சர்மிளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி
நட்சத்திரன் செவ்விந்தியன் சர்மிளா சையித் தன் முகநூல் பதிவில் புதிய சனநாயகக்கட்சி தன் உற்ப்பினரான மு.மயூரனை தற்காலிகமாக கட்சியிலின்று நீக்கியிருப்பதாக அறிவித்தமை பற்றி வெளியிட்ட பதிவு மிக்க சர்ச்சைக்குரியது. 7 பந்திகளைக்கொண்ட அப்பதிவில் 6 பந்திகளில் குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த கட்சியை கண்டித்து குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியை குறிவைத்து தாக்கிய அவரது முக்கியமான வசனங்கள் பின்வருவன. 1. "புதிய மார்க்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர் மு.மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் கவனச் சிதறலாக மட்டுமே அமைந்துள்ளது." 2. "....குறிப்பிட்ட நபரைக் களையெடுத்துவிட்டால் இயக்கம்/ கட்சி தூய்மை பெற்றுவிடும் என்பதோ மிகவும் குறைபாடான, தூர சிந்தனையற்ற தீர்மானங்கள்." 3." இவரை நீக்கிவிட்டால் கட்சியின் மீதும் அதன் பொறிமுறைகளின் மீதும் மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு நம்பிக்கை வந்துவிடும் போன்று கட்டமைப்படும் விம்பங்கள் மருட்சியானது." 4. " பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தெளிவான, உடனடி நடவடிக்கைகள் தேவை. இந்த நடவடிக்கையை எடுப...