செல்லன் கந்தையன், ஷோபாசக்தி, ராஜசிங்கம் சகோதரிகள்+ராகவன் Public Relations ஏஜன்சி


 நட்சத்திரன் செவ்விந்தியன்
அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தளவு கொடுமையான சாதி அடக்குமுறை புத்தாயிரங்களில் (2003) இருந்ததில்லை. 1968ல் தாழ்த்தப்பட்ட மக்கள்  ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசத்தை செய்தபோது  சுயாதீன அரசியல்வாதிகளில் ஒருவரான பேரா. சுந்தரலிங்கம் மாவிட்டபுர ஆலய அறங்காவலராக இருந்து இறுதிவரை ஆலயப்பிரவேசத்தை தடுக்க முனைந்தார். சாதி வெறியை வைத்து 1970 தேர்தலில் சுந்தரலிங்கம் மாவிட்டபுரம் கோயில் அமைந்துள்ள அதே காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட போதும் கிறிஸ்தவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான தந்தை செல்வாவால் தோற்கடிக்கப்பட்டார். தமிழரசுக்கட்சி 1968ல் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


          தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தின்                                           சிற்பிகள்
       ராஜவரோதயம்          வன்னியசிங்கம்



இன்றைக்கும் பல இடதுசாரி எழுத்தாளர்கள் தமிழரசுக்கட்சி ஒரு சாதிவெறிக் கட்சி என்ற பொய்ப்பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறான வரலாறு. உண்மையில் 1957ல் இலங்கைப் பாராளுமன்றத்தில்  சட்டமாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புச்சட்டம்(Social Disabilities Act) என்பதற்கு காரணமாக இருந்தது தமிழரசுக்கட்சியே. இச்சட்டத்தை முன்மொழிந்தது தமிழரக்கட்சியின் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் இன்றைய சம்பந்தனின் உறவினருமான N.R. இராஜவரோதயம். இச்சட்டத்தை வழிமொழிந்தது தமிழரசுக்கட்சி  கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கு. வன்னியசிங்கம். இருவரும் வெள்ளாளர்கள். இருவரும் தமிழரசுக்கட்சியின் தலைவர்களாகவும் இருந்தவர்கள். 



 
     மாவிட்டபுர ஆலயப்பிரவேசப்போராட்டத்தை 
          மையப்படுத்தி வந்த பிரபல நாடகம்

அதற்கு சில காலம் முதல் யாழ் அரச அதிபராக இருந்த நெவில் ஜயவீரா தனது புத்தகத்தில் அப்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 11 பேரும் உதவி அரச அதிபர்களாக இருந்த 14 பேரும் வெள்ளாளர்கள் என்றும் இதனால் இலங்கைச்சட்டப்படி(தீண்டாமை ஒழிப்பு, 1957) நடத்தப்பட்ட போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை ஆலயத்தில் அனுமதிக்க தனது காலத்தில் சாத்தியமாகவில்லை என்று எழுதுகிறார். 


ஆனால் 70 பதுகளில் சாதிய அடக்குமுறை குறைகிறது. இடது சாரிகளால் நடத்தப்பட்ட போராட்டங்களால் மட்டுமன்றி தேர்தல் யதார்த்தங்கள், பொருளாதாரக் கொள்கைகள், நடைமுறைக் காரணங்களாலும் அடக்குமுறை குறைகிறது. 1977 பொதுத்தேர்தலில் கூட்டணி உடுப்பிட்டித் தொகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளுக்காக
(தாழ்த்தப்பட்ட மக்கள் கடந்த தேர்தலில் ஒரு இடதுசாரியை MP ஆக இத்தொகுதியில் தேர்ந்ததனால்) இராசலிங்கம் என்ற தலித் ஒருவரை நியமித்து அவர் பாராளுமன்ற உறுப்பினராகிறார். (2004 தேர்தலில் புலிகள் கூட்டமைப்பு வேட்பாளராக சிவனேசனை நியமித்ததும் இதே தலித் மாதிரியை பின்பற்றியே) ஆக கூட்டணி நெருக்குவாரங்களால் தனது சாதிவெறியைக் கைவிட்டு தன்னை மறுசீரமைத்துக் கொள்கிறது. தலித் அல்லாதவர்களும் கூட்டணிக்காக இராசலிங்கம் அவர்களுக்கு வாக்களித்திருந்தனர். அன்றிலிருந்து கூட்டணி தலித் உறுப்பினர்களை உள்வாங்கி முன்னிறுத்துகின்றது.

       1977 தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடுவில்                             இருப்பவர் திரு  இராஜலிங்கம்

 70 களின் பிற்பாதியில் அமிர்தலிங்கம் தலைவராக இருந்தபோது கூட்டணிக்காக விசுவாசமாக வேலை செய்த பல தலித் உறுப்பினர்களை பாரபட்சமின்றி நடத்தியதோடு அவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். சி. புஸ்பராஜா என்கிற தலித் ஒருவரின் அரசியல் வாழ்க்கை கூட்டணி இளைஞர் அணியிலிருந்தே ஆரம்பமானது. புஸ்பராஜா தனது புத்தகத்தில் ஒரு இடத்திலாவது கூட்டணியில் தான் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டதை உணர்ந்ததாக எழுதவில்லை. தந்தை செல்வாவின் மரண ஊர்வலம் சிறிது நேரம் கூட்டணி விசுவாசக் குடும்பமான புஸ்பராஜாவின் வீட்டிற்கு முன்னால் தரித்திருக்க அன்று மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்ததையும் புஸ்பராஜா எழுதுகிறார். புஸ்பராஜாவுக்கு கமநல உத்தியோகத்தராக வேலை கிடைக்கவும் அமிர்தலிங்கம் உதவினார். புஸ்பராஜா அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டோது அதனை பாராளுமன்றில் அமிர்தலிங்கம் கண்டித்தார். 

