ஜெயமோகன் செவ்விந்தியனுக்கு எழுதிய 13 பக்க காதல் கடிதம்
என்னுடைய தாயும் தந்தையும் தற்கொலை செய்தவர்கள் அல்லர். என் 5 வயதில் அம்மாவும் என் 7 வயதில் அப்பாவும் நோய் காரணமாக இறந்தவர்கள். 17 வயதில் யாழ்ப்பாண போர்க்களத்திலிருந்து கொழும்புக்கு தப்பியோடியபின் நானும் சிறிதுகாலம் கொழும்பில் ஜெயமோகன் தன் சிறுவயதில் பாதிக்கப்பட்ட மனவுளைச்சல்(Depression) நோயால் பாதிக்கப்பட்டவன். இருந்தும் நான் வாழ்க்கையில் ஒருபோதுமே தற்கொலை செய்ய முயற்சித்ததில்லை.
ஜெயமோகனுடைய 22 வயதில் 1984ல் அவருடைய தந்தையும்(61 வயதில்) தாயும்(54 வயதிலும்) தற்கொலைசெய்து கொண்டவர்கள். ஜெயமோகனும் தன் இளவயதில் மன உளைச்சல்(Depression)மனநோய் காரணத்தால் தற்கொலை செய்துகொள்ள முயன்றவர். (ஆதாரம்: புதிய காலம் சில சமகால எழுத்தாளர்கள்)
எனது வரன்முறையாக எழுதப்பட்ட இச்சா விமர்சனத்தை கருத்துக்களால் வாதங்களால் வரன்முறையான எதிர்வினையாக எழுதமுடியாத ஜெயமோகன், தற்கொலை செய்த அல்லது தற்கொலை செய்ய முயற்சிக்கிற மிக அவலமான ஒரு உளத்தாக்கமுடைய மரபணுவைக்காவுகிற பின்னணிக் குடும்பத்திலிருந்து வந்த ஜெயமோகன்(இவ்வரிகளை ஜெயமோகன் மீது கொண்ட ஆழமான அனுதாபத்தோடேயே எழுதுகிறேன்) தனது இணையத்தளத்தில் எழுதிய நட்சத்திரன் செவ்விந்தியனின்(நான்) அகழ் இதழில் வெளியாகிய இச்சா விமர்சனம் பற்றிய பதிவு தனியே நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு எதிரான அவதூறு/வசை /defamation மட்டுமல்ல.
உலகம் பூராகவும் Mental illness, Developmental Disability, Intellectual Disability ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கெதிரான அவதூறு/Defamation மட்டுமல்ல, முதிய வயதில் தற்கொலை செய்து கொண்ட வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை பாகுலேயன் பிள்ளைக்கும் பரமேஸ்வரன் பிள்ளை விசாலாட்சி அம்மாவுக்கும்(ஜெயமோகனின் பெற்றோர்) தற்கொலை செய்ய முயன்ற தனக்கும் (ஜெயமோகனுக்கும்) எதிரான அவதூறு.
4 வருடங்களுக்கு முன்னரும் பிரேயலதா என்ற கணவனை இழந்த இருதடவை Heart Attack இனால் பாதிக்கப்பட்ட பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட முதிய பெண் வங்கி ஊழியரை ஜெயமோகன் அவரது வங்கி வீடியோவை தனது இணையத்தில் வெளியிட்டு மோசமான வசையை எழுதியிருந்தார். இணைப்பு
ஜெயமோகனின் முழுமையான கட்டுரைக்கான இணைப்பு தருகிறேன். கூடவே அவரது அவதூறு/வசை/defamation பதிவு பற்றி சுதாகரித்து அவர் தொடர்ச்சியாக Edit பண்ணலாம் என்பதால் கையகப்படுத்திய அவரது பதிவின் ஸ்கிறீன் சொட்டுக்களையும் இணைக்கிறேன். அவர் எழுதியதில் பின்வரும் 3 பந்திகள் முக்கியமானவை.
"நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் எழுதியது மதிப்புரை அல்ல– நேரடியான அவதூறு, மொட்டைவசை. நான் அவர் இதற்கு முன் ஈழத்தவர் பலரைப்பற்றி எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். அவருக்கு இலக்கியம், கருத்துச்செயல்பாடு பற்றி எந்த அடிப்படை அறிதலும் இல்லை. எந்தவகையிலும் இலக்கியத்துடன் தொடர்பில்லை. அவரால் இலக்கியம் பொருட்படுத்தும் ஒருவரியையேனும் எழுதுவது இயலாது.
நான் வாசித்தவரை அவர் ஓர் உளம் கலங்கிய நபர். மருத்துவ உதவி தேவையான இடத்தில் இருப்பவர். ஈழப்போர் அத்தகைய பல ஆழ்ந்த உளவியல்சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. இலக்கியம் பற்றிய எளிய புரிதல் கொண்ட எந்த இதழும் அந்த மனிதர் எழுதிய ஒரு வரியையேனும் பிரசுரிக்காது. சில நாட்களுக்கு முன் இதே உளவியல்சிக்கல்களுடன் எழுதப்பட்ட அருண் அம்பலவாணர் என்பவரின் கட்டுரையை வாசித்து எவரென விசாரித்தேன். இதே மனிதர்தான்.
[இத்தகைய கவனமே இந்த உளச்சிக்கல் கொண்டவரின் இலக்கு. ஆகவே அவர் தன் முரசை கையிலெடுக்கக்கூடும். ஆனால் நானும் இனி மேல் அந்த மனிதர் குறித்து ஒருவரியும் எழுதுவதாக இல்லை]"
- ஜெயமோகன்
ஜெயமோகனின் குறித்த பதிவில் ஆதாரங்களோ தரவுகளோ தருக்கங்களோ இல்லை. செவ்விந்தியன் எழுதிய வரன்முறையான இச்சா விமர்சனத்துக்கு எதிர் வாதங்களை அவர் குறிப்பிடவில்லை. அவ்வாதங்களுக்கு அவர் பதில் தரவுமில்லை. மொட்டையாக
"நான் வாசித்தவரை அவர் ஓர் உளம் கலங்கிய நபர். மருத்துவ உதவி தேவையான இடத்தில் இருப்பவர். ஈழப்போர் அத்தகைய பல ஆழ்ந்த உளவியல்சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. இலக்கியம் பற்றிய எளிய புரிதல் கொண்ட எந்த இதழும் அந்த மனிதர் எழுதிய ஒரு வரியையேனும் பிரசுரிக்காது."
என்று மொட்டையாக மட்டுமே குறிப்பிடுகிறார். எனது இச்சா விமர்சனத்தில் சர்ச்சைகுரியதாக தன்மீதான தனிப்பட்ட தாக்குதலாக ஷோபாசக்தியும் தனிப்பட்ட நலன்களுக்காக அவரை ஒரு குலத்தந்தந்தையாக்கி வழிபடுகிற குலமும்(Tribe) குற்றஞ்சாட்டுவது கட்டுரையில் வரும் பின்வரும் சிறிய பகுதி மட்டுந்தான்.
"யேசுராசா ஜீவநதி இதழில் பொக்ஸ், இச்சா நாவல்களில் வரும் பாலியல் வக்கிரமான சித்தரிப்புக்கள் வக்கிரமானவை என்று கூறுவது சரியானதும் கவனத்துக்குரியதும். Pornography வாசகர்களையே கடுப்பேத்தும் அளவுக்கு எழுதும் ஷோபாசக்தியின் பாலியல் விபரிப்புக்களை படித்தபோது எனக்கேற்பட்ட சந்தேகம் ஷோபா போதைவஸ்துக்களின் தாக்கத்திலிருந்தா இவற்றை எழுதுகிறார் என்பதே. (ஷோபாசக்தி போதைவஸ்துப் பயன்படுத்துபவர் என்பதை அவரே பேட்டியொன்றில் பகிரங்கமாகச் சொல்லியுள்ளார். – ‘போர் இன்னும் ஓயவில்லை, ஷோபாசக்தியுடன் உரையாடல்’, பக்கம் 42 – எனது சந்தேகம், அவற்றின் தாக்கத்திலிருந்தா எழுதுகிறார் என்பதே.)"
நான் ஆதாரங்கள் தந்திருக்கிறேன். தருக்கங்களுடனேயே விவாதித்திருக்கிறேன். ஷோபாசக்தி போதையின் தாக்கத்திலிருந்து இதனை எழுதினார் என்று முற்றாகச் சொல்லவில்லை. கேள்வியாக மட்டுமே கேட்கிறேன். அகழ் இதழ் வெளியிடப்படும் ஜரோப்பாவின் எந்த நீதி மன்றத்திலும் அவை கேரள, தமிழக ஜெயமோகனின் கட்டைப்பஞ்சாயத்துக்கள் அல்ல என்பதால் இதற்கெதிராக மான நஷ்ட வழக்கு போடமுடியாது. There is no case for defamation. எனது இச்சா விமர்சனத்தின் நியாயத்தைப் பற்றி Suresh Venkatadri என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார்.
சரி இப்பகுதிகளை அவதூறு என்று வைத்துக்கொண்டாலும் அப்பகுதியை மட்டும் நீக்கி வெளியிடுமாறு கேட்பதுதானே அறம்? ஆனால் ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் ராஜன் குறை கிருஷ்ணனும் லக்ஷ்மி சரவணகுமாரும் மற்றபிற ஷோபாசக்தியின் லாபியும் Public Relations ஏஜண்டுகளும் கேட்பது கட்டுரையை முற்றாக விலக்குமாறு. இதுதான் தற்கால தமிழிலக்கிய சூழலின் பாசிஸம்.
இங்குதான் நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழிலக்கிய சூழலை ஷோபாசக்தி, ஜெயமோகன், சாரு நிவேதிதா முதலியவர்கள் ஹொலிவூட் ஆகவும், கோடம்பாக்கம் ஆகவும் வியாபார Industry/தொழிற்சாலையாக மாற்ற முயன்று வருகிறார்கள். உங்களுக்கு தெரியும் ஹோலிவூட்டில் யூதர்களுக்கெதிரான முறையான விமர்சனமோ அவதூறோ வைக்கமுடியாது. யூதர்களை அவதூறாகச் சொன்னதற்காக மெல் கிப்சன் கொடுத்த விலை பெரிது. அதுபோலவே கோடம்பாக்கத்தில்/திராவிட ஆட்சி தமிழகத்தில் அதன் அச்சாணி சாதிகளான தேவர்/முக்குலத்தோர் ஆதிக்கமே. தேவர் வைரமுத்துவை உலகளாவிய புரட்சி Me too இயக்கத்தாலும் ஒரு மயிரும் புடுங்கமுடியாது. எந்த சுயாதீனமான விமர்சனக்குரலுக்கும் கோடம்பாக்கத்தில் இடமில்லை..
2010ல் உயிர்மை இதழில் ஷாஜி என்கிறவர் இளையராஜாவை விமர்சித்தார். எழுதியவர் மீது பல அழுத்தங்கள் வந்து அவர் குரலை ஒடுக்கின. ஜெயமோகனும் சக மலையாள நண்பரான சாஜியின் கட்டுரை அவதூறு என்று சமாளித்து சடைந்தார். ஷாஜியும் தான் கோடம்பாக்கத்திலிருக்க வேண்டுமென்றால் சமரசம் செய்வதைத்தவிர வேறுவழியில்லை என்று தனது கட்டுரையை தன் இணயத்திலிருந்தும் விலக்கினார்.(ஆனால் இன்றைய இணைய உலகத்தில் நிலமை வேறு. அரவிந்தன் கண்ணையன் என்கிற அமெரிக்க தமிழர் இளையராஜாவின் இசையை தரவு தாட்யமின்றி நியாயமாக விமர்சித்து அம்பலப்படுத்திவிட்டார்) கோடம்பாக்கத்தில் தமிழர்களை விட மலையாளிகளுக்கு(நடிகைகள் தவிர) Insecurity அதிகம். கோடம்பாக்கத்திலிருக்கிற மலையாளிகள் தமது இருப்பை கோடம்பாக்கத்தில் தக்கவைக்க Yan Martel சொன்ன omega சிங்கங்களைப்போல கொஞ்சம் அதிகமாவே சர்க்கஸில் ஆடுவார்கள்.
உண்மையில் ந.செவ்விந்தியனுக்குக் கெதிரான ஜெயமோகனின் முன் விரோதம் 22 வருட பழமையானது.
1998ல் காலச்சுவட்டில் நான் பொ. கருணாகரமூர்த்தியின் "ஒரு அகதி உருவாகும் நேரம்" என்ற குறுநாவல் தொகுதிக்கு ஒரு மதிப்புரை எழுதினேன். மிகச்சுமாரான குறுநாவல் தொகுதி அது. அதற்கு ஆகோ, ஒகோ என்று மகிமைப்படுத்தி ஒரு முன்னுரை எழுதினார் ஜெயமோகன். அதற்கு என்னோடு பகிரங்க விவாதந்திற்கு தயாரில்லாத ஜெயமோகன் எனக்கு ஆஸ்திரேலியாவுக்கு 13 பக்க கையால் எழுதப்பட்ட கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் பக்கங்கள் இணைக்கப்படுகின்றன.
ஜெயமோகன் கடிதத்தின் முதல் பக்கம்
நான் ஜெயமோகனின் கடிதத்துக்கு பதில் எழுதவில்லை. ஒரு சுயாதீனமான விமர்சகனான எனக்கு அக்கடிதம் ஒரு லஞ்சம் என்பது புரியாதா? என்னோடு பகிரங்கமாக விவாதிக்கவேண்டிய ஜெயமோகன் என்னை வசியப்படுத்த - Neutralise பண்ண முயல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஜெயமோகனின் கடிதத்தின் சுவாரசியமான பகுதிகள்.
பத்மநாபபுரம் 20/8/98 அன்புக்குரிய நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்களுக்கு. தங்கள் பெயரை காலச்சுவடு மூலம் அறிந்து கொண்டேன். பிறகு உங்கள் கவிதை தொகுப்பு என் கவனத்திற்கு வந்தது. உங்கள் கருத்துகளை தொடர்ந்து இதழ்களில் கண்டு வருகிறேன். தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீண்டநாளாக எண்ணியும் வருகிறேன்.....
இக்கடிதத்தை நான் எழுதக் காரணம் நீங்கள் உங்கள் கவிதை பற்றிய விமர்சனங்களை எதிர் கொண்டதில் உள்ள நேர்மையான துணிச்சல். எனக்கு எப்போதும் பிடித்த குணம் அது. அது என் குணம் என்பதும் எனது கருத்து.....
நீண்ட கடிதம் கண்டு நீங்கள் வியப்புறுவது எனக்கு தெரிகிறது. இவ்வாறு எழுதுவது இங்கு வழக்கம். என்னுடைய விருப்பமான விவாத வடிவம் இது......
உங்கள் பெற்றோர் எங்கு உள்ளனர்? என்னுடைய சொந்த ஊர் அருகே இப்போது இருக்கிறேன். கன்யாகுமரி மாவட்டம். இப்போது இருப்பது பத்மநாபபுரம். 16ம் நூற்றாண்டு கோட்டை ஒன்றின் உள்ளே உள்ள அழகிய ஊர். மையத்தில் பழைய அரண்மனை. பெரிய வீதிகள், கோயில்கள், விசாலமான பழைய வீடுகள். குடியிருப்பது அதுபோன்ற பெரிய வீடுதான். அருகே தந்தி அலுவலகத்தில் குமாஸ்தா வேலை. பெரும்பாலும் வேலை என எதுவும் இல்லை. தினம் 7 மணிநேரம் எழுத்து வாசிப்பு. வாசிப்பு ஒரு வெறிபோல. மனைவி பெயர் அருண்மொழி நங்கை. அவள் ஊர் தஞ்சை மாவட்டம். காதலித்து மணந்தோம். இரு குழந்தைகள். அஜிதனுக்கு 4 வயது. சைதன்யாவிற்கு 1 1/2 வயது. ஒன்றரை வயது குழந்தை வீட்டை முழுமையாக தன் பிடியில் வைத்திருக்கிறது. வாழ்வின் மிக அபூர்வமான சந்தர்ப்பங்களில் சில இப்போது அமைகின்றன......
