சைக்கோபாத் 001: உமா வரதராஜன்

உடையப்பா மாணிக்கம் வரதராஜன்



நட்சத்திரன் செவ்விந்தியன்

உமா வரதராஜனின்(1956) உள்மன யாத்திரை(1988) ஒரு யாழ்ப்பாண இளவேனில் வெய்யிலில் புதுவருச வாய்ப்பன் பிளேன் ரீயுடன் நான் அனுபவித்து படிச்ச புத்தகம். வரதராஜனின் முதல் சிறுகதைத்தொகுதி. பெருவரவேற்பை பெற்றது. அதற்குப்பிறகு பலகாலமாக அவர் புத்தகம் எதுவும் போடவில்லை. முதல்புத்தகத்தின் புகழிலேயே அவர் குளிர்காய்ந்து அனுபவித்தார்.

 சைக்கோ பாத் எழுத்தாளர்கள் என்றொரு தொடரை எழுதவுள்ளேன். முதலாவது எழுத்தாளர் ஈழத்து உமா வரதராஜன். யார் சைக்கோபாத் அல்லது sociopath? சாதாரண மனிதர் எல்லோருக்கும் அறவிழுமியங்கள் நீதி நியாயங்கள் இருக்கும். இவற்றை பின்பற்றாவிட்டால் சாதாரண மனிதர்களுக்கு குற்ற உணர்ச்சிவரும். சைக்கோ பாத்துகளை பொறுத்தவரையில் தாங்கள் சட்டம், நீதியைவிட மேலானவர்களாக நினைப்பார்கள். இவர்களுக்கு குற்ற உணர்ச்சி கிடையாது. தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவார்கள்.

 உலகத்து கலைஞர்கள் எழுத்தாளர்களில் சைக்கோ பாத்துக்களின் வீதம் அதிகம். உலகத்தின் அற காவலர்கள் கலைஞர்கள் என்ற தப்பு அபிப்பிராயத்தை இவர்கள் செமையாக பாவிப்பார்கள். இசைமேதை மொசாட்டிலிருந்து ரோமன் பொலன்ஸ்கி வரையான சைக்கோபாத் கலைஞரின் பட்டியல் நீண்டது.


 சமகாலத்தில் தமிழில் ஒரு சைக்கோபாத் எழுத்தாளரை விரிவாக ஆவணப்படுத்தி வந்த நூல் என்று சுந்தர ராமசாமி அவர்கள் தருமு சிவராமைப்பற்றி எழுதிவந்த பிரமிள் நினைவோடை என்ற அற்புதமான நூல். பிரமிளின் சேட்டைகளையும் சகித்து சுந்தர ராமசாமி அவரை ஆதரித்தார். பிரமிளோ தன்னைவிட பலவயது குறைந்த சுந்தர ராமசாமியின் மகளை தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு ஆய்க்கினை கொடுத்தார்(இந்த தகவலையும் நூலில் ராமசாமி தவிர்த்துவிட்டார்)

 வரதராஜன் ஒரு தமிழ்நாட்டு பணக்காரரின் இரண்டாவது (சிலோன்) மனைவிக்கு பிறந்தவர். வசதியான குடும்பம். தந்தையைப்போலவே உமா வரதராஜனுக்கும் இரண்டு மனைவிகள். தனது சொந்தக்கதையையே வைத்து எழுதிய கதையொன்றில் தனது தாய்மாமன் தன்னை ஒரு "ஸ்திரி லோலன்""(Womaniser) என்று திட்டியதை எழுதியுள்ளார். சிங்கர் கொம்பனியின் கிழக்கு மாகாண அதிகாரியான பணமீட்டும் தொழிலும் அவருக்கிருந்தது. ஈழ யுத்தத்தின் இறுதிக்காலங்களான இரண்டாயிரங்களில் அவருக்கு சொந்தக் காரும் இருந்தது.

வரதராஜனின் 44 வயதில் 22 வயதான மட்டக்களப்பில் குடியேறிய ஒரு அழகிய மலையகப்பெண் சிங்கர் கொம்பனியில் வேலைகேட்டு வருகிறாள். வரதராஜன் அவளை வேலைக்கெடுத்ததே தான் "வேலை கொடுக்கவேண்டும்" என்ற திட்டத்துடன்தான். தனது அதிகார செல்வாக்கால் அவளை எட்டாண்டுகள் "வைத்திருக்கிறார்". தன் 2 மனைவிகளையும் விட்டு அவளை திருமணம் செய்துகொள்ளவும் அவர் தயாரில்லை. பின் லண்டன் இளைஞன் ஒருவருடன் அவளுக்கு திருமணம் நிச்சயமானபின் அவள் அவரைவிட்டு விலகுகிறாள். அவர் அதனை அனுமதிக்கமுடியாமல் கலகம் செய்கிறார். அவருக்கு மாரடைப்பு வருகிறது. (52 வயதில் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர் வயாக்கரா போட்டால் மாரடைப்பு வராமல் ஓர்கசமா வரும்🤣?)

