யாழ் பல்கலைக்கழகம்: சீரழிவின் வரலாறு

நட்சத்திரன் செவ்விந்தியன்  2010 ல் எழுதிய கட்டுரை. ஈழப்போருக்குப் பின் தகுதியான ஒரு  பேராசிரியர்  ரட்ணஜீவன் ஹுல் பல்கலைக்கழகத்துக்கு புனர்வாழ்வளித்து புத்துயிர்ப்பிப்பார் என்பதை வலியுறுத்தி வாதிட்ட கட்டுரை

 ஆசியாவின் முதலாவது உயர்தர தங்கிப்படிக்கும் பெண்கள் பாடசாலை (1824 இல் உடுவிலில்) ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில்தான். 

      பாரதி புதிய ஆத்திசூடி எழுத முன்                      "தையலை உயர்வு செய்த"                               உடுவில் மகளிர் கல்லூரி


1848 ம் ஆண்டிலேயே பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிக்கு சமனான மேலைத்தேய மருத்துவக் கல்லூரி சாமுவேல் கிறீன் என்பவரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியும் இதுதான்.1864 ம் ஆண்டிலிருந்து இம்மருத்துவக் கல்லூரியில் தமிழ்மொழியை மேலைத்தேய மருத்துவக் கற்கைக்கான ஊடக மொழியாக்கிய மகத்தான புரட்சியையும் அமெரிக்கரான சாமுவேல் கிறீன் சாதித்தார். 

            ஈழத்தின் முதல் மருத்துவ                     பல்கலைக்கழகம். மானிப்பாய்                               கிறீன் மெடிக்கல் காலேஜ்


1823 ம் ஆண்டு வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்குருத்துவக் கல்லூரியின் தரம் பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஈடாக இருந்ததை தான் கண்டதாக அக்கல்லூரிக்கு 1848 ம் ஆண்டு விஜயம் செய்த சிறந்த பயண எழுத்தாளரும் பிரித்தானிய உயர் சிவில் அதிகாரியுமான ஜேம்ஸ் எமர்சன் ரெநன்ற் எழுதியிருக்கிறார்.

                         வட்டுக்கோட்டை                                             யாழ்ப்பாணக் கல்லூரி 


இக்குருத்துவக் கல்லூரியின் சிறப்பான மாணவர்தான் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியும் தமிழ் பதிப்புத்துறையின் தந்தையும் சிறந்த தமிழறிஞருமான சி.வை.தாமோதரம்பிள்ளை. (சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1857 ம் ஆண்டில் கலைமாணிக்கான (B.A) இறுதியாண்டுப்பரீட்சை எழுதிய சீ.வை. தாமோதரம்பிள்ளை டீ.வை.விசுவநாதபிள்ளை ஆகிய இருவரே. இருவரும் வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி மாணவர்கள். இருவருமே சித்தியடைந்தனர். தாமோதரம்பிள்ளை அதிக புள்ளிகள் எடுத்தமையால் முதலாவதாக குறிப்பிடப்பட்டு அதனால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்) 

     தமிழ் பதிப்புத்துறையின் தந்தை        சென்னைப் பல்கலைக்கழக முதல்     பட்டதாரி.  சிறுபிட்டி வைரவநாதனின்                                 பொடியன் 


யாழ்ப்பாணத்தின் மேற்கூறிய எல்லா சாதனைகளுக்கும் உரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினருக்கே (American Missionaries) யாழ்ப்பாணம் கடமைப்பட்டது. இவ்வளவு சிறப்பான கல்வி வரலாற்றையுடைய யாழ்ப்பாணத்தில் உருவான பல்கலைக்கழகம் சீரழிந்து போனமைக்கான காரணங்கள் என்ன?

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்பபாணத்தில் இரண்டாம்தர மூன்றாம் தர (Secondary and Tertiary education) கல்விக்கான சிறப்பான நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் முழுமையான பல்கலைக்கழகம் இலங்கையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. 

பிரித்தானிய சாம்ராச்சியத்தின் முத்தாகவும் முடியாகவும் இந்தியா இருந்ததாலும் அன்று உலகின் இரண்டாவது பெரிய நகரமாக கல்கத்தா இருந்ததாலும் கல்கத்தா, மும்பாய் சென்னை ஆகிய நகரங்களிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 

1974 ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே யாழ் வளாகம் உருவாக்கப்பட்ட போதும் 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இயங்கிவரும் ஏனைய இலங்கைப் பல்கலைக்கழகங்ளோடு ஒப்பிடுகிறபோது மிகப் பின்தங்கிய சீரழிந்த பல்கலைக்கழகமாக இருப்பது யாழ் பல்கலைக்கழகம்தான்.

பின்தங்கலுக்கும் சீரழிவுக்குமான காரணங்களை பகுத்தாராய்ந்து அறிவதற்கு இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றை பின்வரும் இரண்டு காலங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது. 

புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை) 

புலிப்பாசிச காலம்(1986 இலிருந்து இன்றுவரை) 

 புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை) 

 1974 ம் ஆண்டிலிருந்து 1977 ம் ஆண்டுவரை யாழ் வளாகத்தின் தலைவராக இருந்தவர் க.கைலாசபதி. தனது  கட்டுரையில் த.ஜெயபாலன் பின்வருமாறு கூறுகிறார். 

“யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார்.” 

 கைலாசபதியைப் பற்றி ஜெயபாலன் எழுதியவைகள் எல்லாம் அதீதமான மிகை மதிப்பீடுகள். மிகத் தவறானவைகள். சனத்தொகை பெருகுகிறபோது பல்கலைக்கழக வளாகங்களை விரிவாக்குகிற வழமையான கல்வி அமைச்சின் நடவடிக்கை காரணமாகவே யாழ் வளாகம் நிறுவப்பட்டது. இலங்கையின் மூன்றாவது பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததால் அங்கு ஒரு வளாகம் நிறுவவேண்டிய தேவை நீண்டகாலமாகவே இருந்துவந்தது. யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதியின் தரிசனத்தில் உருவானது என்பதும் அதனை அவரே நிறுவினார் என்பதும் வேடிக்கைக்குரிய கூற்றுக்கள். கைலாசபதி வளாகத்தலைவர் மட்டுமே என்பதால் அவரது அதிகாரம் மிக மட்டுப்படுத்தப்பட்டது. யாழ் வளாகத்தில் உருவாக்க வேண்டிய துறைகளை தீர்மானித்தது அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக துணைவேந்தரும் யுனிவேசிட்டி செனட் சபையும் கல்வி அமைச்சுமே. எல்லா வளாகங்களிலும் மூவின மாணவர்களும் கற்கும்படி இருப்பது அன்றைய கல்விகொள்கை வகுப்பாளாகளின் நடைமுறையே தவிர அது கைலாசபதியின் நடவடிக்கை அல்ல.

நியாயப்படி பார்த்தால் கைலாசபதிக்கு அன்றைய யாழ் வளாக தலைவர் பத9வி கிடைத்திருக்கவே முடியாது. சிரேஷ்ட அடிப்படையிலும் அறிவு மற்றும் திறன் அடிப்படையிலும் கைலாசபதி கடைசியிலேயே இருந்தார். 

  1. தனிநாயகம் அடிகளார் (1913 - 1980)


  2  சீ.ஜே.எலியேசர் (1918 - 2001)


        3. எஸ்.ஜே. தம்பையா (1929 -2014)


4. சின்னப்பா அரசரட்ணம் (1930 - 1998)  



5. ஜெயரட்ணம் வில்சன் (1928 - 2000) 


போன்றவர்களின் திறமைகளோடும் சாதனைகளோடும் ஒப்பிடுகிறபோது கைலாசபதியினுடையவை மிகச் சாமானியமானவை. மேற்கூறிய பேராசிரியர்கள் சர்வதேச ரீதியாக தங்களை நிலை நிறுத்தியவர்கள். மிகச்சிறப்பான அமெரிக்க கனேடிய ஆஸ்திரேலிய மலாய பல்கலைக்கழகங்கள் மேற்கூறியவர்களின் திறமைகளை இனங்கண்டு மேற்கூறியவர்களை தங்கள் பல்கலைக்கழக பேராசியர்களாக்கின. துறைத்தலைவர்களாக்கின. பதில் துணை வேந்தராக்கின. துறைசார்ந்த நூல்களை எழுதுமாறு அவர்களைப் பணித்தன. 

மேற்கூறியயவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் ஒரு இந்து தான் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக வரலாம் என்ற எழுதப்படாத சட்டத்தை பின்பற்றியதே யாழ்ப்பாணத்தானின் தவறு. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிய கத்தோலிக்க புறட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களைக் கலைத்து இரண்டாந்தர அக்கடெமிக்குகளாக அக்காலத்திலிருந்த இந்துக்களை நியமித்ததே யாழ்ப்பாணத்தின் தவறு. 

"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்"

 என்று பாரதி பாடியது இதனைத்தான். இன்றும் இப்பேராசிரியர்கள் எழுதிய நூல்கள் மிகச்சிறப்பானவையாக இருக்கின்றன. கைலாசபதி எழுதிய நூல்கள் அவர் வாழ்நாட்காலத்திலேயே நிராகரிக்கப்பட்டன. Literary cognition இல்லாத இலக்கிய விமர்சகராக இருந்ததும் காய்தல் உவத்தல் இல்லாத புலமையாளராக இருப்பதற்குப்பதில் மார்க்ஸிய சித்தாந்த ஓதுகைக்கு(Marxist indoctrination) ஆட்கொள்ளப்பட்டவராக இருந்ததும் கைலாசபதி ஒரு academic ஆக தோல்வியடைந்தமைக்கான காரணங்கள். 

