வங்கம் மலிகின்ற மாதோட்டத்தில் கத்தோலிக்க தலிபான்கள்

 

நட்சத்திரன்செவ்விந்தியன் 

ஈழம் ஒரு பௌத்த மத மேலாதிக்க நாடுதான். இந்த பௌத்த மேலாதிக்கம் ஸ்ரீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசுக்கு இடைஞ்சலாக இருப்பது உலகம் அறிந்தது. ஈழப்போர்களின் காரணமே இந்த சிங்கள பௌத்த மேலாதிக்கம் தான். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்  இதே தினத்தில் மன்னாரில் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு கத்தோலிக்க  மேலாதிக்கம் மிக்க  மன்னார் மாவட்டத்தின்  அடிப்படைவாத கத்தோலிக்க பாதிரிகள் தூண்டுதலால் சட்ட விரோதமாக அழிக்கப்பட்டது. மன்னார் குரு முதல்வர் விக்டர் சோசை இவ்வளைவு உடைப்புக்கு பூரண ஆதரவு வழங்கி இதற்காக மன்னிப்பு கேட்க மறுத்தார்.மன்னார் ஆயர் பெர்ணாண்டோ மௌனமாக இருந்தார்.  யாழ் ஆயர் இதற்காக மன்னிப்பு கேட்டதையும் விக்டர் சோசை கண்டித்தார்.  பாரம்பரிய ஈழ ஊடகங்களில் இவ்விடயம் சம்பந்தமான முறையான ஆய்வுகள் வெளிவரவில்லை.

              Mastermind: Victor Sosai Anthony


1990ல் மன்னாரிலுள்ள முஸ்லீம்கள் புலிகளால் கலைக்கப்பட்ட பின்னர்தான் மன்னாரில் அடிப்படைவாத கத்தோலிக்க அடாவடித்தனங்கள் அதிகரித்தது. புலிகளுக்கும் தமிழ் கத்தோலிக்க பாதிரிகளுக்குமிடையில் ஒரு எழுதாத பரஸ்பர உடன்படிக்கையும் இருந்தது.  புலிகளுக்கு கத்தோலிக்க பாதிரிகள் நிபந்தனையற்ற கட்டற்ற ஆதரவு வழங்கவேண்டும். பதிலுக்கு புலிகள் கத்தோலிக்க நியமனங்கள்/விடயங்களில் தலையிடமாட்டார்கள் என்பதே அது. 

மன்னார் மறைமாவட்டம் யாழ்ப்பாணத்திலிருந்து பிரிந்து ஒரு தனி மறைமாவட்டமானதும் மன்னார் கத்தோலிக்க பாதிரிகளுக்கு வாய்ப்பாகியது. முன்னதாக மன்னார் ஆயராக  இருந்தவர்கள் எல்லோரும் யாழ்ப்பாண கரம்பொன் கிராமத்திலிருந்து வந்த வெள்ளாளர்களே. ஒரேயொரு விதிவிலக்கு கடையர் சாதியைச்சேர்ந்த ஆயர். இப்போதைய மன்னார் ஆயர் பரதவர் சாதியைச் சேர்ந்தவர். இவரது படிப்பு , சீவியம் எல்லாம் பெருமளவில் சிங்கள நாட்டிலேயே இருந்தது. ஈழயுத்தம் முடிந்தபின் ஏற்கெனவே தனியாகப் பிரிக்கப்பட்ட மன்னார் கத்தோலிக்கப் பாதிரிகள் இலங்கையின் கத்தோலிக்க Belt எனப்படுகிற மன்னாரிலிருந்து நீர்கொழும்பு வரையான கத்தோலிக்க ஆதிக்கத்தோடு சமரசமாகி தம்மை பலப்படுத்தினார்கள். ஈழ யுத்தம் முடியும்வரை தமிழ் கத்தோலிக்கமும்  சிங்கள கத்தோலிக்கமும் தேசியவாத அரசியலிலால் பிரிந்து இயங்கியவர்கள்.

