ஒரு மூடன் கதை சொன்னான்

 

                 ஜெயமோகனுக்கு முதுகு சொறியும்                                                   முத்துலிங்கம்

முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் இலக்கிய ஊழல்கள். By  நட்சத்திரன் செவ்விந்தியன். 

2013ல் மலைகள் இணைய  இதழில் வெளிவந்த இக்கட்டுரைதான் ஜெயமோகன் செவ்விந்தியன் மீதான  வஞ்சம் தீர்ப்புக்கான காரணம். 

2012 ம் ஆண்டில் வெளிவந்த தனக்குப்பிடித்த அவ்வாண்டின் சிறந்த சிறுகதையாக அ.முத்துலிங்கத்தின் (அ.மு) சூனியக்காரியின் தங்கச்சி (உயிர்மை நவ.2012) என்ற சிறுகதையை எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவுசெய்துள்ளார். 

Best of 2012 என்கிற ஆங்கில அறிவிப்போடும் வந்துள்ள இப்பட்டியலில் அவ்வாண்டின் சிறப்பான 50 வகைகள் உண்டு (திரைப்படம், நாவல், மனித உரிமைப்போராளி, வாசகன், பாடலாசிரியன், ஓவியன், பத்திரிகையாளன் என..) ஆனால் இங்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு தெரிவு அதுவும் தெரிந்து கொண்டேசெய்யப்பட்ட ஒரு மோசடி ஒரு போலிச்சிறுகதை அல்லது சிறுகதைப்போலியான சூனியக்காரியின் தங்கச்சி தெரிவு செய்யப்பட்டதுதான். 

தமிழில் இன்று வருகின்ற சிறுகதைகளை மோசமான கதைகள், போலிச்சிறுகதைகள், தரமான சிறுகதைகள் என்று மூன்று அடிப்படையான பிரிவுகளுக்குள் உள்ளடக்கலாம். இங்கு நமது கவனத்துக்கு உரியதாவது போலிச்சிறுகதைகள் என்ற வகை. அதாவது பாவனை பண்ணுபவை. பாசாங்கு செய்பவை. கலப்படம் செய்பவை. தண்ணீர் கலந்த பாலும் சக்கரை கலந்த தேனும் இதற்கு நல்ல உதாரணங்கள். 

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் கலப்படமில்லாத பசுப்பாலை மட்டும் நாங்கள் போலியல்லாத தரமானது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. செம்மரி ஆடு, ஆடு, மலையாடு, பன்றி, மான், மரை, கழுதை, கழுதைப்புலி, புலி, சிங்கம், நாய், ஓநாய் ஆதிய எந்த மிருகத்தின் பாலும் கலப்படமில்லாதவரை தரமானதே. மல்லிகையும் காட்டுமல்லிகையும் ஏற்புடையதாயினும் பிளாஸ்டிக் மல்லிகை ஏற்புடையதேயல்ல என்பதே எமது வாதம். தரமான சிறுகதைகளைப்படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அசலான பெண்ணை புணர்வதற்கு ஒப்பானது. அதாவது தரமான சிறுகதைகளைப் படிக்கும் போது மனைவியோடோ காதலியோடோ கூடுவதற்கொப்பான அசல் சந்தோசம் கிடைக்கும். முத்துலிங்கம் போன்றவரது போலிச்சிறுகதைகளைப் படிக்கும் போது கிடைப்பது விலைமாதரோடு புணருவதற்கொப்பானது. அவர்கள் தங்களுக்கு ஆர்கசம் வந்ததாக சவுண்ட் கொடுப்பார்கள். அந்த சவுண்டை ரியூண் பண்ணக்கூடிய வஸ்துகளை நீங்கள் முதலிலேயே சாப்பிட்டிருக்கவேண்டும் அதை அனுபவிக்க. 

