கானா பிரபாவும் சடையன் சண்முகலிங்கமும்: தரந்தாழும் அற விழுமியங்கள்



கானா பிரபா பிரபல்யமான ஒரு Blogger ம் வானொலி அறிவிப்பாளரும். ருவிட்டரில் அவரை 29 000 பேர் Follow பண்ணுவது அழகான பெண் ஆளுமைகளையே அதிர்ச்சிக்குள்ளாக்குவது. கானா பிரபா என்கிற இன்னொரு கானா பாடகனின் பெயரும் ஒன்றாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் கானா பிரபாவின் அற மதிப்பீடுகள் மிக்க அதிர்ச்சிக்கும் சர்ச்சைக்குமுரியவை.

 இளையராஜாவின் கட்டற்ற ஆதரவாளரான கானா பிரபா சின்மயி Me Too குற்றச்சாட்டுகளை வைத்தபோது கானா பிரபாவின் பதிவுகள் நல்ல உதாரணம். இப்போது கானா பிரபா யாழ்ப்பாணத்தின் மிக மோசமான பாலியல் குற்றவாளியான யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான சடையன் என்கிற என் சண்முகலிங்கனை மகிமைப்படுத்தி அவரை நல்லவராக்க பல பதிவுகளை சமூக ஊடகங்களிலும் தனது Blog இலும் எழுதிவருகிறார். கானா பிரபா விபரமான ஆள்( Detail man) இணையத்தில் சண்முகலிங்கனின் பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக வெளிவந்ததை அவர் அறிந்தே இருக்கிறார். சடையனே தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக மறுத்ததில்லை. மறுக்கவும் முடியாது.

 பெண்களுக்கெதிரான ஆதிகாரிகளின் செல்வாக்கானவர்களின் பாலியல் குற்றங்கள் அசட்டை செய்யப்படவேண்டும் என்று தானே ஒரு பெண்பிள்ளையின் தந்தையான அவர் கருதுகிறாரா? சடையன் சண்முகலிக்கம்/ன் இவரது உறவினரா? அல்லது மோசமான தன்மோக குறைபாட்டால்( Narcissistic complex) பாதிக்கப்பட்டவரா கானா பிரபா? தன்னை புகழ்பவர்களை பதிலுக்கு புகழ்ந்தேத்தவேண்டும் என்று விரும்புகிறாரா?

 பின்வருவது கானா பிரபா தனது Blog ல் எழுதியது. "அண்மையில் அப்பாவின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்த எதிர்பாராத அழைப்பாக நான் பெரிதும் மதிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் என்னுடைய மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பதிவை வாசிப்பதாகவும், ஈழத்து மெல்லிசை உலகின் மூத்த குடியாகக் கொள்ளும் கலைஞர் எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது கட்டுரையைத் தம் விழா மலருக்குப் பயன்படுத்திக் கொண்டதையும் அறிந்து பெரும் திருப்தி கொண்டேன்"

 இதைத்தொடர்ந்து ஒரு மட்டரக Academic ஆன சண்முகலிங்கன் தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி தாரணி ஆரூரன் என்கிற ஓரு ஆய்வு மாணவியைப்பயன்படுத்தி தன்னைப்பற்றி ஆய்வுசெய்து எழுதவைத்த "கலைஞரான துணைவேந்தர்" என்ற நூலுக்கு நயப்புரை எழுதினார். யூ ரியூப் வீடியோவில் அதன் வானொலி உரையை பிரபா போட அதனை வெறும் 38🤣 நபர்களே இதுவரை பார்த்துள்ளனர். தமிழ் சமூகத்தின் அறமதிப்பீடுகள் இவ்வளவு கேவலமாக தரம்தாழ்ந்து போவதையும் அதற்கு கானா பிரபா போன்றவர்கள் உதவுவதையும் பற்றி அவர் வெளிப்படையான விவாதங்களுக்கு வரவேண்டும். பின்வரும் 2 கட்டுரைகளும் பாலியல் குற்றவாளி சடையன் சண்முகலிங்கன் குற்றங்கள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டவை.

