ஒரு நாள் கூத்து(சிறுகதை)
நட்சத்திரன் செவ்விந்தியன் எழுத்தாளன் காட்டுக்கும் நாட்டுக்குமிடையிலுள்ள புல்வெளியிலுள்ள ஒரே தனித்த வீட்டில் குதிரையோடும் இரண்டு நாய்களோடும் (Labrador Retriever, Rottweiler) வசிக்கவேண்டும். மதியத்தில் குதிரையை புல்வெளியில் மேயவிட்டபின் நாய்களோடு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான். அங்கு ஒரு வனமோகினியை சந்திக்கிறான். பகல்முழுக்க அவளோடு வனத்தில் அலைகிறான். நாய்கள் இவர்களை விட்டு தம்பாட்டுக்கு காடுமணந்து வேட்டையாடுகின்றன. அந்திசாய்கிறபோது வனமோகினி இரவுக்குமுன் தான் போய்விடவேண்டுமென்கிறாள். அவன் தன் நாய்களுக்காக விசில் அடித்தபோது மோகினி மறைந்துவிட்டாள். (அவள் Shrek பட இளவரசிபோல் இரவில் அரக்கியாபவள்) நாய்கள் வாயில் இரண்டு உடும்புகளோடு பிரசன்னமாகின்றன. இரவில் அவளை தன்வீட்டுக்கு கூட்டிப்போய் அவளுக்கு சமைத்துப்போடும் தன் கலைந்த கனவோடு வீடேகிறான். பாதிவழியில் இன்னொரு விசிலடிக்க குதிரை கணங்களில் வாயில் நுரைதள்ள வந்து சேர்கிறது. உடும்புகளை கொடியால் கட்டி தோளில் போட்டு குதிரையில் முன்னிரவில் நட்சத்திரங்களை GPS ஆகவைத்து வைத்து வண்டிப்பாதைகள், காடு, மலை, கழனி கடந்து நகரம் போகிறான். அந்நகர மத...