 தலித்தினர் பலர் தமது சாதிய தொழில்களை கைவிட்டு 1977க்கு பின்னரான திறந்த பொருளாதாரக் கொள்கைகளால் தனியார் பஸ், கராஜ் முதலிய சிறுதொழில் உரிமையாளர்களாகவும் மத்தியகிழக்கு வேலைவாய்பு பெறுநர்களாகவும் பொருளாதார ரீதியில் முன்னேறவும் வாய்ப்பு ஏற்படுகிறது. 

 80 களில் தேர்தல் அரசியல் போய் இயக்க அரசியல் வருகிறபோது சாதிவெறிக் குறைப்பு மிகத் துலக்கமாக தெரிகிறது. யாழ்மையவாத சைவவேளாள மேலாதிக்கம் பின்னுக்கு போகிறது. இயக்க அரசியல் முற்றிலும் இளைஞர்களிலானானது. இளைஞர்கள் முதியவர்களைவிட பொதுவாக சாதிவெறி குறைந்தவர்கள். வெள்ளாள இயக்கம் என்று சொல்லப்பட்ட புளட் இயக்கத்தின் ஆதி Able man and All rounder ஆன புலிகளால் கொல்லப்பட்ட சுந்தரம் முக்குவர் சாதி. உமா மகேஸ்வரனின் பின் புளட்டின் தலைவரான மாணிக்கம்தாசன் ஒரு யாழ்ப்பாண தலித் தந்தைக்கும் சிங்கள தாயினதும் மகன். மாணிக்கம்தாசனின் தலமையை தடித்த வெள்ளாளரான சித்தார்த்தனே ஏற்று இயங்கினார். 

தலித் தகப்பனுக்கும் சிங்கள தாய்க்கும் 
 பிறந்த புளட் தலைவர் மாணிக்கதாசன்

அதிகளவு தலித் உறுப்பினர்களைக்கொண்டிருந்த இடதுசாரி இயக்கமான EPRLF முதலமைச்சராக யாழ்ப்பாண இந்திய வம்சாவளி தமிழரான வரதராஜப்பெருமாளையே தெரிவுசெய்தது. கரையாரத் தலமையைக்கொண்டிருந்த TELO  இல் குட்டிமணி தங்கத்துரை கொலையின் பின்னர் கைக்குளரான சிறீ சபாரத்தினம் தலைவரானார். EROS இயக்கத்தின் சார்பில் 1989 தேர்தலில் மலையகத்தமிழரும் முஸ்லீமும் பாராளுமன்ற உறுப்பினராகினர். புலிகளுக்கு கரையாரத்தலமை. கரையார்கள் ஏறத்தாழ வெள்ளாளருக்கு சமனான அதிகாரம் கொண்டவர்கள். அடிமை குடிமை முறைக்குள் வராத கரையார்களுக்கிருந்த ஒரேயொரு பிரதிகூலம் அவர்கள் வெள்ளாளர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்பதே. 

1987-1989 புலிகள் இந்திய ராணுவ போர்க்காலத்தில் இந்திய ராணுவமும் EPRLF ம் ஏராளமான புலிகளின் பெரும்பாலும் தலித்தினர் இல்லாத சாதிகளைச்சேர்ந்த தலைவர்களைக் கொன்றார்கள். வசதியான தலித் அல்லாதவர்களான சாதியினர் வெளிநாடுகளுக்கும் வெளியிடங்களுக்கும் சென்றுவிட்டனர். புலிகளின் முன்னணித்தலைவர்கள் வன்னிக்காடுகளிலிருந்தாலும் பெரும்பாலும் தலித் சமூகத்தினரைச்சேர்ந்த முறையாகப்பயிற்சி எடுக்காத பயிலுனர் உறுப்பினர்களை உள்ளூரில் பயன்படுத்தியே புலிகள் இக்காலத்தில் தப்பிப்பிழைத்தனர். குறிப்பாக 1988 புலிகள் கடுமையாக சேடமிழுத்த காலம். 1989 ல் பிரேமதாச ஜனாதிபதியாகியே புலிகளுக்கு உயிர் வழங்கினார். 

 இதே போலத்தான் பத்தாண்டுகளின் பின் 90 களின் பிற்பாதியில் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ் குடாநாட்டில் யாழ் மாநகரசபை தலித் அல்லாத மேயர்களான சரோஜினி யோகேஸ்வரன், பொன் சிவபாலன் முதலிய பலர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரவிராஜ் எந்நேரமும் புலிகளால் சுட்டுக்கொல்லப்படும் ஆபத்திலிருந்தவர். அப்போது உதவி மேயராக இருத்த தலித் செல்லன் கந்தையன் கூட்டணி புலிகளோடு உடன்பாடு செய்தபின் ரவிராஜ் MP ஆனபின் மேயரானார். 

 எண்பதுகளின் பிற்பகுதியில் புலிகளும் சரி, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கூட்டணியினரும் சரி தலித்துக்களை பாவித்துவிட்டு எறியும் கருவேப்பிலைகளாக உபயோகிக்கும் நிலை இருக்கவில்லை. தங்களுக்கு விசுவாசமாக இருந்த தலித்தினர் பங்களிப்புக்காக அவர்களுக்கு உரிய பொறுப்புக்களை கொடுக்கவேண்டிய நடைமுறை யதார்த்தம், அறம், நாகரீகம் எண்பதுகளுக்கு பிற்பாடு யாழ்ப்பாண சமூகத்தில் இருந்தது. 



