Me Too: ஈழப் பெண்டிர் புரட்சி
நட்சத்திரன் செவ்விந்தியன் பிரதம ஆசிரியர்/jaffnafashion.com
இலங்கையில் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதனுடைய ஆண் உறுப்பினர் ஒருவரை அவர் மீதான பாலியல் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு. இதனுடைய முக்கியத்துவத்தை இனிவரும் மாதங்களிலும் வருடங்களிலுமே புரிந்து கொள்ளமுடியும்.
மூன்றாம் உலக நாடான தென்னாசிய ஈழம் தென்னாசியாவில் ஒப்பீட்டு அடிப்படையில் பெண்ணுரிமைகளில் சற்று மேம்பட்ட நாடு. உலகில் முதல் முதலாக சனநாயக ரீதியில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பெண் அரசுத் தலைவர் ஈழப்பெண் சிறிமாவோ பண்டார நாயக்கதான். வட இந்தியாவில் ஐரோப்பிய காலனியாதிக்க காலத்திலும் பெண் உடன் கட்டையேறும் சட்டம் இருக்க ஈழ யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தில் கணவனை இழந்த பெண் மறு திருமணம் செய்யும் உரிமை சட்டமாக இருந்தது. கண்டிய சிங்கள சட்டத்தில் ஒரு சிங்களப்பெண் சகோதரர்களான இரு கணவர்களை திருமணம் செய்யும் உரிமை/சட்டம் இருந்தது. (பார்க்க Leonard Woulf Diaries). ஈழத்தில் பெண் சிசுக்கொலை இல்லை அல்லது மிக அரிது.
உலகின் முதல் சனநாயக பெண்ணரசி உலகின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர்
இத்தகைய மகத்தான வரலாற்றையுடைய ஈழத்தில் இந்த மு. மயூரன் வரலாற்று சம்பவத்தை தற்கால தமிழ் பெண்ணியல்வாதிகள், பெண்கள் சிலர் புரிந்து கொள்வது மிக்க அதிர்ச்சியளிக்கிறது. இந்த 21ம் நூற்றாண்டில், பெண்ணியல்வாதிகளும் பெண்களும் தங்களது கைவிரல்களில் ஒரு நடமாடும் நூலகமான Smart Phone களைக் காவிச்செல்கிற பெருவரப்பிரசாதம் மிக்கவர்கள். இவர்களில் பலர் இந்த மயூரன் சம்பவம் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றுகிறபோது எழுகின்ற கேள்விகள்.
1. இவர்கள் உண்மையிலேயே பெண்ணியல்வாதத்தை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறார்களா?
2. 21ம் நூற்றாண்டின் முதல் பெண் புரட்சியான Me Too இயக்கத்தின் பொறிமுறை/ கொள்கை/ விளைவுகள் பற்றி அறிந்திருக்கிறார்களா?
3. குறைந்த பட்சம் இவர்களது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பெண்களுக்கெதிரான குற்றங்கள் சம்பந்தமான Penal Code பற்றிய அறிவு எவ்வளவு? ஒரு அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதன் உறுப்பினர் ஒருவரை கட்சி ஒழுக்காற்றுவியல் சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் அது சம்பந்தமான Press Release ஐ வெளியிடவும் உரிமையுடையது என்பதை அறிந்திருக்கிறார்களா?
முக்கியமான ஒரு விடயம் கட்சி இப்போது மயூரனை ஒரு தண்டனைக்குரிய குற்றவாளியாக தீர்ப்பளிக்கவில்லை.. ஒரு கட்சிக்கு தன் உறுப்பினர் ஒருவரை குற்றவாளியாக்கும் அதிகாரம் கிடையாது. கட்சியால் அதி உட்சமாகச் செய்யக்கூடியது மயூரனை கட்சி உறுப்புரிமையிலிருந்து விலக்குவது மட்டுமே..கட்சி இப்போது செய்திருப்பது தற்காலிகமாக அவரை விலக்கியிருப்பதே. கட்சியில் தனது உறுப்புரிமையை பாவித்து கட்சி விதிகளுக்கு முரணாக பெண்களை தன் பாலுறவாளர்களாக மாற்றுகிறார் என்பதே கட்சி சம்பந்தப்பட்ட பெண்கள் வைத்த குற்றப்பத்திரிகை. இதிலுள்ள நியாயங்களை கட்சி தற்காலிகமாக ஏற்றுள்ளது.
2002 ல் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு குடியேறியபின் மயூரனின் பெண் நண்பிகளாக இருந்தவர்களில் பலர் கட்சியோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள். சிலர் கட்சியின் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள். 20 வருடங்களில் 40 க்கு மேற்பட்ட பெண் நண்பிகளின் "காதலராக" இருந்தவர் என்பது மயூரனை ஒரு Text Book Womanizer(பொம்பிளை க்கள்ளன்) ஆக்குகிறது. கட்சியைப் பாவிக்காது இத்தனை பெண்களை அவர் அடைந்திருந்தால் அங்கு கட்சி அவரை தண்டிக்க இடமில்லை. கட்சியிலிருந்து தனக்கு வருகின்ற அதிகாரத்தையும் அடையாளத்தையும் பயன்படுத்தி ஏறத்தாள 20 வருடங்களாக பலரை தன் பெண் நண்பிகளாக/பாலுறவாளர்களாக மாற்றி அவர்களை வசியம் செய்தார் என்பதே கட்சிக்கு ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலுள்ள மிக ஆதாரமான குற்றங்கள். (போருக்குப் பின்னைய JVP/ முன்னணி சோஷலிசக்கட்சியின் மாணவர்கள் இயக்க புலனாய்வு வலையமைப்பு மிகப்பெரிது. அது சிறி லங்காவில் Online மூலம் கல்விகற்கும் மாணவர்களையும் தம் உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழங்களில் கற்காது சர்வதேச IT கல்லூரிகள் மூலம் தகுதி பெற்ற மயூரனின் இடதுசாரி அரசியல் விசுவாசம் பற்றிய தகவல்கள் நமக்கு சிங்கள இடதுசாரிகளிடமிருந்தே நமக்கு கிடைத்தன. தூத்துக்குடியை மையமாகக் கொண்டுள்ள ஒரு கப்பல் கம்பனியின் IT Manager ஆக மயூரன் இருக்கிறார் என்பதை சிங்கள இடது சாரிக்கட்சிகள் மிகச் சந்தேகத்துடன் அணுகின)
கட்சி மயூரனை தற்காலிகமாக விலக்கியபின் மயூரன் இப்போது தன்னுடைய ஆதரவாளர்கள், தன்னுடைய இறுதிப்பெண் நண்பிகள் என்பவர்களைப் பயன்படுத்தி வழக்கை தனக்கு சார்பாக மாற்ற சாட்சிகளை உபயோகிக்கிறார். சாட்சிகளை மிரட்டல் மூலமோ கெஞ்சல் மூலமான நடவடிக்கைகள் மூலமோ தனக்கு ஆதரவாக மாற்றுவது மிகப் பாரதுரமான குற்றம். Perverting the course of Justice. இந்தக் குற்றத்தில் மயூரனுக்கு உடந்தையாக இருக்கிற பெண்கள்/ ஆண்கள் இதனை உணரவேண்டும்.
இப்போது 38 வயதாகிற மயூரனின் பல பெண் நண்பிகளின் வயது இந்த 20 ஆண்டுகளில் படிப்படையாக குறைவடைந்து வந்திருக்கிறது. கடைசியாக மயூரனின் பெண் நண்பியாக அறியப்பட்டிருப்பவர் தன் இருபதுகளின் ஆரம்பத்திலிருபபவர் என்பது கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளிலிருக்கிறது. இதைவிட குறித்த பெண்ணை அவரது சின்ன வயதிலிருந்தே கட்சி வட்டாரங்களிலிருந்து மயூரன் அறிந்திருக்கிறார் என்கிற அதிர்ச்சிகரமான உண்மையும் கட்சிக்கு தெரிந்திருக்கிறது. இது மிகப்பாரதூரமான குற்றச்சாட்டு.
மயூரன் தன் கட்சியைப்பாவித்து பின்வரும் இரண்டு முறைகள் ஊடாக பெண்களை வசியம் செய்திருக்கிறார்.
1. Grooming
2. Indoctrination
Grooming என்பது ஒருவர் ஒரு குழந்தையோடோ அல்லது ஒரு இளையவரோடோ நட்புறவையும் நம்பிக்கையையும் உணர்வு பூர்வமான பிணைப்பையும் உருவாக்கி அதன்முலம் அவர்களை சிப்பிலி ஆட்டவும்(manipulation) சுரண்டவும் (பாலியல்) துர்ப்பிரயோகத்துக்கும் உட்படுத்துவதாகும். உலகம் பூராகவுமுள்ள பல கத்தோலிக்க பாதிரிகள் இதனைச்செய்துள்ளார்கள்.
Indoctrination( சித்தாந்தத்தை பிரசங்கம் செய்து ஒருவரின் மூளையைக் கழுவுவது) உலகம்பூராகவுமுள்ள பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகளும் புலிகள், ஹிட்லரின் நாசி இயக்கம் போன்ற பாசிச அமைப்புக்களும் தம்முடைய உறுப்பினர்களுக்கு Indoctrination செய்வதை கட்சியின் நடைமுறையாக வைத்திருக்கின்றன. வைத்திருந்தன. மயூரன் கட்சியின் ஆஸ்தான பிரசங்கி. கட்சி சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் இருபால் குழந்தைகளையும் பெருமளவில் Indoctrination பண்ணும் பணி மயூரனுடையது. Marxist Doctrines, சோசலிச புரட்சிகர பெண்ணியல் வாதம், பெண்விடுதலை முதலியன பற்றி புதிய இளைய உறுப்பினர்களுக்கு பிரசங்கம் செய்வது கட்சியில் மயூரனின் முதன்மைப்பணி.
ஆக இந்த கட்சியின் Indoctrination பணியைப் பயன்படுத்தி மயூரன் பல இளம் பெண்களையும் Grooming பண்ணி தன்னுடைய பாலுறவாளர்களாக மாற்றியிருக்கிறார். மிக மிகப் பாரதூரமான குற்றங்கள்.
யார் மயூரன்? மயூரன் ஒரு புத்திஜீவியா? இல்லை. அவர் ஒரு புத்திஜீவியாக மார்க்சியத்தை கடந்து சிந்தித்திருக்க முடியும். அவருக்கு ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். ஒரு செல்வந்த குடும்பத்து மகன். அவர் கொழும்புக்கு வரும்போது குடும்பம் கொழும்பில் அவர் வசிக்க அவர் பெயரில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்தது. தகவல் தொழில் நுட்பத்தில் பிறவித் திறமை மிக்கவர். இவ்வளவு வசதி வாய்ப்புக்கள் புலமைகள் இருந்தும் அவரேன் தன்னை ஒரு புத்திஜீவியாக, சமூக விஞ்ஞானியாக உருவாக்கவில்லை?
ஏனெனில் மயூரனின் இலட்சியம்(Agenda) அவரது Sociopath உளக்குறைபாட்டிலிருந்து வந்தது. அவர் ஒரு Sexual Predator. Womanizer க்கும் Sexual Predator க்குமான வேறுபாட்டை Google ல் தேடி அறியுங்கள்) மார்க்சியத்தை கடந்து சிந்திக்க அவர் முயற்சி எடுக்காததால் அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் தன் வயதொத்த பெண் சமூக விஞ்ஞானிகளை அவரால் வசியப் படுத்த முடியவில்லை. இதன் காரணமாகத்தான் அவர் தன்னைவிட 18 வயது குறைவான இளம் பெண்களை தன் பெண் நண்பிகளாக மாற்றினாரா அல்லது அவருக்கு குழந்தைப் பாலுறவில் ஈடுபாடுண்டா என்பது விசாரணைக்குரியது.
இப்போது கட்சி நடவடிக்கை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்காது விட்டிருப்பின் இன்னொரு பத்தாண்டுகளில் மயூரன் 2009ல் பிறந்த ஒரு பெண் குழந்தையை கட்சியைப்பாவித்து தன் பெண் நண்பியாக்குவார்.
Me Too இயக்கம் அமெரிக்காவில் ஐரோப்பாவில் பல பெண்ணுரிமைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அமெரிக்க மாநில அரசுங்கள் பெண்ணுரிமைக்கான புதிய சட்டங்களை வரைந்திருக்கிறது. இது எதனால் நடந்தது. சமூக ஊடகங்களில் வெளிவந்த உண்மைகளால் அரசுகளுக்கு அழுத்தம் வந்தது. இதனால்தான் புதிய சனநாயகக் கட்சி மயூரன் விடயத்தை பகிரங்கப்படுத்தியது பாராட்டப்படவேண்டிய மெச்சத்தக்க நிகழ்வு.