-ஜெயமோகனின் கடித பகுதிகள்
என்னுடைய முதல் கவிதைத்தொகுதி வெளிவரக்காரணமான கவிஞர் சேரன் தமிழ் இனி2000 மாநாட்டுக்காக ஆஸ்திரேலிய பிரதிநிதியாக என்னை சென்னை வர அழைத்தார். என்னுடைய முதல் சிட்னி பல்கலைக்கழக பட்டப்படிப்பையே இடைநிறுத்தி மாநாட்டுக்காக ஆஸ்திரேலியாவில் பணம் சேர்த்து(இலங்கையிலிருந்து வரும் பேராளர்களுக்கான விமானச் செலவின் பகுதிக்காக) எனது சொந்த செலவில் சென்னை போனேன். அப்போது காலச்சுவடு கண்ணனுக்கும் ஜெயமோகனுக்கும் "தெறித்துவிட்டது". ஜெயமோகன் சென்னை மாநாட்டுக்கு வந்து பங்களிக்கவில்லை.
அதுவொரு கனாக்காலம். நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு கனடாக் குட்டி தான் என் முதற்காதலி. நெடுந்தூரக் காதல். அவளும் மாநாட்டுக்கு வந்தாள். பூர்வீகச் "சிங்காரச்' சென்னையில் சந்தித்தோம். செப்ரெம்பர் மாதம். தொல்காப்பிய கார் காலம். ஆனால் சென்னையில் மழை பெய்யவில்லை. 3 நாள் மாநாடு முடிய குளிர்தேடி கன்யாகுமரி போனோம். அந்த ரயில் பயணத்தில் மழை பெய்தது.
நாகர்கோயில் போய் சுந்தர ராமசாமி லீடு போனோம். ராமசாமி. கமலா அம்மா கண்ணன், மைதிலி, குழந்தைகளை கண்டோம். இரவு சுவையான தோசை பரிமாறினார்கள். ராமசாமி, ஜெயமோகன் அருகில்தான் ஒரு புது வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்/ கட்டிவிட்டார் என்றேதோ சொன்னார். நாம் சந்திக்கவில்லை. பிறகு ஈழப்போரின் இறுதிக்கட்ட 2009ல் ஜெயமோகன் ஆஸ்திரேலியா வந்தார். நான் கூட்டத்திற்கு போகவில்லை. என்னுடைய நண்பர்கள் போனார்கள். ஜெயமோகனோடு படமெடுத்தார்கள்.
பின்னர் சென்னை திரும்பி எஸ்.வி. ராஜதுரையை ஓரிரவு மதுச்சாலையொன்றில் சந்தித்தேன்.. அவருடைய இருத்தலியல்ல்வாதம் மற்றும் சோவியத் புரட்சி: இலக்கிய சாட்சியம் முதலிய நூல்களை சிறுவனாக இருந்தபோதே புரிந்தும் புரியாமலும் படித்திருந்தேன். சென்னையில் லயலா காலேச்சில் படித்துக்கொண்டிருந்த என் நண்பன் சிறினிராஜ், அவன் தந்தை குலசிங்கம் அங்கிள், ஈழத்தில் என் அயல் வீட்டுக்காரரான பேராசிரியர் சிவத்தம்பி, அவரின் இளம் நண்பரும் கொழும்பில் எனக்கு அறிமுகமானவருமான மதுசூதனன் அண்ணா ஆகியோரை சந்தித்தேன். எனது பதிப்பாசிரியர் திருநாவுக்கரசு சாருவின் முன்னாள் மனைவி அம்ருந்தாவை அறிமுகப்படுத்தினார். நேரம் இன்மையால் அம்ருந்தாவை சந்திக்க ஒப்புக்கொண்டது சாத்தியமாகவில்லை.
ஜெயமோகனை நான் இன்றுவரையும் நேரே கண்டதில்லை. சாரு நிவேதிதாவைக் கண்டிருக்கிறேன். முன்னதாக தமிழினி மாநாட்டில் ஒருநாள் காலச்சுவடு கண்ணன்
"என்ன நீங்கள் சாருவை சந்திக்க மறுத்தீர்களாம்."
என்று கேட்டார். சாரு என்னை சந்திக்க வந்ததாக எனக்கு தெரியாது. அவரது கடிதத்துக்கு பதில் கடிதம் போடாத கோபத்தில் மதுவருந்தி செவ்விந்தியனை பைற் ஆக்கி ஒரு நாடகம் போட்டிருக்கிறார் சாரு. மாநாட்டுக்கு வெளியே ஒரு இலக்கிய கும்பமேளா சூழலிருந்தது. கண்ணன் காட்டிய இடத்தில் சாரு மிக்க மதுவெறியிலிருந்து
"உதைப்பேண்டா அவனுக்கு"
என்று திட்டிக்கொண்டிருந்தார். சாருவை நான் சந்திக்கமுடியாத துன்பியல் வரலாற்று சூழலது.
சாருவை நான் சந்திக்காத போதும் அவர் நண்பரான கவிஞர் யுவன் சந்திரசேகரை சந்தித்தேன். வங்கி ஊழியரான அவரை அவர் அலுவலகத்திலேயே சந்தித்தேன். (என் ஞாபக சக்தி என்னையே பிமிக்கவைப்பது) தன் நூலொன்றை பரிசாக தந்தார்.
அதே தமிழினி மாநாட்டில்தான் நான் எஸ். ராமகிருஷ்ணனையும் சந்தித்தேன். அவர் மாநாட்டு உத்தியோகத்தர் குழுவிலிருந்தார். அப்போது அண்ணன் ராமகிருஷ்ணன் ஜெயமோகன் அளவுக்கு பிரபல்யமாக இருக்கவில்லை. மிகப் பவ்வியமான அந்த Disarming புன்னகை உதிர்த்தார். இன்று மிகப்பிரயல்யமான தமிழ் எழுத்தாளராக வந்தபின்னும் அண்ணனின் அந்த புன்னகை சிறிதும் மாறவில்லை. அது அத்துணை உண்மையானது. அவரிடம் ஜெயமோகன், சாரு போன்றவர்களிடமுள்ள Narcissism இல்லை. என் கட்டுரையொன்றில் ராமகிருஷ்ணனையும் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இருந்தும் இக்கணம்வரை ராமகிருஷ்ணன் என் இச்சா விமர்சனத்துக்கு ஒரு கண்டனமும் வெளியிட்டு என் விமர்சனத்துக்கு Publicity தரவில்லை என்ற வருத்தம்😁 எனக்கிருக்கிறது. அண்ணன்தான் அறவான் ஆச்சே.
ஆசான் மார்க்ஸ் அந்தோனிசாமியிடம் எனக்கு மதிப்பு உண்டு. அப்போதைய மாநாட்டை ஆசான் எதிர்த்தார். எனக்கும் புரியாத வயசு. அவரை சந்திக்கவில்லை. இக்கணம்வரை நான் எழுத்தாளர்களை நெருங்கிய நண்பர்களாக வைத்திருக்க தயங்குகிறேன். ஒரு எழுத்தாளராக/ இலக்கிய விமர்சகராக இயங்குகிற என் கடமையை இவர்கள் பாதித்துவிடக்கூடாது என்பதுதான் என் ஒரே கரிசனை. 2013ல் மலைகள் இணைய இதழில் முத்துலிங்கம், ஜெயமோகன் முதலியோரின் இலக்கிய ஊழல்கள் பற்றிதொரு விரிவான விமர்சனம் எழுதினேன்.என்னுடைய விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன் இப்போது வஞ்சம் தீர்க்கிறார். He is settling an old score.
1999ம் ஆண்டு பாரிஸிலிருந்து வந்துகொண்டிருந்த அம்மா என்ற சிறுகதைகளுக்கான இதழின் ஆசிரியர் மனோ கேட்டற்கிணங்க ஒரு ஆஸ்திரேலிய சிறப்பிதழை தொகுத்துக்கொடுத்தேன். அதே ஆண்டு சாரு நிவேதிதா எனக்கு அவ்விழைப் பாராட்டி 2 பக்க கடிதம் எழுதினார். என்னை அதீதமாகப் பாராட்டுகிற தொனி அதில் இருந்தது. சாருவும் ஜெயமோகன்போல அக்காலத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் புகழ்ச்சி "விமர்சனங்கள்" முன்னுரைகள் எழுதி அவர்களின் உபயத்தில் ஐரோப்பிய கனேடிய அமெரிக்க பயணங்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் பதில் எழுதவில்லை. அதே வஞ்சம் தீர்ப்புதான் சாரு இப்போது எனது இச்சா விமர்சனத்தை பின்வருமாறு அவதூறு செய்வது
"ஷோபா சக்தியின் இச்சா நாவலுக்கு கடைந்தெடுத்த கயவாளித்தனமான ஒரு மதிப்புரை பார்த்தேன். ஒரு இலக்கியப் பத்திரிகையில். இலக்கியம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு பல சமூக விரோதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புரை எழுதியவரை விட அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் சமூகத்துக்கு அபாயகரமானவர்கள் என்று தோன்றுகிறது. சமூகம் ரேப்பிஸ்டுகளால் நிரம்பியிருப்பது போல் இலக்கிய உலகம் ரவுடிகளாலும் லும்பன்களாலும் சமூக விரோதிகளாலும் நிரம்பியிருக்கிறது."
என்னுடைய சுயாதீனமான இலக்கியக்குரலை அடக்குவதுதான் ஜெயமோகனதும் சாரு நிவேதிதாவினதும் நோக்கம். கருத்துச் சுதந்திரத்துக்கும் மாற்றுக்கருத்துக்களுக்கும் எதிராக ஜெயமோகன் நடத்துவது ஒரு பாசிஸப்போர். ஸ்ராலின் கால சோவியத் ஒன்றியத்தில் இலக்கிய தணிக்கை அதிகாரிகளாக இருக்க தகுதியான கலாச்சார கமிசார்கள் ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் ஷோபாசக்தியும்
தனது அவதூறில் ஜெயமோகன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இலக்கியம் பற்றிய எளிய புரிதல் கொண்ட எந்த இதழும் அந்த மனிதர்(நட்சத்திரன் செவ்விந்தியன்) எழுதிய ஒரு வரியையேனும் பிரசுரிக்காது"
ஜெயமோகனைப்போல ரத்னபாலா முதலிய குழந்தைகளின் இதழ்களில் எழுதி என் படைப்பிலக்கியம் ஆரம்பிக்கவில்லை. குழந்தையாக(Child) இருந்தபோதே என் 16 வயதில் என் முதல் இலக்கியப்பிரவேசம் நிகழ்ந்தது. முதல் சிறுகதை ஈழத்தின் தரமான இலக்கிய சஞ்சிகையான "அலை" ஆசிரியர் திரு யேசுராசா, திசை என்ற வார இதழின் இலக்கியத்திற்கு டொறுப்பான ஆசிரியராக இருந்தபோது திசையில் பிரசுரமானது.
பின் 2ம் ஈழப்போர் வெடித்தது. 17 வயதில் யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு தப்பியோடினேன். அக்கால நடைமுறைப்படி புலிகள் என்னை யாழைவிட்டு வெளியேற அனுமதிக்காததால் களவாக வன்னிக்காடுகள் ஊடாக கொழும்புக்கு தப்பினேன். என்னுடைய கவிதைகளையும் எடுத்துச்சென்றேன். 18 வயதில் என்னுடைய முதல் கவிதை கொழும்பில் கவிஞர் சேரன் ஆசிரியராக இருந்த சரிநிகர் பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து பல கவிதைகள் சரிநிகரில் வெளியானது. எனது பல இலக்கிய விமர்சனங்களும் சரிநிகரில் வெளியானது.
என்னுடைய முதல் கவிதை தொகுதியை கனடாவில் வெளியிட்டவர் கவிஞர் சேரன். அதன் அட்டைப்படத்தையும் ஓவியருமான சேரன்தான் வடிவமைத்திருந்தார். அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதைத்தொகுதியிலுள்ள கவிதைகள் சிலவற்றை காலச்சுவடு வெளியிட்டது. பின் காலச்சுவட்டில் என் பல இலக்கிய விமர்சனங்களும் கவிதைகளும் வெளியாகின.
Hand designed by கவிஞர் சேரன்
My ex mentor and Literary Agent
25 வயதில் என் இரண்டாவது கவிதைத்தொகுதி தமிழகத்தில்(தாமரைச் செல்வி பதிப்பகம்) வெளிவரக் காரணமானவர் யமுனா ராஜேந்திரன். அவரே முன்னுரை எழுதினார். வெங்கட் சாமிநாதன், கவிஞர் பாலை நிலவன், கவிஞர் அருந்ததி முதலியோர் என் கவிதைத்தொகுதியை விதந்துரைத்து மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்கள். கவிஞர் சங்கர ராம சுப்பிரமணியன் கடந்தவருடம் தன்னைப் பாதித்த கவிஞர்களுள் நான் ஒருவர் என்று அம்ருதா இதழில் எழுதினார். இணைப்பு
Post War யாழ்ப்பாணத்திலிருந்து வந்த முதல் இலக்கிய இயக்கம் புதிய சொல். அதன் அச்சாணி கவிஞர் கிரிசாந். அவரை மிகப்பாதித்த கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன். கிரிசாந் கட்டுரை புதிய சொல் இயக்கத்தின் உறுப்பினர்தான் அனோஜன் பாலகிருஷ்ணன். அந்த இயக்கத்தின் மிகப்படைப்பாற்றல் உள்ளவரும் most prolific எழுத்தாளரும், the most articulate ஆனவரும், படைப்பிலக்கியம் மட்டுமன்றி விமர்சனம் எழுதக்கூடிய ஆற்றலுள்ளவரும் சித்தாந்தங்களுக்குள் சிறைப்படாது மாற்றுக்கருத்துக்களை கிரகித்து தன்னை வளர்த்துக்கொள்ள தயாராக இருப்பவரும் அனோஜன் தான். அவர்தான் என்னுடைய விமர்சனத்தை அகழில் பிரசுரிக்க சக ஆசிரியரோடு சேர்ந்து தேர்ந்தெடுத்தார்.
புதிய சொல்: Post War Jaffna இயக்கம்
என்னைவிட வயதான ஷோபாசக்தி அண்ணாவின் படைப்பிலக்கிய புத்தகம் வெளிவரமுன் எனது 2 கவிதைத்தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. கோமல் சுவாமிநாதன் ஆசியராக இருந்த சுபமங்களா ஈழத்து நாவல்களுக்காக ஒரு நாவல்/குறுநாவல்போட்டி நடத்தியது. என்னுடைய 20 வயதில் நான் எழுதிவைத்திருந்த "சயனேட் காலம்" என்ற குறுநாவலை போட்டிக்கு அனுப்பினேன். கவிஞரும் பேராசிரியருமான சி.சிவசேகரம் அதன் தேர்வின் நடுவர்களாக இருந்து முதல் 3 பரிசுகளுக்குள் என்றாக இது தேர்வாகக்கூடியது என்று பரிந்துரைத்தார். இந்த தகவலை அவர் தனது நண்பர்களான ந.ரவீந்திரன் மற்றும் அவர் மனைவியான பவி அக்கா ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார். குறித்த நாவல் விடுதலைப்புலிகளின் அக்கால ஆட்சியை விமர்சித்த அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தப்பிவந்த கவிஞன்/எழுத்தாளர்/திரைப்பட இயக்குனராக வரவிரரும்பிய ஒரு சிறுவன்/இளைஞனின் கதை. புலிகளின் ஆட்சியை விமர்சித்து வந்த படைப்பு என்பதால் தமிழகத்தில் கோமல் சுவாமிநாதனுக்கு எனது குறுநாவலை தேர்ந்தெடுப்பதில் நெருக்கடி இருந்ததால் அது தெரிவாகவில்லை. கவிஞர் சேரனிடம் அதன் பிரதியை பிரசுரித்து தருமாறு கொடுத்திருந்தேன். எடுத்துச்சென்றார் ஆனால் அவநால் பிரசுரிக்க முடியவில்லை. சில வருடங்களுக்குப்பின் என்னிடமிருந்த பிரதியை படித்தபோது எனக்கு திருப்தியாக இருக்கவில்லை. ஒரு எழுத்தாளர் தன் முப்பதுகளின் இறுதியிலும் நாற்பதுகளின் ஆரம்பத்திலும் தான் தன் ஒரு நாவலை சிறப்பாக எழுதக்கூடிய வாழ்வனுபவம்/படைப்பாற்றல் பெற்றிருப்பார் என்பது ஒரு இலக்கிய உண்மை. "சயனேட் காலம்" திரும்பவும் திருத்தி எழுதப்படவேண்டும் என்று கிடப்பில் போட்டுவிட்டேன். இன்றுவரை அது சாத்தியமாகவில்லை.