 
2003ல் யாழ் நகரபிதா ஒரு தலித் ஆக நடந்த மகத்தான மாற்றம் ஓரிரவில் நடந்ததல்ல. கடந்த 40/50 ஆண்டுகளில் படிப்படியாக தலித்துக்கள் அதிகார மைய தொழில்களில் வேலைக்கு அமர்ந்தார்கள். செல்லன் கந்தையன் மேயராவதற்கு பல ஆண்டுகள் முதலே 1996 இலிருந்து கணபதி ராஜதுரை என்கிற தலித் பிரபலமான யாழ் மத்திய கல்லூரியின் அதிபராகி 2005 ல் கொல்லப்படும்வரை இருந்தார். சாதி வெறி இருந்திருந்தால் இவர் 9 ஆண்டுகள் எப்படி அதிபராக இருந்திருக்கமுடியும்? அறுபதுகளிலிருந்த யாழ் அல்ல புத்தாயிரத்திலிருந்த யாழ்ப்பாணம். 2003 யாழ்ப்பாணத்தில் மேயர் மட்டுமல்ல தலித். மேயரைவிட பலமடங்கு அதிகாரம் மிக்க நீதிபதிகள், பிரதேச செயலாளர்கள்( உதவி அரசாங்க அதிபர்/ D.S), பொலிஸ் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக துறைத்தலைவர்கள்/ விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், புலிகளின் போராளித் தலைவர்கள், மாற்று இயக்க போராளித்தலைவர்கள், ஆணையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், விதானையார்கள், பிரபல்யமான பாடசாலை அதிபர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள்(வக்கீல்), தொழில் நுட்பவியலாளர்கள், ஆசிரியர்கள், பணித்துறை அதிகாரிகள், கத்தோலிக்க மற்றும் பிற கிறில்தவ பாதிரிகள் ஆகியவர்கள் தலித்துக்களாக இருந்தனர். இந்த நூலக திறப்பை தடைசெய்வதற்கு பொறுப்பாக இருந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்தவரே தலித் ஆன 'பிரிகேடியர்' தமிழ்ச்செல்வன்.

வசதியான தலித் அல்லாத சாதிகள் வடக்கிலிருந்து வெளியேறிச்செல்ல தலித்தினர்களே அதிகளவில் புலிகளில் உறுப்பினர்களாக இருந்தார்கள். எல்லாவற்றையும் விட புலிகளின் ஆதரளவுத்தளம் பெருமளவு இளைஞர்கள் மாணவர்களிடையேயே இருந்தது. இவர்களிடம் முதியோர்களோடு ஒப்பிடும்போது சாதி உணர்வு/வெறி மிகக்குறைவு. 2000ம்களில் மாணவர்கள் இளைஞர்களுக்கு தம் சக நண்பர்கள் என்ன சாதி என்பதோ விரிவான சாதிய பிரிவுகளோ தெரியாது. இக்காரணங்களால் தான் புலிகள் குடிமை முறை ஒழிப்பை ஒரு சட்டமாகவே 90 களிலிருந்து நடைமுறைப்படுத்தினார்கள்.
 
யாழ் குடாநாட்டில் ஒப்பீட்டு அடிப்படையில் சாதிவெறி குறைவான பகுதி யாழ் நகரப்பகுதிதான். சிங்களவர்கள், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகிய பல்லின மக்களோடு பல சாதிய மக்களும் வாழும் Cosmopolitan பகுதி. யாழ் நகரசபை எல்லைக்குள் கணிசமான தலித் மக்கள் வாழ்ந்தனர். யாழ் மாநகரசபை உதவி மேயர்களாக முஸ்லீம்கள் இருந்திருக்கிறார்கள். 1955 ல் சுல்த்தான் என்கிற முஸ்லீம் ஒருவர் மேயராக இருந்திருக்கிறார். நூலகர் என். செல்வராஜா யாழ்ப்பாண மேயர்களில் மிகப்பிரபல்யமாக இருந்த அல்பிரட் துரையப்பா கரையாரச் சாதியைச்சேர்ந்தவர் என்கிறார். இது உண்மையானால் யாழ் மாநகரசபையில் எப்போதும் வெள்ளாளர்கள் மேயராக இருந்ததில்லை என்பதாகிறது. யாழ் மாநகரசபையில் எப்போதும் தலித் மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தக்கட்சியும் ஆட்சியெடுத்ததில்லை. 

 சாதி யாழ் தமிழ் சமுகத்தில் இன்றும் முற்றாக அழியாமல்(குறிப்பாக திருமணங்களில்) சாபமாக இருக்கிறதாயினும் நூலக திறப்பை புலிகள் தடைசெய்ததற்கு சாதி காரணமல்ல. புலிகளின் பாசிச நலனே காரணம். ஆனால் சாதியை பாவித்து சுயநல அரசியல் செய்யவேண்டிய பல தரப்புக்கள் இதற்கு சாதியை காரணங்காட்டும் பொய்க் கதையாடல்களை உருவாக்குகின்றன. புலியெதிர்ப்பாளர்கள், பாரம்பரிய இடதுசாரிகள் எல்லோரும் இங்கு சாதி கருத்தாடலைவைத்து சுயநல அரசியல் செய்கின்றனர். இடதுசாரிகள் தமிழரசுக்கட்சிக்கு/கூட்டணிக்கு முன்னைய காலங்களில் சாதிவெறி அரசியல் இருந்ததை வைத்து இந்த இடத்திலும் சாதியை வைத்து தமிழரசுக்கட்சி/கூட்டணியை விழுத்த முனைகின்றனர். புலியெதிர்ப்பாளர்கள் புலிகள் மேட்டுக்குடி வெள்ளாளருக்காக செல்லன் கந்தையன் திறப்பதை அனுமதிக்கவில்லை என்கின்றனர். இந்த இடத்தில் சாதிய காரணத்துக்காக யாருமே நூலகத்திறப்பை தடை செய்ய காரணமாக இருக்கவில்லை. ஆனந்த சங்கரி புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ஆனந்த சங்கரியை பழிவாங்கவே இது செய்யப்பட்டது. யாழ் மாநகர சபை உறுப்பினர்களாக இருந்த செல்லன் கந்தையன் உட்பட்ட கூட்டணி உறுப்பினர்கள் சங்கரிக்கு விசுவாசமானவர்களாக இருந்தார்கள். மாநகரசபையின் மற்ற PLOTE, EPDP, EPRLF(வரதர் அணி) உறுப்பினர்களும் இனந்தசங்கரியின் கூட்டணி உறுப்பினர்களோடு புலி எதிர்ப்பு என்பதில் ஒருங்கிணைந்து நெருக்கமாக இயங்கினார்கள். செல்லன் கந்தையனா, கூட்டணி தலைவர் சங்கரியா நூலகத்தை திறப்பது என்ற முடிவு சங்கரியால் மட்டும் எடுக்கப்பட்டதல்ல. PLOTE EPDP, EPRLF கட்சிகள் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவு. மாநகரசபை உறுப்பினர்களாக எல்லா கட்சியிலும் கணிசமான தலித் உறுப்பினர்கள் இருந்தார்கள்.

 இக்காலத்தில் சனநாயக வழியில் வந்த எல்லா புலிகளின் மேலாதிக்கத்தை ஏற்காத அரசியல்வாதிகளுக்கும் புலிகளால் உயிராபத்து இருந்தது. முக்கியமாக புலிகள் தங்களின் மேலாதிக்கத்தை ஏற்காத ஆனந்தசங்கரியின் விசுவாசியான சங்கரியின் கட்சியைச் சேர்ந்தவர் மேயரானவர் என்ற காரணத்துக்காகத்தான் புலிகள் நூலக திறப்பை தடுக்கிறார்கள் என்ற உண்மையைச் சொன்னால் அது புலிகளை சீண்டுவதாகும். இப்புலிப்பாசிச காலத்தில் பத்திரிகைகள் உண்மைகளை எழுதும் நிலை இருக்கவில்லை. எனவே இப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமல்லாத சாதி என்கிற பூதத்தை அரசியல்வாதியான செல்லன் கந்தையன் பயன்படுத்த தூண்டப்பட்டார். சாதி என்கிற பூதத்தை இறக்கிவிட்டால் அது புலிகளுக்கு தர்மசங்கடத்தை கொடுக்கும். அதே சமயம் புலிகள் சீண்டப்படமாட்டார்கள் என்பதும் இப்பூதத்தை அவிட்டுவிட்ட யாழ் மாநகரசபை உறுப்பினர்களாக இருந்த EPDP, PLOTE, EPRLF, கூட்டணிக்கட்சிகளுக்கு தெரியும். 

 இந்தப்பூதம் வெளியில் வந்ததும் எல்லாரும் இதனை ஒரு உதைப்பந்தாக்கி பந்தாடினார்கள். இடதுசாரிகள் கூட்டணி மீதான பழைய கறளையும் வைத்துக்கொண்டு கூட்டணி அறுபதுகளில் சாதிவெறிக்கட்சியாக இருந்ததையும் வைத்து கூட்டணிதான் தலித் செல்லன் கந்தையன் திறப்பதை அனுமதிக்கவில்லை என்று அவிட்டு விட்டார்கள். தேசம் நெற் ஜெயபாலன் இன்றும் ஆனந்தசங்கரிதான் திறப்பை எடுத்து ஒழித்து நூலக திறப்பை தடுத்தார் என்று எழுதுகின்றார் என்றால் தமிழ் பத்திரிகை தரத்தைப்பாருங்கள். யாழ் சாதிப்பூதம் சிங்களவர்களுக்கும் ஒரு சனரஞ்சகமான தினுசு. சிங்களவர்களான ஆங்கில பத்திரிகையாளர்கள் செல்லனை பேட்டி கண்டார்கள். உண்மையைச் சொன்னால் புலி தனக்கு வெடிவிழும் என்று தெரிந்த செல்லன் கந்தையன் சாதி தான் காரணம் என்று வசதியாக பேட்டி கொடுத்தார். 

 இன்று புலிகள் இல்லை. 2009 க்குப்பிறகு திரு கந்தையனை பேட்டி கண்டிருந்தாலும் சாதி காரணமல்ல என்று சொல்லியிருப்பார். ஆனால் எந்த பத்திரிகையாளரும் அவரை பேட்டி காணவில்லை. 

 2003 நூலக சம்பவத்தின் பின்னான காலங்கள் தலித்திய ஆய்வு தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களிலேயே பேசப்படுமளவுக்கு பிரபல்யமானது. தலித்திய ஆய்வாளரும் இடதுசாரியுமான மார்க்ஸ் ஆந்தோனிசாமியால் ஆகர்சிக்கப்பட்ட ஷோபா சக்தி முதலியவர்கள் தமிழகத்து தலித் ஆய்வு மாதிரியை அப்படியே ஈழத்துக்கு பிரதி செய்தார்கள். அடிப்படையில் ஈழ மற்றும் தமிழக சமூக மற்றும் சாதிய உருவாக்கம் வேறு வேறானவைகள். ஈழத்தில் 70 களுக்குப்பிறகு தலித் என்பதற்காக கொல்லப்படுகிற அவர்கள் வீடுகள் எரிக்கப்படுகிற அளவுக்கு சாதி வன்முறை இல்லை. 

யாழ்ப்பாண வெள்ளாளனான ஷோபாசக்தி தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக தலித் எழுச்சி நடைபெறும் தமிழகத்தில் தன்னை பிரபல்யமாக்க தான் ஒரு தலித் என்கிற பொய்யை மோசடியை செய்தார். ஒரு வடிவேல் திரைப்பட காமெடியில் சேவல் வேடம்போட்டு திருட வந்தவன் தானே நீ என்று மன்சூர் அலிகான் கேட்பாரல்லவா. அதுபோல தலித் வேடம்போட்டு தன்னோடு படுக்க வந்தவரே இந்த ஷோபா சக்தி என்பதை பெரியாரிஸ்டும் தலித் செயற்பாட்டாளருமான பிரான்ஸ் தமிழச்சி உறுதிப்படுத்தியுள்ளார். தான் தமிழச்சியோடு படுத்தேன் என்பதை ஷோபாவே ஒத்துக்கொண்டுள்ளார். ஆக ஷோபாவுக்கு புலிகள் தலித் என்பதற்காகத்தான் மேயரான செல்லன் கந்தையன் காலத்தில் புலிகள் நூலகத்தை திறப்பதை தடுத்தார் என்ற மோசடியை விற்பதால் நிறைய நலன்களுண்டு. ஷோபாசக்தி மோசடிக்காரன் மட்டுமல்ல. அரைவேக்காட்டு ஆய்வாளனும். இந்த ஷோபா சக்திதான் புலிகள் நூலகத்தை திறப்பை தடுத்ததற்கு காரணம் சாதி என்கிற மோசடிக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருக்கிறார் 

