்த்திக் கொண்டவர்.

 பிரான்சில் உள்ள அவரது சகபாடிகள் அவரது மரணத்திற்கு காரணமாக பின்வருவதைக் கூறுகின்றனர். ”தாயகத்திற்கு” எழுதிய கட்டுரை ஒன்றில் ஈழ இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் பிரபாகரன் சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார். ஒன்று குட்டிமணி,தங்கத்துரை கைது. மற்றது நீர்வேலி வங்கிக் கொள்ளை. இந்த விடயங்கள் பற்றி தற்போது கூறப்படுகின்ற விடயங்களை கேள்விக்குள்ளாக்கி தான் விரைவில் உண்மையை வெளிக் கொணர்வதாகக் கூறியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் மேற்படி இரு சம்பவங்களிலும் பிரபாகரன் துரோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார். குட்டிமணி தமிழ் நாடு செல்ல படகுக்கு காத்து நின்ற போது கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச் செல்வது பற்றிய விபரங்களை யாரோ தகவல் கொடுத்ததாக பரவலாக நம்பபட்டது. குட்டிமணி மீது கோபம் கொண்ட படகுகாரரால் தகவல் கொடுத்ததாக ஒரு தகவல். மற்றது குட்டிமணியைத் தொலைத்துக் கட்ட பிரபாகரனே செய்தி கொடுத்ததாக தகவல். டெலோ இயக்கம் இதையே வலியுறுத்தி வந்தது. ஆனால் 86இல் படகுக்காரன் இரக்கமின்றி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். யாரும் இது பற்றி சரியாக கூறமுடியாது. அத்துடன் குட்டிமணியும் வெலிக்கடையில் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார். நீர்வேலி வங்கிக் கொள்ளை பற்றி சபாலிங்கம் எழுப்பிய கேள்வியும் அதன் விளக்கமும் ஆச்சரியமானவை. 79 இல் புலிகள் இயக்கம் பிரிந்த போது பிரபாகரன் எந்த வளங்களும் இன்றி நண்பர்களுடன் குட்டிமணி,தங்கதுரை தலைமயிலான டெலோவில் சேர்ந்து அவர்களுக்காக கொஞ்ச காலம் வேலை செய்தார். அந்த நேரத்தில் அவர் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பங்கு கொண்டார். டெலா இயக்கம் தொடங்கிய ஒபரோய் தேவனும் இதில் பங்கு கொண்டார். தாயகத்தில் வெளிவந்த கட்டுரையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இறந்து விட்டார்கள் என்பதை சபாலிங்கம் சுட்டிகாட்டினார். ஓன்றில் அரச படைகளாலோ அல்லது புலிகளாலோ அவர்கள் கொல்லப்பட்டனர். ஏனவே இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரும் இந்த உலகில் இருந்து அழிக்கப்படுவதில் பிரபாகரனுக்கு பயன் இருந்தது என்பதை சபாலிங்கம் கருத்துக் கூற முயன்றிருக்கிறார். 

நீர்வேலி வங்கி கொள்ளை பிரபாகரனின் வாழ்வில் ஒரு கறையாகும். புலிகளின் இயக்க விதிப்படி வேறியக்கங்களில் சேர்பவர்களுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. தனது சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் பலரை அந்தக் காரணத்துக்காகவே பிரபாகரன் கொன்றிருக்கிறார். இங்கே சபாலிங்கம் அவ்வாறான விடயங்களுக்கு சான்று சேர்த்து புத்தகம் எழுத முயல்வதைக் காண்கிறோம். அதற்கு முன்னர் தாயகம் பற்றி…… இரண்டு யுத்தகாலங்களிலும் வெளிவந்த கடுமையான புலிகள் இயக்க எதிர்ப்பு வெளியீடு இதுவாகும். தாயகம் புலிகள் மீது விமர்சனங்கள் ஏற்படுத்திய தரத்துடன் ஒப்பிடுகையில் இராணுவத்தின் ”உளவியல் நடவடிக்கை ” சூரர்கள் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் போன்றே தோன்றுவர். இரண்டு வருடங்கள் பத்திரிகையாக வெளிவந்த பின்னர் 92 இல் புலிகள் தாயகம் விற்கும் கடைகளை மிரட்டி போட்டிப் பத்திரிகையான செந்தாமரைக்கு சார்பாக அதன் விற்பணையை குலைத்த போது அது சஞ்சிகையாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது ரொறன்ரோவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான ஜோர்ஜ் குருஷ்சேவினால் வெளியிடப்படுகிறது. புலிகளை கடுமையாக விமசிக்கும் குருஷ்சேவ் போன்றவர்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்போது ஏன் சபாலிங்கத்தை கொல்வதற்கு யாரும் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆவர்வமுள்ள புலிகள் பற்றிய விமர்சகர்கள் போலன்றி ஈழ இயக்கத்தின் ஆரம்பமுன்னோடிகளில் தற்போது எஞ்சியிருப்பவர்களில் ஒருவரான சபாலிங்கத்தால் இந்த விடயங்கள் கூறப்படுவது அவரைக் கொன்றவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கவேண்டும். 

 இந்த ஈழ இயக்கத்திலிருந்துதான் பிரபாகரன் என்ற சிறுவன் ஒரு கெரில்லாவாக உருவாக்கப்பட்டான். 71 இல் ஜே.வி.பி ஒடுக்கப்பட்ட பின்னர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்த சத்தியசீலனுக்கு சபாலிங்கம் சகபாடியாவர். இந்த அமைப்பு சுதந்திர கட்சி காலத்தில் தரப்படுத்தலை எதிர்த்து தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தியது. 1972 இல் பிரபாகரன் சத்தியசீலனின் இரகசிய அமைப்பில் சேர்ந்து கொண்டார். கட்டுபெத்தையில் மாணவராக இருந்த சபாலிங்கம், சத்தியசீலன், பூபதி மற்றும் பலர் மார்ச் 73 இல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இயக்கம் இந்த நிலையில் சிதைக்கப்பட்ட போதிலும் பிரபாகரன் தப்பித்துக் கொண்டார். அநுராதபுரம் புதிய சிறையில் சபாலிங்கம் சிறைவைக்கப்பட்டிருந்த போது. பிரபாகரனுடன் புதிய தமிழ் புலிகள் அமைப்பை ஆரம்பித்த செட்டி தனபாலசிங்கம், கண்ணாடி பத்தன், ரத்தினகுமார் ஆகியோர் சிறையுடைத்து தப்பிச் சென்றனர். இதன் பின்னர் சபாலிங்கமும் மற்றவர்களும் போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓருநாள் இரண்டாம் மாடியிலிருந்து தவறிவிழுந்தார். இந்த விபத்தில் இவரது இடக்கை நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. 

 75 மாசி மாதம் விடுவிக்கப்பட்ட சபாலிங்கம் பரந்தன் உப்பளத்தில் வேலை செய்தார். வரதராஐப்பெருமாள் முக்கியமானவராக இருந்த ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்த இன்னோரு உறுப்பினர் புஷ்பராஜா. இரவரும் பெருமாள் போல ஈ.பி.ஆர்.எல்.எப்ஃல் சேர்ந்து கொண்டார். சபாலிங்கத்தின் சமீபத்திய வேலையில் புஷ்பராஜா நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததால் அவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்தவர் என்று பலர் அவசரப்பட்டு கூறினர்கள். ஓருநாள் இரவு அவர் உப்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது கதவையாரோ தட்டினர். அது சத்தியசீலனின் குழுவில் இருந்த சிறுவன் பிரபாகரன். அவர் அங்கே அடைக்கலம் தேடினார். தனது வதிவிடத்தில் பல வாரங்கள் பாதுகாப்பான சூழ்நிலை வரும் வரை சபாலிங்கம் மறைத்து வைத்திருந்தார். 

 புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்றால் எழுபதுகளில் தொடங்கிய ஈழ இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்து தற்போது மேற்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது தரும் செய்தி இதுதான். வரலாற்று வெற்றிவீரன் பிரபாகரன் சொல்வதன்படி தான் எழுதப்படும். சத்தியசீலன், இணுவிலில் வைத்து பிரபாகரன் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பற்றிய சோட் பாலா இருவரும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். ஐயர் என்ற யாழ்ப்பாண பிராமணர் புலிகளின் ஆரம்பகால பொருளாளராக இருந்து தற்போது ஐரோப்பாவில் வாழ்கிறார். 85 ல் பிரபாகரனுடன் மோதல் ஏற்படும்வரை பிரபாகரனுக்கு சமமாக இருந்த ராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். ஆனால் எல்லோரும் இன்றுவரை மௌனமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சந்திக்க சபாலிங்கம் திட்டமிட்டிருந்தார் அதன் மூலம் இன்னோரு வரலாற்றைச் சொல்ல அவர் முயன்றார். 

ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது. அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் அவரது இருப்பின் மையமே.            (1994ல் The Island பத்திரிகையில் வந்த Taraki சிவராம் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)

தொடர்பான கட்டுரைகள்

1. தராக்கி சிவராம் வரலாறு

2. அன்ரன் பாலசிங்கம் வரலாறு: அத்தியாயம் 01

3. அன்ரன் பாலசிங்கம் வரலாறு: அத்தியாயம் 02

4. நிர்மலா ராஜசிங்கம் சகோதரிகள் வரலாறு(பார்க்க இரண்டாம் பகுதி)

5. சபாலிங்கம் கொலை பற்றிய சிறுகதை

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்