                "கேணல்" மார்க்கஸ்                                     மன்னார் விடுதலைக்  கழுதைகள்


2019 மார்ச் 4ம் தேதி இரண்டு கத்தோலிக்க அடிப்படைவாத பாதிரிகளான மார்க்கஸ் , முரளி என்பவர்கள் தலமையில் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு சட்டவிரோதமாக அகற்றப்பட்டது. இந்த சதித்திட்டத்தின் சூத்திரதாரியான வங்காலை பங்குக்குரிய மார்கஸ் பாதிரியார் அப்போது கடந்த  6 மாதங்களாக கடமையாற்றினார் .இவர் கற்கடந்த குளம் பகுதியில் இதற்கு முதல் கடமையாற்றினார் ரிசாத் அமைச்சரின் மூலமாக பல சலுகைகளைப்பெற்றார். இவரின் சொந்த இடம் எழுத்தூர். இவர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டிவிரிச்சான் பகுதியின் பாதராக கடமையாற்றினார். அக்காலத்தில் பெண்கள் விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கைது செய்யப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு யோசப் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

புனித மெக்கா நகருக்குள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தடை இருப்பதுபோல ஒரு கட்டத்தில் கத்தோலிக்கர் அல்லாதவர்கள் வங்காலைக்குள் பிரவேசிக்க முடியாது என்று தேவாலயத்தில் பேசியவரும் மார்க்கஸ் பாதிரிதான். 

                 மன்னார் ஆயர் பர்ணாந்து                                 விக்டர் சோசையின் பொம்மை 

இலங்கையில்  ஒரு  வத்திக்கான் மன்னார் மாவட்டத்தில் இயங்கிவருவதை மன்னாருக்கு வெளியே வாழும் கத்தோலிக்கர்களே அறியமாட்டார்கள். உலகின் மிகச்சிறிய நாடு(Nation-State) வத்திக்கான் தான். இதன் பரப்பளவு நியூ யோர்க் சென்றல் பூங்காவின் பரப்பளவை விடக் குறைவு. பரப்பளவிலும் சனத்தொகையிலும்( 800-1000) உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் தான். ஆனால் உலகின் மிகப்பலமான மத அடிப்படைவாத- Non Secular/ Elected முடியாட்சி வத்திக்கான் தான். ஜரோப்பிய ஒன்றிய /சர்வதேச சட்டங்கள் வத்திக்கானில் செல்லாது. 

இலங்கையில் அதிக கத்தோலிக்கர் வாழும் மாவட்டம் மன்னார். மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மன்னாரின் முக்கியமான அரச பதவிகள் கத்தோலிக்கருக்கே வழங்கப்படும் எழுதப்படாத விதி இருக்கிறது. தங்களுடைய வழிக்கு வராத இந்து/முஸ்லீம்/கத்தோலிக்கரல்லாத ஏனைய கிறிஸ்தவ/பௌத்த  அரச உத்தியோகத்தர்களை "சாத்தான்களை வணங்கும் நாய்களே" என்று திட்டி அவர்களை இடமாற்றம் செய்விப்பது கத்தோலிக்க பாதிரிகளின் தொழில்களில் ஒன்று. பாதிரிகளுக்கு எதிராக செய்யும் முறைப்பாடுகளை மன்னார் பொலீசார் ஏற்றுக்கொள்வதில்லை. மன்னாரில் கத்தோலிக்க பாதிரிகள் சிலர் மதுச்சாலை உரிமம்( Bar License) வைத்திருக்கிறார்கள். 

ஆதிகாலத்தில் பாப்பரசர்களே தம்மதச்சட்டத்துக்கு விரோதமாக கள்ளப் பெண்டாட்டிகள் வைத்திருந்தார்கள்.  அவர்களின் "கள்ளக் குழந்தைகளின்" பட்டியல் பெரிது.    

ஈழம் போன்ற மூன்றாம் உலக நாட்டில் Illegitimate children ஆகப்பிறப்பவர்களின் அவமானம்/வலி பெரிது. இக்குழந்தைகள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அவமானமின்றி  பெறுவது மிகக்கடினம். மனிதாபிமான பழங்கால விதானையார்கள் இக்குழந்தைகளின் அவமானத்தை தவிர்க்க அவர்களின் தாத்தா/பாட்டன்களின் பெயரை தந்தையின் பெயராகப் போட்டு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எழுதினார்கள். இப்போது சட்டப்படி அப்படிப்போடுவது தவறு. இந்தக் குழந்தைகள் தற்காலத்தில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எழுதவேண்டுமாயின்  கள்ளக்குழந்தை என்ற அர்த்தம் பட்ட வரிகள் அவர்களில் பத்திரத்தில் இருக்கும். Privacy சட்டங்கள் வலுவாக இல்லாத ஈழத்தில் இக்குழந்தைகள்/குடிமக்கள்  வாழ்நாள் பூராக அனுபவிக்கும் வலி பெரிது.  இதில் கத்தோலிக்க பாதிரிகளுக்கு பங்கு ஆராய்வுக்குரியது. மன்னாரில் யுத்தத்தால் கணவனை இழந்த கத்தோலிக்க  விதவைகள் அதிகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