 ஷோபா சக்திக்கான Public Relations ஏஜெண்டுகளாக தொழிற்படும் ராஜசிங்கம் சகோதரிகள்+ ராகவன்

ஷோபா சக்தியின் கொரில்லா தமிழில் வந்த மகத்தான குறுநாவல்களிலொன்று. இதுகாலவரையும் வெளிவந்த ஈழப்போரிலக்கிய நாவல்களில் அரிதான ஒரேயொரு குறுநாவலும். ஈழப்போர பற்றிய மிகச்சிறப்பான பல சிறுகதைகளையும் எழுதியவரும் ஷோபா சக்திதான். அவருடைய "ம்" நாவல் மிக சாதரணமான ஒரு குறுநாவல். 

 2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து ரென்சனான ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது சரக்கும் இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை என்பதை உணர்ந்த ஷோபாசக்தி தீட்டியதுதான் "ஒப்பரேஷன் Box" 🤣

                      Box: போலி நாவல்

  Box கதைப்புத்தக விமர்சனம்
 
 1. முன்னாள் பெண்புலி தளபதி விபச்சாரம் செய்வதாக புனைவதும்(ஆனந்த விகடன் பேட்டியாக அருளினியன் செய்த மோசடி) Box இல் காலி விபச்சார விடுதி

 2. சரணடைந்த பெண்புலித் தளபதிகளை இலங்கை ராணுவம் புனர்வாழ்வு முகாமிலோ முகாமுக்கு கொண்டு செல்லமுதலோ Gang rape பண்ணுவதாக புனைவது(அகர முதல்வன் செய்த மோசடி) இறுதி யுத்தத்தில் சில Rape கள் நடந்ததில் உண்மையுண்டு. ஆனால் ஷோபாசக்தி 90 களில் சில ஆபிரிக்க நாடுகளிலும் பொஸ்னியாவிலும் நடந்தமாதிரியாக Ritual and organised mass rape ஆக புனைவது மலின வியாபார உத்தி. இவைகள் fiction கலைப்படைப்பாகவோ non fiction உண்மை அறிக்கைகளாகவோ தேற வக்கில்லாத மலின ஆபாசங்களே. இந்த இரண்டு ஒம்பரேசன்களும் அனுபவமற்ற அருளினியன், அகர முதல்வன் ஆகியோரால் செய்யப்பட்டு பிசகி மாட்டுப்பட்டதை உணர்ந்த ஷோபா தன்னால் இவற்றை வெற்றிகரமான ஒப்பரேசன் ஆக்கலாம் என்று தீர்மானிக்கிறார். 

3, இறுதியுத்த நாட்களில் புலிகள் பிரயோகித்த பொய்ப்பிரச்சாரங்களையும் யுத்தத்தின் பின் புலியாதரவாளர்கள் வெளிநாட்டில் சொன்ன யுத்தம் பற்றிய பொய்ப்பிரச்சாரங்களையும் முழுமையாக பயன்படுத்த தீர்மானிக்கிறார். இதன்படி Cluster குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் இறுதி யுத்தத்தில் இலங்கைப்படைகளால் பயன்படுதப்பட்டதாக பொய்ப் பிரச்சாரப்புனைவை நாவலுக்குள் கொணர்கிறார். தீபா போன்ற பெண்
தளபதிகள் புனர்வாழ்வின்பின் பிரான்ஸ் தேசத்துக்கு கணவரோடு சென்றதை மறைத்து திரும்பி வந்த பெண் தளபதியொருவர் இலங்கை படைகளால் கைது செய்யப்பட்டதாக புனைகிறார்.

 4. நாவலின் முதல் சொல்லே "நிர்வாணம்" என்று தொடங்குகிறது. முதல் அத்தியாயத்தில் மிகச்சிறிய சதுரவடிவத்துள் தரையில் இரு இளைஞர்களை நிர்வாணமாக்கி நிற்க வைக்கின்ற பகுதி வன்முறை அதிர்ச்சி ஏற்படுத்த எழுதப்பட்ட மிக மலினமான வியாபார உத்தி. 

2019ல் வந்த Simon Cottee எழுதிய புனைவு சாரா புத்தகத்தின் தலைப்பு ISIS and the Pornography of Violence.  ISIS எவ்வாறு பத்திரிகையாளர்களை/தங்களது எதிரிகளாக காபிர்களாக கருதுகிறவர்களை கொல்வதை pornography படங்களைப்போல காட்சிப்படுத்தி வீடியோக்களாக்கி பரப்பியதற்காக தலைப்பை அப்படி வைத்தார்கள். 


இந்நாவலில் ஷோபாசக்தி பயன்படுத்துகிற மலின வியாபார உத்திகள் Pornography of Violence மட்டுமல்ல Pornography of Literature(கவனிக்கவும் pornographic literature அல்ல) ஆகவும் இருக்கிறது. இலக்கிய மதிப்பு, கலை மதிப்பு எதுவுமில்லாமல் வெறும் மலின எழுத்தாகவே இருக்கிறது. காலியில் புலி சீருடைகளில் விபச்சாரம் நடப்பதும் இதே மலினம்தான்.

