100 ஈழ சமையல் விதிகள்: 001 தூள் தவிர்
Curry powder என்று அறியப்படுகிற தூள் நமது கண்டுபிடிப்பல்ல. ஆங்கில காலனியாதிக்க கண்டுபிடிப்பு. 18ம் நூற்றாண்டு கைத்தொழில் புரட்சியின் விளைபொருட்களிலொன்று. ஆரம்பத்தில் தூள் பிரித்தானியாவுக்கும் அமரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது எடுத்துச்செல்லும் வாசனை திரவியமாயிருந்தது.(இத்தாலிய/பிரெஞ்/ஸ்பானிய சமையலில் கறித் தூளுக்கு இடமில்லை)
விஸ்கி, தேநீர் போன்ற ஆங்கிலேயரின் கறித்தூளை 1950 களுக்குபிறகு ஈழச்சமையில் வந்த பிறகுதான் ஈழச்சமையல் கெட்டது. குறிப்பாக யாழ் குடாநாட்டு சமையல். இன்றைய யாழ்ப்பாண ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, மீன் கறி மற்றும் பருப்பு வெள்ளைக்கறிகள் தவிர்ந்த மரக்கறிக்கறிகள் அனைத்திலும் தூள் கலக்கப்படுவது அபத்தம். தெய்வாதீனமாக யாழ்ப்பாண ஒடியல் கூழில் இன்னமும் தூளுக்கு இடமில்லை.
1950 களுக்குமுதல் உரலையும் அம்மியையும் வணிக Mills இட்டு நிரப்பமுதல் ஒவ்வொரு கறிக்கும் தூளுக்கு பதிலாக அதற்கென சிறப்பாக தயாரிக்கப்பட்ட வாசனைத்திரவியங்களின் கூட்டு அம்மி/உரலில் தயாரிக்கப்பட்டு கலக்கப்பட்டது. இப்போது மலிவான blender வந்தபிறகும் நாம் அதற்கு தயாரில்லை. ஒரு பொருளை அரைத்து வைத்தால் அதன் இயல்பு கெடும். நவீன விலையுயர்ந்த காப்பி மெசினின் அப்போதே அரைத்துவரும் காப்பி அதனால்தான் சுவைகெடாமலிருக்கிறது.
இதே கதைதான் தூளுக்கும்.
வணிக தூள் சமையலை இலகுவாக்குவது உண்மைதான். ஆனால் 10 பேருக்குமேல் விருந்துக்கு வருபவர்களுக்கு சமைக்கும்போதும் மினைக்கெட்டு தூள் போடாமல் சட்டப்படி சமைக்கலாமே.
விருந்தினர்களுக்கு நான் தூளே இல்லாமல் சமைத்த 3 course meal அது பின் வருமாறு மிக எளிமையாய் இருக்கும்.
பானங்கள்
செம்மது, வெண் வைன், அசல் பியர்கள், கள்(ஊரிலிருந்தால்), Spirits. உடன் பிழிந்த தோடம்பழரசம், தர்ப்பூரணி ரசம், ரசம், மிளகு ரசம்.
பசிக்க
அவிச்சமுட்டை, அவக்கடோ, ஆலிவ் நெய், ஆட்டு சீஸ், றோஸ் பாண், பருப்புக்கறி, பச்ச மிளகாய், தேங்கா சொட்டு

புசிக்க
Thai Jasmine சோறு, "அருண் கூட்டு" பன்றிக்கறி, "அருண் கூட்டு" ஆட்டுக்கறி, வெறும் உள்ளி, வெங்காயம், "எப்பன்" மிளகு, "எப்பன்" தேங்கா பால் போட்ட கத்தரிக்கா கறி
ரசிக்க
வியட்னாமிய பலாப்பழம். தொட்டுக்க தேன், கனடா அசல் மேப்பிள் சுரப், Hazelnut+ சொக்கிளேளற் களி.

தொடர்பான கட்டுரைகள்
Comments
Post a Comment