2011 ல் எனது கமக்காரன் சிறுகதை தீராதியில் பிரசுரமாகி பலத்த வரவேற்பை பெற்றது. 2013ல் கிட்டுமீதான கொலைமுயற்சியைப் பற்றி நான் எழுதிய கர்னலின் காமம் என்ற குறுங்குறுநாவல்(novellete) லண்டன் தேசம் இணைய இதழில் பிரசுரமானது. முதல் 3 மாதங்களுக்குள் அது பத்தாயிரம் பேரால் படிக்கப்பட்டு பலத்த வரவேற்பு பெற்றது. ஒரு புத்தகமாக தமிழகத்தில் பிரசுரிக்கப்படாததால் இது தமிழகத்தை சென்று சேரவில்லை. கவனம் பெறவில்லை.
ஒரு இலக்கியவிமர்சகராக, அரசியல் சமூக விமர்சகராக எனது கடமையை(Duty of care) தவறாது நான் உண்மைகளை எழுதியதற்காக அறமற்ற ஜெயமோகன், ஷோபாசக்தி, கவிஞர் சேரன் முதலியவர்கள் என்னை தனிமைப்படுத்தி என் எழுத்து வாழ்விலிருந்து ஒதுக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ பலத்த பகீரதப்பிரியத்தனம் செய்து வருகிறார்கள். கவிஞர் சேரனின் சரிநிகரில் தான் என் முதல் கவிதையும் பல கவிதைகளும் பிரசுரமாகின. என்னுடைய முதல் கவிதைத்தொகுதி வெளிவரக்காரணமாக இருந்தவரே கவிஞர் சேரன்தான். என்னுடைய 17 வயதில் நான் விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்பின் உறுப்பினராக மிககுறுகியகாலம் இருந்திருக்கிறேன். கொழும்புக்கு வந்தபின்னர் சரிநிகர், சேரன் என்பவற்றால் என்பவர்களால் தான் என் அரசியல் புரிதல் விசாலமானது.. அப்பேற்பட்ட சேரனே 2000த்தின் பின் தன் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளின் அரசியலை ஏற்று புலிகளின் பேச்சாளராகவும் லாபியிஸ்டாகவும் மாறினார். அவரை விமர்சிக்கவேண்டி வந்தது மிகத்துர்ப்பாக்கியமான நிகழ்வு. ஆனால் ஒரு சுயாதீனமான அரசியல்/இலக்கிய விமர்சகராக அறம்மிக்க கலைஞனாக நான் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென்றால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை.
Not all the great artists are great human beings என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. கலைஞர்கள் பலர் Narcissist complex (தன்மோகிகள்) உடைய Sociopath என்கிற உளக்குறைபாடுடையவர்கள். Richard Wagner இலிருந்து சமகால Roman Polanski வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சுந்தர ராமசாமி எழுதிய பிரமிள் நினைவோடை என்ற புத்தகம் பிரமிளின் Narcissistic உளக்குறைபபாடு உடையவர் என்பதற்கான ஆதார தகவல்களை தருகிறது. ஜெயமோகன், கவிஞர் சேரன், ஷோபாசக்தி முதலியவர்களும் Narcissistic complex உடையவர்கள் என்பதற்கான சுட்டிகள் அவர்கள் வாழ்வு நடவடிக்கைகளிலிருந்து புலப்படும். ஜெயமோகன் ஒரு பொம்பிளைக்கள்ளர் அல்லர். ஆனால் அவர் தன்மோகம் கொண்டவர் என்பதற்கான ஆதாரங்கள் பலரால் எழுத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு போலி நாவலான அவரது விஷ்ணுபுரத்தை Promote பண்ண ஜெயமோகனே தன்னை ஒரு Public Relations Agent நியமித்து அது வெளிவரமுதலே அதனைப் பரிந்துரைக்கவேண்டும் என்று சுந்தர ராமாசாமியிடமும் RSS மாநில அமைப்பாளரிடமும் கேட்டுக்கொண்டது ஆகிய விபரங்கள் இணையத்தில் சமூக வவைத்தளக்களில் காலச்சுவடு கண்ணன், அரவிந்தன் போன்றவர்களால் பகிரங்கமாக பதியப்பட்டுள்ளன. ஒரு மொக்கை நாவல்/போலி நாவல் ஆன விஷ்ணுபுரத்தை மகத்தான நாவலாக ஜெயமோகன் முன்னிறுத்தி வருவதும் அதன்பெயரால் ஒரு விருது மையத்தை உருவாக்கியதுமே போதும் ஜெயமோகன் Narcissistic personality Disorder இனால் பாதிக்கப்பட்டவர் என்பதை நிறுவ.
ஆதாரம்
The most recent edition of the Diagnostic and Statistical Manual of Mental Disorders lists nine criteria for Narcissistic Personality Disorder, but it specifies that someone only needs to meet five of them to clinically qualify as a narcissist.
