தாவீதும் கோலியாத்தும்: அனோஜனின் கெற்றப்போல் நெற்றியடி

            3 வயதில் தாவீது அனோஜன்                                யாழ் அரியாலை 1995


நட்சத்திரன் செவ்விந்தியன்                            (Cultural Editor/ இலக்கியப் புலனாய்வுப் பிரிவு)                    

அனோஜன் பாலகிருஷ்ணன்(28) Post War யாழ்ப்பாணத்திலிருந்து  வந்த மிகச்சிறப்பான மிக அதிகமாக எழுதிக்கொண்டிருக்கிற இளம் எழுத்தாளர். சஞ்சிகையாசிரியர். சுயாதீனமான துணிகரமான விமர்சனங்களை வெளியிட்டு வரும் விமர்சகர். அவரது கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளமுடியாத கோலியாத் ஷோபாசக்தி தனது Lobby Group/Public Relations ஏஜண்டுகளான நிர்மலா ராகவன் குடும்பத்தை பாவித்து அனோஜனை ஒரு ஜெயமோகனின் சீடராகவும் ஆதிக்க சாதிவெறியராகவும் பொய்ப் பிரச்சாரங்களை சோடித்து முன்னெடுத்து அனோஜனின் குரலை நசுக்க முயல்கிறார். அனோஜன் ராகவன்/ஷோபாசக்தி போல ஆதிக்க வெள்ளாள சாதியைச் சேர்ந்தவரல்லர்.  ராகவனும் நிர்மலாவும் தமது முறையே 28, 31 வயது வரையும் தாங்கள் இப்போது வலதுசாரி பாசிஸ்ட் என்று சொல்கிற பிரபாகரனின் தலமையை ஏற்று இயங்கியவர்கள். ராகவன் "பாசிஸ்ட்" பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்து 1981ம் ஆண்டு தனது தலைவன்  பிரபாகரனை பாதுகாக்க தன் 25 வயதில் சென்னை பாண்டிபஜாரில் PLOTE உமாமகேஸ்வரன் மீது முதல் வெடிவைத்து அன்றைய துப்பாக்கிச் சண்டையை ஆரம்பித்து வைத்தவர். அனோஜன் ஒருபோதுமே துப்பாக்கி தூக்கியவரல்லர். யாரையும் மண்டையில் போட்டவரல்லர். அனோஜன் தன் இருபதுகளில் நிர்மலா, மு. நித்தியானந்தன் போல தன் இருபதுகளில் மாற்று இயக்கப் போராளிகளையும் பொதுமக்களையும் கொன்ற " போராளிகளுக்கு" தன் வீட்டில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துக் காப்பாற்றியவர் அல்லர். இப்போது  28 வயசாகிற அனோஜன் என்கிற அரியாலை சிவியார் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளனை 65 வயசு ராகவனும் 68 வயசு நிர்மலாவும் வெள்ளாள  சோபாசக்தியின் சொக்குப்பொடியில் மயங்கி ஜெயமோகனின் சீடன் எனவும் ஆதிக்க சாதி கருத்தியல் உடையவன் என்கிறீர்களே. இங்குதான் இருக்கிறது உங்களது இந்து வெள்ளாள புறட்டஸ்தாந்து மேட்டிமை வெள்ளாள சாதித்திமிர். Hypocrisy. பின்வருவது அனோஜன் எழுதிய நியாயப்பதிவு. 

                  கோலியாத்தும் தாவீதும் 


"தாவீது தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான்"
         





‘சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் அச்சமும்’ என்று  ராகவன் எழுதிய கட்டுரையில், என்னைப் பற்றி எழுதிய குறிப்புக்கு விளக்கம் எழுதலாம் என்று அக்கட்டுரையின் பின்னூட்டப் பெட்டியைத் தேடினால் அதனைக் காணவில்லை. அதனால் எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.

ராகவன் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, முரளி சண்முகவேலனை  ‘அறிவாக, நுணுக்கமாகப் பேசுகிறீர்கள் அதனால் பிராமணரா?’ என்று நான் கேட்டேன் என்பது.