 5. நல்ல நாவல் தனக்கான வடிவத்தையும் மொழியையும் தானே உருவாக்கிக் கொள்ளும். அசலான பலமான ஒரு கதைப்பின்னல், அசலான பாத்திர உருவாக்கம், ஒழுங்கமைதியான முன்னகர்வு இருக்கும். கொரில்லா இப்படியான நல்ல நாவல். Box ல் மொழி மட்டுமே இருக்கிறது. அசலற்ற பலவீனமான கதைப்பின்னல். நல்ல எழுத்தாளன் சுய அனுபவ பாத்திரங்களை மட்டுமன்றி மற்றப்பாத்திரங்களையும் அதுவாக வாழ்ந்து படைக்கக்கூடியவன். ஷோபாசக்தியால் அது முடியவில்லை. அவரது கொரில்லாவில் வரும் சில இயக்க பாத்திரங்கள்(கதை சொல்லி பாத்திரம் உட்பட) இங்கு Recycle செய்யப்படுகிறது. கார்த்திகை என்ற சிறுவன் பாத்திரம் புலி ஆதரவாளர்களுக்காக படைக்கப்பட்ட ஒரு செயற்கையான Fake பாத்திரம். பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சிய கதைகளாக வருபவை வெறும் non fiction பதிவுகள்போல இருக்கிறதே தவிர ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாவலின் பாத்திரங்களாக அல்ல. பண்டார வன்னியன் கதை, டைட்டஸ் லெமுவேல் கதை, நிர்வாணச் சங்கம் இவைகளெல்லாம் இலக்கிய விமர்சகர்களை பயமுறுத்தி/குழப்பவைத்து பொக்ஸ் நாவலை தரமானது என்று ஏமாற்றுவதற்கான முயற்சிகளே. தரமான இலக்கிய வாசகன்/ள் பொக்ஸ் ஒரு போலி நாவல் என்பதை இலகுவில் அடையாளம் காண்பான்/ள் 

6. சில தமிழக விமர்சகர்கள் ஈழத்தமிழரின் "துன்பத்தை" உணர்ந்து இந்நாவலை அணுகவேண்டும் என்கிறார்கள். நாவல் படிப்பது ஒரு தர்மம் போடும் வேலை அல்ல. இலக்கியம் முதலில் ஒரு கலைப்படைப்பாக இருக்கவேண்டும். பொக்ஸ் ஒரு இலக்கியமாக கலைப்படைப்பாகவும் இல்லை. ஈழத்தமிழரின் துன்பத்தை உணரவைக்கிற ஒரு உண்மை சாட்சியமும் இல்லை. இது ஒரு போலி நாவல். மோசடி. ஈழப்போர்களின் உண்மை நிலவரம் தெரியாத தமிழக உணர்வாளர்கள், புலி ஆதரவு வெறியர்கள் என்கிற இரண்டு பிரிவினர்களுக்காக எழுதப்பட்ட Pornography of Literature.(இது pornographic literature - ஆபாச கதையல்ல. நீலப்பட வாசகர்கள் 😜ஏமாறாதீர்கள். ஷோபாசக்தி அப்படிச்சொல்லி ஏமாற்றியும் தன் புத்தகத்தை விற்குமளவு கேப்மாறிதான்)

 இந்த மோசமான பொக்ஸ் நாவல் லண்டனில் வெளியிடப்படுகிறபோது நிர்மலா ராஜசிங்கமும் ராகவனும் அதை Promote பண்ணுகிறார்கள். நிர்மலா தான் அதை முழுமையாக படித்து முடிக்கவில்லை என்பதையும் அங்கு பேசுகிறபோது ஒப்புக்கொள்கிறார். உண்மை என்னவென்றால் நிர்மலா ராகவன் தம்பதிகளை ஷோபாசக்தி Useful idiots ஆக தனக்காக வெகு கச்சிதமாக பயன்படுத்துகிறார். நிர்மலாவும் இராகவனும் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்கள். நிர்மலா முதலாவது பெண்புலி. ஆனால்  சுய சிந்தனையாளர்கள் அல்லர்.  ஷோபாவுக்கு இவர்களைவிட வேறு நல்ல Public Relations ஏஜண்டுகள் கிடைத்திருக்கமுடியாது. நிர்மலா ஆங்கிலப்புலமையுடையவர். 20 வயதுக்குமுதலே Jane Austen உடைய அனைத்து நாவல்களையும் படித்திருந்தார். ஆனால் பின்னாட்களில் நிர்மலா தீவிரமான படிப்பாளர் வாசகர் அல்ல. ஏற்கெனவே படித்ததை வைத்தே Recycle செய்கிற ஒரு "புத்திசீவியாகவே" இருந்தார். ஷோபா தனது கொரில்லா புகழை வைத்துக்கொண்டு நிர்மலா ராகவன் வீட்டிள்குள் புகுந்தார். நரி காகத்தை புகழ்ந்து வடைபறித்தமாதிரி நிர்மலா ராகவன் தம்பதியரைப் புகழ்ந்தே தனது public relations ஏஜண்ட்டுகளாக மாற்றினார்.  இன்றுவரை  நிர்மலா காத்திரமான கட்டுரைகள் எழுதியது மிகக்குறைவு. ராகவன் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் ராகவன் புத்திசீவித்துவ இயல்புகளை பெற நிர்மலா உதவினாலும் இன்று ராகவன் தன்னளவில் ஒரு புத்திஜீவி. ஆனால் இராகவன் Emotionally attached to நிர்மலா. அதனால்தான் பொது விடயங்களில் (யாழ் நூலக திறப்பை புலிகள் தடுக்க காரணம் என்ன) நிர்மலாவின் முடிவே இறுதியானதாகிறது. 

 பொதுவாகவே இருக்கிற மனித பலவீனம் தமது திறமைகளுக்கான கடந்தகால சாதனைகளுக்கான அங்கீகாரத்துக்கு ஏங்குவது.. தொடர்ந்து எழுதாததால் நிர்மலாவுக்கும் ராகவனுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை ஷோபா அவர்களுக்கு புகழ்ச்சியாக/வஞ்சப்புகழ்ச்சியாக(Flattery) அவர்கள் எதிர்பார்த்ததை கொடுத்தார்.

 போருக்குப்பின் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது இலக்கிய சந்திப்பு ஷோபாசக்தி தனது நிகழ்ச்சி நிரலை ராஜசிங்கம் சகோதரிகளை பயன்படுத்தி சாதித்ததற்கு நல்ல உதாரணம். 