சு. வித்தியானந்தன் கைலாசபதியின் பல்கலைக்கழக ஆசிரியரும் கைலாசபதியைவிட சீனியரும். இருந்தும் கைலாசபதி குருவை விஞ்சிய சீடப்பிள்ளையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்கு வித்தியானந்துடனேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார். கைலாசபதிக்கே தனக்கு நியாயப்படி யாழ் வளாகத்துக்கான தலைவர் பதவி கிடைக்காது என்பது நன்கு தெரிந்திருந்தது. ஆனால் கைலாசபதி "குதிரை வியாபாரத்திலும்" அரசியல் காய் நகர்த்தல்களிலும் மிக வல்லவராக இருந்தார். 

இடதுசாரி கூட்டு சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த போது இடதுசாரித் தொடர்புகள் மற்றும் அமைச்சர் குமாரசூரியர் என்பவர்களைப் பயன்படுத்தி புகுந்து விளையாடலானார். 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கைலாசபதியும் சிவத்தம்பியும் புறக்கணித்தனர். ஜனநாய அடிப்படையில் மாநாட்டுக் குழுவினர் அதனை யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்று தீர்மானித்தனர். அதனைப் புறக்கணித்து தான் கலந்து கொள்ளாததையெல்லாம் 0ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தி அதேயாண்டு ஆகஸ்டில் யாழ் வளாகம் திறக்கப்பட்டபோது தலைவர் பதவியை அடித்துப்பறித்தார். 

 தொலைதூரப் பார்வையும் புலமையும் மிக்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவர்களும் அமுக்கக் குழுக்களும் தமிழர் மத்தியில் அன்றிருந்திருந்தால் நான் மேலே குறிப்பிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கடைமையாற்றிய, கடமையாற்றிக் கொண்டிருந்த 5  பேராசிரியர்மாரை அணுகி அவர்களிலொருவரை வளாகத்தலைவராக்க முயற்சித்திருக்கலாம். 1974 ம் ஆண்டு தனிநாயகம் அடிகளாருக்கு 61 வயது. தமிழாராய்ச்சி மாநாடுகளை சர்வதேச மயப்படுத்தியதிலும், தமிழையும் தமிழியலையும் உலகப் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாக்கியதிலும், தமிழை செம்மொழியாக்கியதிலும் அடிகளாரின் பங்கு அளப்பரியது. அவர் 1974 யாழ் வளாக தலைவருக்கு பொருத்தமானவர்களில் ஒருவரல்லவா. 

 கைலாசபதி வெளிப்பூச்சுக்குத்தான் மார்க்ஸிஸ்ட். உள்ளுக்குள் தடித்த சைவ வெள்ளாளர் என்பதையும் யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து வந்தவர் என்பதையும் பயன்படுத்தி அரசியல் செய்தவர். 2006 ம் ஆண்டுக்கு முதல் சைவ வேளாளர் அல்லாத எவரையும் பல்கலைக்கழக கவுன்சில் துணைவேந்தராக சிபாரிசு செய்ததில்லை. 

முதற்கோணல் முற்றும் கோணல் என்ற அடிப்படையில் முற்றிலும் ஒரு அரசியல் நியமனமான கைலாசபதியின் வளாகத் தலைவர் பதவியிலிருந்தே யாழ் பல்கலைக்கழக சீர்கேடு ஆரம்பிக்கிறது. கைலாசபதி ஒரு நன்கு அறியப்பட்ட ஸ்திரி லோலர்(womanizer) அவரது மாணவிகளாக இருந்து பின்னாட்களில் விரிவுரையாளர் பேராசிரியர் ஆன பெண்களோடு அவருக்கு இருந்த உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது.  இங்கு பாலுறவு காரணமாக விரிவுரையாளர் தெரிவில் பாரபட்சங்கள் காட்டப்படடிருக்க அதிக வாய்ப்புண்டு. மேலும் மேலிடத்தில் உள்ளவரே இவ்வாறு நடந்துகொள்ளும்போது கீழிடத்தில் உள்ளவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ய அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையேற்படும். மாணவியொருவரின் சம்மதத்தோடு பல்கலைக்கழக அதிகாரி அல்லது விரிவுரையாளர் பாலுறவில் ஈடுபட்டாலும் இதனைப் பணயமாக வைத்து ஊழல்கள் இருதரப்பிலிருந்தும் புரியப்பட்டு கல்வித் தராதரங்கள் சமரசம் செய்யப்பட வாய்ப்புள்ளதால்தான் இவை பாரிய குற்றச்செயல்களாகக் கருதப்படுகின்றன. 