இதனை முற்றாக மறுக்கிறேன்.  

2018  டிசம்பர் 08  அன்று “பரியேறும் பெருமாள்” திரைப்படம் சார்ந்து ‘தமிழ் மொழிச் செயற்பாட்டகம்’ ஒழுங்கமைத்த நிகழ்வின் போது முரளி சண்முகவேலன்  ‘மையமாகும் விளிம்புகள்’ என்ற தலைப்பில்  பேசவந்தார். இந்தக் கூட்டத்தில்   சபையில் எழும்பி நான் அப்படிக் கேட்டதாக ராகவன் முகநூலில்  எழுதியிருந்தார். தான் அந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கியதால், “சிந்திக்கத் தெரிந்தவர்கள் பிராமணர்கள் என்பது சாதியச்சிந்தனை, இது பேச்சாளரை அவமதிக்கும் செயல்’ என்று எனக்கு பதில் அளித்ததாகவும் எழுதியிருந்தார். நான் அதற்கான மறுப்பை என் முகநூலில் எழுதியிருந்தேன்.

                         நிகழ்வில் வாசன், ராகவன், முரளி சண்முகவேலன்

கூட்டம் முடிந்த பின்னர் பிறிதொரு இடத்தில் சந்தித்து திரவங்கள் தரும் கிளர்ச்சியுடன் உரையாடியபோது, முரளி சண்முகவேலன் பேச வாய்ப்புத் தராது தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் கிண்டலாக நீங்கள் என்ன பிராமணரா என்று கேட்டேன்.  இது பற்றி எனது மறுப்பில் தெளிவுபடுத்தி இருந்தேன். ஒருவரின் ‘சாதி’ அறிந்து உரையாடும் பழக்கம் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை. அந்த நடைமுறை எவ்வளவு தவறானது எனத்  தெரியாதவனுமல்ல நான்.

எனது மறுப்பை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நண்பர்கள் நான் கூட்டத்தில் எழும்பி என்ன பேசினேன் என்ற காணொளிப்பதிவை கண்டறிந்து தந்து உதவினார்கள். சாட்சியம் வந்துவிட ராகவின் குற்றச்சாட்டு பொய்த்துப் போனது.

Video Player
00:00
02:20

கூட்டத்தில் நான் பேசிய காணொளி

 

இதன் பின்னர் எனக்குப் பதில் அளித்த ராகவன், இது பௌசரின் புத்தக விற்பனை நிலையத்தில், கூட்டம் முடிந்தபின்னர் நடந்த நிகழ்வு என்றும், சம்பவம் எங்கு நிகழந்தது என்பது முக்கியமல்ல நடந்தது தான் முக்கியம் என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அங்கு முரளி சண்முகவேலனை  ‘அறிவாக, நுணுக்கமாக பேசுகிறீர்கள் அதனால் பிராமணரா?’ என்று நான் கேட்டதாகவும் எழுதியுள்ளார். இது உண்மைக்குப் புறம்பானது. தற்போது முரளி சண்முகவேலன் அவர்களிடம் இருந்தும் ஒரு குறிப்பை வாங்கி வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து இதைச் சொல்வதால் அது உண்மையாகிவிடும் என்பதில்லை.

புத்தகக்கடையில் இவ்வாறான இலக்கியக் கூட்டங்கள் முடிந்தபினர் மது அருந்துவது வழமைதான். குறிப்பிட்ட நண்பர்கள் மட்டும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இவ்வாறான சமயங்களின்போது, உணவுப்பண்டங்களை வாங்க என்னைத்தான் அனுப்பிவிடுவார்கள். பல சமயம் இலக்கியக் கூட்டம், புத்தாண்டு ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் கூட்டித் துப்பரவு செய்யும் வேலைகளையும் என்னிடம் சொல்வார்கள். நானும் மறுப்பு எதுவும் சொல்வதில்லை. அதற்கு வேறு ஏதும் காரணங்கள் இருப்பதாக நான் நினைப்பதில்லை. செய்துவிடுவேன். மாஜிதா அக்கா ஏன் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறீர்கள் என்றெல்லாம் அக்கறையுடன் கேட்பதும் உண்டு.

