கருணாகரனும் நாற்பது திருடர்களும்

கவிஞரும் "பத்திரிகையாளருமான"  கருணாகரன்  முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும்  மதிப்பிடப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் நியாயமான  பணி. "சட்டப்படி"
             நட்சத்திரன் செவ்விந்தியன்
2009 ல் ஈழப்போர் முடிந்தபின் அகதிமுகாமிலிருந்து கருணாகரன் காலச்சுவட்டில் எழுதிய "ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்ததென்ன" என்ற கட்டுரை மிக நியாயமான அறப்பதிவு. அதைப்படித்தபின் அவரில் மதிப்பேற்பட்டு அவர் முகநூல் நண்பனானேன். தொலைபேசினோம். 
           காலச்சுவடு 2009 ஆகஸ்டு

நான் அவரைக் கண்டதில்லை. அவர் சிறுவனான என்னைக் கண்டிருக்கிறார். 2ம் ஈழ யுத்தம் தொடங்கிய காலம். புலிகளின் பத்திரிகையான ஈழமுரசு பத்திரிகை காரியாலத்தில். அப்போது ஈரோசின் பால நடராச ஐயர்(சின்ன பாலா) புலிகளோடு ஐக்கியமாகி ஈழமுரசில் இலக்கிய பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். ஈழக்கவிதைகளைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதி ஈழமுரசில் பிரசுரிப்பதற்காகக் கொடுத்திருந்தேன். அக்கட்டுரையில் காசி ஆனந்தனதும் புதுவை இரத்தினதுரையினதும் கவிதைகள் கவித்துவமானவை இல்லையென்றும் பிரச்சாரக்கவிதைகள் என்றும் எழுதியிருந்தேன். 2ம் தடவை போனபோது பால நடராச ஐயரை நேரே சந்தித்தேன். "கட்டுரை பிரசுரிக்கப்படாது. நீங்கள் ஏன் ஆனந்தனையும் இரத்தினதுரையையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று" ஒரு சண்டையே ஆரம்பித்தது. நான் என் நியாயங்களைச் சொன்னேன். அவர் கோவமாகி ஏற்றுக் கொள்ளவில்லை. அக்காலம் பேனை மையால் ஒரே பிரதியே எழுதும் காலம். சரி என் பிரதியை திருப்பித் தாருங்கள் என்று கேட்டேன். தர முடியாது என்று மிரட்டினார். நானோ அப்போது பாடசாலை மாணவன். பிறகு கெஞ்சி அழுது மண்டாடித்தான் அவரிடமிருந்து எனது பிரதியை மீளப்பெற முடிந்தது. 

இந்த சம்பவத்தை 2009 க்குப் பிறகு கருணாகரன் அண்ணாவுடன் உரையாடும்போது குறிப்பிட்டு அடுத்த அறையிலிருந்து இதனை தான் கேட்டுக்கொண்டிருந்ததாகச் சொன்னார். நெகிழ்ச்சியான தருணங்கள் அவை.

பால நடராஜ ஐயரைப்போலவே கவிஞர் கருணாகரன் அண்ணாவும் EROS இயக்கத்திலிருந்து 1990 ன் பின் புலிகளில் ஐக்கியமானவர். ஐயர் 1995 வரை புலிகளிலிருந்தார். இலங்கைப் படைகள் அவ்வாண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் போது புலிகளோடு வன்னிக்குப் போகாது யாழ்ப்பாணத்திலேயே இருந்து EROS ல் இருந்து பிரிந்து EPRLF பின் அதிலிருந்து பிரிந்து வந்த இயக்கமான EPDP உடன் ஐக்கியமானார். ஒரு பத்திரிகையாளராக ஐயர் புலிகளின் ஈழமுரசிலிருந்து EPDP இன் தினமுரசுக்கு வந்தார்.  தினமுரசு கொழும்பிலிருந்து வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் EPDP தோழர்களின் பாதுகாப்பு நெருக்கடியானபோது ஐயர் கொழும்புக்கு வந்தார். கொழும்பில் அவரை EPDP இலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லுமாறு அவரின் முன்னாள் தலைவரான EROS பாலகுமாரினால் தொலைபேசியில் அச்சுறுத்தப்பட்டார். ஐயர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சில தினங்களில்  2004 ல் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பட்டப்பகலில் மகளை பள்ளிக்கு நடந்து கூட்டிச்சென்று விட்டபின்  ஐயர் கொலை 

புலிகளின் கொலைப்பாழாட்சி இருந்தபோது எல்லோருக்குமே நெருக்கடி. வாழ்க்கைப் பிரச்சனை. கவிஞர் கருணாகரனின் 2009 வரையான பொதுவாழ்வை நாம் கேள்விக் குட்படுத்தவில்லை. அதற்குப் பிறகான அவரின் காலமே நமது விசாரணைக்குரியது. 