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காணப்படுகிற ஒரு முக்கியமான கொடூரமான அநீதி என்னவென்றால் ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எழுதிய பரீட்சைக்கு தனக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது என்றால் தனது விடைத்தாளை பெற்றுப் பார்ப்பதற்கோ அல்லது அதனை மீளத்திருத்துமாறு கேட்பதற்கோ உரிமையற்றிருப்பதுதான். 25 புள்ளி எடுத்து ஒருவருக்கு 75 புள்ளி வழங்குவதற்கும் இதன் மறுதலையைச் செய்வதற்கான அதிகாரமும் விரிவுரையாளர்களிடம் உண்டு. Transparency, freedom of information என்பன ஏறத்தாள முற்றாகவே பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. பாலுறவையும் இதனோடு இணைக்கிறபோது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எவ்வளவு மோசமான நரகங்களாக இருக்கமுடியும் என்பது புரிகிறதல்லவா. 

 கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழ்ச்சூழலில் மிகவும் உயர்த்தி மதிப்பிடப்பட்ட  புலமையாளர்கள் (Academics). இலங்கை போன்ற மூன்றாம் உலநாடுகளில் காலனியாதிக்கத்திற்கு பிற்பட்ட சுதந்திர எழுச்சிக்காலத்தில் மார்க்சிசம் ஒரு சர்வ நிவாரணியாகக் கருதப்பட்டதோடு மிகப்பிரபல்யமான தத்துவமாகவும் மோஸ்தராகவும் இருந்தது. மார்க்ஸிய பேராசிரியராக தன்னை அடையாளப்படுத்துகவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மேதைகளாக கருதப்பட அதில் வெற்றிகரமாக கப்பலோட்டியவர்கள்தான் பதியும் சிவமும். அவர்களுடைய எழுத்துக்களுக்கூடாகவும் அவர்கள் உருவாக்கிய மாணவர்கள் ஊடாகவும் அவர்களை மதிப்பிடுகிறபோது மிஞ்சுவது ஏமாற்றம்தான். 

 1977ம் ஆண்டு யாழ் வளாக தலைவராக சு. வித்தியானந்தன் ஆக்கப்பட்டதும் ஒரு அரசியல் நியமனந்தான். பல்கலைக்கழகம் இரண்டு பிரிவுகள் இருக்கிற ஒரு அரசியல் கட்சிபோல ஆக்கப்பட்டது. இரு தரப்பினருமே தங்கள் அணிக்கு விரிவுரையாள் தெரிவுகள் மூலம் ஆட்சேர்த்தார்களே தவிர பொது நன்மைக்காக பல்கலைக்கழகம் நடத்தவில்லை. இவர்களுடைய அரசியலுக்கு வெளியிலிருந்துதான் பல்கலைக்கழகத்தில் நடந்த சாதனைகள் இருந்தன. 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தினுடைய கல்விப்புரட்சி கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையாலும் கிறிஸ்தவ குருத்துவக் குல்லூரிகள் ஊடாகவே அக்காலத்தில் மூன்றாந்தரக் கல்வி பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தமையாலும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிலும் குறிப்பாக உரோமன் கத்தோலிக்கர் அல்லாத அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் கல்வியில் சாதித்தது அதிகம். இம்மரபில் வந்த கிறிஸ்தவ கல்வியாளர்களான சீலன் கதிர்காமர்,  ராஜினி திராணகம, சுரேஷ் கனகராஜா, தயா சோமசுந்தரம், ராஜன் ஹூல் முதலியவர்கள்தான் கைலாசபதி மற்றும் வித்தியானந்தன் மரபுக்கு அப்பால் நின்று சாதித்தவர்கள் அல்லது சாதிக்க முயன்றவர்கள். 

ஏ.ஜே.கனகரட்னா கைலாசபதியைவிடத் திறமையானவர். அறவான்.  ஆனால் அவரிடம் கைலாசபதியிடமிருந்த சுறுசுறுப்பும் சாதிக்கவேண்டும் என்றவெறியும் இருந்ததில்லை. இருந்தும் ஏ.ஜே.கனகரட்னா நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கிய மாணவர்களாக ராஜினி திராணகம, சுரேஷ் கனகராஜா, ராஜன் ஹூல் முதலியவர்களைச் சொல்லலாம். நோம் சொம்ஸிக்கு ஒரு Tanya Reinhart மாதிரி கனகரட்னாவுக்கு மூன்று Versatile Academics மாணவர்களாக கிடைத்தது பெருங்காரியம்தான்.

                       நோம் சொம்ஸ்ஸிக்கு                                            ஒரு Tanya reinhardt


            A.J கனகரட்ணாவுக்கு                    ஒரு ராஜன் ஹூல்

 

பேராசிரியர் இந்திரபாலா ஒரு விதிவிலக்கு. ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரல்ல. அவரது திறமையில் சந்தேகமில்லை. 

புலிப்பாசிச காலம் (1986 இலிருந்து இன்றுவரை) 

 1986 ஏப்ரல் மேயில் ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகளின் பாசிசத்தன்மை வெளிச்சத்திற்கு வருகிறது.பாசிசம் எப்படி செயற்படுகிறது என்பதைக் கண்டடைவதற்டகான ஒரு அருமையான case study ஆக இக்காலத்து யாழ் பல்கலைக் கழகத்தைக் கொள்ளலாம். 

பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள்.1986 நவம்பரில் விஜிதரன் புலிகளால் கடத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டதோடேயே புலிப்பாசிசம் பல்கலைக்கழக ஆட்சிக்கு வரவில்லை. 1986 நவம்பரிலிருந்து 1989 டிசம்பர் வரை பல்கலைக்கழகம் தன் சுயாதீனத்தை பேணுவதற்கு கடுமையாகப் போராடியது. பலமான சுயாதீனமான பல்கலைக்கழகத்துக்கு பலமாக மாணவர் சங்கம் அவசியம். பாசிசம் தொழிலாளர் சங்கங்கள் மாணவர் சங்கங்கள் என்பவற்றிலேயே முதலில் கைவைத்து அவற்றை அடித்து முறித்து ஆட்சி எடுக்கும். 

1988 ஜூலையில் யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனைக் கொலை செய்த புலிகள் 1989 செப்டம்பரில் விரிவுரையாளர் ராஜினி திராணகமவைக் கொலை செய்தார்கள். இவைகளுக்கப்பாலும் 1989 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அன்ரன் வின்ஸ்லஸ் என்கிற மாணவரும், மாணவர் சங்கமும் பல்கலைக்கழக சுயாதீனத்தை பேணுவதற்காகக் கடுமையாகப் போராடினார்கள்.1990 ம் ஆண்டு ஜூனில் விடுதலைப் புலிகளால் போர் தொடங்கப்பட்டதும் புலிகள் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை நெருங்கி

 “ இலங்கை அரசாங்கம் ஒரு இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கெதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் போரை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படும் படியும் மக்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் பின் ஒருங்கிணையுமாறும் வேண்டி” 

ஒரு தீர்மானத்தை மாணவர் சங்கத்தால் நிறைவேற்றுமாறு கேட்டார்கள். இத்தீர்மானம் நிறைவேற்றப் படாவிட்டால் மாணவர் சங்கம் கலைக்கப்படும் என்று மிரட்டவும் செய்தார்கள். சங்கத்தலைவர் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட்டார். பிரேரணை 145 க்கும் 115 இடைப்பட்ட வாக்குவித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. புலிகள் இதனை மீண்டும் வாக்குக்கு விடுமாறு கேட்டனர். இரண்டாவது தடவையும் புலிகளின் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர் புலிகள் அன்ரன் வின்ஸ்லஸ்ஸை அணுகி தாங்கள் வேண்டியபடி தயாரித்த தீர்மானத்தில் பலாத்காரமாக அவரது கையெழுத்தை வைப்பித்தனர். இதன்பின்னர் வின்ஸ்லஸ் மற்றும் அவரது மாணவர் சங்க கூட்டாளிகளும் மாணவர் சங்கத்திலிருந்து ராஜினாமாச் செய்தனர். (அன்ரன் வின்ஸ்லஸ் இப்போது ரொறன்ரோ நகரில் வசிக்கிறார்) 

இதற்குப்பிறகு மாணவர் சங்கம் புலிகளுக்குச் சேவகம் செய்யும் பொம்மை அமைப்பாக்கப்பட்டது.ராஜன் ஹூல் சிறிதரன் முதலிய விரிவுரையாளர்கள் புலிகளால் கொல்லப்பட இருந்ததால் கொழும்புக்குத் தப்பிச்சென்றார்கள். செல்வி மனோகரன் போன்ற பல யாழ் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாளர்களும் மனச்சாட்சியின் கைதிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள். அயோக்கியர்களும் சாமானிய தரத்திலுள்ளவர்களுமே (Mediocrity) பாசிசம் பரவும் நிலத்தில் ஓங்கித் தழைப்பார்கள். அயோக்கியர்களின் பாலியல் முதலிய குற்றச்செயல்களை பணயமாக வைத்து அவர்களிடமிருந்து நிபந்தனைகளற்ற சேவகத்தை பாசிசம் பெற்றுக்கொள்ளும். திறமையானவர்களும் நல்லவர்களும் ஒதுங்கியோ ஓடியோ கொல்லப்பட்டோ விடுவதால் திறமையும் தரமுமற்ற சாமானியர்கள் பாசிசத்தை அண்டி நக்கிப்பிழைத்து அடிமைச்சேவகம் செய்து தழைப்பார்கள்.

திறமையான ஒருவரை புலிக்குப் “போட்டுக்கொடுப்பதன்” மூலம் அவரின் இடத்தை எடுக்கலாம். க.சிதம்பரநாதன் செல்வியை புலிக்குக் காட்டிக் கொடுத்துத்தான் செல்விக்கு கிடைக்கவிருந்த விரிவுரையாளர் பதவியை தான் எடுத்தார். 

ஸ்டாலினின் பாசிச ஆட்சிக்குச் சேவகம் செய்த மைக்கல் கலினின் மற்றும் லவ்றென்ரி பெரியா ஆகிய இருவரும் பாலியல் கொடூரங்களைச்செய்த இரண்டு பெண் பித்தர்கள். ஸ்டாலின் இக்குற்றங்களைச் செய்ய அனுமதித்து அவற்றை அவர்களுக்கெதிரான பணயமாக வைத்திருந்தார். நடராஜா முரளிதரன (சுவிஸ் - கனடா) குமரன் பத்மநாதன் மற்றும் கேணல் கருணா ஆகியோர் இயக்கத்திலிருந்து விலக்கப்பட அல்லது விலக்கப்பட்ட பின்னர்தான் அவர்களது பாலியல் லீலைகளை புலிகள் பகிரங்கப்படுத்தினார்கள் அல்லவா.

 யாழ் பல்கலைக்கழகத்தில் என் சண்முகலிங்கம் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதையும் இதே பின்னணியில்தான் அணுகமுடியும். 1995 ம் ஆண்டு குடாநாடு இராணுவத்தால் கைப்பற்றப்படும்வரை புலிகளுக்கு தீவிரமான சேவகம் செய்தவர் சண்முகலிங்கம். விஜிதரனை சித்திரவதை செய்து கொன்ற கிட்டு கடலில் இறந்தபோது “ கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல எவருமே இல்லையா” என்ற அஞ்சலிக் கவிதையை கிட்டுவுக்கு எழுதியவர்தான் சண்முகலிங்கம் (பார்க்க : தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு) 


2010 ஜூன் மாதம் மேலுள்ள துண்டுப்பிரசுரத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வெளியிட்டனர். புலிகள் அழிக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப்பிறகே மாணவர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் இயங்கக்கூடிய சூழல்வருகிறபோது இது வெளிவருவது குறிப்படத்தக்கது. இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் செல்லையா இளங்குமரன், கிருஸ்ணபிள்ளை விசாகரூபன், என்.வீ.எம். நவரத்தினம், கே. அருந்தாகரன் ஆகியோர். 

 செல்லையா இளங்குமரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் புள்ளிவிபரவியல் பயிலும் கலைத்துறை மாணவிகள் பலரையே இவர் இலக்கு வைத்து பாலியல் வதைகளும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் புரிபவர். இவருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பட்டப்பெயர் கரும்புடையன். இவரது குடுப்ப உறுப்பினர்கள் அல்லது சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள் என்பதையும் தனது பலமாக குற்றங்கள் புரியும்போது உபயோகிப்பவர். இவரது குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்ததால் 1994 ம் ஆண்டளவில் மாணவர்கள் துணைவேந்தரிடமும் விடுதலைப் புலிகளிடமும் முறையிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கும் வேறு வழியின்றி இளங்குமரனைத் “தூக்க”வேண்டியதாயிற்று. எனினும் "கேணல்"  கருணா பிரபாகரனுக்கு கொடுத்த அழுத்தத்தால் புலிகள் இவரை விடவேண்டியதானது. பின்னர் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தபின்னர் புலிகளோடு கள்ள ஒப்பந்தமும் செய்துகொண்டுவந்த இளங்குமரன் யாழ் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டார். முதலில் கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார். இக்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிறுவனமயப்பட்டு விட இளங்குமரனும் தொடர்ந்தார். 

 தமிழ் விரிவுரையாளர் க.அருந்தாகரன் முள்ளியவளையைச் சேர்ந்தவர். இவரது பல சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள். இவர் இரண்டாந்தரக் கல்வி கற்றுக் கொண்டிருக்குப்போதே பாலியல் குற்றம் ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டவர். அருந்தாகரனின் சக மாணவியான முள்ளியவளை செங்குந்தா வீதியைச் சேர்ந்த புலேந்திரன் என்பவரின் மகள் கர்ப்பிணியானாள். அவளது கற்பத்திற்கு காரணம் யார் என்று கேட்கப்பட்டபோது அப்பெண் அருந்தாகரனையே அடையாளங் காட்டினாள். அருந்தாகரன் இதனை முற்றாக மறுத்துவிடவே அப்பெண் கர்ப்பிணியாகவே தற்கொலை செய்துகொண்டாள். பல முள்ளியவளை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. 

 கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் தமிழ் விரிவுரையாளர். நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவரும் விடுதலைப்புலிகள் சார்பானவராகத் தம்மைக் காட்டிக்கொண்டவர். 

 சங்கீதபூசன் என்.வீ.எம்.நவரத்தினம் இசைத்துறையைச் சேர்ந்தவர். குறிப்பட்டவர்களில் வயது அதிகமானவரும் இவரே.

