புட்டு பிலிப்பைன்ஸிலிருந்து வந்த வரலாறு

நட்சத்திரன் செவ்விந்தியன்

    Pirurutong என்கிற பிலிப்பைன்சில்                                புட்டு செய்யும்  அருசி

புட்டு அல்லது பிட்டுவினது நமக்கு தெரிந்த வரலாறு கேரளாவிலிருந்து வந்ததாக நாம் நம்புகிறோம். புட்டு ஒரு ஆதி தமிழ் உணவல்ல.  சங்க இலக்கியத்தில் புட்டு பற்றி எந்த குறிப்புமில்லை. எட்டாம் நூற்றாண்டில் உருவான மலையாள மொழியிலும் புட்டு பற்றி எந்த குறிப்புமில்லை. 

15 ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில்தான் புட்டு பற்றிய முதல் குறிப்பு வருகிறது. பிறகு சைவரான பரஞ்சோதி முனிவர் 17ம் நூற்றாண்டில் மதுரையில் தங்கியிருந்து எழுதிய திருவிளையாடல் புராணத்தில்தான் பிட்டுக்கு மண்சுமந்த பெருமானின் செம்மனச்செல்வி கதை வருகிறது. 


பரஞ்சோதி முனிவர் ஊர் வேதாரண்யம். போர்த்துக்கேயர் நாகபட்டினத்துறைமுகத்தை வைத்திருந்த காலத்தில்தான் அங்கிருந்து மதுரைக்கு வந்தபோதுதான் புட்டைபற்றி பாடினார். ஆக புட்டையும் இந்தியாவுக்கு மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிளங்கு, ஆனைக்கொய்யா(அவக்கடோ), முருங்கக்காய் முதலிய திரவியங்களை கொணர்ந்த போர்த்துக்கேயர்தான் கொணர்ந்தார்களா எனத்தேடினேன். உண்மை. போர்த்துக்கேயர்தான் கொணர்ந்தார்கள். பிலிப்பைன்ஸ் தீவிலிருந்து கொணர்ந்தார்கள். நமது புட்டு Puto இலிருந்து வருகிறது. Puto வின் வேர்ச்சொல் பிலிப்பைன்ஸ் மொழி Tagalog இலிருந்தா ஹிஸ்பானிய மொழியிலிருந்தா வந்தது என்று இன்றும் அகராதிக்காரர்கள் அடிபடுகிறார்கள்.

 பிலிப்பைன்ஸில் Puto என்னவென்றால் அருசியை ஓரிரவு ஊறவிட்டு அதனை அடுத்தநாள் அம்மியில் அரைத்து அதனை வாழையிலையில் வைத்து நீராவியில் அவிப்பது. அது நமது சமகால இட்டியைப்போலிருக்கும். நம்ம ஆமை சீமான் ஆமை இட்லி சாப்பிடுவதற்கு 4 நூற்றாண்டு முதலே Puto இட்லியில் முட்டை, மாமிசம் இன்னபிற அனைத்து கடலூண்களையும் போட்டு அந்த பசிபிக் சமுத்திர மேன்மக்கள் உண்டனுபவித்திருக்கிறார்கள். 

                   பிலிப்பைன்ஸ் Puto


Puto வின் மூலம் Puto bumbóng இலிருந்து வந்தது. இது pirurutong என்ற ஆதி தென்கிழக்காசிய காட்டு(wild rice) கருப்பு Glutinous ஒட்டும் அருசியை(இதில் Glutenஇல்லை) ஓரிரவு ஊறவைத்து அரைக்காது அப்படியே மூங்கில் குளாயில் நீராவியில் அவித்து பெறுவது. அவிந்ததும் அது அழகிய ஊதா நிறத்தில் வரும். இன்றும் கத்தோலிக்க பிலிப்பைன்ஸில் நத்தாருக்கு பரிமாறும் தேவ உணவு இது. 

                              Puto bumbóng


இந்தோனேசியாவில் Kue putu எனவும் மலேசியாவில் Putu Bambu எனவும் அறியப்படுவது அருசிமாவில் ரம்பை இலையில் (Pandan)  மூங்கிலில் அவித்து தேங்காய்பூவோடும் பனங்கட்டியோடும் பரிமாறப்படுவது.

இந்தோனேசியாவில் Kue Putu எனவும் மலேசியாவில் Putu Bambu எனவும்            


தொடர்பான கட்டுரைகள்

1. சிட்னியின் சிறந்த Sri Lankan சாப்பாட்டுக் கடை

2. 100 ஈழ சமையல் விதிகள்



Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்