போரின் பின் கருணாகரன் எப்படியிருந்தார்? பின்வரும் வழிகளில் அவர் செயற்பட்டிருக்கிறார்.

1. ஒரு பத்திரிகையாளராக                     

2. ஒரு பதிப்பாளராக

3. ஒரு கலைஞராக

4. தனது மனைவியின் சகோதரரான  அரசியல்வாதியின் மதியுரைஞராக 

ஒரு கலைஞராகவும் பதிப்பாளராகவும் எப்படியிருந்தார்? 

ஈழப்போர் முடிவின் பின் அவருக்கு பல நண்பர்கள். நிற்க ஒரு முக்கியமான ஒரு உண்மை. நிலாந்தனும் கருணாகரனும் 2009 மார்ச்- ஏப்ரல் காலத்தில் பிரபாகரனை கைவிட்டு "கள்ள தோணியில்" "சிங்கள  தேசத்துக்கு" குடும்பத்தோடு தப்பியோடியவர்கள்.  கருணாகரனின் இரு மகன்களையும் புலிகளின் படைகளில் சேர்க்கவிடாது தப்பவைக்க கருணாகரன் என்ன செய்தார்? இந்த உண்மைகளை அவர் பேசத்தயாரில்லை.   இந்ந வரலாற்றை சுயதணிக்கை செய்யவேண்டும். எதிர்கால சந்ததியினர் தம் வரலாறு தெரியாமல் இருக்கவேண்டும் என்ற அறிவு மறுப்பு வாதத்தை சுயநலன்களுக்காக கொள்கையாக வைத்திருக்கிறார். போரிலிருந்து  மீண்டுவந்த எல்லாக்குடும்பங்களினதும் வாழ்வு அவலமானதுதான். ஆனால் 2010 பொதுத்தேர்தலில் கருணாகரனின் மனைவியின் சகோதரரான சந்திரகுமார் EPDP எம். பி ஆனதும் கருணாகரன் குடும்பம் தழைத்தது. கருணாகரனுக்கு 2010 இலிருந்து 2015  வரை சந்திரகுமாரின் பணிமனையில  75 000 ரூபா மாத சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. இந்த  உண்மைகளை அவர் திட்டமிட்டு மறைத்தார். 

இருந்தும் புலம்பெயர்ந்த பல இலக்கிய ஆர்வலர்கள் இலக்கியவாதிகளிடமிருந்து அதிகளவில் பண பொருள் உதவிகள் பெற்றவர் கருணாகரன். உதவி தேவையானவர்கள் உதவி பெறுவது நியாயமானது. ஆனால் கருணாகரன் விடயத்தில் இந்த உதவிகள் லஞ்சமானது. நோயல் நடேசன்,  ப.தெய்வீகன், சயந்தன்  முதலிய பலரிடமிருந்து உதவி பெற்றிருக்கிறார்.  2015 ல் ஆட்சிமாறிய பின் அவர் கேட்டதால் நானும் அவரது கவிதைத்தொகுதி வெளியிட A$ 200 அனுப்பினேன். ஒரு பிரதியை கூட எனக்கு அவர் அனுப்பவில்லை.  கருணாகரன் உதவிகளை லஞ்சமாக்குவதால் தான் அவர் ஒரு இலக்கிய தரகராக இருக்கிறார்.  அவர் இலக்கிய மதிப்புரை, விமர்சனம் என்ற பெயரில் செய்வது லாபியிங்(Lobbying) மற்றும் Public Relations விளம்பரங்களையே. ஒரு நேர்மையான இலக்கிய விமர்சகராக அவரால் இருக்கமுடியாதது அதனால்தான்.  தனது  மகிழ் பதிப்பகத்தால் அவர் வெளியிட்ட புத்தகங்கள் பண வசதியுடைய புலம்பெயர் எழுத்தாளர்களின் (அவர்களிடம் பணம்பெற்று) புத்தகங்களையே.  ஜே.கேயின் கந்தசாமியும் கலக்சியும் ஒரு மொக்கை போலி நாவல். (ஆதிரை பதிப்பகத்தால் வந்த சமாதானத்தின் கதையில் ஜே.கே சிறுகதை வடிவத்தை உணர்ந்து எழுதத்தொடங்கியிருப்பது வேறு விடயம்).   ம. அருளினியன் என்கிற மோசடி பத்திரிகையாளர்/ஆய்வாளரின் கேரள டயரீஸ் என்ற மொக்கை போலி ஆய்வு நூலை வரலாற்றை திரித்து நியாயப்படுத்தியவரும் கருணாகரனே. தன்னை ஒரு தலித் போராட்டங்களின் ஆதரவாளராக படங்காட்டும் கருணாகரன் ஒரு தலித் எழுத்தாளரினதும் புத்தகத்தை மகிழ் இனால் வெளியிடவில்லை என்பதை கருத்தில் கொள்க. ஷோபா சக்தியின் மொக்கை நாவல்களையும் சயந்தனின் மிகச்சுமாரான ஆனந்தவிகடன் வணிக சந்தைக்கு எழுதப்பட்ட நாவல்களையும் அப்புத்தகங்கள் வெளிவர முதலே கருணாகரன் என்கிற இலக்கிய தரகர்/ இலக்கிய பிரமுகர் Promote பண்ண தொடங்கிவிடுவார். 

நீங்கள் ஒரு மொக்கை நாவலை புத்தகத்தை எழுதியபின் விளம்பர முகவராக அமர்த்தவேண்டியவர் கருணாகரனையே. Apple Mac  Laptop, I pad , I Phone, தமிழகத்துக்கான ஒரு Return விமானப் பயணச்சீட்டு இதில் ஏதோ ஒன்று வாங்கிக்கொடுங்கள். அது போதும் விளம்பரத்துக்கு. 

தேனி இணையம் புலிகளின் பாழாட்சிக் காலத்தில் துணிகரமாக பல உண்மைகளை அம்பலப்படுத்தியது. அதன் ஆசிரியராக அப்போது இருந்தவர் ஜெமினி. ஜெமினியின் ஆலோசகராக இருந்தவர் NLFT பாலசூரியன். அக்காலத்தில் வன்னியில் புலிகளை நியாயப்படுத்திய பத்திரிகையாளராகவும் கவிஞராகவும் இருந்த கருணாகரன் யுத்தம் முடிந்ததும் ஜெமினியின் மூளையைக் கழுவத் தொடங்கினார். விளைவு 2015 ல் பாலசூரியன் ஜெமினியால் ஓரங்கட்டப்பட்டு கருணாகரன் தேனியின் ஆலோசகர் ஆனார். 

                     ஜெமினியும் பாலசூரியனும் 

கருணாகரன் என்கிற பச்சோந்திக்கு பல நாக்குகள், பல முகங்கள். பல வண்ணங்கள்.  தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு ஒரு வண்ணத்தை காட்டும் கருணாகரன் ஜெயமோகனுக்கு இன்னொரு வண்ணத்தையும் காலச்சுவடு கண்ணனுக்கு மறு வண்ணத்தையும் காட்டுவார். ஈழத்து முஸ்லீம்களுக்கு ஒரு நிறங்காட்டும் கருணாகரன் புலிச்சார்பாளர்களுக்கு இன்னொரு நிறம் காட்டுவார். பத்மநாபா  EPRLF (இப்போது SLDPT) தலைவர்களான சுகு சிறிதரன், வரதராஜப்பெருமாள் போன்றவர்களுக்கும் தன் வண்ணங்களை காட்டுவார். கருணாகரனுக்கு 1990 ல் ஈழமுரசில் வேலை கொடுத்த சின்னபாலா ஐயர் தன் இரு மகள்களை 2004ல் ஒருநாள் பாடசாலைக்கு  நடந்து சென்று கூட்டிச்சென்று விட்டபின் புலிகளால் கொல்லப்பட்டார். சின்ன பாலாவின் ஒரு மகள் சுகு சிறிதரனின் மகளோடு அதே பாடசாலையில் 9ம் ஆண்டு படித்தவர். சிறிதரனும்  தன் மகளை சைக்கிளில் சைக்கிளில் கூட்டிச்சென்று விடுபவர்.  சிறிதரனின் குழந்தையின்  துன்பம்/Trauma எப்படி இருந்திருக்கும்?கருணாகரன் வரலாற்றை திரிக்கும்போது சிறிதரனும் வரதராஐப்பெருமாளும் கருணாகரனை கண்டிக்கமாட்டார்களா?  தங்கமா தங்க முலாமா சிறிதரனுக்கும் பெருமாளுக்கும் தேவை?

