Posts

12 வயதில் ஆபிரிக்காவில் தமிழாசிரியையாக இருந்த நவி பிள்ளையின் கதை

Image
வீரத்தமிழச்சி. நவநீதம் அம்மா. நோபல் பரிசு பெறும் நாலாவது தமிழர். சி.வி.ராமன்(1930), சுப்ரமணியன் சந்திரசேகர்(1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(2009)  ஆகியோருக்குப்  பிறகு நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் பெண். அமெரிக்க இஸ்ரேலிய தலைவர்கள் முகத்தில் கரிபூசி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் சுதந்திரப் பறவை. இவைதான் உங்களுக்கு நவி பிள்ளை பற்றித் தெரியும்.  உங்களுக்குத் தெரியாதது. அம்மா ஆங்கிலத்தில் உயர்கல்வி கற்கத்தொடங்கும் முதல் தென்னாபிரிக்காவில் தன் பன்னிரண்டு வயதில் ஆரம்பப் பாடசாலையொன்றில் தமிழாசிரியையாக இருந்தவர். திருக்குறள், தேவார திருவாசகங்களை தன் மாணவர்களுக்குப் படித்துக் கொடுத்தவர். இந்தளவுக்கும் அம்மா தமிழ் தெலுங்கு கலப்பு குடும்பத்தில் பிறந்தவர். தாய் தெலுகு. தகப்பன் தமிழ் தெலுகு கலப்பு. அம்மா காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர்தான் தமிழர்.  பரஞ்சோதி அந்தோனிப்பிள்ளை. நவநீதம்மா நாயுடு,  நவி பிள்ளையான கதை இதுதான்.  2008ல் அம்மா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார். அப்போது அவரை  சுப்றி கௌண்டர்  என்கிற தென்னாபிரிக்கர் ஒரு வானொ...

திலீபன் : பிரபாகரனின் நரபலி

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன்     செப்டம்பர் 15 ல் நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை அவர் இறந்த நாளுக்கு அடுத்த நாளான செப்டம்பர் 27ல் ஸ்ரீலங்கா பொலீசாரால் அகற்றப்பட்டது . அதாகப்பட்டது திலீபன் உண்ணாவிரதமிருந்த பதினொரு நாட்களும் அச்சிலையை வைத்திருக்க JVP அரசாங்கம் அனுமதித்துள்ளது .   ஆட்சியிலுள்ள இன்றைய JVP அரசாங்க   தலைவர்கள் எவருக்குமே இலங்கையில் சிலை இல்லை . அப்படியிருக்க திலீபனின் சிலையை 11 நாட்கள் அனுமதித்த இந்த அரசாங்கத்தை   அதற்கான நன்றியின்றி இன்று புலித்தேசியவாதிகள் சாடுகிறார்கள் . புலிகள் இலங்கையில் இன்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பு . அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு சிலை வைப்பது சட்டவிரோதமானது . இதில் புலித்தேசியவாதிகள் திலீபன் புலிகளில் விதிவிலக்காக இருந்தார் . அகிம்சை வழியில் போராடி இறந்தார் . அதனால் அவர் விதிவிலக்கு என்கிற தந்திரமான கதையாடலை (Narrative) வைத்து அவருக்கு விதிவிலக்கு கேட்கிறார்கள் . இந்த மாயதந்திரக் கதையாடலை ஆங்கிலத்தில் எழுதிய சந்தர்ப்பவாத சனரஞ்சக தமிழ்ப்பத்திரிகையாளரான DBS. ஜெயராஜும் பரப்பினார் . உண்மை வரலாறு இடியாப்பச...

ஜெயமோகனின் ஈழத்து அடிமைகள் 01

Image
 By நட்சத்திரன் செவ்விந்தியன்                     அடிமை 001 : தெய்வீகன்                                 Best Before : செப். 2026 ஜெயமோகனின் இணையத்தளத்துக்கு ஒரு கடிதம் "வருகிறது" இந்த செப்டம்பர் மாதம். அதாகப்பட்டது நியூயார்க்கில் ஜெயமோகன் பிரமாண்டமாக நடத்திய இலக்கிய விழாவில் கனடாவில் இருந்து டிசெ தமிழன்(இளங்கோ) என்கிற எழுத்தாளரை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டு.                         இளங்கோ இதில் வேடிக்கை என்னவென்றால் டிசெ தமிழன் ஜெயமோகனின் அடிமை அல்ல. யாருக்குமே அடிமையாக இருந்து பிழைக்கத்தெரியாதவர்.  ஆனால் ஆஸ்திரேலியாவில் ஜெயமோகனுக்கு ஒர் அடிமை உண்டு. ஈழத்தமிழரான அவரது பெயர் தெய்வீகன் பஞ்சலிங்கம். சொல்லப்போனால் ஜெயமோகனின் முதல் ஈழ அடிமை தெய்வீகன். இன்றைக்கு கிரிசாந், யதார்த்தன், தர்மு பிரசாத் என்கிற மூவரை தனது அடிமையாக்கி ஜெயமோகன் ஞானஸ்தானம் கொடுத்திருக்கிறார். இம்மூவரும் ஏன் ஜெயமோகன...

முகாமுகம் சிறுகதைத் தொகுப்பு முன்னுரை

Image
இத்தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும் ஈழப்போருக்குப் பின்னைய காலத்தில் எழுதப்பட்டாலும் ஈழப்போரைப்பற்றிய கதைகள். உண்மைக்கதைகளை மையமாகக் கொண்ட சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் பாத்திரமாக வருகிறார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவரான புலனாய்வுத் தளபதி பொட்டம்மான், புலிகளின் சிறந்த இராணுவத் தளபதியாக அறியப்பட்ட கருணா அம்மான், புலிகளில் முதல் கேணல் பட்டம்பெற்ற கிட்டு, புலிகளில் முதல் பிரிகேடியர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாத்திரங்களாக வருகிறார்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விட போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்கு துடுப்பு மட்டையையை விட கால்பந்தாட்ட பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும். ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து...

மலையகச் சிறுமிகள் குளிப்பதை படமெடுக்க கமெரா பொருத்திய சிவபூமி

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் 2024ம் ஆண்டு யாழ்ப்பாண மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வொன்று ஆறுதிருமுருகனது யாழ்ப்பாண சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் நடத்தப்பெற்றது. சிவபூமி மலையகத்திலிருந்து 29 O/L பரீட்சை தேறிய மாணவிகளை அழைத்துவந்து அவர்கள் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்க வைத்தது. அச்சிறுமிகள் யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் பாடசாலைகளில் சேர்ந்து படித்து A/L படிக்க வசதி செய்வதாக ஏற்பாடுகள் செய்தது. ஆனால் அந்த 29 சிறுமிகளான(Child) மலையக மாணவிகளும் கண்ணியத்துடன்(Dignity) அங்கு பராமரிக்கப்படவில்லை. இலங்கைச் சட்ட வரம்புகளை மீறியும் அவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டார்கள். இரண்டாந்தரப் பிரஜைகள் போல அவர்கள் நடாத்தப்பட்டார்கள். அந்த மகளிர் விடுதியில் போதியளவு முடிய குளியலறைகள் இருந்தும் அவர்கள் திறந்தவெளி குளியலறையில் குளிக்கவைக்கப்பட்டார்கள். அங்கு பல கண்காணிப்பு கமெராக்கள் திறந்தவெளி குளியலறை நோக்கி பொருத்தப்பட்டிருந்ததன. அதனைச் சுட்டிக்காட்டி மாணவச் சிறுமிகள் மூடிய குளியலறையில் அனுமதி கேட்க அது விடுதி முகாமையாளரும் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபருமான சிவமலர் ஆனந்தசயனன...