                               Misogyny: Text Book



 இந்தளவில் முடிந்திருந்தால் வரதராஜன் ஒரு சைக்கோ ஆகியிருக்கமாட்டார். மாரடைப்புக்கு சிகிச்சைபெற்று படுக்கையிலிருக்கும்போதே நடந்த உண்மைக்கதையை மூன்றாம் சிலைவை என்ற ஒரு குறுநாவலாக எழுதி அதில் தான் பாதிக்கப்பட்டவராகவும் அவள் துரோகஞ்செய்த வில்லியாகவும் காட்டி அவசர அவசரமாக அதனை பதிப்பித்து வெளியிட்டார். ஒரு சைக்கோ கிரிமினல் நீதிபதி ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடுமாறு சொன்ன ஆலோசனையையும் புறக்கணித்து தானே தன்னை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றில் தன்னை நியாயப்படுத்தி வழக்காடிய பிரதி அது. 20 ஆண்டுகளுக்குப்பிறகு ஈழ இலக்கியம் எந்தளவு வளர்ந்துவிட்டது என்பதை அவர் அறியவில்லை. Anti Hero Anti Hero ஆகவே படைக்கப்பட்டால் அது அற்புத இலக்கியமாகும். வரதராஜன் செய்தது Anti Hero வை ஹீரோ ஆக்கியது. படம் ஓடவில்லை. தனது செல்வாக்கை பயன்படுத்தி K.S. சிவகுமாரன் என்கிற மொக்கை விமர்சகரை பிடித்து தன்னை ஒரு Avant-Garde Artist என்று ஆங்கிலத்தில் எழுதவைத்தார்.

                   குருவும் சீடனும்: பாலு, வரதன்


வரதராஜனின் Role Model வேறு யாருமல்ல. இன்னுமொரு மட்டக்களப்பு சைக்கோ ஆன பாலு மகேந்திரா தான். ஒரு சைக்கோ எப்போதும் இன்னொரு சைக்கோவை நியாயப்படுத்துவான். ஷோபா மீதான பாலுவின் காதல் உண்மையானது என்று பகிரங்கமாகவே எழுதி பாலுவை நியாயப்படுத்தியவர் வரதராஜன்.

                                           ஷோபா

 ஈழத்து பல்கலைக்கழகங்களில் Feminist studies பாடமானால் Misogyny யை விளக்க அற்புதமான பாடநூலாக வைக்கவேண்டியது மூன்றாம் சிலுவை. பெண்ணியல்வாதிகளே இப்பிரதியில் கவனிக்கதவறிய இன்னொரு முக்கியமான விடயம் மலையக பெண்களை வைத்து வரும் இனவாதம். ஜூலி என்ற அந்த நிஜ கிறிஸ்தவ மலையக பெண்ணின் தாயும் சகோதரியும் மோசமான ஒழுக்கந்தவறிய பெண்களாக வரதராஜன் விபரிக்கிறார்.



 பழைய நிலமானிய சமூகங்களிலிருந்த நிலச்சுவாந்தர்கள், முதலாளிகள் அழகிய பெண்குட்டிகளை வைப்பாட்டிகளாக வைத்திருப்பார்கள். அவளவைக்கு முறையான திருமணவயது வர தாங்களே முறையான மாப்பிளைபார்த்து குடும்பம்தொடங்க வேண்டிய அளவு பொன்னும் பொருளும் கொடுத்து திருமணஞ்செய்து வைப்பார்கள். நிலாச்சுவாந்தர்களுக்கிருந்த அறம்கூட சைக்கோபாத்துகளுக்கு கிடையாது. அவர்கள்தானே சைக்கோபாத்துக்கள்.

தொடர்பான கட்டுரைகள்

Comments

  1. அது என்ன உத்தியோ இந்த ஸ்த்ரீலோலன்களுக்கு இவர்களுக்கு வருவதெல்லாம் ஒலகமகாக்காதல் மட்டுமே. தன்னை மதி்யாத பெண்ணெல்லாம் பரத்தைகளே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை