இலக்கிய ரவுடி சாரு நிவேதிதா

"கட்சி மாறுவதால் என்னை கோழையென்று நினைத்து விடாதீர்கள், இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இன்னொரு கட்சிக்குத் தாவும்  தைரியம் இந்தியாவிலேயே எனக்கொருவனுக்குத்தான் உண்டு"                            -சாரு நிவேதிதா


நட்சத்திரன் செவ்விந்தியன்

"இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது'                                                                                       - சோபாசக்தி

 Zoom இப்போது பூர்வஜென்ம பாவங்களை கழுவும் காசியாகி இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முதல் கொரில்லா நாவல் வந்தபோது சாரு நிவேதிதா அதனை வன்மத்தோடு கிழித்தார். யமுனா ராஜேந்திரனும் அதனை மிக வன்மத்தோடு கிழித்தார். சாருவும்  யமுனாவும்  தீர்மானிப்பதல்லவே தமிழ் செவ்விலக்கியங்கள். இன்று 20 ஆண்டுகளின் பின் கொரில்லா தவிர்க்க இயலாத முக்கியமான ஈழ நாவலாகியிருக்கிறது. அதனை சாருவோ யமுனாவோ சமூக ஊடகங்களோ தீர்மானிக்கவில்லை. அசல் வாசகர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். 

 சேனனுடைய நாவல் Zoom சந்திப்பில் சாரு நிவேதிதா மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். 

"ஷோபா சக்தியின் இச்சா படித்தேன். தமிழின் பத்து முக்கியமான நாவல்களில் இச்சாவும் ஒன்று என நிச்சயமாகச் சொல்வேன். இதுவரையில் அவர் எழுதிய நாவல்கள் அனைத்தும் இதை எழுதுவதற்கான பயிற்சியோ என்று தோன்றும் அளவுக்கு ஒரு அற்புதமான நாவல் இச்சா. " 

 இங்கு சாரு செய்வது பகல் கொள்ளை. அப்பட்டமான லாபியிங். 20 வருடத்திற்கு முதல் சாரு கொரில்லாவை தப்பாக மதிப்பிட்டதற்கான பிராயச்சித்தமும் கண்துடைப்பும். தான் சொன்ன ஒரு பொய்யை மறைக்க 20 ஆண்டுகளின் பின் இன்னொரு பொய்யையும் சொல்லியிருக்கிறார்.

 தரமான வாசகர்களால் நிராகரிக்கப்பட்ட நாவல்கள் சோபாசக்தியின் பொக்ஸ்இச்சா நாவல்கள். இரண்டுக்குமே முறையான விமர்சனங்கள் எழுதி இவற்றை நான் அம்பலப்படுத்தியுள்ளேன். நண்பர் Riyas Qurana வும் இச்சாவுக்கு ஒரு முறையான விமர்சனம் எழுதி அதனை அம்பவப்படுத்தியுள்ளார். அ. யேசுராசா, சித்தாந்தன் சபாபதி முதலியவர்களும் இச்சாவின் போதாமைகளை பதிவு செய்திருக்கிறார்கள். 

 படைப்பாற்றலைப் பொறுத்தவரையில் சாரு நிவேதிதாவின் நாவல்கள் எல்லாமே மொக்கையானவை. Charu is a Mediocre creative writer. இவரது நாவல்கள் தமிழின் நூறு நாவல்களில் தேற வக்கில்லாதவை. சாரு ஒரு நேர்மையான சுயாதீனமான இலக்கிய விமர்சகர் அல்லர். அதற்கு சுயநலன் சார்ந்த காரணங்கள் உண்டு. அவரது நாவல்களே மொக்கை என்பதால் ஏனைய பல மொக்கை நாவல்களையும் சிறந்தவை என்று சொல்வது அவரது வியாபார தந்திரம். அவருக்கு தனக்கு ஒரு சீடர் கூட்டத்தையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவை இருப்பதால் பல சீடர்களின் மொக்கை நாவல்களை தரமானவை என்று IS ஸ்ராண்டட் முத்திரை குத்துவது அவரது வழமையான நடைமுறை.  

சாரு போட்டி, பொறாமை, கோபதாபம், முன்விரோதம் என்பவற்றால் இயக்கப்படும் நபர். அவருக்கு நீண்டகால நண்பர்கள் இல்லை "அரசியலில் இதெல்லாம் சகஜம்" என்ற தத்துவத்திற்கேற்ற வகையில் அவரது நண்பர்களும் எதிரிகளும் காலத்துக்கு காலம் மாறுவார்கள். இருபது ஆண்டுகளுக்கு முதல் அவரும் சோபாசக்தியும் பயங்கர எதிரிகள். சோபாவின் Masterpiece ஆன கொரில்லாவை நியாயமில்லாமல் தாக்கினார். ஆனால் சோபாவோ சாருவின் மொக்கை நாவலான ரஸலீலாவை நாவலே இல்லை என்று நியாயமாக கருத்து சொன்னார். 