Nine official criteria for NPD
1, grandiose sense of self-importance
2. preoccupation with fantasies of unlimited success, power, brilliance, beauty, or ideal love
3. belief they’re special and unique and can only be understood by, or should associate with, other special or high-status people or institutions
4. need for excessive admiration
5. sense of entitlement
6.interpersonally exploitative behavior
7. lack of empathy 8. envy of others or a belief that others are envious of them
9.demonstration of arrogant and haughty behaviors or attitudes
இதே போலவே ஜெயமோகனைப் போல படைப்பாற்றல் உள்ளவர் என்பதை தனது கொரில்லா நாவல் முலமும் பல நல்ல சிறுகதைகள் மூலமும் நிரூபித்த ஷோபாசக்தியும் தனது போருக்குப்பின்னான மொக்கை நாவல்களை முன்னிறுத்த குருட்டு வெறியோடு செயல்படுவதை அவரது Narcissistic Personality disorder இன் விளைவாகக்கொள்ளலாம்.
நான் பல இலக்கிய திருட்டுக்கள், மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளேன். வ.ஜ.ச ஜெயபாலனின் செக்குமாடு என்ற சிறுகதையை நோர்வேயிலிருந்து சிட்னிக்கு வந்த கட்டடக்கலைஞரான பிரிதிவிராஜ் என்பவர் சிட்னியிலிருந்து வரும் கலப்பை என்ற இதழில் "பலி ஆடு" என்று தலைப்பை மட்டும் மாற்றிவிட்டு தனது சிறுகதையாக பிரசுரித்தார். ஆசிரியர் குழு அதனை அறிந்து அடுத்த இதழிலேயே உண்மையை ஒப்புக்கொண்டது. அதனையும் சிட்னி கட்டடக்கலைஞரான சந்திரகாசனின் சிறுகதை ஒன்றை மெருகூட்டிவிட்டு அதனை தனது சிறுகதையாக தனது சிறுகதைத் தொகுதியொன்றில் பிரசுரித்த பெரும் எழுத்தாளரான எஸ். பொன்னுத்துரையையும்( இந்த பெரும் எழுத்தாளருக்கே வாழ்நாள் பூராகவும் இலக்கிய திருட்டு செய்த வரலாறு உண்டு) அம்மா ஆஸ்திரேலிய சிறப்பிதழில் எழுதினேன்.
சிட்னியிலிருக்கும் ஆசி கந்தராஜா இலக்கிய திறனற்ற எழுத்தாளர். அவரது பாவனை பேசலன்றி என்ற சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய பரிசு கிடைத்தது. நூலை நான் ஆராய்ந்தால் அதில் வந்த 2 சிறப்பான கதைகள் எஸ். பொன்னுத்துரையால் எழுதப்பட்டது தெரிந்தது. அதனை நான் அம்பலப்படுத்தினேன். இலங்கையில் இருந்து அமரர் செ.யோகநாதன் அவர்களும் இச்சிறுகதைத்தொகுதிக்கு சாகித்திய பரிசு கொடுத்ததை கேள்விக்குட்படுத்தினார். இலக்கிய திருட்டுக்கு அப்பால் ஆசி. கந்தராஜா ஒரு ஆஸ்திரேலிய குடிமகனா? இலங்கை குடிமகனா? இரட்டை குடியுரிமை உடையவரா என்ற சட்ட சிக்கலும் இருந்தது.
ஆசி கந்தராஜா பல தமிழக இலக்கிய ஜாம்பவான்களை தன் பணபலத்தால் கட்டிப்போட்டவர். பிரபஞ்சன், ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், காலச்சுவடு கண்ணன் முதலியோர் அவர் நண்பர்கள். ஜெயமோகன் ஆஸ்திரேலியா வந்தபோது சிட்னியில் அவரது விருந்தோம்பியாக இருந்தவர் ஆசி.கந்தராஜா. சிட்னியில் ஒரு செல்வந்த ஊரில் ஒரு மான்சன் வீடுகொண்ட கந்தராஜா அவரை நன்கு விருந்தோம்பினார். காலச்சுவடு கண்ணன் ஆஸ்திரேலியா வந்தபோதும் சிட்னி விருந்தோம்பி ஆசி கந்தராஜாதான். ஆக ஆசி கந்தராஜாவின் செஞ்சோற்றுக் கடனுக்காகவும் தான் ஜெயமோகனுக்கு என்னை இலக்கிய உலகிலிருந்து வெளியேற்றவேண்டிய தேவை இருக்கிறது.
புலிகள் அழிந்தபின் 2011ல் Tamil Tigress என்கிற Fake memoir வெளிவந்தது. சுபோதினி ஆனந்தராஜா என்கிறவர் நிறோமி டி சொய்சா என்கிற புனைபெயரில் Ghost witers துணையோடு எழுதப்பட்டது. அந்த மோசடியை நான் ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதி அம்பலப்படுத்தினேன். எனது கட்டுரை போலி வாழ்க்கை வரலாறு அம்பலமாதால் அமெரிக்க, ஐக்கிய ராச்சிய பதிப்பகங்கள் அந்நூலை பிரசுரிப்பதை கைவிட்டன.
தமிழ்தான் என் தாய்மொழி என்றாலும் நான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன். இப்போது ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் மட்டுந்தான் எழுதவேண்டும் என்கிற நெருக்கடி எனக்கில்லை என்பதை என்னை தமிழிலக்கிய உலகிலிருந்து வெளியேற்ற முயன்று தோற்ற ஜெயமோகன், சேரன், ஷோபாசக்தி முதலியவர்கள் உணரவேண்டும்.
தொடர்பான கட்டுரைகள்
2. இலக்கிய ரவுடி சாரு நிவேதிதா
3. ஷோபாசக்தியின் BOX நாவல் ஒரு மலின இலக்கியம்
4. ஒரு வான் கடிதம்: சனாதனன்(1997)
Comments
Post a Comment