மற்றைய மாவட்ட கத்தோலிக்கரை போலன்றி மன்னார் கத்தோலிக்கர் பெரும்பாலானோர் தம் பங்குத்தந்தை சொல்லும் அரசியல்வாதிக்கே கண்மூடித்தனமாக வாக்களிக்கின்றனர். சிவசக்தி ஆனந்தன் கத்தோலிக்கரின் வாக்குகளைப்பெறுவதற்காக மதம் மாறியது பலர் அறியாதது. மன்னாரில் இலங்கையின் மதச்சுதந்திரமும் மதிக்கப்படுவதில்லை. கத்தோலிக்கம் அல்லாத மற்றைய சிறுபான்மை கிறிஸ்தவ மதப்பிரிவுகள், இஸ்லாம், இந்து மதங்கள்/மதச்சின்னங்கள்/வழிபாட்டு நிலையங்கள் மீது கத்தோலிக்கப்பாதிரிகளின் ஏவலில் தாக்கப்படுவது வழமை. திருக்கேதீச்சர ஆலயசூழலிலேயே ஒரு தேவாலயத்தை நிறுவி சண்டித்தனமும் கட்டைப்பஞ்சாயத்தும் செய்யுமளவுக்கு கத்தோலிக்க மாபியா மன்னாரில் தழைத்திருக்கிறது. மன்னார் பாதிரிகளின் பாலியல் குற்றங்களை எண்ணிலடங்காதவை. மன்னார் மீது பத்திரிகையாளர்களினதும் இலங்கைப்பிரசைகளதும் கவனம் திரும்பவேண்டும்.

                        சிவசக்தி ஆனந்தன்                                             EPRLF கம்யூனிசத்திலிருந்து                                           கத்தோலிக்கத்துக்கு


எகிப்து நாட்டுக்கு அலெக்சாந்திரியா எப்படியோ அப்படித்தான் ஈழத்துக்கு மன்னார்.  இரண்டும் அழகிய புராதன கடல்பட்டினங்கள். 3 ஏபிரகாமிய மதங்களான யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் அலெக்சாந்திரியாவில் சமாந்தரமாக சமாதானமாக வாழ்ந்தன. இயக்க நாக பூமியாகிய  ஈழத்தில்  இந்து பௌத்த கத்தோலிக்க மதங்கள் மாந்தை மன்னார் வழியாகத்தான் ஈழத்துக்கு வந்தன. 

 கேதீச்சர ஆலயவளவில் கோவிலிலிருந்து 300 மீற்றர் துரத்தில் அத்துமீறி அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட தேவாலயம் வெகுவிரைவில் அகற்றப்படவேண்டும். இவ்விடத்தில் முன்னர் ஒரு தேவாலயம் இருந்ததை காரணமாக சொல்கிற கத்தோலிக்க அடிப்படைவாத மதவெறியர்கள் இவையெல்லாவற்றுக்கும் முதல் போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றமுதல் இருந்த நிலமைக்கு நீங்கள் திரும்பிச்செல்ல தயாரா என்பதை தெரியப்படுத்துங்கள். கேதீச்சர ஆலயத்தில் அத்து மீறிய தேவாலயம் அகற்றப்படாவிட்டால் இப்போது மடுத்தேவாலம் இருந்த இடத்தில் 400 ஆண்டுகளுக்குமுதல் மோர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கண்ணகி கோவிலை மீளவும் அமைக்குமாறு கோரும் உரிமை இந்துக்களுக்கு இருக்கிறதை நினைவுட்ட விரும்புகிறேன். வற்றாப்பளை கண்ணகி அம்மன் இனி எத்தனை இந்துக்களின் கனவில் வந்து

 "மடுவுக்கு போக ஆசைப்படுகிறேன்

(வற்றாப்பளை கண்ணகி அம்மன்)

என்று வேண்டுவாரோ எனக்கு தெரியாது.

மத சுதந்திரத்தை மதிப்பது தற்கால சனநாயக நாகரிகம். 

நாம் போர்த்தகேசியரின் மத அடிப்படைவாத கற்காலதிற்கு  போக விரும்பவில்லை. இதனை மன்னார் கத்தோலிக்க தலிபான்கள் உணரவேண்டும். 


கத்தோலிக்க மன்னார் வன்முறைகள் மற்ற மதத்தவரின் சுதந்திரங்களை பறிப்பது ஒன்று. மற்றது சட்டத்தின் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது. 

