Bra-மார்புக்கச்சை, குறுக்கு கட்டு பற்றி
(Jaffna Fashion புளக்கில் ஒரு பாசனையும் காணல என்பவர்களுக்கான பதிவு இது)
ஆசியாவின் முதல் பெண்கள் Boarding பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி முன்றில் சுடப்பட்ட 1910 காலப்பகுதி படம் இது. பல வகைகளில் முக்கியமான அரிதான புகைப்படம். Fashion கற்கை மாணவருக்கு இது இன்னும் முக்கியமானது.
இப்படத்தில் இருப்பவர் பலர் வயதானவர் என்பதாலும் காலம் 1908 என்பதாலும் இவர்கள் மாணவிகளாக இருக்க வாய்ப்பு குறைவு. காலம் இக்கல்லூரி தொடங்கிய 1824 ஆக இருந்திருந்தால் இவர்கள் மாணவிகளாகவே இருந்திருக்கலாம். குறுக்கு கட்டோடு நிற்கிறார்கள். நடுவில் உள்ளூர் பெண்ணொருவர் சேலையுடனும் Bra இல்லாமல் Blouse உடனும் உள்ளார்.
நவீனகால மார்புக்கச்சையான Bra ஐரோப்பாவிலேயே 1910 களில்தான் கால்வைக்கிறது. அங்கு அது corset ஐ விலக்கி முன்னுக்கு வருகிறது. Corset இல்லாத இந்திய துணைக்கண்டத்தில் சேலைதான் எல்லாம். அதனை பெண்கள் குறுக்கு கட்டாகவும் அணிந்தார்கள். அல்லது ஆண்களைப்போல இடுப்பில் வரிந்து பின் மேலும் மார்பையும் தற்கால பௌத்த துறவிகள் அணிவது போலணிந்து மார்பகங்களையும் மறைத்தார்கள். மார்பை மறைக்காமவும் இருந்தார்கள். மார்பகங்களை மறைக்கவேண்டிய தேவை காலனியாதிக்கத்தின் பின்தான் "ஒழுக்கம்" ஆனதா என்பது ஆய்வுக்குரியது.
ஆபிரிக்கப்பெண்கள் Topless ஆக இருப்பது இன்றும் வழக்கமாக சில Tribe களிலிருக்கிறது. பழங்கால மார்புகளுக்கு குறுக்காக வரிந்து முதுகில் கட்டிய மார்புக்கச்சை மறைப்பதற்காகவன்றி வேலைசெய்யும் பெண்களுக்கு உதவியாக Function ஆக இருந்ததா என்பதும் ஆய்வுக்குரியது. Corset கூட பெண்களின் மார்பகங்களை மறைப்பதையே முதன்மைக்குறிக்கோளாகக்கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. அது பெண்ணுடலை காட்சிக்காக மட்டுமன்றி அரங்கத்துக்கான ஒரு Mechanical photoshopping க்காக பெண்கள் அதனால் பெறும் உடல்வலியை மறுத்து மறந்து உருவாக்கப்பட்டது.
முலைக்காம்பு Corset அணியும் காலத்தில் ஆண்குறி, யோனி போல obscene ஆக இருந்ததில்லை. அக்கால ஒவியங்களில் coset ஐ விட்டுவிலகி முலைக்காம்பு பிதுங்கி "எட்டிப்பார்ப்பது" சர்வசாதாரணம். அப்போ முலைக்காம்பு obscene ஆனது எப்போது, அது 20ம் நூற்றாண்டின் முற்பாதியில் பிரபல்யமான Bra என்ற தொழில்நுட்பத்தின் பின்னரா? முலைக்காம்புகள் obscene ஆன sexual sensual ஆன சாமான என்று 18ம் நுற்றாண்டு மைனர் ஆன Casanova வைக்கேட்டால் அவன் பெண்களின் கண்களைவிடவா என்று பதில்கேள்வி கேட்டு தூக்கிப்போடுவான். இதனால்தானோ வஹிபி சவூதிகள் வழிவந்த ஆப்கானிய தலிபான்கள் Bra technology ஜவிட பலமடங்கு பாய்ந்து பெண்களின் கண்களுக்கு வலையும் திரையும்போட்டு Niqab ஐ "improvise' பண்ணினார்கள்.
- நட்சத்திரன் செவ்விந்தியன்.
தொடர்பான கட்டுரைகள்
I found one successful example of this truth through this blog. I am going to use such information now.
ReplyDeletefront closure bra for elderly