 கட்டுரை01
சண்முகலிங்கனின் பாலியல் குற்றங்கள்
 (By தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்)

 Prof. N. Shanmugalingam B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2006 பிற்பகுதியில் நியமனம் பெற்ற இவர் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை துணைவேந்தர்களாக இருந்தவர்களில் மிகக் குறைந்த அறிவியல் தரத்தைக் கொண்டிருப்பவராக உள்ளார். மேலும் நிர்வாகத் திறனும் செயற்திறனும் குறைந்த உபவேந்தராகவும் இவர் கணிக்கப்படுகின்றார். இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸிற்குச் சென்றிருந்தார். அங்கு ஒருதலைக் காதலில் மனமுடைந்து மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் தன் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து பேராசிரியர் ஆனார். இவ்வாறான யாழ் பல்கலைக்கழகச் சூழலில் கற்பித்த என் சண்முகலிங்கம் இந்த ‘லீலைகளில்’ முன்னின்றார்.

 அப்போது 2005 அக்காலப்பகுதி. பிரித்தானியாவில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஒருவரும் யாழ் சென்றிருந்தார். (தேசம்நெற் க்கு தகவல் அளித்த அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.) அவர் பல்கலைக்கழகம் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அவர் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்தியை விசாரித்த போது ‘அது பழைய செய்தி. இப்ப நடந்த கூத்தைக் கேளுங்கள்’ என்று சொல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கூறப்பட்டவையே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் என் சண்முகலிங்கம் மாணவி ஒருத்தியை அழைத்துக் கொண்டு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தனது வேலையில் விட்டுவந்த ஏதோ ஒன்றை எடுக்கச் சென்ற கட்டிடத் தொளிலாழி இவர்களைப் பார்த்தவுடன் சந்தேகம் கொண்டு தானும் மேலேறி என்ன நடைபெறுகிறது என்று அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அவர்கள் உறவில் ஈடுபட்டதையும் கண்டு கொண்டார். ஓடிச்சென்று பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எஸ் மோகனதாஸிடம் முறையிட்டார். அவர் அதனை வேறு காரணங்களுக்காக மூடிமறைத்தார். ஆனாலும் அச்சம்பவம் பரகசியமானது.

 இன்னுமொரு சம்பவத்தில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்ட போது அப்பெண் என் சண்முகலிங்கத்தை அறைந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சமூக ஆய்வு ஒன்றுக்காக இப்பெண் யாழ் பல்கலைக்கழகம் அனுப்பப்பட்டார். இப்பெண் ஆய்வாளரை என் சண்முகலிங்கம் சமூகவியல்துறை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணை என் சண்முகலிங்கம் அணைக்க முற்பட்ட போது அப்பெண் சண்முகலிங்கத்தை அறைந்தே விட்டார். தன்னை அவரிடம் அனுப்பிய பாலசுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டு உள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பெண் ஆய்வாளர் தனக்கு ஆபத்து நிகழலாம் என்ற அச்சத்தில் ஆய்வை மேற்கொள்ளாமலேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்.

 இவ்விரு சம்பவங்களுமே என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதற்கு முன்னர் இடம்பெற்றது. இவை தெரிந்து இருந்தும் என் சண்முகலிங்கம் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆக்கப்பட்டார். இதனால் அவர் உபவேந்தர் ஆனதன் பின்னர் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலை உருவானது. இந்த நிலையிலேயே சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர்கள் சில விரிவுரையாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மொட்டைப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட விரிவுரையாளர்(கள்) பொன் பாலசுந்தரம்பிள்ளை, எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள். பல்கலைக்கழகத்தின் பாலியல் துஸ்பிரயோகம் எவ்வளவுக்கு ஸ்தாபனமயப்பட்டு உள்ளது என்பதனை இது வெளிப்படுத்துகிறது.

அதற்கும் முன்னதாக கம்பவாரிதி ஜெயராஜ் தனது பொன் விழா நூலிலும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் வருமாறு குறிப்பிடுகிறார் ‘‘மாதுக் கோளாறுகளும் இருக்கவே செய்தன. தம் கல்வி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பட்டங்களுக்குப் பரிசாக, மாணவிகளின் பண்பினை விலைபேசிய, அவ் அழுக்குகளை, இப்போதைக்கு இங்கு எழுதவிரும்பவில்லை. ஒழுக்கநிலை இதுவென்றால், அறிவுநிலையைப் பொறுத்தவரை, … தம் வெற்றிக்காய் ஒரு இனத்தின் புலமையைப் பலியிட்ட, அவர்தம் வஞ்சனைச் செயல்கள், இன்றும் எம் கல்வியுலகைப் பாதித்து நிற்கின்றன.

 ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 1 : கம்பவாருதி ஜெயராஜ்

 இத்தோடு இவை நிற்கவில்லை. அண்மையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் இணையம் ‘விரிவுரையாளர்களினால் விபச்சாரவிடுதியாக மாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தட்டிக் கேட்பது யார்?’ தலைப்பிட்டு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 18 2009ல் பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை துருவியன் என்பவரால் எழுதப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒரு பகுதி, ‘‘மிகச் சில விரிவுரையாளர்கள் மட்டும் தம்மிடம் பாடரீதியாகச் சந்தேகங்களைத் தீர்க்க வரும் மாணவிகளைத் தனியேதான் வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு தனியே செல்லாமல் குழுவாகச் சென்றால் அவர்களைக் கண்டபடி திட்டுவதோடு பரீட்சைப் பெறுபேற்றின்போது அவர்கள் கவலைப்பட நேரிடுமென்று மறைமுக மிரட்டலையும் விடுத்துள்ளனர். இதனால் வேறுவழியின்றிக் குறித்த விரிவுரையாளரை இன்னமும் தனியே சென்றுதான் மாணவிகள் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி உரியவர்களிடம் முறையிட்டால் இன்னமும் தாங்கள் பழி வாங்கப்பட்டு விடுவோமோ? தம்முடைய பல்கலைக்கழக வாழ்க்கை இதனால் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தில் பல மாணவிகள் வாய்பேசா ஊமைகளாகி விடுகின்றனர். எனினும் நிலைமையின் உக்கிரம் தாங்க முடியாத சில மாணவிகள் வீடுகளில் தமது பெற்றோரிடம் இத்தகைய இழிவான செயலைச் சொல்லி அழுகின்றனர். பெற்றோரும் ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே உள்ளனர்.’’ பெண்கள் மீதான என் சண்முகலிங்கத்தின் இப்போக்கினால் இவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ‘’உம்மா (முத்தம்) சண்முகலிங்கம்” என்ற பட்டப் பெயரை வைத்துள்ளனர். ‘பெண் விரிவுரையாளர்களே தனியாக இவருடைய அறைக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்’ என தேசம்நெற் உடன் யாழில் இருந்து தொடர்பு கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் சிலர் தெரிவித்தனர்.

 கட்டுரை 02
 ஓட்டோவில் தன்னோடு பயணித்த 60 வயது பெண் ஆங்கில விரிவுரையாளரிடம் தன்னோடு ''செக்ஸ்" செய்யுமாறு கேட்ட துணைவேந்தர் சண்முகலிங்கம்.

 "Or take for example the much more serious incident involving a senior female English academic aged about 60 at the time. She had to fly to Colombo on work with Prof. Shanmugalingam. Taking a trishaw from Ratmalana, Shanmugalingam directly asked her for sex and she virtually jumped out of the trishaw. Can anyone work for or with this Shanmugalingam? Does it not interfere with university work?"
இணைப்பு👇

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்