இனி ‘சூனியக்காரியின் தங்கச்சி’ கதையை பகுத்தாராயலாம். மேலைத்தேசங்களில் இருக்கின்ற ஒரு வகையான பிரபல்யமான நாவல்கள் வகைக்குள் வருகிற Junk fiction என்பதற்குள்ளேயே இக்கதை வரும். நம்மூர் மொழியில் சொன்னால் சுஜாதா, பாலகுமாரன் வகைக்கதை. ஆனால் ஏன் முத்துலிங்கத்தின் இவ்வகைக் கதைகளை இதுவரையில் மேற்கூறியவர்களுடன் அடையாளப்படுத்துவதில்லை என்றால், அதற்குக்காரணம், முத்துலிங்கம் தன் கதையை நடத்துகிற இடம் தமிழ் நிலம் அல்லாத ஆபிரிக்க அமெரிக்க ஐரோப்பிய கண்டங்கள். அவர் பாத்திரங்கள் பெருமளவானவை தமிழ்பாத்திரங்கள் என்றாலும் களம் தமிழ் நிலம் சாரததால் வேற்று நில மக்கள், அவர்தம் பண்பாடுகள், வழக்கங்கள்தான் (உதாரணத்துக்கு இக்கதையில் வரும் கணவரின் துரோகத்தால் பிரிந்து தனித்து வாழும் பதிப்பகமொன்றுக்காக வேலைசெய்யும் வெள்ளைப்பெண், திராட்சை மதுவும் அதன் பாவனைபற்றிய விபரங்கள், மாற்றான் மனைவியை கவருவதும் அதிகரித்த விவாகரத்துக்களும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து முதலாம் உலக நாடுகளுக்கு வந்து அகதி அந்தஸ்து கோருகின்றமை முதலியன) பெருமளவில் அவர்கதைகளில் வருகின்றன. இவை ஒரு தமிழ்வாசகனுக்கு புதிது அன்னியமானவை என்பதால் இக்கதைகளிலிருக்கிற சுஜாதா, பாலகுமாரன் கதைகளுக்கொப்பான வியாபார எழுத்து உத்திகளை (அதாவது அசல் இல்லாத தன்மை, Cliché எனப்படுகிற மீள மீள பிரயோகிக்கப்படுகிற ஒரே மொழி, வகைமாதிரிக் கதைகள், மெலோ ட்றாமற்றிக் - சினிமாத்தனமான கதைகள், ஜனரஞ்சகமான காதல்(Romance), சுழற்சிப்பாவனை முறையில் உபயோகப்படுத்துகிற Recycling கதைகள், ஜனரஞ்சகமான தன்மை மற்றும் ஐனரஞ்சகமான பிரச்சாரம்- இக்கதையில் விடுதலைப்புலிகளின்போராளிகள் ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இலட்சியத்திற்காகவும் போராடியது என்று கூறப்படும் பிரமை - இலட்சியவாத மாயை- உண்மையில் அவர்கள் போராடியது பிரபாகரன்என்கிற பாசிஸ்ட் தனிமனிதனின் நலனுக்காக குறிப்பாக கருத்தியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்பட்ட - ideological indoctrination - குழந்தைப்போராளிகளாக) அவனால் இனங்காண முடியாமலிருக்கும். 

மேற்கூறிய பலவகையான வியாபார சிறுகதை உத்திகளையும் ஒரே கதையில் அ.மு கலவை ஆக கொடுக்கும்போதும் சராசரி வாசகனுக்கு தனித்தனியாக இவ்வுத்திகள் இனங்காணுவது கடினமாகவிருக்கும். இங்குதான் முத்துலிங்கம் தமிழனின் காதில் பூச்சுற்றி மோசடிசெய்கிறார். தமிழ் சராசரி வாசகனால் கிரகிக்கமுடியாத இந்த மோசடிகள் ஜெயமோகனாலோ ராமகிருஷ்ணலாலோ கிரகிக்கமுடியாதவையல்ல. இன்னும் சொல்லப்போனால் முத்துலிங்கத்தைவிட படிப்பிலும் படைப்பாற்றலிலும் பலமடங்குதிறமையுள்ள முன்னவர்கள் இருவருக்கும் இக்கதை போலியானது என்பது நன்றாகத்தெரியும். 

இன்றைக்கு சினிமாவுக்கு வசனம் எழுதி மிகப்பணக்கார எழுத்தாளராக வந்துவிட்டபோதும் நடுக்கடலிலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான் என்பதுபோல ராமகிருஷ்ணனுக்கு முத்துலிங்கம் கொடுத்த, கொடுக்கும் இலஞ்சத்தின் பாதிப்பை மீறி உண்மை பேசமுடிவதில்லை.

 முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகள் இயந்திரத்தனமானவைகள். ஒரு கணினி program கூட இக்கதைகளை எழுதமுடியும். மந்திர தந்திரத்தினாலோ மாயா ஜாலத்தினாலோ செய்யப்படுவதில்லை தரமான சிறுகதை. அது தான் உருவாகிக்கொண்டிருக்கிற கலைச்செயன்

முறையின் போதே தனக்கான விதிகளையும் ஒழுங்கமைவுகளையும் உருவாக்கிக்கொள்கிறது. முத்துலிங்கமோ சமையல் குறிப்புக்களை வைத்துக்கொண்டு சமைக்கிற ஒரு சராசரி சமையல்காரனைப்போல இயந்திரத்தனமான செயல்முறைகளைக்கொண்டு மாயாஜாலம், மந்திர தந்திரம் செய்து சிறுகதை செய்பவர். 

தற்காலத்தமிழிலக்கியத்தின் முதன்மையான ஊழல் மோசடிக்காரர் என்றால் அ.முத்துலிங்கத்தைதான் சொல்லமுடியும். அவரது உத்தி என்னவென்றால் திறமையான தமிழ்எழுத்தாளர்களை(அதிகார மையங்கள்) இனங்கண்டு அவர்களை மடக்கி கையில் போட்டுக்கொண்டு அவர்களுக்கு பலவகையான இலஞ்சங்களையும் புகழ்ச்சிகளையும் விருதுகளையும் வழங்குவது. 

இவ்வகையிலேயே இவர் ஜெயமோகன், ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் முதலியவர்களை தன் கைக்குள் போட்டார். மேலும் போட்டி இலக்கிய இதழ்களான காலச்சுவடு, உயிர்மை, தீராநதி முதலியன எல்லாவற்றுடனும் இலக்கிய நல்லுறவைப் பேணுபவர் அ.மு. இதில் காலச்சுவடு கண்ணன் வணங்காமுடி சு.ரா வின் புதல்வர் என்பதாலும் பிறவிப்பணக்காரர் என்பதாலும் அவரை பணத்துக்கு வாங்கமுடியாது. ஆனாலும் கண்ணனும் தன்மீது விமர்சனங்களை வைத்துவிடக்கூடாது (காலச்சுவடு சுஜாதா மனுஷ்யபுத்திரன் மீது கடுமையானவிமர்சனங்களை வைத்தமாதிரி) என்பதற்காக அவரையும் தாஜா பண்ணி பகைக்காமல் வைத்திருக்கிறார் முத்துலிங்கம்.

 கனடா இலக்கியத்தேட்டத்தின் இயல்விருது உண்மையில் அ முவின் தனிச்சொத்து. அது அ.மு வின் நலன்களுக்காகவே உபயோகிக்கப்படுவது. அ.மு வும் ஜெயமோகனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தீவிரமாக முதுகுசொறிந்து நலன்பெறுபவர்கள்.அ.மு வின் பல போலிச்சிறுகதைகளையும் சுமாரான கட்டுரைகளையும் மிகப்புகழ்ந்து எழுதி ஜெயமோகன் அவருக்கு மோசடியான போலி அங்கீகாரம் வாங்கிக்கொடுக்க அ.மு ஜெயமோகனுக்கு கனேடிய விமானச்சீட்டு வழங்குவதிலிருந்து அவரை நோபல் பரிசுக்குரியவராக மெச்சுவதுவதுவரை பலவகையான இலஞ்சங்களை வழங்குபவர். 

 கடந்த ஆண்டு இயல்விருது ஜெயமோகனுக்கு வழங்கப்படுவதையே அ.மு விரும்பினார். ஆனால் ஜெயமோகனின் இலக்கிய அரசியல் மோசடிகளும் நேர்மையீனங்களும் இருவருக்குமிடையிலான தனிப்பட்ட நலன்சார்ந்த கொடுக்கல் வாங்கல்களும் ஏற்கெனவே அறியப்பட்டிருப்பதால் ஜெயமோகன் விருதை சிறிது காலத்தின் பின் பெற விரும்ப அவ்விருது அவ்வாண்டு  எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. 