உண்மையைச் சொல்லப்போனால் பெண்களைவிட ஆண்களே மயூரனின் தவறுகள் குற்றங்களை மிக உணர்ந்து சமூக ஊடகங்களில் மிகக் கச்சிதமான பதிவுகள் போட்டிருக்கிறார்கள்.எல்லா ஆண்களும் யாரோ ஓரு பெண்ணுடைய தகப்பனும் கணவனும் தமையனும் தம்பியும் காதலனும் முன்னாள் காதலனும் மச்சானும் தாத்தாவும் அத்தானும் நண்பனும் என்பதைக்கூட பெரும்பாலான நம்ம பெண்ணியல்வாதிகள் உணரவில்லை.
மயூரன் சம்டவம் சம்பந்தமாக சமூக வலைத்தளத்தில் இதுவரை எந்த பெண்ணியல்வாதி போட்ட பதிவையும் விட பின்வரும் புருசோத் விவேக் என்கிற ஆண் போட்ட பதிவுதான் கன கச்சிதமாக நிலமையின் உக்கிரத்தை விளக்குகிறது.
புருசோத் விவேக் ஊரில் பெண்ணுரிமை பேசிய ஒரேயொரு ஆண்
"ஒரு ஆளுமை மீதான கவர்ச்சியை பாலுணர்சியாக திரிபடையச் செய்து பல பாலியல் குற்றங்களைப் புரிந்தவரை, கட்சி அறிக்கை விட்டு பகிரங்கமாக விலக்குவதே சரியானதும் நேர்மையானதும் ஆகும். இந்த அறிக்கைப் பகிர்வென்பது எல்லோருக்குமான எச்சரிக்கை பகிர்வேயன்றி ஏதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
நீங்கள் நுட்பமாக பார்த்தீர்களாக இருந்தால் இதில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களின் வயது 18-22ற்குள் தான் இருந்திருக்கின்றது. பிற மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தம் இடம்பெயர்ந்து கொழும்பு வந்தவர்கள், வீட்டைத் தாண்டி எழுத்து, அரசியல் போன்ற துறைகளுக்குள் புதிதாக வருபவர்கள், கடும் மன அழுத்தத்தில் இருந்தவர்கள் போன்றவர்களைத் தான் இவர் தனது வெறியாட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார். இவரின் நுட்பமே தனக்கு விருப்பமான பெண்ணை, தனது மூளைச் சலவை மூலம் அந்தப் பெண்ணிற்கான நெருங்கிய அனைத்து வட்டங்களில் இருந்தும் தனிமைப்படுத்தி அந்தப் பெண்ணை வெளிக் கொண்டுவருவது. பின் ஆறுதல் , தளம் (space) தருவது என ஆசை வார்த்தை கூறி பாலியல் சுரண்டல் செய்வது. எல்லாம் முடிந்தபின் உறவைத் துண்டிப்பது.
இதுதான் இவன் செயல். இது ஆரோக்கியமான விடயம் என்று நம்புகிறீர்களா சேர். எல்லாம் தெரிந்தும் பாலியல் சுரணடல் செய்த இந்த நபரை யாருக்கும் அம்பலப்படுத்தாமல் வெறுமனே கட்சியை விட்டு விலக்குவது உசிதமான செயல் என்று நம்புகிறீர்களா சேர்.
இந்த அறிக்கை மேலும் மேலும் பல மு.மயூரன் போன்றவர்கள் உருவாகாமல் இருப்பதற்கு சிறிதளவேனும் துணை புரியும் என்று நீங்கள் கருதவில்லையா சேர். கட்சி குறித்து , அதன் கொள்கை குறித்த அரசியல் விமர்சனத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இந்த நேரத்தில் கட்சியை ஆதரிப்பதோ, விமர்சிப்பதோ தேவையற்ற விடயமாகவே பார்க்கின்றேன். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பெண்ணை சுரண்டலுக்கு உட்படுத்தியவர்களே ஒன்றாக நிற்கும் போது மக்கள் மீது கரிசனை கொண்ட நாம் பிரிந்து நிற்க வேண்டாம் என்று கருதுகின்றேன். இந்த நேரத்தில் மயூரன் போன்ற பாலியல் சுரண்டல்வாதிகளை கேள்விக்குட்படுத்தி அவரை தனிமைப்படுத்துவதே சிறந்த தண்டனையாக இருக்க முடியும்." -புருசோத் விவேக்
தொடர்புடைய கட்டுரை 1. சர்மிளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி
2. சர்மிளா சையித்/ஹரி ராசலெட்சுமி கபட நாடகம்
Very informative
ReplyDelete