 இனறு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சாருவுக்கு புதிய எதிரிகள் வந்துவிட்டார்கள். சோபாவும் சரக்கும் படைப்பாற்றலும் வற்றி சாருவின் மொக்கை நாவல்கள் தரத்திலேயே பொக்ஸ், இச்சா என்பவற்றை எழுதுகிறார். சுரேஷ் பிரதீப் என்கிற இளைய எழுத்தாளர் சாருவின் சீடனான அராத்துவின் பெண்டாட்டி என்ற நாவலை பிரித்து மேய்ந்து கடுமையான  விமர்சனம் வைக்கிறார். சாரு தருணம் பார்த்து காத்திருக்கிறார். 

இவ்வாண்டின் தொடக்கத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் ஷோபாவின் இச்சாவை ஒரு போலி நாவல் என்று அகழ் இதழில் அம்பலப்படுத்தியதும் சாரு கச்சையோடு களத்தில் இறங்குகிறார். அகழ் இதழின் இணையாசிரியர் சாருவின் "எதிரி" சுரேஷ் பிரதீப். கோபாலசாமி தன்னை சிறையில் போட்ட ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தமாதிரி சோபாவோடு கூட்டணி அமைத்து அகழ் கட்டுரையை பின்வருமாறு தாக்குகிறார்.

 "ஷோபா சக்தியின் இச்சா நாவலுக்கு கடைந்தெடுத்த கயவாளித்தனமான ஒரு மதிப்புரை பார்த்தேன். ஒரு இலக்கியப் பத்திரிகையில். இலக்கியம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு பல சமூக விரோதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புரை எழுதியவரை விட அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் சமூகத்துக்கு அபாயகரமானவர்கள் என்று தோன்றுகிறது. சமூகம் ரேப்பிஸ்டுகளால் நிரம்பியிருப்பது போல் இலக்கிய உலகம் ரவுடிகளாலும் லும்பன்களாலும் சமூக விரோதிகளாலும் நிரம்பியிருக்கிறது." 

முன்னதாக கால் மார்க்ஸ் கணபதியும் அராத்துவை கடுமையாக  விமர்சித்து அராத்துவை புகழ்ந்த சாரு நிவேதிதாவை அம்பலப்படுத்தியபின் சாருவுக்கும் கணபதிக்கும் இடையே நட்பு முறிந்தது.

அதன் தொடர்ச்சியாக சோபாவின் கூட்டணிக் கட்சியிலிருந்து சாரு வழங்கியதுதான் 

" இச்சா தமிழின் முக்கியமான 10 நாவல்களிலொன்று" 

 என்ற போலிச் சான்று மோசடி. இச்சா தமிழிலக்கியத்தின் குப்பைக்கூடைக்குள் போக அடுத்த 5 ஆண்டுகள் தேவையில்லை. இப்போதே போய்விட்டது. 

 சேனனுடைய சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் ஒரு மகத்தான நாவல் அல்ல. அது ஒரு மோசமான நாவல் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதனைத்தாக்க ஒரு மொக்கை நாவலாலான இச்சாவை சாரு முன்னிறுத்துகிறாரே - இது மகாமோசடி.

 திரள் அமைப்பினர் சேனனின் Tribe தான். ஆனால் சேனன் ஒரு பலமான Tribal தலைவர் அல்ல. வரலாற்றில் சேனனின் ஆளுமைக்கொப்பான ஒரு தலைவரை தேடினால் ஞாபகத்தில் வருபவர் PLOTE தலைவர் உமா மகேஸ்வரன். ஈழ இயக்கங்களில் அதிக எண்ணிக்கையான போராளிகளை( முப்பதினாயிரம்) 1984ல் கொண்டிருந்த இயக்கம். உமா மகேஸ்வரனின் தலமை பலவீனங்களால் அவ்வியக்கம் உடைந்து செல்லாக் காசாகியது. அவ்வியக்கத்தின் Able man ஆன சுந்தரம் என்கிற மகத்தான போராளியை புலிகள் கொன்றதோடு அதன் சிதைவு ஆரம்பித்தது.  புளட்டை ஒரு வெள்ளாள இயக்கம் என்று எதிரிகள் வசைபாடினார்கள். உண்மையில் கரையார LTTE போல அது ஒரு வெள்ளாள இயக்கமாக இருக்கவில்லை. சுந்தரம்- புளட்டின் able man/All rounder ஒரு முக்குவர். புளட்டின் அடுத்த Action Hero மாணிக்கம்தாசன் பாதி தலித். மீரான் மாஸ்ரர் கலப்பு சாதியிலிருந்து வந்தவர்.  புளட்டின் Territory வன்னி. அங்கிருந்து வந்த பல புளட் போராளிகள் மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். புளட்டின் குறிப்பிடத்தக்க  ஆளுமைகளான நோபேட், ஜான் மாஸ்டர் திருமலையிலிருந்து வந்தவர்கள். ஜான் மாஸ்டர் தமிழ்பேசும் முஸ்லீம். 

