ஒரு சைக்கோவின் வாக்குமுலம்
"எனது முன்னாள் காதலியைப் பற்றிய நினைவுகள் மேலோங்கும் போது நான் மிகுந்த வெறுப்புக்குள்ளாகிறேன். யாரையாவது தாக்கவேண்டும என்று வெறி என்னுள் எழுகின்றது." -ரஞ்சகுமார் By அ.யேசுராசா அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். வந்து கொண்டிருந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி கதிரைகள் போதாமற் போகவே, சில பல்கலைக்கழக இளைஞர்கள் (கூட்ட அமைப்பாளர்களுடன் சம்பந்தப்படாதவர்கள்) தாமாகவே எழும்பிச் சென்று, அடுத்த அறைகளிலிருந்து கதிரைகளை அடிக்கடி எடுத்து வந்து வசதிசெய்து கொடுத்த செயல் மனதில் பதிந்தது. மற்றப்படிக்கு, பிரமுகர்களுக்கும் காசுள்ள முதலாளிகளுக்கும் கெளரவம் கொடுத்து (என்று மறையும் இந்நிலை?) நடத்தப்பட்ட வழமையான கூட்டம். ஆய்வுரைகள் முடிந்தபின் நூலாசிரியர் தான் பேசவேண்டியதை நீண்ட கட்டுரையாக எழுதி வாசித்தார். பல இடங்களில் கருத்துக்கள் நெருடலை ஏற்படுத்தின; ஆயினும் அவற்றையெல்லாம் பற்றிக் கருத்துரைத்து உங்களைச் சோதிக்கும் எண்ணம், இல்லை. ஓரிடத்தில் அவர் சொன்னார். "எனது முன்னைய நாள் காதலியை...