Posts

Showing posts from February, 2021

சவாரித்தம்பரும் சின்னத்தம்பியும்

Image
அது 2007. கனடாவில் ஒரு இனிய கோடைகாலத்து  காலையில் 2 தமிழர்கள் மது அருந்தியபடியே தமிழ்த்தேசியம், புலிப்பாசிஸம் பற்றி சம்பாஷிக்கிறார்கள்   2007 கனடிய வசந்தகாலத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன்  எழுதி தேனியில் வந்த கட்டுரை. புலியின் அழிவு ஆருடம் சொல்லப்பட்டிருக்கிறது   கனடாவில் வேனில் காலம். புதிதாக மணமாகியிருந்த சின்னத்தம்பி சங்கானைச் சந்தைக்கு தனியாக அதிகாலையிலேயே சென்று மரக்கறி மீன்சாமான்களை வாங்கிவந்து தன் இளம் மனைவி கனகாவை அசத்தினான். தன்னுடைய புதுப்புருசனை "அதிகம் வேலை வாங்கி கஸ்டப்படுத்துகிறேனோ" என்று குற்ற உணர்ச்சியால் வருந்திய கனகா  "சரி இண்டைக்கு வேணுமெண்டால் பப்புக்குப் போய் ரண்டு பியர் குடிச்சிட்டு வாங்கோ. நான் சமைச்சு வைக்கிறன்"  என்றாள். தன்னுடைய மனுசிதான் இதைச் சொல்லுகிறாளோ என்று ஒரு கணம் நம்ப மறுத்த சின்னத்தம்பி, மனுசி மனம் மாறினாலும் என்று அவசர அவசரமா இறங்கினான்.  வெளியில பத்துமணி வெய்யில் சின்னத்தம்பியின்ர முகத்தில அடிக்க அவனுக்கு யாழ்ப்பாணத்து தெருவொன்றில நடந்த மாதிரி இருந்தது. வயுத்துக்குள்ள வண்ணாத்திப்பூச்சி பறந்தது. கனகாவையும் தன்னோட...

கருணாகரனும் நாற்பது திருடர்களும்

Image
கவிஞரும் "பத்திரிகையாளருமான"  கருணாகரன்  முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும்  மதிப்பிடப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் நியாயமான  பணி. "சட்டப்படி"              நட்சத்திரன் செவ்விந்தியன் 2009 ல் ஈழப்போர் முடிந்தபின் அகதிமுகாமிலிருந்து கருணாகரன் காலச்சுவட்டில் எழுதிய "ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்ததென்ன" என்ற  கட்டுரை மிக நியாயமான அறப்பதிவு. அதைப்படித்தபின் அவரில் மதிப்பேற்பட்டு அவர் முகநூல் நண்பனானேன். தொலைபேசினோம்.             காலச்சுவடு 2009 ஆகஸ்டு நான் அவரைக் கண்டதில்லை. அவர் சிறுவனான என்னைக் கண்டிருக்கிறார். 2ம் ஈழ யுத்தம் தொடங்கிய காலம். புலிகளின் பத்திரிகையான ஈழமுரசு பத்திரிகை காரியாலத்தில். அப்போது ஈரோசின் பால நடராச ஐயர்(சின்ன பாலா) புலிகளோடு ஐக்கியமாகி ஈழமுரசில் இலக்கிய பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். ஈழக்கவிதைகளைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதி ஈழமுரசில் பிரசுரிப்பதற்காகக் கொடுத்திருந்தேன். அக்கட்டுரையில் காசி ஆனந்தனதும் புதுவை இரத்தினதுரையினதும் கவிதைகள் ...

சுந்தர ராமசாமி மனிதாபிமான  ஃபாசிஸ்டின் ஜனநாயகக் குரல் 

Image
  நட்சத்திரன் செவ்விந்தியன் என்னுடைய மிகச் சிறப்பான மிகச் சிறிய புத்தக மதிப்புரையாக இப்போதும் எனக்கு தெரிவது சுந்தர ராமசாமியின் முழுக் கவிதைத் தொகுதிக்கு ஞான் சரிநிகரில் எழுதிய பின்வருவது தான். அதுவொரு கனாக்காலம். ஈழத்தை விட்டு ஓஸ்றேலியாவுக்கு புலம்பெயர்ந்த அதே மாதத்தில் பிரசுரமானது.  அதற்கு முதலாண்டு தான்  பிரபாகரன் யாழ் நகரை இழந்து வன்னிக்காடுகளை தனது கோட்டையாக்கியிருந்தார்.  சுந்தர ராமசாமியை சில ஆண்டுகளின் பின் சென்னையில் சந்தித்தேன். காலச்சுவடு ஒழுங்கமைத்த தமிழினி மாநாட்டில். அப்போது அவர் பிதாமகர். அவரைச் சந்திக்க அவர் எனக்கு தந்த நேரத்தில் நான் ஆஜராகவில்லை. பின் மாநாடு நடந்த எழும்பூர் அட்லாண்டா ஒட்டல்  உணவு விடுதியில் அவர் இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது  சந்தித்து மன்னிப்பு கேட்டேன். அவர் சிறிதும் கோவப்படவில்லை.  பாலு மகேந்திரா  தனக்கு மகள் வயதான  ஷோபாவை(17 வயது) "திருமணம் செய்தபின்" முதலிரவைக் "கொண்டாடியதும்" சென்னையில் ஒரு Hotel Atlanta வில் தான்.  இரண்டு ஓட்டல்களும் ஒன்றா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ...

சிவத்தம்பி: பித்தமும் சித்தமும்

Image
                  இளமையில் சிவத்தம்பி சமகால தமிழ்ச்சூழலில் நிலவும் பரஸ்பர முதுகுசொறியும் வாழைப்பழ நழுவல் விமர்சன மரபை அம்பலப்படுத்த நட்சத்திரன் செவ்விந்தியன் 2003 ல் எழுதிய இக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது. 50 களிலிருந்து 70 கள் வரையான மூன்று தசாப்தங்களும் சிவத்தம்பி ஒரு வரட்டு மார்க்சியராகவே இருந்தார். மார்க்சியத்தை இலக்கிய விமர்சனத்துக்கு பயன்படுத்துகிற போது இந்த வரட்டுத்தனம் மிக துலங்கலாகத் தெரிந்தது. சுயாதீனமாக இயங்க வேண்டிய படைப்புத்துறையையும் விமர்சனத்துறையையும் ஒரு அரசியல் கட்சியாக கட்சி மனோபாவத்தோடும் கட்டுப்பாடுகளோடும் வைத்திருந்தனர். தங்களது அணி சார்ந்தவர்களையே குழு மனோபாவத்தோடு சிலாகித்து எழுதினார்கள் கைலாசபதி,  சிவத்தம்பி ஆகியோர்.            கைலாசபதி           சிவத்தம்பி    சிவத்தம்பி முதலியோர் அங்கம் வகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு வெளியேயிருந்தும் சமகாலத்தில் ஒரு வளமான படைப்பிலக்கியம் மற்றும் விமர்சனத்துறை சார்ந்த மரபு வளர்ந்து வந்தது. ஈழத்துச் சிற...

பட்டக்காடு சமர்க்கள றிப்போட்

Image
By நட்சத்திரன் செவ்விந்தியன் சிட்னியில் இவ்வாரம் ஐவர் கலந்து கொண்ட பட்டக்காடு  விமர்சனம் ஒரு தரமான சம்பவம். Post War ஈழ நாவல்கள் பற்றிய வரலாற்று மைல் கல்    விவாதத்தை  தொடங்கிய ரஞ்சகுமார் தன்னுடைய வழமையான முதுகுசொறியும் நழுவலான "வாழைப்பழ விமர்சனத்தை" வைக்கிறார். பட்டக்காட்டை மகத்தான தமிழ் நாவலான J.D. குருஸின் ஆழிசூழ் உலகோடு ஒப்பிட்டுகிறார்.😁 (ஆழி சூழ் உலகு அளவுக்கு தரமானது இல்லை என்று சொன்னாலும்)   தொடர்ந்த கிசோக்கர் பட்டக்காடு மீது மிக நேர்மையாகவும் துணிவாகவும் முறையான மிகக்கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்.   "இது ஒரு இலக்கியப் பிரதியோ நாவலோ அல்ல, அதற்கான எத்தனம். இதுவொரு 400 பக்க பேஸ்புக் பதிவு. அவ்வளவுதான். இது வெறும் மூன்றாம்தர C வாசகர்களுக்கான நாவல். அமல்ராஜுடைய மொழி மிகப்பெரிய பிரச்சினை! போதாமை! மொழி விஷயத்தில் இவர் ரொம்ப ரொம்பப் படான். பாத்திரங்கள் தங்களுக்கு நேர்மையில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி மன்னாருக்குரிய மொழியே இல்லை."              - கிசோக்கர்  ...

யாழ் பல்கலைக்கழகம்: சீரழிவின் வரலாறு

Image
நட்சத்திரன் செவ்விந்தியன்  2010 ல் எழுதிய கட்டுரை. ஈழப்போருக்குப் பின் தகுதியான ஒரு  பேராசிரியர்  ரட்ணஜீவன் ஹுல் பல்கலைக்கழகத்துக்கு புனர்வாழ்வளித்து புத்துயிர்ப்பிப்பார் என்பதை வலியுறுத்தி வாதிட்ட கட்டுரை  ஆசியாவின் முதலாவது உயர்தர தங்கிப்படிக்கும் பெண்கள் பாடசாலை (1824 இல் உடுவிலில்) ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில்தான்.        பாரதி புதிய ஆத்திசூடி எழுத முன்                      "தையலை உயர்வு செய்த"                                உடுவில் மகளிர் கல்லூரி 1848 ம் ஆண்டிலேயே பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிக்கு சமனான மேலைத்தேய மருத்துவக் கல்லூரி சாமுவேல் கிறீன் என்பவரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியும் இதுதான்.1864 ம் ஆண்டிலிருந்து இம்மருத்துவக் கல்லூரியில் தமிழ்மொழியை மேலைத்தேய மருத்துவக் கற்கைக்கான ஊடக மொழியாக்கிய மகத்தான புரட்சியையும் அமெரிக்கரான சாமுவேல் கிறீன் சாதித்தா...