அன்றும் இப்படி உணவுப் பண்டங்களை உண்டு, மது அருந்தப்பட்டது.

நேரம் செல்லச் செல்ல உற்சாகம் பரவியது. ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நண்பர்கள் இலகுவாகிவிட்டார்கள். ஜெயகாந்தன் நாவல்கள் பற்றி உரையாடல் வந்தது. அதன் பின்னர் நீண்ட உரையாடலில் முரளி சண்முகவேலன் அதிக நேரம் கதைத்துக் கொண்டிருந்தார். நான் பொறுமை இழந்து முரளி சண்முகவேலனிடம்  “நீங்க பிராமணரா?” என்று நையாண்டியாக கேட்டேன். முரளி சண்முகவேலன் அவர்கள் மற்றவர்களை பேச விடாமல், தான் மட்டும் அதிகாரம் செலுத்தி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதால் ஏற்பட்ட நையாண்டி எதிர்வினை அது.

அங்கு  அறிவாக, நுணுக்கமாக பேசுகிறீர்கள் பிரமணரா?’ என்று நான் கேட்கவில்லை. அப்படி முரளி சண்முகவேலன் , நான் வியக்கும் வகையில் அறிவாகப் பேசினார் என்று சொல்வதும் முரணானது. கூட்டத்தில் நடந்த உரையாடலில் கூட, அவருடன் முரண்பட்ட கருத்தையே சொல்லி இருந்தேன். என் பார்வை அவரது பார்வையில் இருந்து விலகி நிற்பதை அது சுட்டுகிறது.

 இத்தகைய முன்னிரவு மதுவிருந்துகளில்  ராகவன் தனக்குத் தலைமை கொடுக்கப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார் போல.   என்ன கற்பனையில் ராகவன் அங்கும் தலைமையில் இருந்து எனக்குப் பதில் அளித்ததாக நம்பிக்கொண்டிருக்கிறார்? (ராகவன், நீங்கள் ஆதிக்க வெள்ளாள சாதியில் இருந்து வந்ததால், எங்கும் நீங்கள்தான் தலைமை என்று நம்பிக்கொண்டு உள்ளீர்களோ? எனக் கேட்கமுடியும்)

அளவுக்கு மீறி மது அருந்தினால் இப்படித் தடுமாற்றங்கள் வரும்தான். தயவு செய்து உங்களையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.

                                      வாசன்

வாசன் அவர்களும் எங்களுடன் பௌசரின் புத்தகக் கடைக்கு வந்திருந்தார். ஒருபோதும் அவர் மது அருந்தியதைக் கண்டதில்லை. இவ்வாறான இலக்கியக்கூட்டங்களுக்கு பின்னரான கூட்டங்களில் அவர் மென்பானங்கள் மட்டுமே அருந்துவார். “ஒருமுறை ஏன் மது எடுப்பதில்லை என்று கேட்டபோது, தான் மிக அதிக காலமாக வயிற்றுப் பிரச்சினையினால் அவதிப்படுவதாகவும் அதனால் தனக்கு இவை ஒத்துக் கொள்வதில்லை என்றும் மிக அரிதாகவே குடிப்பதாகவும் கூறினார்.” அவர் அன்று ஒரு ‘டயட் கோர்க்’ போதுமென்றார். நான் தான் கடைக்குச் சென்று வாங்கிவந்தேன். மது அருந்தாமல் தெளிவுடன், ஸீரோ பெர்சன்டேஜ் அட்ககோலுடன் இருந்த வாசன் அவர்கள்தான் நான் கேட்ட கேள்வியின் சொற்பிரயோகங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். வாசனிடம் கேட்டபோது அவர் வழங்கிய குறிப்பு இதோ,

“அனோஜன் அவ்வாறு நையாண்டி செய்தது உண்மைதான். ஆனால், அறிவார்ந்த நுணுக்கமாக பேசுகிறீர்கள் அதனால் பிராமணரா என்று எங்கும் கேட்கவில்லை. அதற்கு, சிந்திக்கத் தெரிந்தவர்கள் பிராமணர்கள் என்பது சாதியச்சிந்தனை, இது பேச்சாளரை அவமதிக்கும் செயல்’  என்று ராகவனும் பதில் சொல்லவில்லை.