அண்மையில் சயந்தனின் அஷேரா நாவலுக்கு Zoom ல் தோன்றிய கருணாகரன் பக்கா வரலாற்று மோசடிகளை செய்கிறார். எல்லா போராட்ட இயக்கங்களுமே தவறுகளைச்செய்தன. தவறு செய்யாத இயக்கமே இல்லை என்று புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வரலாற்றில் புனர்வாழ்வளிக்கவிழையும் மகா பிராடு செய்ய முயன்றிருக்கிறார். அநேகமாக எல்லா இயக்கங்களும் அல்லது இயக்கத் தலைவர்களும் இடதுசாரிகளாக இருக்க பிரபாகரன் மட்டுமே வலது சாரி பாசிஸ்டாக இருந்தவர். முதல் உள்ளியக்க படுகொலைகளைச் செய்து சகோதர இயக்க படுகொலைகளை தொடங்கிவைத்து அதனை தன் இறப்புவரை அளவிலும் குணத்திலும் விஞ்சியவர் பிரபாகரன். தமிழராகளுக்கு வரலாற்றில் ஒப்பீட்டடிப்படையில் சிறந்ததாகக் கிடைத்த இலஙகை இந்திய ஒப்பந்தத்தை தனது தனிப்பட்ட பாசிச நலன்களுக்காக குழப்பியவர் பிரபாகரன்.  1987 இல.இந்திய ஒப்பந்தங்களின் பின் நடந்த அனைத்து ஈழ யுத்தங்களின் சிற்பி பிரபாகரனே.  ஈழப்போர்களின் 90 வீதமான அழிவு( தமிழர், தமிழ் போராளிகள், சிங்களவர், சிங்களப்படைகள்) நடந்தது 1987 இல இந்திய ஒப்பந்தங்களின் பின் தொடங்கிய பிரபாகரனியப் போர்களாலேயே. இதை முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் கருணாகரன். 

மாற்றான் குழந்தைகளை புலிகளில் சேர பிரச்சாரம் செய்துவிட்டு தன் மகன் மகள் மனைவியோடு  தப்பியோடிய பாலகுமாரன்


புலிகளின் பிரச்சாரகராகி புலிகளுக்கு இறுதியுத்தத்தில் ஆட்சேர்த்த தங்களின் ஆதிச்சங்க EROS தலைவர் பிரபாகரனைைை கைவிட்டு சிங்களப்படைகளிடம்  தப்பியோட முயன்ற  "அறத்தைப்பற்றி" சுகு சிறிதரனிடமும் பெருமாளிடமும் கேள்வி எதுவுமில்லையா? பாலகுமாரின் குடும்பம் இறுதியுத்தத்தில் தப்பியோடும்போது புலிகளால் துரத்தி சுடப்படடபோது காயப்பட்ட பாலகுமாரின் மகள் மகிழினி பற்றி கருணாகரன் ஏதும் எழுதவில்லையே?  அன்று புலிகளால் துரத்திப்பிடிக்கப்படாவிட்டால் இன்றும் பாலகுமாரனும் அவர் மகனும் கருணாகரன், நிலாந்தன் போல உயிரோடு இருந்திருப்பார்கள். ஏன் என்று கேட்டிருக்கிறீர்களா? ஒன்றும் நடவாதமாதிரி கருணாகரன் போடும் பொம்மை நாடகத்துக்கு நீங்கள் டப்பிங் வாயிஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறீரகள். ஆனால் கருணாகரன் ஈழப்போரின் முற்போக்கு இயக்கங்களின் வரலாறறுப் பங்களிப்பை மொத்த வியாபாரமாக ஊடகங்களில்  விற்றுக் கொண்டிருக்கிறார் 

கருணாகரன்  அவரது Role Model ஆன ஜெயமோகன் போல தன் புகழ்ச்சி(Flattery)  மூலம் சம்பத்பட்டவர்களை தன் வாடிக்கையாளர் ஆக்கிக்கொண்டிருக்கிறார். 