 சேனனின் லெப்ரினன்களுக்கு உசார் இல்லை. சோபாசக்தியின்( பிரபாகரன்) ராஜ தந்திரம் மற்றும் வியூகங்களை சேனனுடைய தளபதிகள் குறைத்து மதிப்பிட்டார்கள். முன்னதாக திரள் அமைப்பினர் ஒழுங்கு செய்த தனுஷாவின் நூல் பற்றிய Zoom சந்திப்பை சோபாசக்தியின் படைகள் களவாடியதிலிருந்து திரள் அமைப்பு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

 உமா மகேஸ்வரனின் பலவீனம் மனிதர்களையும் தகவல்களையும் கறாராக மதிப்பிடத் தெரியாதது. இக்கலையில் கைதேர்ந்தவர்கள் அன்ரன் பாலசிங்கமும் பிரபாகரனும். சேனன் கோட்டை விட்டது இங்குதான். சாரு நிவேதிதாவை மதிப்பிட சேனனுக்கு தெரியவில்லை. ஒரு இலக்கிய அரசியல் வாதியான சாரு எப்படி குத்துக்கரணமடிப்பார் என்பதை சேனன் கணிக்க தவறினார். 

கூட இருந்து குழி பறித்த தன்னுடைய முன்னாள் காதலியான பாரதி சிவராஜாவையும் சேனன் குறைத்து மதிப்பிட்டார். குறித்த zoom சந்திப்பில் பாரதி சிவராஜா செய்திருப்பது முன் விரோதத்தின் அடிப்படையில் வந்த பழிவாங்கல். தனக்கும் சேனனுக்குமான Relationship பிரச்சனைகளை, அப்படியேதுமிருந்தால் அவற்றை பொதுவெளியில் வைப்பது பாரதியின் சனநாயக உரிமை. ஆனால் Literary Cognition( இலக்கிய ஞானம்) இல்லாத பாரதி இந்த சந்திப்பில் சேனனின் நாவலை முன்விரோதம் காரணமாக முறையற்று தாக்குவது/பழிவாங்குவது அபாண்டம்.

                   Best Dressed Zoomer Award                                         பாரதி சிவராஜா

    (Photo credit: Zoom)

கிடைக்கப்பெறுகிற உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் படி ஒரு ஈழத்து So called பெண்ணியல்வாதிதான் யமுனா ராஜேந்திரனையும் கௌரி பராவையும் இந்த சந்திப்பில் பங்குபற்றுவதை தடுத்தார். சாரு நிவேதிதாவின் நாவலில் Pedophile சம்பவங்கள் வருவதால் சாரு ஒரு Pedophile என்று சொல்லி இதனை அவர் தடுத்திருக்கிறார். இலக்கியம் தெரியாத அந்த அம்மணிக்கு உலக செவ்வியல் Lolita நாவலும் தெரியாது. 

 புலிகளைப்போல புலனாய்வில் பலமான சோபாசக்திக்கு நடக்கப்போவது முதலே தெரியும். சாரு நிவேதிதா தன் Ambush திட்டங்களை கூட்டணி அறுப்பினர்களான முன்னதாகவே சோபா சக்தியிடமும் அவர் சகோதரி தர்மினியிடமும் சொல்லியிருக்கிறார்.

இன்று தன் குறுகிய இலக்கிய அரசியல் நலன்களுக்காக சாருவின் கூட்டணியில் இணைந்திருக்கிற  சோபாசக்தி 2017 ல் தன் முகநூலில் சாருவின் வஞ்சப் புகழ்ச்சிகளைப்பற்றி  போட்ட பதிவு பின்வருவது. 

[சாரு மென்று முழுங்கி மோடி, சோ, இப்போது ரஜினிகாந்த் பற்றி உளறுவதையிட்டெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. கண்டிப்பாக அவரே அவற்றை சில நாட்களில் கடுமையாக மறுத்துவிடுவார். ஒரு படத்தில்

 "கட்சி மாறுவதால் என்னை கோழையென்று நினைத்துவிடாதீர்கள், இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இன்னொரு கட்சிக்குத்  தாவும்  தைரியம் இந்தியாவிலேயே எனக்கொருவனுக்குத்தான் உண்டு' 

என்பாரே வடிவேலு, அதுபோல அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்

 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என ஆரம்பித்த சாரு அய்ந்தாவது நிமிடமே 'கூலா'க தன்னை மறுத்துப் பேச ஆரம்பித்துவிட்டார். 

 சரி..நான் பொது நன்மை கருதி சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன். சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்த போதெல்லாம் 'அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். 

"இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது' 

என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அது போலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்து கொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.]                                                                         - சோபாசக்தி          


               

தொடர்பான கட்டுரைகள்

Comments

  1. https://blog.ezulal.com/2021/03/blog-post_6.html?m=1

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்