-திரு.வாசன்-

நண்பர்களே, அதிகமாக மது அருந்தி நிலைதடுமாறிய பின்னர், அது கொடுக்கும் தாக்கத்திலிருந்து ஒரு சம்பவத்தைத் தவறாக விளங்கி ராகவனும், முரளியும் எழுதியுள்ளார்கள். அல்லது என் மீது சதித் திட்டம் தீட்ட மோசடியாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாகிறது.

மது அருந்திக்கொண்டு, நான்கு பேர் உரையாடியதை இப்படித் திரித்து ராகவன் தனக்கு ஏதுவாக எழுதுவதில் இருக்கும் பலவீனத்தை மறைக்கவே, கூட்டத்தில் நடந்ததாக முதலில் எழுதினார். அது சாட்சியங்களுடன் பொய்த்துவிட, நடந்தது தான் முக்கியம், இடம் முக்கியமல்ல என்று பின்வாங்கி, பௌசரின் புத்தக்கடை என்கிறார். அங்கும் மது அருந்தவே ஒன்று கூடியதை கள்ளத்தனமாக மறைத்துவிட்டார். முரளி சண்முகவேலனின் குறிப்பிலும் அந்த விடயம் அவர்களின் வசதிக்காக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு சம்பவம், அது நடக்கும் இடங்களுக்கு இடையிலான தெளிவு எவ்வளவு அவசியம் என்பது  சட்டத்துறை சார்ந்து வேலை பார்க்கும் ராகவனுக்குத் தெரியவில்லை போலும்.

சம்பவம் நடந்த இடமே நினைவில் இல்லை, ஆனால் நடந்தது என்னவென்று நினைவுள்ளது என்று சொல்வதெல்லாம் கள்ளத்தனமாக புனையப்பட்ட கட்டுக்கதை.

உடலில் எத்தனை அளவு மது இருந்தது, அது நினைவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையெல்லாம் ராகவன்,முரளி இருவரும் கருத்தில் கொள்ளவேண்டும். கற்பனைக்கு ஏற்ப அதனை வளர்த்துச் செல்லக்கூடாது.

இதனை மேலும், சற்று விளக்கவேண்டும் என்றால், கடந்த இச்சா வெளியீடு பற்றியும், எழுத்தாளர் ஷோபாசக்தி லண்டன் வந்த நிகழ்வையும், அதற்குப் பின்னராக நடந்த சம்பவங்களையும் எழுதவேண்டும். நான்கு பேர் மதுவருந்திக்கொண்டு பேசியதைப் பொதுவில் எழுதலாம் என்ற சூழ்நிலை ராகவன் உருவாக்கிவிட்டதால்,  நண்பர்களே நானும் வேறுவழியின்றி இவ்வாறான சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டேன். பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இச்சா அறிமுக நிகழ்வு நடந்தபின்னர், ஷோபாசக்தி சூட்கேஸ் நிறைய காவிக்கொண்டு வந்த புத்தங்களை சுமந்து செல்ல என்னுடைய உதவி வேண்டும் என்றார். தன்னுடனே தங்கச் சொல்லி ராகவன் வீட்டுக்கு போகலாம் என்றார். நான் அவரது சூட்கேசை இழுத்துக்கொண்டு அவர் பின்னால் திரிந்தேன். நண்பர்கள் எல்லோரும் ரெஸ்டாரண்டுக்குச் சென்று உணவு அருந்தினோம். ஷோபாசக்தி பியர் மட்டும் போதும், வேறு மதுவகைகள் வேண்டாம் என்றார். அதுவும் ஹனிக்கன் பியர் இருந்தால் நல்லம் என்றார். துரதிஷ்டமாக அந்த பியர் இல்லாதபடியால் லயன் லாகர் பியர் அருந்த நேர்ந்தது.

