மச்சானை மண்டையிலபோட்டு அத்தான் பேரா. துரைராஜாவை மாமனிதராக்கிய புலிகள்


 நட்சத்திரன் செவ்விந்தியன்
அன்ரன் பாலசிங்கம் பிறந்து 5 ஆண்டுகள் கழித்து கரவெட்டி இரும்பு மதவடியில் பிறந்த பசுபதிப்பிள்ளை ஹாட்லிக்கல்லூரியில் படித்து பேராதனையில் அரசியல் சிறப்பு பட்டதாரியானவர். பல்கலைக்கழக காலத்தில் பின்னாளில் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி அதிபரானவரும் புவியியல் சிறப்பு பட்டதாரியுமான விஜயராணியை காதலித்து திருமணம் செய்தார்.
              
                    ஒரு மாவலி நதிக்கரைக்காதல்

சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை. "மாமனிதர்" பேராசிரியர் துரைராஜாவின் மனைவி ராஜேஸ்வரியின் சொந்த சகோதரர்.
             
              பேர்த்தியின் பிஞ்சுவிரல்களில்
               பசுபதிப்பிள்ளையின் புகைப்படம்

1988 மார்ச் 30 புலிகளால் மானிப்பாயில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். மனதில் பட்டதை தான் படித்த நியாயத்திற்கேற்ப வெளிப்படையாக பேசும் இயல்புள்ளவர். எண்பதுகளின் நடுப்பகுதியில் யாழில் ஒரு Think Tank ஐ உருவாக்கியவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் குழப்பியதை அவர் விமர்சித்தது புரிந்து கொள்ளக்கூடியது. 3 பெண்குழந்தைகளின் தந்தையாக 44 வயதில் சந்தோசமாக தன் மனைவி வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு இரவில் 1988 மார்ச் 30 ல் பிறேம் என்ற புலியும் இன்னொரு புலியும் அவர் வீடு புகுந்து அவரது 14 வயது மூத்த மகள் முன் அவரைச் சுட்டனர்.
        
                    துரைராஜா: பாலுக்கும் காவல்
                               "பூனா"க்கும் தோழன்


புலிகள் இக்காலத்தில் யாழில் சேடமிழுத்துக்கொண்டிருந்ததால் சரியாக கொலைப்பயிற்சி பெறாத பயிலுனர்களையே பயன்படுத்தினர். சுட்டவன் சொன்னபடி 3 தரம் சுட்டாலும் அவரை ரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குறையுயிருமாய் விட்டு சகாவோடு தப்பியோடினான். அவர் நினைவிழர்து கிடக்கிறார். மனைவி அவர் இறந்துவிட்டதாக செய்வதறியாது புலம்ப அதற்கிடையில் வெடிச்சத்தம் கேட்டு இந்திய ராணுவத்தினர் வந்துவிட்டனர். " யாருக்கு ஆங்கிலம் இவ்வீட்டில் புரியும்" என்ற ராணுவத்தில் கட்டளையைக்கேட்டு பசுபதிப்பிள்ளை " நான் ஆங்கிலம் பேசுவேன்" என்கிறார். (புலிகள் அவரை சுட்டதற்கு சொன்ன குற்றச்சாட்டுகளிலொன்று அவர் இந்திய ராணுவத்தினருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பாளராக இருந்தார் என்பதும் ஒன்று) அப்போதுதான் மனைவிக்கும் அவர் உயிரோடிருப்பது தெரிந்து உடனடியாக ராணுவ வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்கின்றனர். அவ்விரவு பசுபதி இறந்துவிடுகிறார்.
          
              விஜயராணி பசுபதிப்பிள்ளை இன்று

 விஜயராணி பசுபதிப்பிள்ளை மிக்க சிரமப்பட்டு தன் 3 பெண்குழந்தைகளையும் வளர்க்கிறார். மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் பதவி அவருக்கு கிடைக்கிறபோது புலிகளின் உந்துதலால் துரோகியின் மனைவி என்று சொல்லி அது தடுக்கப்படுகிறது. அப்போது யாழ் நகர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. அவர் புலிகளிடம் தன் கணவர் கொல்லப்பட்ட காரணத்தை கேட்கிறபோது புலிகளின் வழமையான பாணியில் " அது தவறாக ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலை என்ற சமாளிப்போடு அவர் அதிபராவதை புலிகள் எதிர்ப்பதை கைவிடுகின்றனர். (பாசிசம் சமூகத்தில் செல்வாக்கானவர்களை வழிக்கு கொண்டுவரும் உத்திகளிலொன்னு இது).

 இக்கொலை பலவகைகளில் ஆய்வாளரின் கவனத்துக்குரியது.

 1. ஒரு அரசியல் விஞ்ஞானியாக யாழ்ப்பாணத்தில் ஒரு சமூக விஞ்ஞான Institute ஐத்தொடங்கிய பசுபதிப்பிள்ளை அன்ரன் பாலசிங்கத்தின் ஊரைச்சேர்ந்தவர் மட்டுமல்ல. அவரின் சம காலத்தவர். தனக்கு கிடைக்காத படிப்பு வசதிகளாலும் சமூக அங்கீகாரத்தாலும் பாலசிங்கம் புத்திசீவிகளில் காழ்ப்புணர்வு கொண்டிருந்தமை அறியப்பட்ட உண்மை.

2. புலிகளின் மாமனிதர் விருதுகள் புலிகளுக்கு யாழ் சமூகத்தில் புத்திசீலிகள், ஆதிக்க மையங்களிலிருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க உருவாக்கப்பட்டவையா? இவ்விருதின் சூத்திரதாரி பாலசிங்கமா?
             
                        "யாழ் தேவி கோணர் சீற் ஜ விட                                                             பெறுதற்கரியது                                                                         மாமனிதர் விருது"
                                        -சிவஞானசுந்தரம்


பாலசிங்கத்தின் கரவெட்டி Mentor ம் ஆதிக்க வெள்ளாள சாதியைச்சேர்ந்த சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்துக்கும் கொல்லப்பட்ட பசுபதிப்பிள்ளையின் சகோதரியின் கணவரான பேரா. துரைராஜாவுக்கும் மாமனிதர் விருது வழங்கப்பட்ட பின்னணி என்ன? இவ்விருது ஒரு லஞ்சமா?
 
           சிரித்திரன்: மச்சானை கொன்றாலும்             சிரித்து+இரன். உனக்கு மாமனிதர் விருது                                                               கிடைக்கும்

தொடர்பான கட்டுரைகள்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை