யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை


(By த. சண்முகசுந்தரம்)
சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள்.

 சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய் நேய், கற்பூரம் என்பனவற்றைக் காய்ச்சிப் பூசுவர். துவரந்தடி அடிகாயம், குத்தூசிக்காயம் என்பனவற் நிற்குச் சிறப்பான கவனஞ் செலுத்தப்படும்.


ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டுச் சவாரி ஒட் டத்திடல் இருக்கும் கீரிமலை வீதி இறக்கம், அளவெட்டி வீதி, ஈவினை வெளி, கூத்தியவத்தை வெளி என்பன புகழ்பெற்ற போட்டி நிலையங்களுட் சில.

யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும் சவாரியில் ஆர்வம் உடையவர்களெனக் கொள்தல் பொருந்தாது. கோப்பாய் அதிகாரம் நாகநாதன், தமிழரசுத் தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம், சட்டத்தரணி "ஐயக்கோன் ' செல்லத்துரை போன்றவர் இக்கலையில் பெரும் ஈடுபாடுடையவர். இக்கலையை நவீன மயப்படுத்தி விதிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் என் பதில் கற்றவர் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். எல்லோருடைய பெயரையும் இங்கு குறிப்பிட இயலாது,  இன்னும் அரசாங்க அலுவலராகக் கடமை புரிந்த "இலங்கையர்கோன்" சிவஞானசுந்தரம், "சவாரி ' செல்வரத்தினம், அரசாங்க மரக் கூட் டுத்தாபன உத்தியோகத்தர் இ. இளையதம்பி போன்றோர் அவருட்சிலர்.


 சவாரி வண்டி செய்வது தனிப்பெருங்கலை இதிலே போதிய தேர்ச்சி பெற்ற வல்லுனர் பலர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். வண்டிக்குரிய "அளவு கணக்குப் பிரமாணம் ' என்பவற்றில் இவர் கைதேர்ந்தவர். இக்கலை பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. வண்டி செய்வதில் புகழ் பெற்ற ஒருவர் ' வண்டில் ' செல்லப்பா ஆசாரி என்ற பெயரைப் பெற்றிருந்தார். வண்டி அதிகம் பாரமாக இருக்கப்படாது அத்துடன் அது உறுதி பாகவும், பெலமாகவும் இருக்க வேண்டும் வண்டிச் சிலைக்கம்பு பூவரசு மரத்தினால் செய்யப்படும் , வண்டித்துலா " கமுகுப் ' பனையினால் செய்யப்படும். கமுகுப்பனை என்பது காரணப் பெயர். கமுகு என்பது பாக்கு மரம், பாக்கு மரம் போல மெல்லிதாக உறுதியாக வளர்ந்த பனையே கமுகுப் பனை, நுகம் மஞ்சள் நுணாவினால் ஆனது. இது வயிரம் நிரம்பிய மரம் , அதேநேரம் பாரம் குறைந்தது. இது பற்றிப் புறம்பாக ஆராய வேண்டும்.

மாட்டுச் சவாரியின் எதிர்காலத் திட்டம் கிராமத்து மட்டத்தில் இருந்து வந்த இக் கலைக்கு உயர்நிலையை அளித்தது யாழ்ப்பாணத்தில் தினகரன் நாள் ஏடு நடத்திய போட்டி. இப் போட்டியின் பயனாக இக்கலை நாட்டில் பெரும் மதிப்பைப் பெற்றது. இதுவரை காலமும் இப்போட்டியின் விதி வாய்ச் சொல்லாகவே இருந்து வந்தன. இப் போட்டியின் பயனாகப் போட்டி விதிகள் யாவும் நிரை செய்யப்பட்டன. அறுபதுகளில் நடந்த இப் போட்டிகள் இக்கலையின் நிலையை உயர்த்தின. இது பற்றிப் புறம்பான ஆராய்ச்சி தேவை " ஈழநாடு ' நாள் ஏடு நடத்திய போட்டிகள் மிகவும் சிறப்பாக நடந்தன.


 தினகரன்,  ஈழநாடு நாள் ஏடுகள்  நடத்திய போட்டி மாட்டுச் சவாரியைத் தேசிய விளையாட்டு நிலைக்கு உயர்த்தின என்றால், 1974 இல் நடந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இக்கலையை அனைத்து உலக நிலைக்கு உயர்த்தியது.  இதுவரை காலமும் யாழ்ப்பாணத்து மக்கள் பார்த்துச் சுவைத்த இப்போட்டியை வேளிநாடுகளில் இருந்து வந்த பார் வையாளர் பார்த்துப் பாராட்டினர். கைதட்டி மகிழ்ந்தனர். தமிழ் நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடந்த அனைத்துலகத் தமிழ் மாநாடுகளின்போது சல்லிக்கட்டுக் காளை விளையாட்டு எல் லோருடைய பாராட்டையும் பெற்றது. அதேபோன்ற பாராட்டு யாழ்ப்பாணத்துச் சவாரிக்கும் கிடைத்தது. '


வீரபாண்டிய கட்டப் பொம்மன் " திரைப்படம் வெற்றிப்படம். இதில் சல்லிக்கட்டுக் காளைப் போட்டி இடம்பெற்றது. இந்த நிகழ்வை ஒட்டி இலங்கையில் தயாரித்த " பாசநிலா " என்னும் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்து மாட்டுச் சவாரி இடம்பெற்றது.

   (1986 வெளிவந்த அரிய நூல். இக்கட்டுரை     இதிலிருந்தே எடுக்கப்பட்டது. நூலகம்   இணையத்தில் உள்ளது)

 இப்போட்டி மேலும் வளர்வதற்குரிய முக்கியமான திட்டங்கள் பற்றி இனிக் கவனிக்கலாம்.

 (1) இப்போட்டியை ஆண்டு தோறும் நடத்து வதற்கு ஒரு கழகம் தேவை. உதைபந்தாட்டச் சங்கம் போன்ற ஒரு கழகம் தேவை இதுவரை காலமும் வழக்கிலிருந்துவந்த விதிகள் எழுத்து வடிவம் பெறவேண்டும். இதற்குரிய பதிவேடுகள் யாவும் நன்கு பேணப்படல் வேண்டும். கிராம மட்டம், மாவட்டம், அனைத்து இலங்கை மட்டம் எனப்போட்டிகள் நடைபெறல் வேண்டும் ,

 (2) போட்டிகள் நடைபெறுவதற்குத் தேசீயத் திடல் ஒன்று தேவை. ஐம்பதுகளுக்கு முன்னர் இப் போட்டிகள் பெரும்பாலும் மக்கிக்கல் வீ திகளில் நடைபெற்றன. இந்த வீதிகளை அரசாங்கத் திணைக் களம் பொறுப்பேற்று நடத்தியது; ஆனால் கனத்த வாகனப் போக்குவரத்து அதிகரிக்கவே அரசாங்கத் திணைக்களம் மக்கிக்கல் வீதிகளுக்குத் தார் ஊற்றிக் கெட்டிப்படுத்தியது. இப்படித் தார் ஊற்றப்பட்ட வீதிகள் சவாரிக்கு ஏற்றனவல்ல மாவிட்டபுரம், அளவெட்டி, உரும்பராய் போன்ற இடங்களில் ஒதுக்கப்பட்ட மக்கிக்கல் வீதிகள் தார் வீதியாக மாறின. இது சவாரிப் பிரியருக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

 (3) தார் வீதிகளைக் கைவிட்டு, சவாரிப் பிரி யர் புலம், புற்றரை என்பவற்றை நாடினர். கூத்தியவத்தைவெளி, கருகம்பனைவெளி போன்ற இடங்களையும் புற்றரைகளையும் தேர்ந்தெடுத்துச் சவாரிப் பிரியர் போட்டியை நடத்தினர். ஆனால் நடுவண் ஆட்சியாளரோ அல்லது உள்ளூர் ஆட்சி மன்றங்களோ சவாரித்திடலை அமைத்துக் கொடுக்க முன்வரவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள முடிக்குரிய காணிகளில் சில வற்றில் சவாரிக்குரிய புற்றரை யை அ மைத்துக் கொடுக்க நடுவண் அரசும் உள்ளூர் ஆட்சி மன்றங்களும் முன் வரவேண்டும். இதற்குரிய நிதியை ஒதுக்குதல் முக்கியம்.


(4) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குரிய கிண்ணம், கேடயம், பரிசு என்பவற்றை இதுவரை காலமும் வணிக நிறுவனங்களும் அவ்வப்போது அளித்து வருகின்றன. இது மகிழ்ச்சிக்குரிய அலுவல், கிண்ணங்களுடன், தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக் கம், வெண்கலப் பதக்கம் என்பனவும் வழங்கப்படுதல் முக்கியம் ,

 (5) மேலே கூறியவை முக்கியமான யோசனை இது பற் றி ஆராய்ந்து ஐந்து ஆண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டம் ஒன்றைத் தயாரித்து நடைமுறைப் படுத்த ஆணைக்குழு ஒன்று தேவை.

(6) இது பொதுமக்கள் யுகம் மக்கள் ஊட கங்களின் உதவி இல்லாமல் எதனையும் செய்ய முடி யாது. எனவே ஒளிபரப்பு, ஒலிபரப்பு, நாள் இதழ் போன்ற நிறுவனங்கள் இக் கலையை வளர்க்க முன் வரல் வேண்டும் இதற்கு அரச மட்ட ஒத்துழைப்புத் தேவை.

   (யாழ் மாட்டுச்சவாரிக்கு ஒரு முகநூல். படங்கள்         இதிலிருந்தே எடுக்கப்பட்டவை. நன்றி)

 (7) அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகள் பலர் ஈழத்தின் வடபகுதிக்கு வருவதில்லை. காரணம் கேட்டால், ' வடபகுதியில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை " என அரச அதிகாரிகள் காரணமும் தருகிறார்கள், வெளிநாட்டுப் பயணிகளை வடபகுதிக்கு வரச்செய் பக்கூடிய வகையில் சவாரிப் போட்டி, கலைவிழா என்பவற்றை நடத்தலாம்.

தொடர்பான கட்டுரைகள்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்