           ரெஸ்டாரண்டில் ஷோபாவுடன்

ஹரி ராஜலெட்சுமி, இச்சா நாவல் பற்றிச் சொன்னதை அவரிடம் சொன்னேன். பொக்ஸ் நாவலுடன் ஒப்பீட்டு இச்சா நன்றாக இருப்பதாக ஹரி என்னிடம் சொல்லி இருந்தார். ஹரி எழுதிய மெசெஞ்சர் செய்தியை படித்தால்தான் நம்புவேன் என்றார் ஷோபாசக்தி. அதனைக் காட்டினேன். (இவ்வாறு ஒருவர் அனுப்பிய தனிச் செய்தியை மற்றவருக்குக் காட்டுவது தவறு என்றாலும், நூல் சார்ந்த விமர்சனம் என்பதாலும் ஹரி இதை தவறாக எடுக்க மாட்டார் என்ற நம்பிக்கையிலும் காட்டினேன், பின்னர் நடந்ததை ஹரிக்கும் சொல்லி இருந்தேன். அவர் பதிலுக்கு ஸ்மைலி எமோஜியை அனுப்பியிருந்தார்.) கண்ணாடி அணிந்து அக்குறிப்பை படித்தார். “ஹரியே சொல்லிவிட்டான் அப்புறம் என்ன, நாவல் வெற்றிதான்” என்றார் ஷோபா உற்சாகமாக.

“ஹரியை சின்ன வயதில் இருந்து தெரியும். அப்பவெல்லாம் ஆங்கிலத்தில் பக்கம் பக்கமாக எழுதி மெயில் அனுப்புவான். நான் பதில் போடாட்டி திட்டுவான்…அப்படி இருந்தான். இப்ப அவன் என்னுடன் பெரிசா கதைப்பதில்லை… பெருந்தேவியுடன் சேர்ந்துதான் இப்படி ஆகிட்டான். பிராமணர்களை ஒரு கட்டத்திற்கு மேல் நம்ப முடியாது” என்றார் ஷோபா.

பின்னர் ராகவன், ஷோபாசக்தி, மற்றும் சில நண்பர்களுடன் குழாய்வழி புகையிரத்தத்தில் பயணமாகி, ஒரு நிறுத்தத்தில் இறங்கி, ராகவனின் காரில் ஏறிப் பயணித்து, ராகவனின் வீட்டை அடைந்தோம். அங்கு ராகவனின் துணைவியார் நிர்மலா இருந்தார். அவரிடம் நலம் விசாரித்து, இச்சா நாவலைக் கொடுத்து, “நாவல் பின்னட்டையில் இருக்கும் பெண் யார், உங்களுக்கு தெரிந்த ஆள்தான் கண்டுபிடியுங்கள்,” என்றார்.

பின்னர் உரையாடல் பல்வேறு திசைகளை நோக்கிப் போனது; குவர்ணிகா இதழ், கோயில் கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் பற்றிய திருமாவின் விமர்சனம், பெருந்தேவியின் கட்டுரை என்று சென்று போட்டோகிராப்பர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் பிரியா தர்மசீலன் வரை நீண்டது. தனிப்பட்ட விடயங்களை பேச ஆரம்பிக்க, நாகரீகம் கருதித் தள்ளிப்போனேன்.(இங்கும்,) அன்று சரியான களைப்பு. தூக்கம் அடித்துப் போட்டது.

காலையில்  எழும்பி என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் நான் இருந்தேன். பின்னர் உரையாடல் தொடங்கியது. அப்போது ராகவன் இதே செய்தியைச் ஷோபாவிடம் சொன்னார். “கூட்டத்தில் எழும்பி முரளியிடம் பிரமாணரா என்று நான் கேட்டதாக…”

ஷோபாசக்தி “டேய் அப்படி கேட்டனியா?” என்றார். நான் இதே போல் நடந்ததைச் சொன்னேன். அது கூட்டம் அல்ல, பௌசரின் புத்தகக்கடையில், மது அருந்திவிட்டு உரையாடும்போது நிகழ்ந்தது என்பதையும் அதன் கிண்டல் நோக்கையும் விளக்கினேன். முரளி அவர்களின் தோரானை அப்படி இருந்ததால், மற்றவர்களுக்குப் பேச சந்தர்பம் தராததால் அப்படிக் கிண்டல் செய்தேன் என்றேன். “அப்ப பையன் சரியாத்தான் கேட்டு இருக்கிறான்” என்றார் ஷோபா.