தமிழகத்திலிருந்து ஒரு பிரதம விருந்தினரை அழைப்பதாக இருந்தால் நீண்டகாலமாக ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையைப்பற்றி எழுதிய எஸ்.வி.ராஜதுரை, தமிழவன், மார்க்ஸ் அந்தோனிசாமி போன்றவொரு மூத்த எழுத்தாளரை அழைப்பதுதான் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் ஷோபாசக்தி தான் பாலுறவிலிருந்த லீலா மணிமைகலையை பிரதம விருந்தினராக ராஜசிங்கம் சகோதரிக்களூடாக அழைக்கவைத்தார். ஷோபாசக்தி தான் பாலுறவில் இருப்பவர்களை தன் சுயநல  இலக்கிய வியாபார நலன்களுக்காகத்தான் தேர்ந்தெடுப்பார். Marriage of Convenience மாதிரி Affair of Convenience. 

          ஒவ்வொரு கள்ளுறவுக்கு பின்னாலும் 
                        இருப்பது ஒரு யாவாரமே
     ஷோபாசக்தி                         லீனா மணிமேகலை

தான் சினிமாத்துறையில் காலூன்ற இவருக்கு மணிமேகலை தேவைப்பட்டது மணிமேகலைக்கு ஷோபா கொடுத்த சன்மானம் தான் யாழ் இலக்கியச் சந்திப்புக்கு பிரதம விருந்தினர். நிர்மலாவை வைத்து இலக்கிய சந்திப்பு அமைப்பாளர்களான நிர்மலாவின் சகோதரிகளான சிவமோகன் சுமதி, வாசுகி ஊடாக இதனை சாதித்தார். லீனா மணிமேகலையை அழைப்பதில் யாழ் இலக்கிய சந்திப்பு அழைப்பாளர்களிடையே கூட எதிர்ப்பிருந்தது.  உறுப்பினர்கள் சிலர் மணிமேகலை அழைக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் ராஜசிங்கம் சகோதரிகள்தாம் நுனிநாக்கில் ஆங்கிலம்பேசும் மேட்டுக்குடிக்காரர்கள் அல்லவா? வாசுகி ராஜசிங்கம் எதேச்சாதிகாரமாக நடந்துகொண்டார் என்ற விமர்சனம் அப்போது யோ. கர்ணன் போன்றவர்களால் வைக்கப்பட்டது. யோ.கர்ணன் யாழ் இலக்கியச் சந்திப்பை புறக்கணித்திருந்தார்.

           Parochialராஜசிங்கம் சகோதரிகள்

 ராஜசிங்கம் சகோதரிகள் பொதுவான புத்திஜீவித்துவ கலாச்சாரத்தைவிட அதற்கான பங்களிப்பை விட தங்களது குடும்ப நலன்களையே முன்னிறுத்தி இயங்குவார்கள். ஆங்கிலத்தில் சொன்னால் Parochial ஆனவர்கள். இதனை நான் அறிந்துகொண்டது 2011ல் வெளிவந்த Tamil Tigress என்ற Fake memoirs ஐ நான் அம்பலப்படுத்திய பின்னர்தான். எனது Review வந்தபின் மைக்கல் ரோபேட்ஸ், முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் ஆகியோரும் அதனை அம்பலப் படுத்தினார்கள். ஆனால் D.B.S. Jeyaraj என்கிற மோசடிப்பத்திரிகையாளன் Tamil Tigress Fake memoirs இல்லை என்று பச்சை பொய் தன்னுடைய பத்திரிகை Column இல் எழுதி சாதித்தார். 1988 ல் இலங்கையில் இருக்காத சுபோதினி ஆனந்தராஜா(Niromy de Soyza) எ 1988ல் தான் இலங்கையில் புலிகளில் இருந்து இந்தியப் படைகளோடு போரிட்டதாகச் சொன்ன பச்சைப் பொய் Memoirs அது. இதன் உண்மைத் தன்மையைப் பற்றி அறிய இதற்கு ஒரு Review எழுதமுடியுமா என்று Dr.சிவமோகன் சுமதியிடம் கேட்டேன். எழுதுவதாக ஒப்புக்கொண்டார். நான் ஒரு புது நூல் பிரதியை அனுப்பிவைத்தேன். பின்னர் அவர் அதற்கு எழுதமுடியாது என்று தீர்மானித்தார். அவர் எனக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில் அவரது உண்மை நோக்கம் புலப்பட்டது. உண்மை என்னவென்றால் ராஜசிங்கம் சகோதரிகளுக்கு ராஜினி திராணகமவைப்பற்றி பல கட்டுரைகளை எழுதிய ஜெயராஜின் மோசடியை அம்பலப்படுத்த அவர்கள் தயாரில்லை. நிர்மலாவிடமும் இதனை அம்பலப்படுத்தி முகநூலிலாவது எழுத கேட்டேன். அவர் எழுதவில்லை. நிர்மலா முதல் பெண்புலி. புலிகளால் கொல்லப்பட்ட ராஜினியும் புலிகளோடு சம்பந்தப்பட்டவர். சிவமோகன் சுமதி ஆங்கில விரிவுரையாளரும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவரும். இங்கே பட்டப்பகலில் ஒரு தமிழ் பெண் ஒரு ஒஸ்றேலிய Ghost writer ஐப் பயன்படுத்தி Fake memoirs வெளியிடுகிறார். அதனை மோசடி பத்திரிகையாளன் ஜெயராஜ் நிஜமானது என்று புனைகிறான். இதுதான் நமது ஈழத்து சமகால Intellectual culture. 


Himal South Asian என்கிற Journal இடம் இந்த Fake memoirs பற்றி எழுதுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டோது அதன் ஆசிரியர் குழு எழுதுவதில்லை என்று தீர்மானிக்கிறது. ராஜசிங்கம் சகோதரிகள் இதன் ஆசிரியர் குழுவுக்கு அறிமுகமானவர்கள். ஆசிரியர் குழுவின் குறித்த தீர்மானத்திற்கு ராஜசிங்கம் சகோதரிகளின் செல்வாக்கே காரணம் என்று நம்புகிறேன். 