யாழ் பல்கலைக்கழகம் அயோக்கியர்கள் கள்ளர்கள் பொறுக்கிகள் என்போரின் கடைசிப்புகலிடமானது புலிப்பாசிச காலத்தில்தான். பரஸ்பரம் பாலியல் மற்றும் வேறு குற்றங்கள் பணயமாக வைக்கப்பட இரண்டு தரப்பும் சமரசம் செய்துகொள்கிறது. ஒருவருடைய குற்றத்தை மற்றவர் மறைக்க இதற்குப் பிரதியுபகாரமாக வேறு உதவி எதிர்பார்க்கப்படுகிறது. என். சண்முகலிங்கத்தின் பாலியல் குற்றத்தை பணயமாக வைத்து இதே குற்றச் செயலைச் செய்த கே.ரீ. கணேசலிங்கம் மறுபடியும் சமூகவியல் துறைக்கூடாக மறுபடி உள்வாங்கப்படுகிறார். இவ்வாறே இளங்குமரனும் உள்ளே வந்தார்.

செங்கை ஆழியான் எனப்படுகிற க. குணராசா இலங்கை நிர்வாக சேவையிலிருந்தபோது செய்த மரக்கடத்தல் ஊழலுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதோடு இலங்கை நிர்வாக சேவையிலிருந்து விலக்கப்பட்டவர். இத்தகைய குற்ற வரலாற்றையுடைய செங்கை ஆழியானுக்கு பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி வழங்கப்பட்டது. 

செங்கை ஆழியான்: மரக்கடத்தல் மன்னன் உடம்பெல்லாம் மச்சம். அவனது மனைவியும் சின்னவீடும் சமகாலத்தில் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆசிரியைகளாக இருந்தார்களாம். தகவல்: ஒரு வேம்படி முகநூல் நண்பி


இவர்களில் சிலரின் குற்றங்களை பணயமாகவைத்து புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டு இவர்களை இரகசியமாக தங்களுக்கான புலனாய்வு இராணுவம் மற்றும் அரசியல் வேலைகளை செய்துதருமாறு பணிக்கிறார்கள். இந்த கோலங்கள் தொடர்ந்துதான் யாழ்பல்கலைக்கழகம் சீரழிந்திருக்கிறது. 

 இதிலும் மேலுங் கொடூரத்திற்குரியது என்னவென்றால் பாலியல் குற்றங்களைச்செய்கிற குற்றவாளிகளான விசாகரூபனும், கே.ரீ கணேசலிங்கமும் மாணவர்களின் உளவள ஆலோசகராக (Counsellor) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்லையா இளங்குமரன் உள்வாங்கப்பட்டது மட்டுமின்றி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

என்.சண்முகலிங்கத்தின் பாலியல் தொல்லைகள் பல. யாழ்பல்கலைக்கழக மாணவியொருவர் சண்முகலிங்கத்தின பாலியல் தொல்லை தாங்காது யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு விலகி தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று தன் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். 

நல்லவரும் வல்லவருமான ஒரு துணைவேந்தரையே வேண்டிநிற்கிறது யாழ் பல்கலைக்கழகம். “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்யவேண்டும்”- பாரதி இம்முறை துணைவேந்தர் பதவிக்கு என்.சண்முகலிங்கம் என். ஞானகுமாரன் எஸ்.சத்தியசீலன் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். யாழ் பல்கலைக்கழகத்தை சீரழித்ததிலும் அங்கு இடம்பெற்ற குற்றச் செயல்களிலும் ஹூல் தவிர்ந்த மூவருக்குமே பங்குண்டு.ஞானகுமாரன் கலைப்பீடாதிபதி. கலைப்பீடத்தில்தான் அதிகளவு பாலியல் குற்றங்கள் இடம்பெறுகின்றன. இக்குற்றங்களுக்கான பொறுப்பை பீட அதிபர் என்ற வகையில் ஞான குமாரனும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஞானகுமாரன் துணைவேந்தராக வந்தால் பாலியல் குற்றங்கள் மேலும் தொடர்ந்து நடக்க அனுமதியளிக்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஞானகுமாரனுடைய சகோதரர் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்பதால் அவரூடாக ஜி.எல்.பீரிசிடமும் மேலும் ஜனாதிபதியிடமும் கெஞ்சி மண்டாடியாவது துணைவேந்தராக வர கடும் பிரயத்தனம் செய்கிறார் ஞானகுமாரன். ஞானகுமாரன் சண்முகலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூவருமே திறமை அடிப்படையில் மிகவும் சாமானிய சூனியங்கள். இன்று பல்கலைக்கழகம் ஒரு பாலியல் வதைமுகாமாகி விட்டது. ஒரு யாழ் பல்கலைக்கழக பேராசிரியருடைய மனைவி இப்போது இளைப்பாறிவிட்ட இன்னொரு பேராசிரியருடன் பாலியல் தொடுப்பிலிருந்தே தனது பல்கலைக்கழக பதவியை தங்கவைத்துக் கொண்டார். கணவனுக்கு மட்டுமல்ல முழு பல்கலைக்கழக சமூகத்திற்கும் தெரிந்த பரகசியம் அது. தமிழ்ப்பேராசிரியர் சண்முகதாஸ்  பழைய நிலமானிய சமூக ஸ்டைலில் பல்கலைக்கழக மாணவியை வைப்பாட்டியாக வைத்திருக்கிறார். 

                 பேராசிரியர் சண்முகதாஸ்


சண்முகலிங்கமும், சத்தியசீலனும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள். தரமான பல்கலைக்கழகம் எதிலுமே கலாநிதிப்பட்டம் பெறுமளவுக்கு திறமையற்றவர்கள் இருவரும். இந்தியாவில் பெறப்பட்ட ஞானகுமாரனின் கலாநிதி பட்டமும் மிகச் சாமானியமானதுதான். லிங்கமும் குமாரனும் சீலனும் யாழ் பல்கலைக் கழகத்திலிருக்கும்வரை திறமையானவர்கள் எவரையுமே யாழ் பல்கலைக்கழகத்தினுள் அனுமதிக்கப் போவதில்லை. இவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழகம் மேலும் சீரழியப்போவது உறுதி.

இன்று நாம் ஒரு கால்நூற்றாண்டு கொடும்போர் முடிந்த யுக சந்தியில் நிற்கிறோம். நல்லவரும் வல்லவருமான ஒருவர் அதுவும் வெளிநாட்டார் அவர்தம் திறமையை வணக்கம் செய்த ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலில் சீ.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கிவைத்த செழுமையான பாரம்பரியத்தின் சிறப்புக்களையெல்லாம் கொண்டுள்ள ஒருவர் விஞ்ஞானத்திலும் (Engineering) மெய்ஞானத்திலும் (Humanities) பாண்டித்தியம் உடைய ஒருவர் ஆதியில் இந்து முதாதையரிலிருந்து வந்த ஆதித்தமிழனின் கருப்புத்தோலையுடைய ஒருவர் நம் கல்வி சமூகத்திற்கு சேவை செய்ய வந்திருப்பது நாம் முன்செய்த தவத்தின் பயனாலல்லவா? ஒரு வாழ்நாள் காலத்தில் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்கும் இவ்வாறானதொரு அரும் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடுவோமாயின் ஈழ தமிழ் சமூகம் கற்காலத்திற்கு திரும்பிப் போவது உறுதி. 

 பேராசிரியர் ரட்ணஜீவன் துணைவேந்தராக வருவதால் கிடைக்கும் பெருநன்மைகள். 

 1. குற்றச்செயல்களும் சீரழிவுகளும் மிகுந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து வருபவர் கண்ணியமானவர் என்பதால் யாழ் பல்கலைக்கழகத்துக்கு புனர்வாழ்வழித்து அதனை முன்னேற்றுவார். 

2. எந்திரவியல் பேராசிரியர் என்பதால் எந்திரவியல்துறை முதல்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் தழைத்தோங்கும். 

3. சர்வதேச ரீதியாக நன்கு அறியப்பட்ட புலமையாளர் சாதனையாளர் என்பதால் சர்வதேசரீதியாக புகழ்வாய்ந்த தரமான தமிழர் தமிழரல்லாத துறைசார் அறிஞர்களை யாழ்பல்கலைக் கழகத்துக்குள் கொண்டுவருவார். 

4. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிக அளவில் புலமைப் பரிசில்களை வெளிநாடுகளில் பெற்றுக் கொடுக்குமளவுக்கு சர்வதேச ரீதியில் செல்வாக்கான பெயரையும் தகுதிகளையுமுடையவர். 

5. யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டு உதவிகளை அதிக அளவில் பெற்றுக்கொடுக்கக் கூடியவர்.

 6. சமூகவிஞ்ஞானத்திலும் பாண்டித்தியம் உடையவர் என்பதால் விஞ்ஞான சமூகவிஞ்ஞான துறைகளிடையே நிதி பங்கிடப்படும்போது சமநிலையைப் பேணுவதோடு கலை மற்றும் சமுகவிஞ்ஞானவியல் துறைகளையும் முன்னேற்றுவார். 

7. யாழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியான தராதரத்துக்கு உயர்த்துவார்.

 8. புதிய கற்கை நெறிகளை யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக்கூடியவர். 

9. கல்விசார் சுதந்திரத்தை(Academic freedom) அதிகளவில் மதிக்கக்கூடியவர். 

லிங்கமோ குமாரனோ சீலனோ துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டால் வரப்போகிற இன்னொரு ஆபத்து ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி வெடிக்கலாம் என்பதே.(2010 ல் எழுதப்பட்ட கட்டுரை)

தொடர்பான கட்டுரைகள்

1. யாழ்ப்பாணம் தோற்ற கதை

2. கானா பிரபாவும் சடையன் சண்முகலிங்கனும்: தரந்தாழும் அற விழுமியங்கள்

3. யாழ்ப்பாணக் காமக்குற்றவாளி: "Prof" இளங்குமரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்