பிரபாகரன் மாத்தையா(சிறுகதை)

  

நட்சத்திரன் செவ்விந்தியன்

 தர்மபுரக்காட்டுக்குள்ளிருந்த பிரபாகரனின் பங்கருக்குள் நாமல் ராஜபக்க்ஷவும் மாலக சில்வாவும் (மேர்வின் சில்வாவின் மகன்) நானும் படிகளில் இறங்கி போகிறோம். மூன்றாவது தளத்தில் டைனிங் கோல் மாதிரியிருந்தது. அங்கிருந்த ஒரு பீரோவுக்குள் அன்ரன் பாலசிங்கம் அரைவாசி குடிச்சிட்டு வைத்திருந்த அரிய சிங்கிள் மோல்ற் ஸ்கொச் விஸ்கி போத்திலொன்றையும் அரிய கியுபன் சுருட்டுக்களையும் கண்டெடுக்கிறான் மாலக. நாங்கள் மூவரும் மேசையிலிருந்து ஒரு பெக் அடிக்க மாலக தள்ளிக்கொணர்ந்த செக் குடியரசை சேர்ந்த நீலக்கண் சரக்கு அப்பொலேனா

 “ நான் ஜேர்மன், பெல்ஜியம் பியர்தான் குடிப்பேன்”

 என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டிகளில் சல்லடை போட்டாள். அவளுக்கு பியர் கிடைக்கவில்லை. அடேல் அன்ரி பாதி குடிச்சிட்டு வைத்திருந்த தென் ஆஸ்திரேலிய பரோஸா பள்ளத்தாக்கை சேர்ந்த செம்மதுப்புட்டி ஒன்று மட்டும் கிடைக்கிறது. அவள் தொடர்ந்து தேடியபோது அரச வம்சத்தினர் சாப்பிடும் கவியார் மீன் முட்டை ரின்கள் பலவும் விலையுயர்ந்த ரஷ்ய வோட்கா மதுவும் கிடைத்தன. கவியார் ரின்களைக்கண்டு மிகப்பரவசமடைந்த அப்பொலேனா எங்களுக்கு புரியாத ஒரு உசாரான ஜிப்ஸி பாடலை பாடிக்கொண்டு ஒரு முழு வோட்கா போத்திலைக்கொணர்ந்து மேசையில் வைத்தாள். அப்போது நாங்கள் விஸ்கி போத்திலை காலிபண்ணியிருந்தோம். 

அப்பொலேனா மாலகவிடமிருந்து லைற்றர் வாங்கி தனது சிகரெட்டை பற்றவைத்து புகையிழுத்து விட்டாள். பிறகு நாமலைப்பார்த்துக்கொண்டு 

 “கவியார் இருக்கிறதெண்டால் அதோட சேர்த்து சாப்பிட உப்பில்லாத கிறக்கர் விஸ்கோத்தும் வெங்காயம் எலுமிச்சைக்காயும் இந்த பங்கருக்குள்ள எங்கையாவது கிடைக்கும்” 

 எண்டு சொல்லிக்கொண்டே தேடப்போனாள். தனக்கு ஒரு சராசரி சிறிலங்கன் பெட்டையை விட சிறப்பான பிகர்கள் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்த அப்பொலேனா தன் உடம்பை ஆட்டி நடனமாடியபடியே அந்த ஜிப்ஸி பாடலை தொடர்ந்தபடி போனாள். நாலாவது தளத்தில் அவள் உருவம் இறங்கி மறையும்வரை அவளையே பார்த்திருந்த மாலக எங்கள் பக்கம் திரும்பி

 “ கண்டோண பொண்டோண ஒக்காண்டோண மச்சாங்” 

 என்கிறான். நானும் நாமலும் கூட பரவசமடைந்திருந்தோம். நாமல் மேசையில் ஒரு மரப்பெட்டி ஹியூமிடோரிலிருந்த கியூபன் சிகரெட்டுக்கள் மூன்றை எடுத்து எனக்கும் மாலகவுக்கும் ஒவ்வொன்று கொடுத்தான். மாலக தனது லைற்ரறால் மூன்றையும் பற்றவைத்தான். மூவரும் புகையிழுத்து கனவுற்றோம். கொஞ்சநேரம் நிலவறையில் மௌனம் நிலவிற்று. புகை உலவிற்று. ஒரு இருமல். பிறகு ஒரு செருமல். இவ்வாறாக மௌனத்தை கலைத்த நாமல் என்னை நட்போடு பார்த்தான்.