 கடந்த ஐம்பது ஆண்டுகளின் யாழ்ப்பாணத்தின் சாதிய வரலாறு, சாதி பற்றி நிர்மலா, சிவமோகன் சுமதி, ராகவன் ஆகியோர் முறையான ஆய்வு ஏதாவது செய்திருக்கிறார்களா? ஆய்வுக்கட்டுரை, Case Study ஏதாவது செய்திருக்கிறார்களா? புலிகளின் காலத்தில் இருந்த சாதியம் பற்றி ஏதாவது முறையான கட்டுரை எழுதியிருக்கிறார்களா? சரி அதை விடுங்கள். நிர்மலா ஒரு புத்திஜீவியா? இதுவரையில் ஏதாவது ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரா? நிர்மலா இதுகாலவரையான காலத்தில் எத்தனை ஆய்வுக்கட்டுரை/ கட்டுரை எழுதியிருக்கிறார்? நிர்மலாவின் எழுத்துக்கள் என்று ஏதாவது இருக்கிறதா? ஷோபாசக்தி யாழ்ப்பாண சாதியைப்பற்றி ஒரு சிங்கிள் ஆய்வுக் கட்டுரையாவது எழுதியிருக்கிறாரா? இவர் ஆய்வாளரா? வெள்ளாளனான ஷோபாசக்தி தன்னை ஒரு தலித் என்று சொல்லி செய்த மோசடி ஆவணப்படுத்தப்பட்டது. இன்றுவரையும் இவர் தனது இந்த மோசடிக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறாரா? 

 செல்லன் கந்தையன் ஒரு தலித் என்ற காரணத்துக்காகத்தான் புலிகள் நூலகத்தை திறக்க தடைசெய்தார்கள் என்ற ஷோபாசக்தியின் மோசடியை ஒரு 3 நிமிட காணொளிப்பேட்டி அம்பலப்படுத்துவதைக் கண்டு அலறியடித்துக்கொண்டு வந்து ஷோபாவுக்காக வெட்கமின்றி முகநூலில் வக்காலத்து வாங்குகிற நிர்மலா, ராகவன், சிவமோகன் சுமதி ஆகியோரே நீங்கள் செய்வது ஒரு வெட்கங்கெட்ட public relations தரகுவேலை என்பது உங்களுக்கு தெரியவில்லையா?  17 வருடங்களுக்கு பிறகு வந்த பேட்டியை கேள்விக்குட்படுத்துகிற நீங்கள் 17 வருடங்களான செல்லன் கந்தையனை யாரும் ஏன் பேட்டிகாணவில்லை என்று கேள்வி எழுப்பினீர்களா? ஷோபாசக்தி அப்படி என்ன சொக்குப் பொடிபோட்டு உங்களையெல்லாம் தன் மந்திரக்கோலால் கட்டிவைத்திருக்கிறான்?

 உண்மை என்ன என்பதை அறிவது ஒரு ஆய்வு. பக்கச்சார்பற்ற ஆய்வாளர்களால் செய்யப்படவேண்டியது. ஷோபாசக்தியின் ராஜசிங்கம் சகோதரிகள்+ராகவன் Public relations ஏஜன்சியோ பிரான்ஸ் தேவதாசனின் தலித் முன்னணியோ தலித் வேடம்போட்டு புணரத்திரியும் ஷோபாசக்தியோ தீர்த்துவைக்கும் வழக்கு அல்ல இது. 

2003 ல் யாழ் மாநகரசபை உறுப்பினர்களாக இருந்தவர்கள் மேயர் உட்பட இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். இளம்பரிதி இப்போதில்லாவிட்டாலும் அந்தப்பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட புலிகள் பலர் இப்போதும் இருக்கிறார்கள். அக்காலத்தில் யாழ் நகரிலிருந்த மக்கள், மாநகரசபை ஊழியர்கள், அக்கால யாழ்ப்பாண சாதியைப்பற்றி ஆராய்ச்சிசெய்து கலாநிதிப்பட்டம் பெற்ற Dr. தங்கேஸ் பரஞ்சோதி முதலியோரை விரிவான பேட்டிகண்டு ஆய்வுசெய்தே உண்மையைக் கண்டறியலாம்.

தொடர்பான கட்டுரைகள்



Comments

  1. ஆ. மார்க்ஸ், ராஜ துரை போன்றோர்கள் விடும் தமிழகம் சார்ந்த கதைகளே ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். தமிழகத்திலும் தற்போது தலிது அரசியல் தலிது இலக்கியம் நல்லதொரு விற்பனைச்சரக்கு

    ReplyDelete
  2. பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி

    ReplyDelete
  3. லீனாவை இவரோடு பார்த்தபோதே இவருடைய நோக்கம் புரிந்தது.

    ReplyDelete
  4. சுந்தரலிங்கம் கூட்டணியில் இருக்கவில்லை?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

      Delete
  5. ஆதாரத்துடனான நல்ல கட்டுரை ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அதிகளவு தலித் உறுப்பினர்களைக்கொண்டிருந்த இடதுசாரி இயக்கமான EPRLF முதலமைச்சராக யாழ்ப்பாண இந்திய வம்சாவளி தமிழரான வரதராஜப்பெருமாளையே தெரிவுசெய்தது. // இவர் இந்தியவம்சாவளி என்பது சரி ஆனால் அவர் தெலுகை தாய் மொழியாக கொண்ட ரெட்டி சமூகத்தவர் தானே? அவரை ஏன் இந்திய வம்சாவளி தமிழர் என அடையாளப்படுத்துகிறீர்கள்?

    ReplyDelete
  7. 70களின் பிற்பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அதிகாரத்திலிருந்த யாழ்மாநகர சபையின் உதவி மேயர் திரு என் ரி. செல்லத்துரை அவர்கள் ஒரு தலித்தே.

    ReplyDelete
  8. நல்லகட்டுரை👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்