பிரபாகரனின் பிரேத பரிசோதனை

By நட்சத்திரன் செவ்விந்தியன் அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். நான் ஒரு பிரேத பரிசோதனை அதிகாரி அல்ல. ஒரு பத்திரிகையாளராக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அத்தகவல்கள் நம்பகத்தன்மை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய விசாரணை, ஆய்வு, அறம் திறமைகளின் அடிப்படையில் பிரபாகரனின் மரணம் பின்வருமாறுதான் நடந்திருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன். அதனை மறுத்து முறையான விஞ்ஞான விவாதத்திற்கு வருவதும் ஆய்வு விசாரணை மரபுகளில் படி ஏற்கக்கூடியதே. இன்றைய சியோனிச இஸ்ரேலில் இருக்கிற குறைந்தபட்ச சனநாயக, உடற் கூறியல் – பிரேதபரிசோதனை- நீதி நடைமுறைகளைக்கூட விழுமியங்களைக்கூட ஈழப்போரின் இறுதியுத்தத்தில் மகிந்த அரசு பேணவில்லை. மகிந்த அரசு இன்றைய இஸ்ரேல் காசா மக்களை பட்டினி போட்டுக் கொல்வது போல கொல்லவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. ஆனால் மகிந்த அரசு முறையான சட்டரீதியான மரண விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் சொல்லப்பட்டது போல் செய்யவில்லை. மே 19ல் கைப்பற்றப்பட்ட பிரபாகரனின் இறந்த உடல் சட்டப்படி ஒரு வைத்தியசாலை சவக்கிடங்குக்குக்கு(Mortuary) கொண்டுசெல்லப்பட்டிருக்கவேண்டும். அங்கு ஒரு மரணவிசார...