லாக் டவுண் சினிமாக்கள் 01
அட்டக்கத்தி
இதனை "றொமான்ரிக் காமெடி" என்பதே ஒரு சாதிவெறி. முதலில் இது ஒரு 'காமெடி' படம் அல்ல. இரண்டாவது இது ஒரு 'ரொமான்ரிக்' படமல்ல. ஆனால் விக்கிபீடியா இங்கிலிஷ் இதனை "Romantic" "Comedy" என்றுதான் விபரிக்கிறது. விக்கிபீடியிவில் ஆங்கிலத்தில் இதனை யார் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பதை ஆராய்ந்தாலே இதன் புதிரை உடைத்து விடலாம். ஆங்கில ஊடக Private Christian பாடசாலை பெரும்பாலும் "உயர்" சாதி மத்தியதரவர்க்க மாணவர்களே இதனை எழுதுகிறார்கள். கலை இலக்கியங்களில் இவர்கள் பூச்சியம். ஆனால் லாபி(Lobby) ஊடக நாட்டாமையில் நூறு. காலனியாதிக்க காலத்தில் Vernacular என்றவொரு சொல்மூலம் அசிங்கப்படுத்திய சுதேசியத்தை இப்போ அசிங்கப்படுத்துகிற மொழி "Romantic Comedy"
முழு படமே பின்வரும் இணைப்பில் இலவசமாக கிடைக்கிறது. பார்த்து நீங்களே முடிவெடுங்கள். பா.ரஞ்சித்துக்கு கோடி நன்றிகள்.
காதல் நிஜமானதா என்பது விவாதத்துக்குரியது. எல்லாக்கேள்விகளுக்கும் இப்படத்தில் விடையுள்ளது. சென்னைக்கு புறத்தேயுள்ள கிராமத்து காதல் கத. கானா பாடல். சந்தோஷ் நாராயணனின் அசல் இசை. கார் காலம் துவங்கும் மகத்தான இக்காலத்தில் இந்த கூதிரில் ஒரு நல்ல சினிமாவை அனுபவியுங்கள்.
Comments
Post a Comment