அன்ரன் பாலசிங்கம் வரலாறு 2
நட்சத்திரன் செவ்விந்தியன் அத்தியாயம் இரண்டு பிரபாகரன் போராட்டத்தில் தனக்கு போட்டியாக வரக்கூடிய தன்னைவிட திறமையான நேர்மையான மற்ற இயக்கத்தலைவர்களை எவ்வாறு கொன்றாரோ அதேபோல அன்ரன் பாலசிங்கமும் புலிகள் இயக்கத்தில் தனது ஆலோசகர் என்ற பதவிக்கு போட்டியாக வரக்கூடியவர்களை கனகச்சிதமாக திட்டமிட்டு ஓரங்கட்டி அவர்களை கலைத்தார். பாலசிங்கம், பிரபாகரன் என்கிற இரண்டு அரக்கர்கள் ஒருவரையொருவர் இட்டுநிரப்பி வந்ததுதான் புலிகளின் பாசிசம். பிரபாகரன் இல்லாமல் பாலசிங்கமும் பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரனும் தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அரக்கர்களாக வந்திருக்கமுடியாது. பாலசிங்கம் தம்பதியர் பிரபாகரனை 1979, 1981 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்தியாவில் சந்தித்து சில மாதங்கள் பிரபாகரன் அணியோடு தங்கியிருந்தனர். இவ்விரு தடவைகளிலும் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் தன்னை ஒரு இட்டு நிரப்பமுடியாத ஆளுமையாக நிலைநிறுத்தமுடியவில்லை. ஆனால் 1983 திருநெல்வேலித்தாக்குதல்/ஜூலைக் கலவரங்கங்களையடுத்து வந்த நிகழ்வுகளை அடுத்து பாலசிங்கம் தான் புகுந்துவிளையாடவந்த தகுந்த சந்தர்ப்பத்தை மிகச்சாதுரியமாக பயன்படுத்தினார். 1983...