வளைவு உடைப்பு தொடர்பான வழக்கை முடக்க சமாதானமாக போகுமாறு கோரும் அழுத்தங்கள் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், டெனீஸ்வரன் ஆகியோரால் அமைச்சர் மனோ கணேசன் மீது அப்போது பிரயோகிக்கப்பட்டது.  மனோ கணேசன் அப்போது துணிகரமாக ஆலய வளைவை மீண்டும் கட்ட உத்தரவிட்டவர்

                Mano Ganesan: Bold and Brave 


இப்போது சுமந்திரன் மன்னார் இந்துக்கள் சார்பாக ஆலய வளைவை உடைப்பு வழக்கில் ஆஜராகிறார். ஆனால் அப்போது சம்மந்தனும் சுமந்திரனும் மௌனமாயிருந்தார்கள் என்பதே உண்மை.

சம்பந்தனுக்காக முன்னர் அடக்கி வாசித்த சுமந்திரன்


2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தபின்னர் மன்னாரில் நடந்த கத்தோலிக்க பாதிரிகளால் தூண்டப்பட்ட மத அடிப்படைவாத வன்முறைகள் பின்வருவன. கேதீச்சர வளைவுடைப்பு ஒரு Isolated ஆன சம்பவமல்ல. 

 1. 2013 ல் பொன்தீவு கண்டலில் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முற்பட்டபோது அத்திட்டத்தை தடுக்க பாதிரிகள் மார்க்கஸ், சுரேஷ் ஆகியோர் கத்தோலிக்க ஊரையே கூட்டிவந்து நானாட்டான் பிரதேச செயலகத்தை கல்லெறிந்து தாக்கினார்கள். அப்போதைய பிரதேச செயலாளர் காஷ்மீர் சந்திரய்யா தன்னை தாக்க எறிந்த கல்லை இப்போதும் நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார். வழக்கு எதுவும் பாதிரிகளுக்கெதிராக பதியப்படவில்லை.

 2. 2010ல் நறுவிலிக்குளத்திலிருந்த Assembly of God கிறிஸ்தவ குடிசைத்தேவாலயம் கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால் எரிக்கப்பட்டது. 

3. 2016ல் புதுக்குடியிருப்பு அரச காணிகளில் குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் நெல்லியான் ஊரைச்சேர்ந்த தாழ்த்தப்பட்ட சைவ குடும்பங்களின் 2 குடிசைகள் கத்தோலிக்கரால் கொழுத்தப்பட்டு குடியிருப்பு தடுக்கப்பட்டது. 

 4. 2013ல் அச்சன்குளத்திலிருந்த காளிகோவில் கத்தோலிக்கரால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. 

 5. 2014ல் அரிப்பு முத்துமாரியம்மன் கோவில் கத்தோலிக்கரால் சேதமாக்கப்பட்டது. 

 6. கற்கிடந்த குளத்தில் வசித்துவந்த கந்தசாமி குடும்பத்தை மார்க்கஸ் பாதிரியார் செய்வினை சூனியம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஊரைவிட்டே கலைக்க முயன்றார். 

 7. எருவிட்டான் வழிபாட்டு இடத்திலிருந்த சூலத்தை நானாட்டான் பங்குத்தந்தையின் உத்தரவில் இன்பம் என்ற கத்தோலிக்கர் புடுங்கி அகற்றினார். 

8. 2017ல் நானாட்டான்- புதுக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் சூழலிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால் உடைக்கப்பட்டது. 

 9. நறுவிலிக்குளம் இந்து இடுகாட்டுக்கு பாதை போடுவதற்கு கத்தோலிக்கர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 10. 2016ல் வெள்ளாங்குளம் சந்தியிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால் உடைத்து கடலில் எறியப்பட்டது.

 11.2018 தலைமன்னார் பிள்ளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு. 

12. 2018 உயிலங்குளம் சந்தி பிளாளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு. 

13. 2018 தள்ளாடி விமானப்படை ஓடுபாதை முன்னாலிருந்த பிள்ளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு. 

 14. 2018 சிவராத்திரி வாரத்தில் மன்னார்-புதுக்குடியிருப்பு சிவன்கோயில் லிங்கம் கத்தோலிக்கரால் உடைத்து திருடப்பட்டது.

 

அங்கத்துறு நோய்களடி
  யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
  மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு
  பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
  கேதீச்சரத் தானே.






Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்