பின்னர், என்னிடம் “உன் பெயருக்கு பின்னால் சர்மா.. என்று ஒன்றும் இல்லைத்தானே, பூணூல் ஒன்றும் உடம்பில் இல்லைத்தானே?” என்றார்.

நான் “இல்லை” என்றேன்.

ராகவன் ஷோபாசக்திக்கும், தனக்கும் கோப்பி தயாரித்தார். அவர்கள் இருவரும் அருந்திக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். நிர்மலா ஒம்பிலட் தயாரித்து பானுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  ராகவன், “உனக்கு கோப்பி வேணுமா?” என்று தயாரிக்கச் சென்றார். அப்படியே “ஷோபாவுக்கும் வேண்டுமா?” என்றார். “நீங்கள் தந்தால் இன்னுமொன்றும் குடிப்போம்” என்றார் ஷோபா.

அடுத்ததாக நடக்கவிருக்கும் இலக்கியச் சந்திப்பில், புத்தகம் ஒன்று செய்யவேண்டும். இளம் எழுத்தாளர்களின் புதிய ஆக்கங்களும், அவர்களது நேர்காணல் ஒன்றும் சேர்த்துச் செய்ய எண்ணுவதாகச் சொன்னார். எந்த எந்த எழுத்தாளர்களைச் சேர்க்கலாம் என்றும் கேட்டார். நானும் சிலரைக் குறிப்பிட்டேன். (மறுநாள் ஒரு பட்டியலும் அனுப்பி வைத்தேன்).

பின்னர் ஜெயமோகன் பற்றி விவாதம் வந்தது.

நிரம்லா “ஜெயமோகன் கட்டுரை ஒன்றை ஏதேச்சையாகப் படித்தேன். ஒன்றுமேயில்லை. வெரி ஷாலோ, அவரை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள்…” என்று சொன்னார்.

“தினமும் எழுதும் எனர்ஜி, அவரது கிரியேட்டிவ் போன்றவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது” என்று ஷோபா சொல்லிக்கொண்டு இருந்தார். பின்னர் என்னிடம் நிர்மலா “இலங்கையைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால், இந்தியாவில் நடக்கும் இந்துத்துவாக்கு எதிராக நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். ஜெயமோகனைப் படிப்பவர்களை வீட்டுக்குள் அழைப்பது இல்லை, நினைவுல இருக்கட்டும்” என்றார் அதட்டலாக.  என் முகம் போன போக்கை ஷோபா அவதானித்திருக்க வேண்டும், “ச்சே ச்சே அவன் அவன் நல்ல பொடியன்” என்று பேசிச் சூழலை சுமூகமாக்கினார்.

பின்னர் நான் புறப்பட்டு, வழியொன்றில் உணவருந்திவிட்டு ரெயிலைப் பிடிக்க விக்டோரியா நோக்கிப் போனேன்.

முரளி சண்முகவேலனிடம் நீங்கள் பிராமணரா என்று எங்கு கேட்டேன், எதற்காக கேட்டேன் என்பதை முன்னமே ராகவனுக்கும், ஷோபாவுக்கு தெளிவுபடுத்தியும், மீண்டும் தெரியாதது போல ஆரம்பிக்கிறார்கள். இது திட்டமிட்டு என்னைப் பிற்போக்காளர் என்று கட்டமைக்க முற்படும் சதி முயற்சி.