“ மச்சாங் நீ மிச்சங் நாள் எனக்கு கரைச்சல் தாறது அத மம ஒக்கம பிக்ஸிங் நான் உன்ரை விசயமா கோட்டபாய சித்தப்பாவோட கதைச்சு அவரை சம்மதிக்கவச்சிட்டன். இதே பங்கருக்குள்ளதான் கடைசி தளங்களில பிரபாகரன் மாத்தையாவின்ரை மற்றும் புலிகளின் அனைத்து அரிய ஆவணங்களும் மிலிட்டறி இன்ரலிஞன் யுனிட்டால் முறையாக சேகரிக்கப்பட்டு ஒரு ஆவண காப்பகமாக பேணப்படுகிறது. பிரபாகரன் மாத்தையா இந்தியனாமியோட அடிபர்ற காலத்தில் லிபியத் தலைவர் கேணல் கடாபிக்கு எழுதிய கடிதத்திலிருந்து கடைசி நாட்களில அல்கைடாவின் இரண்டாவது தலைவர் ஐமன் அல் ஸவாகிரி, பிரபாகரன் மாத்தையாவுக்கு எழுதிய பதில் கடிதம் மிச்சம் கொட்டியின்ரை வெளிநாட்டு லொக்கா காஸ்ரோவின் லவ்ஸ் நாட்குறிப்புக்கள் இப்படி மாற படு ஒக்கோம பள்ளய தியனவா. உனக்கு முழுமையா மூண்டு மாதம் திறந்து விர்றம். ஒரே ஒரு கொண்டிசன்தான் சித்தப்பா போட்டவர். இங்கை நீ அலசி ஆராய்ஞ்சு எழுதிற பிரபாகரன் மாத்தையான்ரை வாழ்க்கை வரலாற்றை தானும் பசில் சித்தப்பாவும் வாசிச்சு தேசிய பந்தோபஸ்துக்கு குந்தகமான விடயங்களை பிளக் அவுட் செய்வினம். ஹறித”

 “மொக்கத்த மச்சாங்? அவையள் நான் இதுக்குள்ள கஸ்ரப்பட்டு எழுதிற அரிய சென்சிட்டிவ்வான விசயங்களையெல்லாம் தணிக்கை செய்வினமெண்டால் நான் எழுதப்போகிற பிரபாகர இதிஹாசயத்தில புதுசா ஒண்டுமிருக்காது. பொய் வேலை தானே மச்சாங்” 

 “அப்ப என்ன செய்யப்போறாய்? என்ர மூண்டு சித்தப்பன்மாரும் ஒம்பது ஒம்பதாய் இருவத்தேழு வருஷம் ஆண்டாப்பிறகுதான் நான் அரச கட்டில் ஏறமுடியும். அதுவரையும் காத்திருந்து புத்தகம் எழுதப்போறியோ? அப்ப எல்லாரும் பிரபாகரன் மாத்தையாவை மறந்திருப்பாங்கள். நீ என்ன செய்யிறாயெண்டால் ……..என்ர சித்தப்பன்மார் என்னைமாதிரி ஸ்மாட் இல்லை. அவங்களுக்கு விளங்க கயிட்டமான மறைமுகமான மொழியில சுத்திவளைச்சு சொல்ல வந்ததுகளை சொல்லுறாய். சரியோ”

 இந்த நேரம் மாலக குழம்பினான். சொன்னது சின்ன லொக்கா நாமல். மாலக நாமலுக்குத்தான் அடிக்கோணும். ஆனால் அவன்

 “என்ன? கோட்டபாய மாத்தையா ஸ்மாட் இல்லையோ” 

 என்று கேட்டுக்கொண்டு எனக்கு காதாவடியைப்பொத்தி அடிக்கத்தொடங்கினான். அதிலிருந்து தப்ப நான் ஒவ்வொரு தளமாய் படியேறித்தப்பி நிலத்துக்கு வருகிறன். 

நிலத்தில் ஒரே சனம். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை “றி எனக்ட்” பண்ணி படமாய் எடுக்கினமாம். இந்தியத் தூதுவர் டிக்சித் தான் டைறக்ரறாம். அவர்

 “கட்” “கட்” 

என்று கன்னா பின்னாவாக கத்திக்கொண்டிருக்கிறார். இங்கால நடிகர்களான உமா மகேஸ்வரன், பிரபாகரன், பத்மநாபா, பாலகுமார், சிறி சபாரத்தினம் ஆக்கள் குந்தியிருந்து கள்ளடிச்சுக்கொண்டிருக்கினம். 

சிங்களவனட்டயிருந்து தப்பிவந்த நான் இங்க இவயளட்டயோ மாட்டுப்படவேண்டுமெண்ட கலவரத்தில நான் யாரையும் காணாதமாதிரி ஒரு கரையால மாற பிரபாகரன் என்னை கண்டிட்டார்.

 “ தம்பி துலைக்கோ போறாய். இங்கவந்து ஒருவாய் கூவில் கள்ளு அடிச்சுப்போட்டுப்போ. சோக்கா இருக்கப்பு “ 

என்டு வசியம் பண்ணி என்னை கூப்பிட்டார். நான்

 “ அண்ணை எனக்கு இன்னும் ஒழுங்கா பிடிச்சு மூத்திரம் பெய்யவே தெரியாது. என்னை கள்ளுக்குடிக்க கூப்பிடுறியளோ “ 

என்கிறேன். அவர் தொடர்ந்து

 “அப்ப இந்த ஆட்டு ரத்த வறுவலை கொறிச்சுப்போட்டுப் போ மோன” 

 என்டு பொறி வச்சார். சொன்னதோட நிக்காம அவர் எழும்பி என்னை நோக்கி ரண்டு எட்டு வச்சார். நான் குதிக்கால் குண்டியில பட ஓட்டம் பிடிச்சன். மூச்சு வாங்கிச்சுது. அப்பத்தான் முழிச்சுக்கொண்டேன். கனவு. 

வேறு சிறுகதைகள்

1. கர்னலின் காமம்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்