    ஜெயமோகன் வழங்கிய விருந்து.             தெய்வீகன், கருணாகரன்,                                      ஜெயமோகன் 


கவிஞர் கருணாகரனின் ஆட்களை  ஊம்பும் அரசியலின் படி அரசியலில் பிரபாகரனாம்..நடிப்பில் கமலகாசனாம். இசையில் இளையராஜாவாம். எழுத்தில் ஜெயமோகனாம். 

கருணாகரன் இங்கு செய்யும் மோசடி வரலாற்றில் தனக்கும் தன்னைப்போன்ற அறமற்ற எழுத்தாளர்/கலைஞர்/வரலாற்றாசிரியர் ஆகியோருக்கும் புனர்வாழ்வழிக்க முயன்றமைதான். கவிஞர் சேரனும் கருணாகரனைப்போன்ற ஒரு அறத்தை அடகுவைத்த மோசடிக் கலைஞன்/ ஆய்வாளர். யுத்தம் முடிந்தபின் 2010- 2015 காலப்பகுதியில் கருணாகரன் EPDP இன் நிழலில் அதிகாரம் கோலோச்சிக்கொண்டிருந்தபோது  கவிஞர் சேரன் குழுமத்துக்கும்( விக்னேஸ்வரன், அவ்வை, சரிநிகர் சிவகுமார், அ. இரவி முதலியோர்) கருணாகரனுக்கும் தெறித்துவிட்டது. அரசியலிலும் இலக்கிய அரசியலிலும் தான் நிரந்தர நண்பன் எதிரி இல்லையே. இப்போது கருணாகரன் சேரனுக்கும் சேர்த்து புனர்வாழ்வு அளித்தபின் கருணாகரன் சேரன் தேனிலவும் ஆரம்பித்திருக்கிறது. 

2017ல் கருணாகரனின் அரசியல் பச்சோந்தித்தனத்தை பற்றி எழுதப்பட்ட கட்டுரை👇

                         கருணாகரன்                                    ஒரு கழுதைப்புலியின் கதை

2015  சனவரிப் புரட்சியின் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நிகழ்வே இன்று இல.பாராளுமன்றத்தில் நடக்கும் குழப்பங்கள். இதுவரையில் இக்குழப்பநிலமை சனநாயகத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. முற்போக்கு மற்றும் நடுநிலமையான பத்திரிகையாளராக தன்னைகாட்டிக்கொள்ளும் கருணாகரன் சிவராசா என்ற “பத்திரிகையாளர்” இப்போது எழுதிவரும் கட்டுரைகள் சனவரி 2015 புரட்சிக்கு எதிராக மீண்டும் மகிந்த ராச்சியத்தை நிறுவுவதற்காக மகிந்தவுக்காதரவாக சாதுரியமாக இயங்குவதை அவதானிக்கலாம். கருணாகரனைப் புரிய அவரின் வரலாற்றை அறியவேண்டும்.

பெரும்பாலான ஈரோஸ் இயக்ககாரர்கள் கழுதைப்புலிகளை (Hyena) போன்றவர்கள். சிங்கம், புலி போன்ற மிருகங்களை அண்டி, பின்தொடர்ந்து அவை வேட்டை ஆடி விட்ட மிச்சங்களை தின்று உயிர்வாழ்பவை கழுதைப்புலிகள். செத்த உடல்களையும் மனித புதைகுழிகளை தோண்டியும் தின்பவை.

ஈரோஸ் இயக்கத்திலிருந்து வந்த சிவராசா கருணாகரனின் சுயநலன் அடிப்படையிலான பச்சோந்திதனத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் இப்பின்னணியிலேயே விளங்கிக்கோள்ளலாம். ஈரோஸ் இயக்கம் புலிகளால் உள்வாங்கப்பட்டபிறகு 1990 இலிருந்து 2019 வரை கருணாகரன் புலிகளின் பிரச்சார பத்திரிகைகளில் சம்பளத்துக்கு வேலைசெய்கிறார். புலிகளின் வெளிச்சம் இதழின் பிரதம ஆசிரியராக பிரபாகரனை நேர்காணல் கண்டவர். புலிகள் அவருக்கு வசதியான சம்பளத்தையும் வழங்கினார்கள்.

2009 இற்குப் பிறகு இனி புலிகளைவைத்து பிழைக்கமுடியாததை அறிந்த கருணாகரன் புலி விமர்சனம், புலியெதிர்ப்பு, இடதுசாரி முற்போக்கு முதலிய பச்சோந்தி வண்ணங்களில் இயங்குகிறார். 2009 மேயின் பின் கருணாகரன் காலச்சுவட்டில் எழுதிய இறுதிப்போரில் நடந்ததென்ன என்ற சிறப்பான கட்டுரை அவரது புதுவேசத்தை கடடியம் கூறியது இக்காலம் 2009 இலிருந்து 2015 சனவரிப்புரட்சிவரையான காலம். புலிகளை நெருங்குவதற்கு தன்னுடைய பாலகுமார் போன்ற ஈரோஸ் தொடர்புகளை பாவித்ததுபோல் மகிந்த ராச்சியத்தை நெருங்க இவர் தனது மனைவியின் சகோதரரான EPDP சந்திரகுமாரை பாவித்தார். வெள்ளாளரான கருணாகரன் காதலித்து ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவரை திருமணம் செய்தார். சந்திரகுமார் குடும்பம் ஒடுக்கப்பட்டதாயினும் வசதியானது. சந்திரகுமாரின் தந்தை ஒடுக்கப்பட்ட  சமூகத்தில் வந்த இலங்கை சிவில் சேவை உயர் அதிகாரி ஆவார். சந்திரகுமாரின் 2 சகோதரிகள் MBBS மருத்துவர்கள்.

1994 ல் EPDP ன் 9 MP களில் ஒருவராக டக்ளஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரகுமார் 2000 ம் காலப்பகுதியில் புலிகளின் மிரட்டலுக்கு பயந்து டக்ளஸை கைவிட்டு லண்டனில் குடும்பத்தோடு செற்றிலாகிறார். இருந்தும் டக்ளஸ் அவரை 2010 ல் அழைத்து குறைந்த விருப்புதெரிவு வாக்குகள் எடுத்தபோதும் MP ஆக்குகிறார். புலி இல்லாத 2010 — 2015 காலம் இன்றைய சம்பந்தனுக்கு சுமந்திரன் போல டக்ளஸுக்கு சந்திரகுமார் இருந்தார்.

இக்காலம்தான் கருணாகரன் வாழ்வின் பொற்காலம். டக்ளசின் நிழலில் சந்திரகுமார் ஜொலிக்க சந்திரகுமாரின் நிழலில் கருணாகரன் ஜொலித்தார். அப்பட்டமான அதிகாரபோதைக்கு கருணாகரன் பலியானது இக்காலந்தான். கருணாகரன் வன்னி குறுநில மன்னரல்ல. அதற்குமேல். அவரைப்பிடித்தால் எதுவும் சாதிக்ககூடிய நிலையிருந்தது. ஈழத்தில் நடந்த முதலாவது “புலியெதிர்ப்பு” இலக்கிய சந்திப்பை நிர்மலா சகோதரிகளோடு வெற்றிகரமாக கருணாகரன் நடத்திக்காட்டினார்.

இக்காலத்தில் சந்திரகுமார் கிளிநொச்சிக்கு வருகிற பெரும்பாலான நாட்களில் நாமல் ராஜபக்ச அவருடனிருந்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரான சந்திரகுமாரின் அலுவலகத்தில் 75 000 மாத சம்பள பதவியும் கருணாகரனுக்கிருந்தது. இந்த சொத்து சுகம் அதிகாரத்தை 2015 சனவரிப்புரட்சி(கருணா அண்ணாவுக்கு இது “சதிப்புரட்சி”) கருணாகரனிடமிருந்து பறித்ததை அவரால் தாங்கமுடியவில்லை. தொடர்ந்த 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் EPDP ல் டக்ளஸ் மட்டுமே MP ஆனார்.

இரவோடு இரவாக கருணாகரன் மதியுரைஞராக யோசித்தார். அவர் அறிவுக்கு இனி புலிபுராணம் பாடினால்தான் மச்சான் MP ஆகலாம் என்று உய்த்தறிந்தார். “நான் ஸ்கீம் போட்டுத்தாறன். அதன்படி நட மச்சான்” என்றார். சந்திரகுமார் டக்ளஸை விட்டு விலகி தமிழ்த்தேசிய அரசியல் செய்யவுள்ளதாக அறிவித்து தோழருக்கு முதுகில் குத்தி தனிக்கட்சி தொடங்கினார்.

முதலில் மதுவருந்தாத மதியுரைஞரான கருணாகரன் சுமந்திரனுடன் பேச்சுவார்த்தை செய்யமுயன்றார். மச்சானுக்கு தமிழரசுக்கட்சியில் ஒரு seat எடுப்பதே இதன் நோக்கம். இக்காலத்தில் சுமந்திரனையும் சம்பந்தனையும் போற்றிப்புகழ்ந்து கருணாகரன் எழுதிய பத்திகள் கட்டுரைகள் இதற்கு சாட்சி. நல்ல முடிவு சுமந்தி சம்பந்தத்திடமிருந்து வரவில்லை. விளைவு கடும் சம்பந்தர் விரோத எழுத்து. இன்றும் சுமந்திரனை சாடி எழுத கருணாகரனுக்கு முதுகெலும்போ துணிவோ இல்லை.

சந்திரகுமாரும் கருணாகரனைப்போல பன்முக திறமைகளும் மதிநுட்டமும் உடையவராயினும் கருணாகரனைப்போலவே கழுதைப்புலியும் பச்சோந்தியுமாவார். EPRLF இலிருந்து டக்ளஸ் வெளியேறியபோது அல்லது வெளியேற்றப்பட்டபோதோ அல்லது பிற்காலத்திலோ EPRLF வன்னிப்பொறுப்பாளராக (தோழர் றேகன் புலிகளால் கொல்லப்பட்டபின்) பத்மநாபாவால் வன்னிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தோழர் அசோக் என்ற சந்திரகுமார் பின்னாளில் டக்ளஸ் விசுவாசியானார். சந்திரகுமார் இரு தடவைகள் டக்ளஸின் முதுகில் குத்தி துரோகமிளைத்துள்ளார். 

1.கி.பி 2000ம் களில் தோழரைவிட்டு லண்டன் ஓடியது.

 2.கி.பி 2015 செப்டம்பரில் தனிக்கட்சி தொடங்கியது.

முக்கியமான இடைக்கதை: 2010-2015 காலத்தில் டக்ளஸ்  தோழர்  நெகிழ்வாயிருந்தார். சந்திரகுமார் திட்டமிட்டு சொத்து சேர்த்தார்.
ஒரு சதமும் செலவில்லாமல் கிளிநொச்சி கனகபுரம் Bar ம் வன்னி எரிபொருள் நிலையமும் சந்திரகுமாரின் உரிமையானவை நாம் அறிந்தவை. அறியாமல் சேர்த்த சொத்துக்கள் இனித்தான் வரவேண்டும். கடைசியாக கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி புலிகள் வைத்திருந்த 100 ஏக்கர் காடழித்து உருவாக்கப்பட்ட கிளிநொச்சி தென்னந்தோட்டத்தை சந்திரகுமார் கொள்வனவு செய்யும் முயற்சியிலுள்ளார்.

2010-2015 காலத்தில் கருணாகரன் கிளிநொச்சியில் கட்டிய புது வீட்டை அங்கு விஜயம் செய்த இளம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் “ஒரு பண்ணையாரின் வீடு போலிருந்தது” என்று விபரித்துள்ளார்.

சாராயம் விற்ற காசில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பில் அரசியல் செய்யும் சந்திரகுமாரையும் ஒரு அரசியல் வாதியாக புரிந்துகொள்ளலாம். மன்னிக்கலாம். ஆனால் ஒரு கவிஞராக புத்திசீவியாக பத்திரிகையாளராக கருணாகரனை மன்னிக்கமுடியாது. கிளிநொச்சியின் மக்கள் தொகைவகையியல் சந்திரகுமாருக்கு தெரியாது.

கிளிநொச்சியிலுள்ள ஏறத்தாள 50% ஆன மலையக வம்சாவளி தமிழரை வைத்து “நாம் கேம் குடுப்பம் சம்பந்தனுக்கு” என்ற ஐடியாவை சந்திரகுமாருக்கு குடுத்தது கருணாகரன். சிறிதரன் MP க்கு எதிரான கருணாகரனின் போர்கள் கொள்கை அடிப்படையானதல்ல. தனது அதிகாரத்தை மீட்டெடுக்கும் Evil ஸ்கீம் அடிப்படையானது. மனோ கணேசன் கிளிநொச்சியில் காலூன்றுவது கருணாகரனுக்கு இன்னொரு அதிர்ச்சி.

– நட்சத்திரன் செவ்விந்தியன்

தொடர்பான கட்டுரைகள்

1. பாலகுமாரன்: பாலைநில பஞ்சோந்தி வரலாறு

2. பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

3. முருகையன்: நகலும் நாடகமும்

  

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்