Posts

Showing posts from June, 2020

செல்லன் கந்தையன், ஷோபாசக்தி, ராஜசிங்கம் சகோதரிகள்+ராகவன் Public Relations ஏஜன்சி

Image
  நட்சத்திரன் செவ்விந்தியன் அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தளவு கொடுமையான சாதி அடக்குமுறை புத்தாயிரங்களில் (2003) இருந்ததில்லை. 1968ல் தாழ்த்தப்பட்ட மக்கள்  ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசத்தை செய்தபோது  சுயாதீன அரசியல்வாதிகளில் ஒருவரான பேரா. சுந்தரலிங்கம் மாவிட்டபுர ஆலய அறங்காவலராக இருந்து இறுதிவரை ஆலயப்பிரவேசத்தை தடுக்க முனைந்தார். சாதி வெறியை வைத்து 1970 தேர்தலில் சுந்தரலிங்கம் மாவிட்டபுரம் கோயில் அமைந்துள்ள அதே காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட போதும் கிறிஸ்தவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான தந்தை செல்வாவால் தோற்கடிக்கப்பட்டார். தமிழரசுக்கட்சி 1968ல் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.            தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தின்                                           சிற்பிகள்        ராஜவரோதயம்    ...