அன்புள்ள ராகவன் உங்களிடம்  சில கேள்விகள்,

அதீத மது அருந்திவிட்டு தவறாக விளங்கிக்கொண்டு, அல்லது என்னை அவதூறு செய்ய உண்மையை திரிபுபடுத்தி சாதியத்தின் இயல்பாக்கத்தைப் பற்றிக் கட்டுரை எழுதினீர்களே,

1.) ஷோபாசக்தி, ஹரி ராஜலட்சுமி பெருந்தேவியுடன் சேர்ந்து, தன்னுடன் முன்னர் போல் கதைக்காமல் போய்விட்டார். பிராமணர்களை ஒரு கட்டத்திற்கு மேல் நம்ப முடியாது, என்று சொன்னபோது நீங்கள் ஏன் சாதியத்தின் இயல்பாக்கம் பற்றி கட்டுரை எழுதவில்லை?

2.) என் பெயருக்குப் பின் சர்மா உள்ளதா, உன் உடம்பில் பூணூல் உள்ளதா என்று என் தோற்றத்தை பார்த்து, ஷோபாசக்தி உங்கள் வீட்டில் என்னிடம் கேட்டபோது, ஏன் உங்களால் சாதியத்தின் இயல்பாக்கம் பற்றி கட்டுரை எழுத முடியவில்லை? (அப்போது எனக்கு என்ன வகையான உளவியல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?)

3.) மலையக ஆதிக்க சாதியைச் சேர்ந்த மு.நித்தியானந்தன் அவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சரவணனை, அவரது தலித் சமூக சாதியை மறைமுகமாக சுட்டிக் காட்டும் விதத்தில் தன்மேல் ‘shit..எறிகிறான்’ என்று மிக மோசமாக வசையாடிய போது, உங்களால் ஏன் சாதியத்தின் இயல்பாக்கம் பற்றிக் கட்டுரை எழுத முடியவில்லை. இவர்கள் எல்லோரும் உங்களது நண்பர்கள் அல்லது, தங்களைப் போல ஆதிக்க சாதிய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால்தானே ராகவன்?

அத்துடன் ராகவன், இலக்கியக் கூட்டம் முடிந்த பின்னர், மது அருந்திக்கொண்டு அது கொடுக்கும் கிளர்ச்சியில் உரையாடுவதை எல்லாம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு எழுத முடியும் என்றால், நீங்கள் சமூகமளிக்காத பல இவ்வாறான கூட்டங்களில் உங்களைப் பற்றியும் பல விடயங்கள் பேசப்படுகின்றன.  அவற்றையும் உங்களைப் பின்பற்றி நானும் எழுதலாமா?

இப்படியெல்லாம் நடக்கவில்லை. அனோஜன் எங்கள் வீட்டுக்கு வரவேயில்லை என்று, ராகவன் அல்லது ஷோபா சொல்லக்கூடும். சொல்லலாம். அவதூறு என்றும் சொல்லலாம். இந்த இடத்தில்,  பிரான்ஸ் தமிழச்சி அவர்கள், ஷோபாசக்தி தன் முன்னே துவாயைக் கழற்றிக்காட்டி உறவுக்கு அழைத்தார் என்று பாலியல் துஷ்பிரோய குற்றச்சாட்டை வைத்தபோது என்ன சொன்னாரோ, அந்த வார்த்தைகளை கடன்வாங்கிச் சொல்கிறேன் “நான் அவதூறு செய்கிறேன் என்றால், இங்கிலாந்து சட்டத்திற்கு ஏற்ப சட்ட நடவைக்கை எடுங்கள்”.

சிறுபான்மையினர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரும்பான்மையிடம் அச்சம் கொள்ளும் என்ற சாதியச் சிந்தனையின் வெளிப்பாடுதான் அனோஜனிடம் இருக்கிறது என்ற ராகவனின் உள்நோக்கம் அல்லது சதித்திட்டம் பிழைத்துப்போய்விட்டது.

என் வாழ்க்கை அனுபவத்திலிருந்து இதைச் சொல்ல வேண்டும் என்றால்,ஆதிக்க வெள்ளாளர்களான ஷோபா சக்தி மீது அச்சம் கொண்டிருக்க வேண்டும், ராகவன் மீது அச்சம் கொண்டிருக்க வேண்டும். நிர்மலா மீது அச்சம் கொண்டிருக்க வேண்டும்.

அப்படி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்களா என்ன?

- அனோஜன் பாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்