இவ்வாண்டு விருது ஜெயமோகனுக்கு வழங்கப்படவிருந்தது. இவ்வாண்டும் தன்மீது விமர்சன உக்கிரம் படிவதை விரும்பாத ஜெயமோகன் தனது நண்பரும் விசுவாசியுமான நாஞ்சில் நாடனை தனது “பிரதிநிதியாக” சிபார்சு செய்ய அவருக்கு விருது வழங்கப்பட்டது. 

தனக்குகிடைத்த விருதுக்கு செஞ்சோற்றுக்கடனாக எஸ்.ராமகிருஷ்ணன் செய்ததுதான் இவ்வாண்டின் சிறந்த சிறுகதையாக முத்துலிங்கத்தின் போலி மோசடிக்கதையை தெரிவுசெய்தது. 

புத்தாயிரமாம் ஆண்டுகளிலிருந்து அவருடைய கொரில்லா நாவலின் வருகையோடு ஷோபாசக்கி ஒரு இலக்கிய அதிகார மையமாக வளர்ந்தார். ஷோபாசக்தியையும் தனது கைக்குள்போட்டுக்கொள்ள சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தார் அ மு. சில ஆண்டுகளுக்கு முதல் ஷோபாசத்தி “மூடுலிங்க” என்றொரு சிறுகதையை அ முத்திலிங்கத்தை வைத்து ஹாஸ்ய பாணியில்எழுதினார். அ.மு ஷோபாசக்தியடமே தொலைபேசியில் உரையாடினார். விளங்காத மாதிரி "அந்த முடுலிங்க உண்மையிலேயே ஒரு ஆபிரிக்கரின் பாத்திரமா" என்று வினவி ஷோபாசக்தியின் மனதைக்கரைத்து தன் கைக்குள் போட்டார். பிறகு ஒரு கட்டுரைத்தொகுப்புக்கு ஷோபாசக்தியிடமிருந்தும் ஒரு கட்டுரைவாங்கிப்போட்டார். கடந்தவருடம் கனடாவுக்கு ஷோபா போனபோது அவரை நன்றாகக்கவனித்துக்கொண்டார்.  அன்றிலிருந்து ஷோபாசக்தியும் ஒரு லக்கிய யாவாரி ஆகிவிட்டார். அ. மு வையும் அவர் இலக்கியத்தையும் மோசடிகளையும் விமர்சிப்பதை தவிர்த்துக்கொண்டார். 

முத்துலிங்கம் ஆழமான படிப்பாளி அல்ல. புத்தகங்களில் நுனிப்புல் மேய்பவர். இவர் ஒரு பாசாங்குக்காரரும் சிறப்பான விளம்பரக்காரரும் கூட. உலக இலக்கியங்கள் கலைத்துறைகள் எல்லாவற்றிலும் பாண்டித்தியம் இருப்பதாக பாசாங்கு காட்டும் அ.மு பல தடவைகள் தனது பல சிறுகதைகள் கட்டுரைகளில் தனது அறியாமையை வெளிப்படுத்தி கையும் களவுமாகமாட்டுப்படுபவர். 

இக்கதையிலும் அர்ஜூன ரணதுங்க என்கிற இடது கை துடுப்பு ஆட்டக்காரனின் நினைவாகப் கதாநாயகனுக்கு பெயரிடப்பட்டதாக கதை பண்ணுகிற முத்துலிங்கம் இடதுகை துடுப்பாட்டத்துக்கும் இடது கை பழக்கத்துக்கும் (கை வளம்) வித்தியாசம் தெரியாமல் எழுதுகிறார். முத்துலிங்கம் வாழ்க்கையில் ஒருபோதும் கிரிக்கட் விளையாடினதில்லை போலும்.

இடது கை துடுப்பாட்டமும் இடது கைக்காரராக இருப்பதும் முற்றிலும் வேறு வேறானவைகள். இடதுகை துடுப்பாட்டக்காரர்கள் எல்லோரும் இடதுகைக்காரர்களாக இருக்கவேண்டும் என்கிற முட்டாள்தனமான அறியாமையே இங்கு வெளிப்படுத்துகிறார் அ.மு. இடது கைத்துடுப்பாட்டக்காரர்களான ரணதுங்கவும் கங்குலியும் உட்பட பெரும்பாலான இடது கைதுடுப்பாட்டக்காரர்கள் வலது கையால் பந்து வீசும் வலது கைக்காரர்கள் என்பதை அ.மு என்கிற கடைந்தெடுத்த மூடனுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ரணதுங்கவும் கங்குலியும் இடதுகை துடுப்பாட்டமும் வலதுகை பந்துவீச்சும்


 அ.மு என்கிற இந்த மனுசனுக்கு பீத்தோவன் எத்தனை சிம்பனிகள் கோர்த்து அவை இசைவடிவமாக்கப்பட்டிருக்கின்றன என்கிற அடிப்படை அறிவே இல்லாதவர். மூன்றாவது மனிதனின் 13 வது இதழில் வெளிவந்த ‘23 சதம்’ என்கிற முத்துலிங்கத்தின் ஒரு பத்தாம் பசாலித்தனமான கதையில் பின்வரும் பகுதி வருகிறது. 

“இப்பொழுது புதிய ஒரு பெண்குரல் மெசினில் வந்தது. ' நன்றி தயவுசெய்து பொறுத்திருங்கள் ஒரு பணியாளர் உங்களுடன் விரைவில் பேசுவார்.’ டெலிபோனில் பீதோவனின் ஒன்பதாவதுஇசைக்கோவை ஒலித்தது. நான் கைபேசியை பிடித்தவாறு காத்திருந்தேன். ஒரு நிமிடம் சென்றது. மறுபடியும் அதே குரல் வந்தது. ‘உங்கள் பொறுமைக்கு நன்றி. நீங்கள் எங்களுக்குமிகவும் வேண்டிய வாடிக்கைக்காரர். தயவுசெய்து லைனில் காத்திருக்கவும். விரைவில் ஒரு பணியாளர் தொடர்பு கொள்வார்.’ அலுக்காமல் மறுபடியும் பீதோவன் தன் ஒன்பதாவது சிம்பனியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். நீண்ட நேரம் பத்தாவது சிம்பனியாக மாறும்வரை அது ஒலித்தது.” 

பீத்தோவன் ஒன்பது சிம்பனிகள் தான் கோர்த்தார். அவை இசை வடிவமாக இசைக்கப்பட்டன. பத்தாவது சிம்பனியையும் கோர்க்க நினைத்து அதற்கான ஆரம்பவேலைகளையும் தொடங்கியிருந்தார். அதற்குள் அவர் இறந்துவிட்டார். எனவே பீத்தோவனின் பத்தாவது சிம்பனியென்று கோர்வைவடிவிலே இசை வடிவிலோ எதுவுமில்லை. பீத்தோவனின் சிம்பனிகளில் மிகப்பிரபல்யமானதும் சிம்பனிகளில் பிரபல்யமானதும் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனி. கேள்விச் செவியனான முத்துலிங்கத்தின் காதில் “பீத்தோவனின்ஒன்பதாவது சிம்பனி” என்பது விழுந்திருக்கிறது. அதனைவைத்து கதைபண்ணி தமிழனுக்கு பிலிம் காட்ட வெளிக்கிட்ட முத்துலிங்கம் கையும் களவுமாக மாட்டுப்பட்டார். 

முத்துலிங்கத்தினது  ‘பொற்கொடியும் பார்ப்பாள்’ என்ற சிறுகதையில்(அமெரிக்கக்காரி, காலச்சுவடு பதிப்பகம்) பின்வருமாறு வருகிறது. 

 கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல் தூக்கிப்போட்டு பிடித்துவிளையாடுவாள். பின்னைக்கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பிவந்துதும் பின்னைச்சொருகி இடுப்பிலே அணிந்துகொள்வாள். கிரனெட்டின் ஆயுள் 5 செக்கண்தான். “ அது ஆயுளைத்தாண்டினால் உன் ஆயுள் போய்விடும் என்று சொல்லிச்சிரிப்பாளாம் (பக்.63) 

 “இறந்துபோன ராணுவச்சிப்பாயின் கிரனேட்டைப்பறித்துக் கொண்டாரா அல்லது எதிரிகள் எறிந்த கிரனேட்டை அது வெடிக்க முன் ஏந்தி பின் கொழுவி வைத்துக்கொண்டாரா?” (பக். 65) 

 பின்னை கழற்றினால் கிளிப்பை அது அடிக்காமல் அழுத்திவைத்திருக்கவேண்டும். அல்லாவிடில் கிளிப் அடிக்கும். கிளிப் அடித்து 5 செக்கனில் கிரனைட் வெடிக்கும் (புலிகள் பின்னாட்களில் பயன்படுத்தியவை பெரும்பாலும் ஒரு செக்கனிலும் நாலு செக்கனிலும் வெடிக்கும் கிரனைட்டுக்கள்) கிளிப்படித்தால் பின்னர் பின்னை செருகி வெடிக்காமல் தடுக்கமுடியாது. தடுப்பதற்கு ஒரே வழி அதிஸ்ரமிருந்தால் எதிரி எறிந்த கிரனைட்டை 5 செக்கனுக்குள் எடுத்து தூர வீசுவது மட்டுந்தான்.

இவ்வாறாக முத்துலிங்கத்தின் ஒவ்வொரு சிறுகதை கட்டுரையிலும் இவரது அறியாமை வெளிப்படுத்தப்படும் பல உதாரணங்கள் தரலாம். ஒரு கணக்கியலாளரான அ.முத்துலிங்கம் ஐக்கியநாடுகள் சபை போன்ற உலக நிறுவனங்களில் கொழுத்த சம்பளங்களுக்கு வேலைசெய்து பின்நாட்களில் மடி நிறையப்பணத்தோடு கனடாவில் இழைப்பாறி வாழ்ந்துவருபவர். அவரது ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுதி மட்டுமே சிறப்பானதாக இருக்கிறது. பின்னாட்களில் அவர் எழுதிய சிறுகதைகளில் பெரும்பாலானவை எழுத்தின் தொழில்நுட்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவை. பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அனுபவங்களை கதைகளாக்கும் அ.மு வின் சிறுகதைகளிலிருப்பவை சுவாரசியமும் தமிழ் வாசகனுக்கு விசித்திரமான அனுபவங்களுமே. இவைகள் சிறப்பான சிறுகதைகளாக தோல்வியுற்றவை. செல்வந்த நாடொன்றில் வசிக்கின்றமை, பணபலம் என்பவற்றைமூலதனமாக தமிழ்நாட்டில் சிறப்பாகப் பயன்படுத்தி பிரபல்யமாக வந்தவர்தான் அ.மு. 

இரண்டாயிரமாம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஜெயமோகனின் கனேடிய பயணத்துக்கான சூத்திரதாரி அ.முத்துலிங்கமே. ஜெயமோகனை கனடாவுக்கு அழைக்கு முன்மொழிந்து அதற்கான விமானப்பயணச்சீட்டு செலவையும் ஏற்றவர் அ.மு. இருவருக்கிடையிலுமான உறவு முழுக்கமுழுக்க இலக்கிய வியாபாரம் சம்பந்தப்பட்டது. அ. முத்துலிங்கம் மீது முகஸ்துதி எழுத்துக்களையே எழுதுகிற ஜெ.மோ அவர்மீதான அவசியமான விமர்சனங்களைக்கூட நாசூக்காகத்தவிர்க்கிறார். 

இதற்கு நல்ல உதாரணம் சில ஆண்டுகளுக்கு முதல் இயல் விருதுகளைப்பற்றி கடுமையாக விமர்சித்து எழுதியபோது ஜெ.மோ விருதை தெரிவுசெய்யும் நடுவர்களைப்பற்றித்தான் விமர்சித்தாரே தவிர அ.முத்துலிங்கத்தைப் பற்றியல்ல. வெளிப்படைத்தன்மை (transparency) இல்லாத இயல்விருதுகளை தொடக்கி இயக்குபவரும் உடும்புப் பிடிபோல தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும் முத்துலிங்கமே என்பதை ஜெயமோகன் உள்ளிட்ட முழு இலக்கிய உலகமும் அறியும். இயல் விருதுக்கு இப்போது ஆலோசனைக்குழு, நடுவர்கள் எல்லாம் இருந்தாலும் உண்மையில் அவை கண்துடைப்புத்தான். பலரை குழு உறுப்பனர்களாகவும் நடுவர்களாகவும் போடுவதே அவர்களிடமிருந்து வரும் விமர்சனத்தை தவிர்க்கவே. முத்துலிங்கம் கொடுக்கின்ற நிரலிலிருந்துதான் நடுவர்கள் ஒருவரை தெரிவுசெய்யலாம். மேலும் தெரிவு முறையும் வெளிப்படைத்தன்மையானதல்ல. விருதுக்கு கெட்டபெயர் வரக்கூடாது என்பதற்காக பொருத்தமானவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டாலும் பலருக்கு வழங்கப்பட்டமை அதனால் முத்துலிங்கத்துக்கு கிடைக்கப்போகும் தனிப்பட்ட பிரயோசனங்களுக்குத்தான். மொழிபெயர்பாளர்களுக்கு விருது வழங்கப்படுவது அவர்கள் முத்துலிங்கத்தின் மோசமான படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காக. 

ஈழத்தழிழர் கலாச்சாரம், அரசியல், இலக்கியம், என்பவற்றில் ஒரு கலைக்களஞ்சியமாக இருந்தவரும் விமர்சகரும் மனச்சாட்சியின் கைதியும் அசலான சிந்தனையாளருமான ஏ.ஜே கனகரட்னாவுக்கு அவரது அந்திம நாட்கள் நெருங்கிவருவது தெரிந்தும் வழங்கப்படாதது மிகப்பெரிய தவறு. 

          ஏ.ஜே: ஒரு நிஜ,யாழ்ப்பாணப் புனிதர் 

அதுபோலத்தான் தமிழ்நாட்டைச்சேர்ந்த எஸ்.வி. ராஜதுரையும் இவ்விருதுக்காக கணக்கிலெடுக்கப்படவில்லை. 

                        எஸ்.வி. ராஜதுரை 


இதனைவிட தமிழிலக்கியம், சினிமா விமர்சனம் மற்றும் கலைத்துறைகளில் மெச்சத்தக்க பங்களிப்பைச்செய்து இப்போது தங்களது எழுபதுகளிலும் எண்பதுகளிலுமிருக்கும் தியோடர் பாஸ்கரன் முதலிய பலருக்கு இவ்விருது வழங்கப்படவேயில்லை. 

               தாசீசியஸ் vs பாலேந்திரா

நாடகம் தமிழில் மிகவும் தவறாக விளங்கப்பட்டிருக்கும் கலை. 2006 ம் ஆண்டு விருதுபெற்ற தாசீசியஸின் நாடகம் பற்றிய புரிதலும் பங்களிப்பும் சர்ச்சைக்குரியது. தாசீசியஸ் ஐ விட பல தரமான உலக மற்றும் தமிழ் நாடகப்பிரதிகளை மேடையேற்றி நவீன நாடகம் பற்றிய புரிதல்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் பாலேந்திரா. ஆனால் பாலேந்திரா விடுதலைப்புலிகளின் நிபந்தனையற்ற ஆதரவாளர் இல்லை என்பதால் அவர் கருத்தில் கொள்ளப்படவில்லை. 

   அசோகமித்திரன் vs ராமகிருஷ்ணன்

81 வயதாகிற அசோகமித்திரனுக்கு வழங்கப்படாமல் 45 வயதே ஆகிற எஸ். ராமகிருஸ்ணனுக்கு வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கப்படும் அரசியலை புரிவதற்கு விண்வெணி விஞ்ஞானம் தெரிந்திருக்கவேண்டியதில்லை. 81 வயது அசோகமித்திரனால் முத்துலிங்கத்திற்கு ஆகப்போவது எதுவுமில்லை. 45 வயதில் (சினிமா உட்பட) தமிழ் இலக்கிய உலகில் மிகப்பலம்வாய்ந்தவராக இருக்கிற ராமகிருஸ்ணன் இப்போது மோசடியாக முத்துலிங்கத்தின் கதையைமெச்சிப்பரிந்துரை செய்வது ஆரம்பமும் அல்ல முடிவுமல்ல.

தொடர்பான கட்டுரைகள்

1. ஜெயமோகன் செவ்விந்தியனுக்கு எழுதிய 13 பக்க காதல் கடிதம்

2. இலக்கிய ரவுடி சாரு நிவேதிதா

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை